MR Media Vision

MR Media Vision Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MR Media Vision, Kalmunai.

 #பாகிஸ்தானில்  #பள்ளிவாசல்  #ஒன்றில்  #இடம்பெற்ற  #குண்டுவெடிப்பில்-31  #பேர்  #பலிபாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதி...
06/02/2026

#பாகிஸ்தானில் #பள்ளிவாசல் #ஒன்றில் #இடம்பெற்ற #குண்டுவெடிப்பில்-
31 #பேர் #பலி

பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்லாமாபாத் பொலிஸாரை மேற்கோள் காட்டி அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன
MR MEDIA VISION

வலுவூட்டல் வேலைத்திட்டம் 2025 ================================சமூர்த்தி திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட சாய்ந்தமருது பிரத...
29/01/2026

வலுவூட்டல் வேலைத்திட்டம் 2025
================================

சமூர்த்தி திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் இன்றைய தினம் 29.01.2026 அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பிராஜாசக்தி தவிசாளார்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

32 வருட அரச சேவையின் அர்ப்பணிப்பு பயணம் செய்த நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம் பழீல்.....=================================...
26/01/2026

32 வருட அரச சேவையின் அர்ப்பணிப்பு பயணம் செய்த நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம் பழீல்.....
===================================
(சர்ஜுன் லாபீர்)

அரச சேவை என்பது ஒரு பணியல்ல; அது ஒரு தவம். அந்த தவத்தை 32 ஆண்டுகளாக நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டு வரும் சிறப்புமிகு அரச அலுவலர் ஏ.சி.எம். பளீல் கடந்த 1994.01.26ம் திகதி பொத்துவில் பிரதேச செயலகத்தில் பொது எழுதுனர் சேவை தரம் III இல் தனது அரச சேவைக் கால் தடம் பதித்தார்.

தன்னம்பிக்கையும் உழைப்பும் இணைந்த பயணமாக, பரீட்சை வழியாக நான்கு ஆண்டுகளில் (1998.01.26) தரம் II பதவி உயர்வையும், தொடர்ந்து பத்து ஆண்டுகளில் பரீட்சையின் வாயிலாக தரம் I பதவியையும் பெற்றுத் தன் திறமையை நிரூபித்தார்.

அதனைத் தொடர்ந்து, 2020.11.28ம் ஆண்டு அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதி உச்சமான Supra பரீட்சையில் சித்தியடைந்து, சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தராக கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருவது பெருமைக்குரிய விடயமாகும்.

இவர் பொத்துவில், காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேச செயலகங்களில் காணி விடய உத்தியோகத்தராகவும், நிர்வாக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராகவும், பதவி நிலை உதவியாளராகவும், பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் பணியாற்றி, அரச சேவையின் அச்சாணியாகத் திகழ்கின்றார்.

அலுவலகச் செயல்பாடுகளை வினைத்திறன்மிக்கதாக மாற்றும் அனுபவமிக்க செயற்பாடுகளும், துல்லியமான ஆலோசனைகளும் இவரது அடையாளமாகும்.

இவர் தாபனம் அலுவலக முறைமை நிர்வாகத்தில் வளவாளராக பல்வேறு நேர்முகப் பரீட்சை சபைகளில் பங்கேற்பதோடு,பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு நேர்த்தியான சேவையை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இவர் தமது பணியுடன் மேலதிக மாவட்ட பதிவாளராகவும் பொறுப்பேற்று கடமை புரிந்து வருவதோடு காணி கடமைகளில் சிறந்த தேர்ச்சியையும் பெற்றவர்.

மேலும், இலங்கை சட்டக் கல்லூரியில் நொத்தாரிசு இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்தமை, அவரது பன்முகத் திறனுக்குச் சான்றாகும்.

அரச சேவையில் காட்டிய அர்ப்பணிப்பு, அனுபவம், பொதுமக்களுக்கான அளப்பரிய பங்களிப்புகள் மட்டுமன்றி, தமது பிறப்பிடமான சாய்ந்தமருது 8 இல் உள்ள கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வழங்கி வரும் ஊக்கமும் சேவையும் சமூக அக்கறையின் உயரிய எடுத்துக்காட்டாகும்.

இன்னும் ஆறு ஆண்டுகள் அரச சேவையில் பணியாற்றவுள்ள இந்தச் சிறப்புமிகு சேவகன் தமது 55 வயது ஓய்வுநிலை முடிவை மாற்றி சேவையில்,
மேலும் உயர்ந்த பதவிகளும்,
நல்ல ஆரோக்கியமும்,
நிறைந்த நலன்களும் அமைய,
வாழ்த்துகிறோம்!
MR Media Vision

தேசத்துக்காய் நாம் காவலர் விருது சேவை நலன் பாராட்டு விழா சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட முன்னாள் (cheap Inspector of pol...
09/01/2026

தேசத்துக்காய் நாம் காவலர் விருது சேவை நலன் பாராட்டு விழா சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட முன்னாள் (cheap Inspector of police ) அஷ்ரப் காரியப்பர் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டி இலங்கை எக்ஸத் ஊடக அமைப்பினால் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
#வாழ்த்துக்கள் 🌹

🔴 #சாய்ந்தமருது  #அல்ஹிலாலில்  #இடமாற்றம்  #பெறும்  #அதிபரை  #வழியனுப்பி  #புதிய  #அதிபரை  #வரவேற்கும்  #நிகழ்வு சாய்ந்த...
06/01/2026

🔴 #சாய்ந்தமருது #அல்ஹிலாலில் #இடமாற்றம் #பெறும் #அதிபரை #வழியனுப்பி #புதிய #அதிபரை #வரவேற்கும் #நிகழ்வு

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் அதிபரை வழியனுப்பி புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை (05) பாடசாலை காலை ஆராதனையின் போது இடம்பெற்றது.

சாய்ந்தமருது கமு/கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்தில்
கடந்த 13 வருடங்களாக ஆசிரியராக, உதவி அதிபராக, பிரதி அதிபராக, பொறுப்பதிபராக செயற்பட்டு, சாய்ந்தமருது
கமு/கமு/ அல்-கமரூன் வித்தியாலயத்திற்கு அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் எம்.எச். நுஸ்ரத் பேகம் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்வும் பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்றி, புதிய அதிபராகப் பதவியேற்ற கே.எல். அப்துல் ஜௌபர் அவர்களை வரவேற்கும் நிகழ்வாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி வளவாளர் எஸ்.எம்.எம். அன்சார்,
பிரதி அதிபர்களான எம்.எச். லாபிர், ஏ.பி. ரோஷன் டிப்ராஸ், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத், முன்னாள் அதிபர் 'அதிபர் திலகம்' யூ.எல்.நசார், பாடசாலையின் ஒழுக்காற்றுக்குப் பொறுப்பான ஆசிரியர் எம்.எஸ்.எஸ். ஷிப்லி உட்பட பாடசாலையின் பகுதித் தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு இருவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதன்போது இடமாற்றம் பெற்றுச் செல்லும் அதிபர் எம்.எச். நுஸ்ரத் பேகம் அவர்களைப் பாராட்டி புதிய அதிபர் கே.எல். அப்துல் ஜௌபர் உட்பட்ட குழாம் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டடதும் குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது தோணாவை சுத்தப்படுத்தும் சிரமதான வேலைத் திட்டம் ஆதம்பாவா எம்.பிக்கு மக்கள் பாராட்டு ------------------------...
28/12/2025

சாய்ந்தமருது தோணாவை சுத்தப்படுத்தும்
சிரமதான வேலைத் திட்டம்
ஆதம்பாவா எம்.பிக்கு மக்கள் பாராட்டு
----------------------------------------------------------------
சாய்ந்தமருது தோணாவை சுத்தப்படுத்தும் வேலைத் திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் மேற்பார்வையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த சுத்தப்படுத்தும் திட்டம் சிரமதானத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டம் கடந்த காலங்களில் இல்லாதவாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நேரடி மேற்பார்வையில் இடம்பெறுவது குறித்து மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களை பாராட்டி வருவதுடன் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு...
13/12/2025

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிவாரனத் தொகையாக ரூபாய் 25,000 மதிப்புடைய காசோலை கையளிப்பு!!
-------------------------------------------------

கடந்த 08.12.2025 ம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் ஆஷிக் அவர்களின் தலைமையில் எமது அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்திக் குழு தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல் கட்டமாக காசோலையினை வழங்கி வைத்தார்.

மேலும் எதிர்காலத்தில் வர இருக்கின்ற இயற்கை அனர்த்தங்களை எவ்வாறு முகம் கொடுப்பது அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது தொடர்பான அணுகுமுறைகளும் கலந்துரையாடப்பட்டது.

MR Media Vision

கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள்,  ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது அமைப்புகளினால் நிவாரணப் பொதிகள் கையளிப்பு(எம்.எஸ்.எம்.ஸா...
12/12/2025

கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள், ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது அமைப்புகளினால் நிவாரணப் பொதிகள் கையளிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட
மக்களுக்காக நிவாரண விநியோகப்பணியின் 05 ஆம் கட்டமாக அனைத்துப் பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்கள், உலமாக்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் ஊர் மக்களினால் கிடைக்கப்பெற்ற அன்பளிப்புப் பொருட்கள் அவசரத் தேவையாகக் காணப்பட்ட பொலன்னறுவை மற்றும் மாணிக்கம்பிட்டிய மக்களுக்கு மாணிக்கம்பிட்டிய ஹுதா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் கிராம சேவகரின் ஆலோசனைகளுக்கமைய நேற்று (11) வியாழக்கிழமை முறையாக விநியோகிக்கப்பட்டன.

அத்துடன் நிவாரண விநியோகப் பணியின் 06 ஆம் கட்டமாக பொலன்னறுவை திவுலானப் பிரதேச சிறுவர்களுக்காக பால்மா, Diappers உள்ளடங்கிய நிவாரணப் பொதிகள் திவுலான அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதின் ஆலோசனைகளுக்கமைய பிரதேச மக்களுக்கு கையளிக்கப்பட்டன.

அத்தோடு,
சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட மூதூர் பால நகர் பகுதி மக்களுக்கு ஜாமிஉல் அல்பர் ஜும்ஆப் பள்ளிவாசலில் வைத்து அங்கு முக்கிய தேவையாகக் காணப்பட்ட குடிநீர் உட்பட்ட நிவாரணப் பொதிகளும் நேற்றைய தினம் (11) கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தேவையறிந்து உடனடியாகச் செயற்பட்டு உதவி செய்த கல்முனை வாழ் மக்கள் உட்பட உதவி செய்த அனைத்து தரப்பினருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் இதன்போது தமது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
MR Media Vision

மல்வான ரக்ஷபான பிரதேச மக்களுக்கு கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள், ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது அமைப்புகளினால் நிவாரணப் ...
11/12/2025

மல்வான ரக்ஷபான பிரதேச மக்களுக்கு
கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள், ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது அமைப்புகளினால் நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட மல்வான ரக்ஷபான பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (10) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் ஜம்இய்யதுல் உலமா, பொது நிறுவனங்கள் சம்மேளனம், வர்த்தக சங்கங்கள், ஊர் மக்கள் ஆகியோரின் பங்களிப்பில் கல்முனை அனர்த்த நிவாரண முகாமைத்துவ பணிமனையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு 450 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
MR Media Vision

11/12/2025

தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக
குறைந்தது 20 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக
புதிய ஆராய்ச்சி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன், மியான்மர் அரசின் தூதரக குழுவொன்றுடன்...
07/12/2025

சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன், மியான்மர் அரசின் தூதரக குழுவொன்றுடன் உதவி பொருட்கள் கொண்ட அந்த நாட்டின் வான்படை (Y–8) விமானம் நேற்று (06) இரவு கட்டுநாயக்க விமானப்படை தளத்துக்கு வந்துள்ளது.

இந்த நிவாரணப் பொதியில் சுகாதாரப் பொருட்கள், மருத்துவ உதவி பொருட்கள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களும் அடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் நாட்களில் 500 மெட்ரிக் தொன் அரிசி மற்றும் அமெரிக்க டொலர் 1 மில்லியன் (10 லட்சம்) மதிப்பிலான நிதி உதவியையும் இலங்கைக்கு வழங்க மியான்மர் அரசு சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
MR Media Vision

Address

Kalmunai

Telephone

+94752151610

Website

Alerts

Be the first to know and let us send you an email when MR Media Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MR Media Vision:

Share