13/05/2022
நான் பித்தடைந்த மனநிலையில் இருக்கிறேன் என்பதை அறிந்து விழிப்படைந்தால் அப்போது நான் அக்கணமே அந்த பித்துநிலையிருந்து வெளியேறி வந்துவிடுகிறேன்.
ஆனால், நம்மில் பெரும்பாலரோ, தன் நிலையை குறித்து அறிந்துகொள்வதில்லை — நமக்கிருக்கும் பிரத்தியேக மன நிலை, நம்முடைய சிறியதாக சமநிலை தவறிய நிலை, மிகைப்படுத்தும் போக்கு, நம் ஒவ்வொரிடமும் இருக்கும் பிரத்தியேக வேறுபடுத்தி காட்டும் நடத்தை, குறிப்பிட்ட ஒன்றில் அளவுகடந்த ஆர்வம் போன்றவற்றை பற்றிய விழிப்பில்லாமல் இருக்கிறோம்.
இத்தகைய பித்து மனநிலை மீது விழிப்பு பெறுவதற்கு பார்க்கும்/கவனிக்கும் திறன் தேவைப்படுகிறது. ஆனால் பெரும்பாலோரிடம் தன்னை கவனிக்க நேரமோ, ஆற்றலோ, அதை கவனிக்க வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை; அதற்கு பதிலாக நாம் ஆராயும் ஒரு நிபணரிடம் செல்வோம் அல்லது நமக்காக அந்த வேலையை செய்யும் ஒருவரிடம் செல்வோம், அதன்காரணமாக நம் வாழ்க்கையை மேன்மேலும் சிக்கலாக்குவோம்.
ஆக, நீங்கள் பித்துபிடித்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து விழிப்பு பெற்றால் — பெரும்பாலோர் செய்வதுபோல வெறும் மேலோட்டமாக அறிந்துகொள்வது போல மட்டுமில்லாமல், மிகவும் ஆழமாக சென்று அறிந்துகொண்டால் ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம்.
உங்களுக்குள் ஆழமாக உள்ளிறங்குவதற்கு, அத்தகைய பித்து மனநிலை மீது விழிப்பு பெற வேண்டும், அதனை பார்க்க வேண்டும்; உங்களின் ஒவ்வொரு வார்த்தையையும், உணர்வையும், சிந்தனையும் கவனிக்க வேண்டும்.
அத்தகைய விழிப்பு பெற்றால் அப்போது ஒருவேளை தியானம் கைகூடலாம்.
ஜே கிருஷ்ணமூர்த்தி
Public Talk 9 in Saanen, 25 July 1963