17/08/2026
தமிழ்நாடு வணிக மேம்பாட்டு சங்கம் (TNBDA)
Direct Selling / MLM நிறுவனங்கள் தொடர்பான உறுப்பினர் கொள்கை அறிக்கை
தமிழ்நாடு வணிக மேம்பாட்டு சங்கம் (TNBDA) என்பது உண்மையான தொழில் உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து, நம்பகமான Business Referrals, தொழில் வளர்ச்சி, வணிக இணைப்புகள் மற்றும் நீண்டகால வணிக உறவுகளை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் தொழில் மேம்பாட்டு அமைப்பாகும்.
TNBDA எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தையோ, பிராண்டையோ அல்லது சட்டபூர்வமான தொழில் முறையையோ எதிர்க்கும் நோக்கத்தில் இந்தக் கொள்கையை உருவாக்கவில்லை. மாறாக, சங்கத்தின் அடிப்படை நோக்கம், உறுப்பினர்களின் தொழில் பாதுகாப்பு, நம்பகமான Referral Network, உறுப்பினர் ஒற்றுமை மற்றும் Professional Business Environment ஆகியவற்றை பாதுகாப்பதாகும்.
இந்த அடிப்படையில், Direct Selling / MLM (Multi-Level Marketing) நிறுவனங்களின் Distributor, Network Marketer, Independent Business Owner அல்லது Recruitment-based Representatives ஆகியோரின் உறுப்பினர் தகுதி, TNBDA-வின் உள்கட்டமைப்பு மற்றும் Business Referral Model-க்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்யப்படும்.
ஏன் கட்டுப்பாடு தேவை?
1. Referral நோக்கத்தில் வேறுபாடு
TNBDA-வின் முக்கிய நோக்கம், ஒரு Business Owner-க்கு மற்றொரு Business Owner மூலம் உண்மையான வாடிக்கையாளர் அல்லது வணிக வாய்ப்பை உருவாக்குவதாகும். MLM அமைப்புகளில் referral என்பது பல நேரங்களில் புதிய distributor அல்லது network member சேர்ப்பதுடனும் தொடர்புடையதாக இருக்கலாம்.
2. Member Recruitment தவிர்ப்பு
TNBDA உறுப்பினர் வாய்ப்புகள், கூட்டங்கள் மற்றும் Business Networking தளங்கள் தனிப்பட்ட MLM recruitment அல்லது downline உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படுவதை சங்கம் அனுமதிக்காது.
3. உறுப்பினர்களுக்குள் தேவையற்ற போட்டி
ஒரே product அல்லது ஒரே MLM நிறுவனத்தை பல உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்போது, ஒரே வாடிக்கையாளர்களை அணுகுதல், customer conflict மற்றும் member cannibalization போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
4. விலை மற்றும் லாப அமைப்பின் வேறுபாடு
பாரம்பரிய வணிகங்களில் MRP, wholesale price மற்றும் retail margin போன்றவை தெளிவாக இருக்கும். சில MLM அமைப்புகளில் discount, commission, points, business volume மற்றும் rank போன்ற பல காரணிகளின் அடிப்படையில் வருமான அமைப்பு மாறுபடலாம்.
5. Business Networking-ன் தரத்தை பாதுகாத்தல்
TNBDA கூட்டங்கள் genuine business networking மற்றும் referrals உருவாக்குவதற்காக பயன்படுத்தப்பட வேண்டும். Product presentation, recruitment presentation அல்லது compensation-plan discussion ஆகியவை கூட்டத்தின் முக்கிய நோக்கத்தை பாதிக்கக் கூடாது.
6. உறுப்பினர் தரவு மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு
TNBDA உறுப்பினர்கள் பகிரும் business contacts, customer references மற்றும் networking information ஆகியவை தனிப்பட்ட recruitment அல்லது marketing network உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.
7. சங்கத்தின் Brand Positioning
TNBDA ஒரு professional Business Development & Referral Association என்ற அடையாளத்தை பாதுகாக்க விரும்புகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட MLM brand அல்லது product network-க்கும் சங்கம் ஆதரவளிக்கிறது என்ற தவறான perception உருவாகாமல் இருப்பது முக்கியம்.
8. Business Opportunity மற்றும் Product Sales இடையிலான தெளிவு
TNBDA உறுப்பினர் வாய்ப்பு என்பது business development மற்றும் mutual referrals அடிப்படையில் இருக்க வேண்டும். தனிப்பட்ட sales target அல்லது recruitment target அடிப்படையிலான செயல்பாடுகள் சங்கத்தின் நோக்கத்திலிருந்து வேறுபட்டவை.
TNBDA-வின் நிலைப்பாடு
TNBDA, Direct Selling / MLM தொழில் முறையை எதிர்க்கும் அமைப்பு அல்ல. அதே நேரத்தில், எந்த ஒரு business model-மும் TNBDA-வின் Member Protection, Professional Networking, Genuine Business Referral, Non-Recruitment மற்றும் Association Integrity ஆகிய கொள்கைகளுக்கு முரணாக செயல்பட அனுமதிக்கப்படாது.
எனவே, TNBDA உறுப்பினர் தகுதி என்பது ஒரு நிறுவனத்தின் பெயரை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த நபரின் உண்மையான தொழில் செயல்பாடு, Business Model, Referral Practice மற்றும் TNBDA விதிமுறைகளைப் பின்பற்றும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
முக்கிய அறிவிப்பு
“TNBDA எந்த ஒரு Direct Selling / MLM நிறுவனத்தையும் எதிர்ப்பதற்காக இந்தக் கொள்கையை உருவாக்கவில்லை. TNBDA-வின் நோக்கம், உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான, Professional மற்றும் Genuine Business Referral சூழலை உருவாக்குவதாகும். எனவே, Recruitment-based activities, Downline creation, கட்டாய Product Sales அல்லது உறுப்பினர்களை தனிப்பட்ட network-ல் சேர்க்கும் நடவடிக்கைகள் TNBDA தளத்தில் அனுமதிக்கப்படாது.”
TNBDA – வணிகத்தால் உயர்வோம்!
மனிதத்தால் இணைவோம்!