Tamil Properties

Tamil Properties we serve you in buying and selling of properties in and around Chennai...
call 8220895328 / 9790954662 we work with ethics

25/03/2016

EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும், 1987 ஜன. 1க்கு பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்யவில்லை.
சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும், சம்பந்தப்பட்ட சொத்தில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய, பத்திரப்பதிவு அலுவலகத்தில், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும். பொதுவாக பலரும், 30 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கின்றனர். பத்திரப்பதிவு அலுவலகங்களில் கம்ப்யூட்டர் பதிவு 26 ஆண்டுகளுக்கு மட்டுமே உள்ளது. அதற்கு மேல் வேண்டும் என்றால், தேடி கைப்பட எழுதித் தான் சான்றிதழ் தர வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும். இதனால், வில்லங்க சான்றிதழ் பெறுவதில், பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை என்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே என்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.
நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப் பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

EC (Encumbrance Certificate) வில்லங்கச்சான்றிதழ்:
ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விவரங்கள் அனைத்தும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதில் கீழ் கண்ட விவரங்கள் இருக்கும்.
1. சர்வே எண்
2. விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி
3. பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம்
4. சொத்தின் மதிப்பு
5. சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர்
6. தொகுதி மற்றும் பக்க எண்
7. பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண்

மேற்கண்ட விவரங்களின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது என்ற முழு விவரங்கள்ம் தெரியும். EC-யை வைத்தே தாய்பத்திரத்தில் இருந்து நாம் யாரிடம் நிலம் வாங்குகிறோமோ அது வரை உள்ள எல்லா பத்திரங்களையும் நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் நாம் வாங்க இருக்கும் சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் Registered Mortgage (பதிவுசெய்யப்பட்ட அடமானம்) செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரமும் இதில் தெரிந்துவிடும். சொத்து சம்பந்தமாக EC-ல் சில தகவல்கள் வர வாய்ப்பில்லை.

1. 01.11.2009-க்கு முன்பு சொத்தின் உரிமையாளர் அந்த சொத்தை விற்பதற்குயாரையாவது Power of attorney-யாக நியமித்து இருந்தால் அது EC-ல் வராது.
Power of attorney-ஐ பதிவு செய்ய புதிய முறையை அரசாங்கம் 01.11.2009-ல் இருந்து அமல்படுத்தியது. அதன்படி Power of attorney பதிவு விவரம் EC-ல்வரும்.

2. சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் (Unregistered Agreement) போட்டு இருந்தால் அதுவும் EC-ல்வராது.

3. சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவுசெய்யப்படாத அடமானம் (unregistered mortgage) வைத்திருந்தால் அதுவும் EC-ல் வராது.
மேற்கண்ட மூன்று விஷயங்களிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். பல மோசடிகள் நடப்பதற்கு இவை மூன்றும் காரணமாகி விடுகிறனது.

கைப்பட எழுதித்தரப்படும் சான்றிதழ்

EC பெறுவது எப்படி?
சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெறலாம். 01.01.1987-ல் இருந்து தான் Computer மூலம் EC பெற முடியும். அதற்கு முன்பு Manual ECதான். 01.01.1987-ல் இருந்து EC தேவைப்படும் பட்சத்தில் இணைய தளத்தின் மூலமும் விண்ணப்பம் செய்து பெறலாம் இணைய தளத்தின் முகவரி www.tnreginet.net இந்த வசதி தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. எந்தெந்த இடங்களில் இந்த சேவை இருக்கிறது என்ற விவரம் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது சென்னை இராஜாஜி சாலையில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் EC பெறலாம்.

விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்பவரின் பெயர், முகவரி, சொத்து விவரம்மற்றும் கிரையப்பத்திர விவரம் முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும்.விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம்செய்ய வேண்டும். இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்பவருக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

அதற்கு என்ன செலவாகும்?
பத்து ஆண்டுகளுக்கு என்றால் முதல் ஆண்டிற்கு ரூ.15 ம், பிறகு ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.5 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் விண்ணப்ப கட்டணமாக ரூ.11 வசூலிக்கப்படும்.

கம்ப்யூட்டர் முறையில் எடுத்துதரப்படும் நகல்

பதிவு செய்யப்படாத அதாவது EC-ல் entry வராத, சொத்து சம்பந்தமான நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகள் என்ன?
ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்பதற்கு மற்றொருவரை Power of Attorney-ஆக 2005-ல் நியமனம் செய்திருந்தார். Power of Attorney-ஆக நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பதற்கு காலம் தாழ்த்தவே சொத்தின் உரிமையாளர் அவருக்கு தெரியாமல் Power of Attorney-யை ரத்து செய்துவிட்டார். இதை மறைத்தோ அல்லது தெரியாமலோ Power of Attorney-ஆக நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பனை செய்வதற்காக மற்றொருவரிடம் முன் பணம் வாங்கி கிரைய ஒப்பந்தம் (Sale Agreement) செய்து விட்டார். சட்ட ரீதியாக இது செல்லுபடியாகாது. சொத்தின் உரிமையாளர் வேறு ஒருவருக்கு சொத்தை விற்றுவிட்டார்.

25/03/2016

Power of Attorney என்பது என்ன? அது எதற்கெல்லாம் உதவும்?

ஒருவர் தம்முடைய சொத்தை விற்பதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். தன்னுடைய நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய அரசாங்கத்தின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும்.சில சமயம் அரசாங்க அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்.
அரசாங்கத்தில் அங்கீகாரம் பெற்றபின் ஒவ்வொரு வீட்டு மனையை விற்கும் போதும் நில உரிமையாளர் சார்பதிவாளர் அலுவலகம் செல்லவேண்டும்.

அதையெல்லாம் நிலத்தின் உரிமையாளர் செய்ய முடியாத நிலையில் மேற்கண்ட வேலைகளைச் செய்வதற்கு தனது சார்பாக ஒருவரை நியமனம் செய்யலாம். அவரை நியமனம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) அதிகார பத்திரம் (Power of Attorney) பதிவு செய்ய வேண்டும். அதில் தம்மால் நியமிக்கப்படுபவருக்கு எதற்கெல்லாம் அதிகாரம் (Power) கொடுக்கப்படுகிறது என விபரங்கள் இருக்கும்.

Power of Attorney எதற்கெல்லாம் உதவும்:
1. சொத்துகளை தனது பெயரில் வேறொருவர் மூலமாக வாங்கலாம்.
2. வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது தன்னுடைய (visit) இல்லாமல் இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்து கொள்ளலாம்.
3. சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆவணக்களுக்கு காலவாதி ஆகாது.
4. எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது.

Power of Attorney இரண்டு வகைப்படும்:
1. பொது அதிகார பத்திரம் (General Power of Attorney)
2. தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney)

1. பொது அதிகார பத்திரம் (General Power of Attorney)
இதில் Power of Attorney யாக நியமிக்கப்படுபவருக்கு சொத்தை விற்க, நிலமாக இருந்தால் மனைப்பிரிவுகளாக பிரிக்க மற்றும் அரசு அலுவலகங்களில் சொத்துதொடர்பான ஆவணங்களில் கையொப்பம் இட முதலிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.

2. தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney)
இதில் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் வழங்கப்படும் (எ.கா) சொத்தை விற்க அல்லது மனைப் பிரிவுகளாக பிரிக்க மட்டும் என்பது போன்ற செயல்கள். மேற்கண்ட செயலைத் தவிர வேறு எதையும் அவரால் செய்யமுடியாது.

மேற்கண்ட இரண்டிலுமே நீங்கள் வாங்க நினைக்கும் சொத்து எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்குதான் Power of Attorney பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். அதனால் வில்லங்க சான்றிதழில் (EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் ) இந்த விவரம் (Entry) இருக்காது. இப்படி EC-ல் entry வராத காரணத்தினால் Power of Attorney -யிடம் சொத்து வாங்குபவரால் அது ரத்து செய்யப் பட்டிருக்கிறதா? என்ற விவரத்தை தெரிந்து கொள்ளமுடிவதில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

1.நாம் சொத்து வாங்கும் போது நமக்கு அந்த சொத்தை விற்பனை செய்பவர் Power of Attorney-ஆக இருந்தால் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் Power of Attorney பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு நகல் (Copy of Document) விண்ணப்பம் செய்து பெறவேண்டும். அதில் இந்த Power of Attorney ரத்து செய்யப்பட்டிருந்தால் அதனுடைய விவரம் குறிக்கப்பட்டிருக்கும். நகல் பெறுவதற்கு சொத்தின் உரிமையாளர் அல்லது Power of Attorney இருவரில் ஒருவர் தான் விண்ணப்பம் செய்ய முடியும்.

2.சொத்தின் உரிமையாளரிடம் நேரிடையாக பேசி Power of Attorney ரத்து செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்வது மிகவும் நல்லது. உரிமையாளரிடம் பேசாமல் எந்த ஒப்பந்தமும் Power of Attorney-யிடம்செய்யக்கூடாது.

01.11.2009 -லிருந்து Power of Attorney பதிவு செய்யும் புதிய முறை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி Power of Attorney தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதன் விவரம் முழுவதும் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த சார்பதிவாளருக்கு அனுப்பப்பட வேண்டும். இது பல மோசடிகளை தவிர்க்க உதவும். ஏனென்றால் இதன் விவரம் EC-ல் வந்து விடும்.

Power of Attorney எழுத தேவையான ஆவணங்கள்:

பவர் எழுதி கொடுப்பவர்
1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity proof)
2. இருப்பிட சான்று (Residence Proof)
3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்
4. ரூபாய் 20க்கான முத்திரைதாள் (பத்திரம்)

பவர் ஏஜன்ட் ( எழுதி வாங்குபவர் )
1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity proof)
2. இருப்பிட சான்று (Residence Proof)
3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்
4. இரு அத்தாட்சி (Two witness)

பதிவு செய்யப்படாத அடமானம் மற்றும் கிரைய ஒப்பந்தம் போன்றவை EC-ல் வராத பட்சத்தில் நாம் எப்படி அதை கண்டுபிடிப்பது ?

ஒருவர் சொத்தை அடமானம் செய்யும் போது அது பதிவு செய்யப்படாவிட்டாலும் சொத்தின் Original பத்திரத்தை அடமானம் பெற்றவர் வாங்கி வைத்துக்கொள்வார். அதனால் ஒரு சொத்தை நாம் கிரைய ஒப்பந்தம் செய்யும் போது Xerox copy-யை வைத்து நாம் மற்ற விவரங்களை உறுதி செய்து கொண்டாலும் Original பத்திரத்தை பார்த்த பிறகு தான் கிரைய ஒப்பந்தமே செய்ய வேண்டும். அது மிக முக்கியம். ஆனால் ஏற்கனவே ஒருவரிடம் சொத்தின் உரிமையாளர் கிரைய ஒப்பந்தம் செய்து இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது அரிது. ஏனெனில் பொதுவாக கிரைய ஒப்பந்தம் செய்பவரிடம் Original பத்திரத்தை சொத்தின் உரிமையாளர் கொடுக்கத் தேவையில்லை.

மேலும் சொத்து சம்பந்தமான பதிவு செய்யப்படாத அடமானம், மற்றும் பதிவுசெய்யப்படாத எந்த நடவடிக்கைகளும் செல்லு படியாகாது என சட்டம் இருந்தால் இது போன்ற மோசடிகள் நடக்காது. சொத்து சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளுமே பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏனென்றால் பதிவு செய்யப்படும் எல்லா விவரங்களுமே EC-ல் வந்து விடுவதால் சொத்து அடமானத்தில் உள்ளதா அல்லது வேறு ஒருவரிடத்தில் கிரைய ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறதா என நாம்தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

25/03/2016

பத்திர பதிவிற்கு வருமான வரி செலான்!!

2014 அக்டோபர் மாதத்திலிருந்து பத்திர பதிவிற்கு வருமான வரி செலானை சமர்பிக்க வேண்டும்.
வீடு அல்லது நிலம் வாங்குபவர்கள் பத்திரத்தை பதிவு செய்யும் பொது வருமான வரியை ஏற்கனவே பிடித்தம் செய்ததற்கான செலானை கட்டாயம் சமர்பிக்க வேண்டும்.
என்ற புதிய சட்டத்தை அமலாக்குவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இது இவ்வாண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

பெரிய நகரங்கள்:
ஒருவர் வீடு அல்லது நிலம் ஆகிய சொத்தின் மதிப்பு பெரிய நகரங்களை பொறுத்தமட்டில் ரூ.50 லட்சம் மற்றும் இதர நகரங்களில் ரூ.20 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால், அதனை வாங்குபவர்கள் சொத்தின் மதிப்பில் 1 சதவீதத்தை விற்பனை செயபவர்களிடமிருந்து அப்போதே பிடித்தம் செய்ய வேண்டும் என்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரி துறைக்கு செலுத்த வேண்டும். இதனை நடைமுறைப் படுத்தும் வகையில் இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கான ரசீதை சமர்பித்தால் மட்டுமே பத்திர பதிவு செய்யபடும் என்பதை சட்டமாக அரசு முடிவு செய்துள்ளது. முத்திரைக் கட்டணம் செலுத்துவதற்காக சொத்தின் மதிப்பு எவ்வாறு கணகிடப்படுகிறதோ அதன் அடிப்படையில் இந்த பதிப்பு கணக்கிடப்படும்.
சொத்தை விற்பனை செய்பவர்கள், அவர்களுக்கு தகுதி இருக்கும் பட்சத்தில் இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரி துறையிடமிருந்து திரும்ப பெற்று கொள்ளலாம். இதற்கான தனி விண்ணப்ப படிவம் வருமான வரி துறையால் விரைவில் தயாரிக்கபட உள்ளது.

கருப்பு பணம்:
வீடு மற்றும் நிலம் விற்பனையில் அதிக அளவில் பணம் புழங்குகிறது. மேற்கண்ட நடவடிக்கையில் வருமான வரித்துறை இந்த பரிவர்த்தனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என மதிய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருப்பு பண புழக்கத்தை கட்டு படுத்தும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. நிலம் மற்றும் வீடுகள் விற்பனையில் ரொக்க பரிவர்த்தனையின் அளவு 60 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. இந்த சட்டம் நடைமுறையில் சாத்தியபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

25/03/2016

உங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி?

தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர், நில உரிமை பட்டா விவரங்கள், அரசின் பதிவேடு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் வட்டார தாலுகா அலுவலகத்திற்கு சென்றுதான் பார்க்க முடியும். ஆனால் இப்போதோ அந்த வசதிகள் இணையத்திலே இருக்கிறது.
அதாவது நீங்கள் சொந்த ஊரிலிருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் பணியில் இருக்கலாம். நமக்கு சொந்தமான வீடு, நிலம், தோட்டம் ஆகியவை உங்கள் சொந்த ஊரில் இருக்கும். நீங்கள் வரும் சமயத்தில் தான் அதை நேரில் சென்று பார்க்க முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அந்த இடத்திற்கு நீங்கள் தான் அதிகாரபூர்வமான உரிமையாளர் என பார்ப்பது பற்றிய தகவலை தான் இன்று பார்க்க இருக்கிறோம். அதற்க்கு முதலில் நாம் செய்ய வேண்டியது உங்களது நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம், முதலிய விவரங்களை குறித்து கொண்டு அடுத்ததாக உங்கள் வசம் இருக்கும் உங்களது நிலத்தின் பத்திரத்தில் உள்ள பட்டா எண், சர்வே எண், சர்வே உட்புல எண் அனைத்தையும் குறித்து கொள்ளுங்கள்.

தற்போது நில உரிமை நகல் பார்வையிட இந்த link-ஐ http://edistrict.tn.gov.in:8080/eservicesnew/land/chitta_ta.html?lan=ta கிளிக் செய்து அந்த இணையத்தளத்தில் சென்று பார்த்து கொள்ளலாம்..

25/03/2016

சொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்:

பலரும் சொத்துகளை வாங்கும்போது, அதை பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்து கொள்கின்றனர். தங்களது சொத்து பத்திரமாக உள்ளதாக கருதுகின்றனர். ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு பதிவு செய்தல் அந்த சொத்தை வருவாய் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாக சொந்தமாகும். பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள்கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களை பெற்று, ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். மனுதாரர், தனது மனுவுடன், ஆவனங்களின் செராக்ஸ் பரிதியை அளித்தால் போதும், எவ்வித கட்டணமும் வேண்டியதில்லை. மூல ஆவணங்களை கொடுக்க வேண்டியதில்லை.
கிராம நிர்வாக அலுவலர், நிர்வாக காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கு கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய் தோறும் பட்டா மாற்றத்துக்கான மனுக்களை பெற வேண்டும். விண்ணப்பித்த தேதியில் இருந்து இரண்டாவது வெள்ளிகிழமையன்று, தாசில்தார் அலுவகத்திற்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும். இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன் முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ சென்று சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைத்த சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கைஎழுத்திட வேண்டும். அன்றைய தினமே அலுவலக கணினியில், மனுவின் விவரத்தை துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.
ஆவணக்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரீசீலீத்து, 2வது வெள்ளிகிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு 15 நாள்களில் பட்டா மாற்றம் செய்யவேண்டும். உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா என்றால் விண்ணப்பித்த தேதியில் இருந்து நான்காவது வெள்ளிகிழமை பட்டா உத்திரவை பெற வேண்டும். இதை பயன்படுத்தி சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் செராக்ஸ் பிரிதிகளுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து விரைவில் பட்டா பெற்று கொள்வதே சிறந்தது

25/03/2016

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்

விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....

Location : Peramambur (santhy nagar) - ChennaiLandmark : Near Laxmi amman kovilArea : 1400 sqftFloor - G+2Price : 1.5crT...
25/03/2016

Location : Peramambur (santhy nagar) - Chennai
Landmark : Near Laxmi amman kovil
Area : 1400 sqft
Floor - G+2
Price : 1.5cr
To visit call : +91-9941378065
Brokers Excuse...

1) flat for sale in west mambalam. 3 bed room flat. buyers can contact us to visit.2) Individual house near egmore is fo...
29/10/2015

1) flat for sale in west mambalam. 3 bed room flat. buyers can contact us to visit.
2) Individual house near egmore is for sale

Brokers excuse.

- Tamil properties

19/07/2015

3 acre land is for sale in Bangalore near hebbal. Rs.8500.00/cent contact immediately +91-9790954662. brokers excuse.

04/07/2015

30 acre property for sale at perambalur to athur road. call 9790954662 for further info. suitable for school / collage / and industry. brokers excuse.

03/03/2015

Tips for Buying Land in Chennai

The sun, the sands, the breeze. No limits, no hindrances, no conditions. Don’t these sound straight out a book, or maybe your favorite summer movie? Now imagine owning your own piece of earth in this vast wide world and not being cloistered by the T & C’s of apartments. Sure it sounds fabulous alright. Earth calling… but first, back to basics. It is a well-known fact that land has much better appreciation and ROI than say, an apartment.

No matter where you would like to buy your plot of land, here are a few helpful tips to go about purchasing land in Chennai.

Know your need: Are you looking at a residential or commercial space? Are you putting it on rental? Or will you be moving in yourself? With that set, let’s move on to more details that you will need to look into.

Stay off farm lands: Unless you need to farm and cultivate produce by yourself, it is best to stay off cultivable land. Why? Because the government holds farm land converted into dwellings as illegal. So remember to steer clear.

Check approvals: Run a check on the plot you want to put your money on. Verify if the plot is approved by the CMDA – Chennai Metropolitan Development Authority. Beyond Chennai city precincts, probably you might have to go with the relevant Panchayat authority.

EC talk: Obtain a copy of the EC, expanded as the Encumbrance Certificate. Get your lawyer to detect if the party that you plan to buy from is the whole owner of the land. If not, get your POA granted by the remaining co-owners.

Check on the Patta: The Patta delineates lucidly the geographical extent of a land. Examine its details and also its survey number.

Get an upright lawyer: A commoner might find the task of going through the nitty-gritty quite an uphill task. Precisely the reason why you need a good lawyer to do the spadework before purchase.

Get a good civil engineer: Finally, employ a civil engineer who can run a check on the texture of the land a decade or so ago.

29/11/2014

3 acres of Land is for sale
Location : vinayaga nallur, 3km from vedanthangal..
Price : 30k/cent - negotiable
join venture also acceptable
call 8438266880 / 9790954662

Address

Chennai

Telephone

8220895328

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Properties posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Properties:

Share