10/02/2024
நேற்று இடம்பெற்ற ஹிரிகரன் concert போல ஒரு சில மாதங்களுக்கு முன்பு அநுராதபுரத்தில் Carnival நடைபெற்றது
அங்கேயும் சென்றுருந்தேன்
அங்கும் குடும்பமாகவும்,university students group,இளைஞர்கள் குழுவாகவும்,பெண்கள் குழு , couples ஆகவும் வந்திருந்து அவர்களுக்கு விரும்பிய இடத்தில் இருந்து அவர்கள் நடனமாடியபடி இருந்தனர்.
நானும் எனது நண்பர்களுடன் சென்றிருந்தேன்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கும் அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கும் நான் அவதானித்த வித்தியாசங்கள்.
இளைஞர் குழுக்களுக்குள் மோதல் ஏற்றபடவில்லை.
திரையரங்கம் நோக்கி தண்ணீர் போத்தல், கெல்மட்,செருப்பு வீசப்படவில்லை.
இலங்கையில் உற்பத்தியாகும் அதே சாராயம் அதே பியர் தான் அவர்களும் அருந்தியிருந்தார்கள்.
பார்வையாளர்களாக வந்து நடனமாடிய பெண்கள் மீது அங்க தொந்தரவுகள்,தூசன வார்த்தை பிரயோகங்கள் இடம்பெறவில்லை.
வேணுமென்று கூட்டமாக சென்று பெண்கள் மீது இடிக்கவில்லை.
பெண்கள்& குழந்தைகள் கீழே விழுத்தி முந்தியடித்து ஓடவில்லை.
தவறுதலாக முட்டுப்பட்டாலும் Sorry என்ற சிரித்த முகத்துடன் அந்த கணத்தில் பிரச்சனை முடிவுறும்.
Couples ஆக வந்தவர்கள் நடனமாடினார்கள் யாரும் வசைபாடவில்லை.
கமரா பொருத்திய கோபுரங்களில் ஏறி camera man ஐ தொந்தரவு செய்யவில்லை
Police வெறுமனே நிகழ்ச்சிகளை பார்த்து ஒழுங்குகளையும் லேசாக கவனித்தபடி இருந்தனர்.
ஆக மொத்தத்தில் எங்கள் மனநிலையில் தான் மாற்றம் வேண்டும் அது மாறுமா என்பது கேள்விக்குறி தான😕
புலம்பெயர் (ஈழத்தமிழர்கள்) தேசத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன அங்கேயும் VIP tickets 300£ /200/150/100 என்ற விலைகளில் விற்கப்படுகின்றன அதாவது இலங்கை ரூபாயில் 20,000முதல் 80,000 வரை.அங்கேயும் மதுபானம் அருந்தப்படுகின்றன ஆனால் தமிழர் காலாச்சாரம் கட்டிக்காப்பாற்றப்படுகின்றது போலும்🤔.
யாழ்ப்பாணத்தில் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் கண்டிப்பாக தேவை இதனால் கலாச்சாரம் அழிந்து போகும் என்பது முட்டாள் தனமான கருத்து.ஒரு மனிதனுக்கு கல்வி,உழைப்பு எவ்வளவு முக்கியமோ மனமகிழ்ச்சியும் முக்கியம்.
ரம்பாவின் கணவர் ஒரு Business Man என்று அனைவரும் அறிந்ததே அவரது செயற்பாடுகள் Business ஐ இலக்காக கொண்டே இருக்கும்.(It’s a corporate world)யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் அதிகம் அவர்கள் எது நல்லது எது கெட்டது என்று சிந்தித்து செயற்பட்ட்டும்.