It's Rajesh

It's Rajesh It’s Rajesh
📰 News | 💡 Information | 🎥 Videos
🌍 மக்கள் • சமூகம் • நிகழ்வுகள்
தகவல் தெரிந்துகொள்வோம்… கருத்துகளை பகிர்வோம்!

Dorothy Review: பாலினம் குறித்த உரையாடல் - தமிழ் சினிமா பேசத் தயங்கும் விஷயங்களைத் தொடும் டோரதி!அடிப்படைவாதம், ஆணாதிக்கம...
26/09/2026

Dorothy Review: பாலினம் குறித்த உரையாடல் - தமிழ் சினிமா பேசத் தயங்கும் விஷயங்களைத் தொடும் டோரதி!

அடிப்படைவாதம், ஆணாதிக்கம், சாதியம், போலி கௌரவம் போன்ற பிற்போக்குத்தனங்களைக் கேள்வி கேட்கும் வசனங்களும், கதாபாத்திரங்களின் மனமாற்றங்களைப் பேசும் வசனங்களும் கைதட்டல் பெறுகின்றன.

90களின் தொடக்கம். மதுரையிலுள்ள கிராமம் ஒன்றில், சாதி வெறியால் தன் அம்மாவையும், அக்காவையும் இழந்த சுப்பு (சனந்த்), தன் அப்பா ('வேட்டை' முத்துக்குமார்), அண்ணன்களுடனும் வாழ்ந்து வருகிறார். தன் பால்ய காலம் முதல் உயிர்த்தோழனாக இருக்கும் கார்த்தியுடன் (ரிஷிகாந்த்) பொறுப்பில்லாமலும், ரவுடிஸம் செய்துகொண்டும் நாள்களைக் கடத்தும் சுப்புவுக்கு, தன் குடும்பம் மீதும், சாதிய அமைப்புகள் மீதும் வெறுப்பிருக்கிறது.

இந்நிலையில், சுப்புவின் வாழ்க்கையில் டோரதி (கீர்த்தி சுரேஷ்) வர, அதைத் தொடர்ந்து இரு நண்பர்களின் வாழ்க்கையிலும் நிகழும் அதிரடி மாற்றங்களும், அவை சொல்லும் செய்தியுமே கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'டோரதி' திரைப்படம்.

கோபக்கார இளைஞனுக்கான துடுக்குத்தனம், காதலின் வலி, நண்பன் மீதான பாசம், அவமானங்கள் தரும் வேதனை, துப்பாக்கியும் கையுமாக நடக்கும் மனப்போராட்டம் என உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் ரிஷிகாந்த்.

ஆக்ரோஷம், சேட்டை, பாசம் என வழக்கமான இளைஞனுக்கான மீட்டரிலும், உணர்வுகளோடு மல்லுக்கட்டி, அன்பைத் தேடும் மீட்டரிலும் படத்தைத் தாங்குகிறார் சனந்த்.

சிறிய திரைநேரமே வந்தாலும், தேவையான தாக்கத்தைக் கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். 'வேட்டை' முத்துக்குமார், ராமச்சந்திரன் துரைராஜ், ஜீவா சுப்பிரமணியன், சௌந்தரராஜன் ஆகியோர் கதைக்களத்தின் தூண்களாக நிற்கிறார்கள்.

மழையில் தோய்ந்த 90களின் மதுரை மாவட்ட கிராமத்தையும், வட இந்தியாவின் அத்துவான நிலப்பரப்பையும் திரைமொழிக்கு ஏற்ப நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ். திரு.

இந்தத் திரைமொழிக்கு கணேஷ் சிவாவின் ஆர்ப்பாட்டமில்லாத படத்தொகுப்பும் கைகொடுத்திருக்கிறது. 'கல்யாண விருந்து', 'முத்துமணி' எனக் காதல், ஆட்டம் பாட்டம், ஆற்றாமை உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் உயிரூட்டியிருக்கிறது இளையராஜாவின் இசை.

கதாபாத்திரங்களின் அகப்போராட்டங்களையும், அதிர்வுகளையும் மனதிற்கு நெருக்கமாக்கியிருக்கிறது அவரின் பின்னணி இசை. தயாரிப்பு வடிவமைப்பாளர் குமார் கங்கப்பன், ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா ஆகியோரின் உழைப்பும் கவனிக்க வைக்கிறது.

தொடக்கத்திலேயே ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டு, பள்ளிக் கால பின்கதைக்குப் போகிறது திரைக்கதை. காமெடி, காதல், ஆக்ஷன், நட்பு எனக் கலகலப்பாகவும், அதேநேரம் கதையின் மையத்தையும் தொட்டுத்தொட்டுப் பேசியபடியே சுவாரஸ்யமாகவும் சொல்கிறது நேர்த்தியான திரைக்கதை.

மிகக்குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களைக் கொண்டு, அவற்றை ஆழமாகவும், தெளிவாகவும் எழுதியதோடு, கதையின் ஆன்மாவிலிருந்து விலகாமல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது திரைக்கதை.

சாதாரணமான காட்சிகளைக் கூட, நேர்த்தியான திரைமொழி அர்த்தப்பூர்வமாக்கி, ரசிக்க வைக்கிறது. கார்த்தி - சுப்பு நட்பும், கதையின் பேசுபொருளும் தொடக்கத்தில் வெவ்வேறாக இருந்தாலும், அவை கச்சிதமாக இணையும் இடங்கள் நச்!

உணர்ச்சிப் போராட்டம், த்ரில்லர் போராட்டம் என இரண்டாம் பாதி பெரிய பொறுப்பைத் தன்மீது ஏற்றிக்கொள்கிறது. திருப்பங்கள், அதனால் பாதிக்கப்படும் பிரதான கதாபாத்திரங்கள், அவற்றின் மனப்போராட்டம் எனப் பயணிக்கிறது படம்.

அடிப்படைவாதம், ஆணாதிக்கம், சாதியம், போலி கௌரவம் போன்ற பிற்போக்குத்தனங்களைக் கேள்வி கேட்கும் வசனங்களும், கதாபாத்திரங்களின் மனமாற்றங்களைப் பேசும் வசனங்களும் கைதட்டல் பெறுகின்றன.

சமூகத்தில் நிலவும் பிற்போக்கு மனநிலையைக் காட்சிப்படுத்தி, அவற்றுக்குச் சரியான சாட்டையடியைத் திரைக்கதை கொடுத்தாலும், சில இடங்களில் அவை ஓவர்டோஸ் ஆவது மைனஸ் ஆகவும் மாறுகிறது.

மேலும், புனிதப்படுத்தல், தெய்வீகத்தன்மையைத் திணித்தல் போன்றவை ஒருகட்டத்திற்கு மேல் படம் பேசும் அரசியலுக்கு பலம் சேர்க்காமல் போகின்றன. அவற்றைத் தாண்டி, கார்த்தி - சுப்புவின் நட்பும், அவர்களுக்கு இடையிலான உரையாடல்களும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.

மெல்லுணர்வுகளுக்கிடையில், கொஞ்சம் ட்விஸ்ட், கொஞ்சம் காமெடி என நகர்ந்து, இறுதிக்காட்சியைத் தொடும் திரைக்கதை, கைத்தட்டலைப் பெறுகிறது. பாலியல் பாகுபாடு, திருநர் சமூகத்தின் அகநிலை எனத் தமிழ் சினிமா பேசத் தயங்கும் விஷயங்களைத் தொட்டிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு பாராட்டுகள்!

திரையாக்கத்திலும், பேசுபொருளிலும் முழுமையான திரையனுபவத்தைத் தந்து, முக்கியப் படைப்பாக நிமிர்ந்து நிற்கிறாள் இந்த 'டோரதி'.

ஏழு கடல் ஏழு மலை: `அப்பா, வழிகாட்டி... நிறைய கோணங்களில் ராம் சாரைப் பார்த்திருக்கிறேன்!'- அஞ்சலிராம் இயக்கத்தில் சூரி, ந...
26/09/2026

ஏழு கடல் ஏழு மலை: `அப்பா, வழிகாட்டி... நிறைய கோணங்களில் ராம் சாரைப் பார்த்திருக்கிறேன்!'- அஞ்சலி

ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி இருவரும் இசையமைத்திருக்கிறார்கள்.

அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் (செப்.23) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அஞ்சலி, " இந்தப் படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சூரி எனக்கு ஒரு நல்ல நண்பர். அவருடைய நல்ல மனதிற்கு இப்போது நிறைய சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார். சூரியின் வெற்றியை என்னுடைய வெற்றிபோல் உணர்கிறேன். இன்னும் நிறைய வெற்றிகளை அவர் அடைய வேண்டும்.

என்னுடைய முதல் படத்தில் இருந்து 20 வருடங்களாக நானும், ராம் சாரும் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். எனக்கு ஒரு அப்பா, வழிகாட்டி என நிறைய கோணத்தில் ராம் சாரை நான் பார்த்திருக்கிறேன்.

'ஏழு கடல் ஏழு மலை' படம் ராம் சாருக்கு எவ்வளவு ஒரு நெருக்கமான ஒரு படம் என்று தெரியும். அதில் என்னுடைய கதாபாத்திரத்தை அழகாக எழுதியதற்கு நன்றி சார்.

சினிமாவில் நான் 20 வருடங்களை எட்டியதற்கு நிறைய பேர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். என்னுடைய இந்த வெற்றிக்கும், பயணத்திற்குள்ளும் ராம் சார், வசந்த பாலன் சார், கார்த்திக் சுப்புராஜ், சுந்தர் சார் போன்ற நிறைய இயக்குநர்கள் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 55 படங்களில் நடித்துவிட்டேன். எல்லா இயக்குநர்களும் எனக்கு அழகானக் கதாபாத்திரங்களைத் தான் எழுதியிருக்கிறார்கள். அதற்காக இந்தத் தருணத்தில் நான் எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

வீரமணி போக்சோ வழக்கு: ``விசாரணையை நீர்த்துப் போக போலீஸுக்கு சிக்னல் கொடுத்தது ஏன்?" - அப்பாவு கேள்விஜெம் நிறுவனர் தொழிலத...
26/09/2026

வீரமணி போக்சோ வழக்கு: ``விசாரணையை நீர்த்துப் போக போலீஸுக்கு சிக்னல் கொடுத்தது ஏன்?" - அப்பாவு கேள்வி

ஜெம் நிறுவனர் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கு விசாரணையை 70 நாள் தாமதப்படுத்தியது ஏன் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``சிறுமிகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய மிருகம் ஜெம்வீரமணி மீதான வழக்கை முடித்து வைக்க இயலாது. விசாரணையை தீவிர படுத்துங்கள் என்று போக்சோ நீதிமன்ற பெண் நீதிபதி ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்ட பிறகும் 70 நாட்கள் விசாரணை நடத்த தாமதப்படுத்தியது ஏன் CM Sir...?

யாராலும் எந்த காலத்திலும் மன்னிக்க முடியாத குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜெம் வீரமணியுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் வெங்கட்ரமணா, லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் பேரவை தலைவர் ஜே சி டி பிரபாகர் ஆகியோர் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தையின் மர்மம் என்ன? ஜெம் வீரமணி எங்கள் குடும்ப நண்பர் என்று அமைச்சர்கள் பொதுவெளியில் அவரோடு மேடையில் இருந்த படி அறிவித்து விசாரணையை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறைக்கு சிக்னல் கொடுத்தது ஏன்...?

முதலமைச்சரின் நண்பர்கள் ஆன ஆந்திர ரெட்டி கேங்க் நடத்தும் கனிம நிறுவனங்களிடம், ஜெம் வீரமணியின் கனிம நிறுவனங்களை அபகரித்துக் கொடுக்க நடைபெற்றதாக கூறப்படும் முயற்சிகளை இல்லை என்று மறுக்க முடியுமா CM Sir...? உங்கள் மடியில் கனமில்லை என்றால் ஜெம் வீரமணியுடன் தொடர்பில் இருந்த இரண்டு அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்துவிட்டு அவர்களை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த தயாரா CM Sir..?

கடந்த நான்கு மாதங்களில் பதிவான 160-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளை மறைத்துவிட்டு 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் வழக்கு குறித்து திடீரென ஆவேசமாக பேசும் முதலமைச்சரே நீங்கள் பிரச்சாரத்திற்காக மதுராந்தகம் வந்து கொண்டிருந்த போது சென்னை வண்டலூரில் பள்ளி மாணவியை காமுகர்கள் பலர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தங்களுக்கு எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்ட்டில் இல்லையா CM Sir?" எனப் பதிவிட்டிருக்கிறார்.

"தவெக ஆட்சி வந்தது நல்லதுதான்!" - சொல்கிறார் நாதக பாத்திமா பர்கானா"2026 சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துவிட்டப் ...
26/09/2026

"தவெக ஆட்சி வந்தது நல்லதுதான்!" - சொல்கிறார் நாதக பாத்திமா பர்கானா

"2026 சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துவிட்டப் போதிலும் இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குவது ஏன்?"
"வெற்றி தோல்வியை கணக்கிட்டு நாம் தமிழர் கட்சி அரசியல் செய்திருந்தால் 2016-ல் 1.1% வாக்குகள் பெற்றபோதே நாங்கள் கூட்டணி அரசியலை கையிலெடுத்திருப்போம். அன்றைக்கே கூட்டணிக்குப் போகாதா நாங்கள் 4% வாக்குகளை கொண்டிருக்கும்போது எதற்காக கூட்டணிக்கு செல்ல வேண்டும். எனவே கடந்த பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் நா.த.க சோர்ந்துவிட்டது.. கூட்டணிக்கு சென்றுவிடும் என்பதெல்லாம் கற்பனைவாதம். தற்காலிக பின்னடைவுக்காக நிரந்தர வெற்றியை இழக்க நாங்கள் தயாராகயில்லை. நா.த.க தனித்தே போட்டியிடும்"

"த.வெ.க ஆட்சிமீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லையே?"

"முந்தைய ஆட்சிகளின் அரசுக்கு எதிரான பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களை இயக்கங்களும் கட்சிகளும் முன்னெடுப்பதை பார்த்திருப்போம். த.வெ.க ஆட்சி அமைந்தபிறகு தன்னெழுச்சியாக மக்களே வீதிக்கு வந்துவிட்டார்கள். பட்டினம்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கக் கூடாதென மீனவர்களும், மின்வெட்டை கண்டித்து நகர்பகுதி மக்களும் பயிர்கடன் தள்ளுபடிக்காக விவசாயிகளும் தொடர்ச்சியாக போராடுகிறார்கள். நாளடைவில் ஆட்சிக்கு எதிரான புரட்சி தமிழ்நாட்டில் வெடிக்கும். ஆக அரசியல் கட்சிகள் போராடாமல் இருந்தாலும் மக்களே த.வெ.க-வை விரட்டியடிப்பார்கள். மதுராந்தகம் தொகுதியில் வாக்குக் கேட்க சென்ற மரகதம் குமரவேலை பொதுமக்கள் ஊருக்கு விடாமல் தடுக்கிறார்களே.. இந்த சூழல் முதல்வர் விஜய்க்கும் ஏற்படும்"

"த.வெ.க ஆட்சியைப் பிடித்துவிட்டதால், நா.த.க இனி வளர்வது கடினம்தான் என்கிறார்களே!"

"த.வெ.க ஆட்சியைப் பிடித்திருப்பது தமிழகத்துக்கு சீரழிவுதான் என்றாலும் அரசியல்ரீதியாக அதிலொரு நன்மையும் இருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக சாதி, மதம், பணம், சின்னத்தை பார்த்து வாக்களித்துக் கொண்டிருந்த மக்களை தனது சினிமா கவர்ச்சி, போலி பிம்பத்தால் அதிலிருந்து வெளியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். ஆட்சியை பிடிக்க முடிந்த விஜய்யால் ஆட்சியை நடத்தமுடியவில்லை. அந்த அளவுக்கு திறமையில்லாமல் இப்போது தடுமாறுகிறார். எனவே மாற்று என ஏமாற்றத்துக்கு வாக்களித்த மக்களை அடுத்தமுறை உண்மையான மாற்றத்தை தரக்கூடிய நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள்"

"நா.த.க தி.மு.க-விடம் விலைபோய்விட்டதாகச் சொல்கிறார்கள்?"

"யார் ஆளும்கட்சியோ அவர்களை நோக்கித்தான் விமர்சனங்களை முன்வைக்க முடியும். அந்த வகையில் த.வெ.க-வை அதிகமாக விமர்சிப்பதால் த.வெ.க-வினர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இப்போதும் சொல்கிறோம் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸும் தமிழினத்தின் துரோகிதான். பா.ஜ.க மனித குலத்தின் விரோதிதான். புதிதாக வந்திருக்கும் த.வெ.க, தி.மு.க - பா.ஜ.க-வின் கலவைதான். நா.த.க-வை எவராலும் விலைக்கு வாங்க முடியாது. த.வெ.க ஆட்சியையும் தி.மு.க-வின் அரசியலையும் ஒழிப்பதே நா.த.க-வின் இலக்கு"

🎉 Facebook recognized me as a consistent post creator this week!
25/09/2026

🎉 Facebook recognized me as a consistent post creator this week!

21/09/2026
21/09/2026

Savukku spoke about communist...

21/09/2026

ஊருக்கு கிளம்பியாச்சி...

📊 முதல் 5 மாதங்களின் கணக்கு1. அரசுக்கு கிடைத்த வருவாய் – ₹1,17,791 கோடிஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை:மாநில GST – ₹34,144.06 கோ...
20/09/2026

📊 முதல் 5 மாதங்களின் கணக்கு
1. அரசுக்கு கிடைத்த வருவாய் – ₹1,17,791 கோடி
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை:
மாநில GST – ₹34,144.06 கோடி
வர்த்தக வரி – ₹28,164.79 கோடி
முத்திரைத்தாள் & பதிவு கட்டணம் – ₹10,493.30 கோடி
மாநில ஆயத்தீர்வை – ₹5,214 கோடி
மத்திய அரசின் வரிப் பங்கு – ₹24,188 கோடி
வரி அல்லாத வருவாய் – ₹5,149 கோடி
மத்திய அரசின் மானியங்கள் – ₹3,537 கோடி
இதர வரிகள் – ₹6,843 கோடி �
Maalai Malar
2. அரசின் செலவு – ₹1,38,140 கோடி
அதே ஐந்து மாதங்களில் அரசின் செலவு ₹1.38 லட்சம் கோடியாக இருந்துள்ளது. இதில் சம்பளம், ஓய்வூதியம், அரசு திட்டங்கள், மானியங்கள், கடனுக்கான வட்டி போன்ற பல்வேறு செலவுகள் அடங்கும். �
Dinamalar
🔴 3. வருவாய் பற்றாக்குறை – ₹20,349 கோடி
கணக்கு:
வருவாய் ₹1,17,791 கோடி
செலவு ₹1,38,140 கோடி
➡️ வித்தியாசம் = ₹20,349 கோடி
அதாவது, இந்த ஐந்து மாதங்களில் அரசின் செலவு, அந்தக் காலகட்டத்தில் கிடைத்த வருவாயை விட ₹20,349 கோடி அதிகமாக இருந்துள்ளது.
💰 4. கடனுக்கான வட்டி – ₹25,991 கோடி
மிகவும் முக்கியமான எண்ணிக்கை இது.
ஐந்து மாதங்களில் அரசின் செலவுகளில் கடன்களுக்கு செலுத்தப்பட்ட வட்டி மட்டும் ₹25,991 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியச் செலவு ₹21,008 கோடி எனவும் தகவல் தெரிவிக்கிறது. �
Dinamalar +1
🏦 5. வாங்கிய புதிய கடன் – ₹30,021 கோடி
ஏப்ரல்–ஆகஸ்ட் 2026 காலத்தில் தமிழ்நாடு அரசு ₹30,021 கோடி கடன் பெற்றுள்ளதாக இந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த மாதத்தில் புதிய கடன் பெறப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. �
Maalai Malar

Address

Sembiyanmadevi
Ulundurpet
607202

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Rajesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share