Negombo Thanush

Negombo Thanush Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Negombo Thanush, Negombo.

🪔மரண அறிவித்தல்🪔 #இறுதி_கிரியை_தகவல்கள்.நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களான #நிரோசன்(கனடா...
14/02/2025

🪔மரண அறிவித்தல்🪔
#இறுதி_கிரியை_தகவல்கள்.
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களான
#நிரோசன்(கனடா), #ஹரிகரன், #அனுஷன்
சகோதரர்களின் பாசமிகு தந்தையான
யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும், நீர் கொழும்பு தளுபத்தையை வசிப்பிடமாக கொண்ட #இராசையா_நித்தியானந்தம்_ஐயா அவர்கள் (12.02.2025) அன்று காலமானார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை காலை (15-02-2025) W.F.FENANDO
(AVE MARIA HOSPITAL JUNSION)
மலர்சாலையில் வைக்கப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16-02-2025) காலை 11:15 மணிளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று மதியம் 12:30 மணியளவில் தகனக்கிரிகைக்காக நீர்கொழும்பு பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

✍️ Negombo Thanush

🪔மரண அறிவித்தல்🪔நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களான #நிரோசன்(கனடா), #ஹரிகரன், #அனுஷன்சகோத...
13/02/2025

🪔மரண அறிவித்தல்🪔

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களான
#நிரோசன்(கனடா), #ஹரிகரன், #அனுஷன்
சகோதரர்களின் பாசமிகு தந்தையான
யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு தளுபத்தையை வசிப்பிடமாக கொண்ட #இராசையா_நித்தியானந்தம்_ஐயா அவர்கள் (12.02.2025) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் கனகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும், பாஸ்கரன்(சுவிஸ்), சரோஜினி தேவி(பிரான்ஸ்) நகுலேஸ்வரன், நவரட்ணம் அவர்களின் பாசமிகு அண்ணணும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் மற்றும் கோபாலன் அவர்களின் அன்புத் தம்பியும்,
ஹம்சா, காவ்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஹனிஷ்கா, நிவிஷ்கா, ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஆதிரன் அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை சம்பந்தமான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

✍️ Negombo Thanush

🪔ஆழ்ந்த அனுதாபங்கள்🪔😥மரண அறிவித்தல்🪔நீர்கொழும்பு மென்ஷன் வீதியை வதிவிடமாக கொண்ட  #ரவீந்திரன்(ரவி அண்ணா) (கட்டுநாயக்க ஜெய...
05/02/2025

🪔ஆழ்ந்த அனுதாபங்கள்🪔
😥மரண அறிவித்தல்🪔
நீர்கொழும்பு மென்ஷன் வீதியை
வதிவிடமாக கொண்ட
#ரவீந்திரன்(ரவி அண்ணா)
(கட்டுநாயக்க ஜெயஜோதி நகையக உரிமையாளர்) அவர்கள் இன்றைய தினம் காலை (05-02-2025) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் #பாபு_சாமி மற்றும் #சுகந்தினி_அக்கா அவர்களின் பாசமிகு அண்ணாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் நாளைய தினம் (06-02-2025) அன்னாரின் இல்லத்தில்
(NO.27 MENSON PLACE , NEGOMBO) மாலை 03:00 மணிக்கு நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக
நீர் கொழும்பு பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும்
ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

✍️ Negombo Thanush

10/01/2025

#ஆழ்ந்த_அனுதாபங்கள்
என்னுடைய குருநாதருக்கு🙏🙏🙏
ஐயனின் பாதத்தில் சரணமடைந்த எங்கள் குருசுவாமியின் ஆத்மா எல்லாம் வல்ல ஐயன் ஐயப்பனின் காலடியில் இளைப்பாற ஐயனை பிரார்த்திக்கின்றேன்.🙏🙏🙏

எனக்கு ஐயன் கொடுத்த பாக்கியம் என்றே கூறுவேன் ஏனெனில்
நீர்கொழும்பு
#மாநகரிற்கு_முதல்_முதலாக
#ஐயப்பன்_வழிபாட்டை கொண்டு வந்த எங்கள் குருசுவாமியோடு அவர் கைகளினாலேயே மாத்திரம் 17 வருடங்களாக மாலையணிந்து ஒன்றாகவும் அவருக்கு பக்க பலமாகவும் அவருக்கு ஒரு சீடனாகவும் பயணித்து இருக்கிறேன் என்று எண்ணும்போது எனக்கு குருசுவாமியோடு பயணிக்க ஐயன் ஐயப்பன் கொடுத்த பாக்கியம் என்றே கூறுவேன்.
இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள் மாலை அணிவிக்க😥😥😥
இனி எப்ப உங்கள் கைகளால் மாலை போடுவது குருசுவாமி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாங்கள் உங்களோடு இத்தனை வருடங்களாக பயணித்த நினைவலைகளை மீட்டி நினைத்துக்கொண்டே இருப்போம் குருசுவாமி.🤔🤔🤔

என்றும் உங்கள் நினைவுகள் எங்கள் ஐயப்ப சுவாமிமார்கள் மனத்தில் வடுக்களாக மறக்காமல் நினைத்து கொண்டே இருக்குமே தவிர அழியாது குருசுவாமி.🙏

ஐயன் ஐயப்பன் என்றும் உங்களோடுதான் குருசுவாமி 🙏🪔 🙏
என்றும் உங்களுடன் உங்கள் சீடன்
✍️ Negombo Thanush
Thanushkanth Haridev நீர் கொழும்பு

 #எங்கள்_குருநாதரின்  #இறுதி_கிரிகைகள்_பற்றிய_தகவல்கள்🪔ஆழ்ந்த அனுதாபங்கள்🪔எங்கள் குருசுவாமி 😥😥😥🪔மரண அறிவித்தல்🪔நீர்கொழும...
09/01/2025

#எங்கள்_குருநாதரின்
#இறுதி_கிரிகைகள்_பற்றிய_தகவல்கள்
🪔ஆழ்ந்த அனுதாபங்கள்🪔
எங்கள் குருசுவாமி 😥😥😥
🪔மரண அறிவித்தல்🪔
நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம் குருசுவாமியான #செ_ரவிச்சந்திரன் குருசுவாமி இன்றைய தினம் அதிகாலை (09-01-2025) ஐயனின் பாதத்தில் சரணமடைந்தார்.

எங்கள் ரவி குருசுவாமி நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களான #மீரா, #வித்தியாஷாகர்(2012 O/L), #விஷ்ணுஷாகர்(2013 O/L),
#அபிலாஷ்(2015 O/L) சகோதரர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

எங்கள் குருநாதரின் இறுதிக் கிரிகைகள் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 03:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (NEIL MARIN ROAD,NEGOMBO/JUDE CHURCH ROAD, NEGOMBO) நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக நீர்கொழும்பு பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் ஐயப்ப சுவாமிகள் அனைவரும்
ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

எங்கள் குருசுவாமியின் ஆத்மா எல்லாம் வல்ல ஐயன் ஐயப்பனின் காலடியில் இளைப்பாறட்டும்.🙏🙏🙏

🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

✍️ Negombo Thanush

ஓம் கன்னி மூல கணபதி பகவானே 🙏🌹சரணம் ஐயப்பா 🌹🙏      நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம்  🙏🙏🙏 ு_மண்டல_பூஜை.🙏🙏🙏எதிர்வரும் (26/12/2...
24/12/2024

ஓம் கன்னி மூல கணபதி பகவானே 🙏🌹சரணம் ஐயப்பா 🌹🙏
நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம்
🙏🙏🙏 ு_மண்டல_பூஜை.🙏🙏🙏
எதிர்வரும் (26/12/2024) வியாழக்கிழமை
மகா மண்டல பூஜை நடத்துவதற்காக ஐயனின் உத்தரவு கிடைத்துள்ளது.🙏🙏🙏

மேற்கூறிய தினம் காலை 08.30 மணி முதல் நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானத்தில் இருந்து பால்குட பவனி, சரண கோஷங்களோடு ஐயப்ப சுவாமிகள், பக்த அடியார்கள் புடைச்சூழ அலங்கார உற்சவ மூர்த்தியாக மணிகண்டப் பிரபு ஐயன் ஐயப்பன் நீர் கொழும்பு சித்தி விநாயகர் ஆலயம் சென்றடைவார்.

பின்னர் அபிஷேகம், மஹா கணபதி ஓமம் சிறப்புமிகு பஜனைகள்
(மிகவும் அமைதியான முறையில்)
மற்றும் சிறப்பு பூஜைகளைத் தொடந்து சக்தி பூஜையும் (அன்னதானம்) நடைபெறும்.

அன்றைய தினம் இரவு நடைபெறும் மகா மண்டல பூஜையானது
மாலை 07.00 மணிக்கு நீர்கொழும்பு இந்து கலாச்சார மண்டபத்தில் பஜனைகள்,சிறப்புப் பூஜைகளை தொடந்து எங்கள் மணிகண்டன் சரண கோஷங்களோடு அலங்கார உற்சவ மூர்த்தியாக புலி வாகனத்தில் எழுந்தருளி
நீர் கொழும்பு ஸ்ரீ சிங்கமா காளி அம்பாள் தேவஸ்தானம்,
நீர்கொழும்பு சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் நீர்கொழும்பு முத்துமாரியம்மன் கதிர்வேலாயுத ஆலயங்களுக்கு சென்று ஆசி பெற்று ஐயப்பன் தேவஸ்தானத்திற்கு சென்றடைவதுடன் ஜோதி பூஜை (அன்னதானம்) நிகழ்வுகளும் நடைபெறும் என்பதை பக்தியுடன் அறிய தருகின்றோம்.

ஐயப்ப சுவாமிகள் ,அடியார்கள் அனைவரும் மண்டல பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஐயன் ஐயப்பனின் அருள் பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்.

அனைவரையும் வருக வருகவென்று அழைக்கின்றோம்.🙏🙏🙏

நிர்வாகம்:-
நீர்கொழும்பு குருசுவாமி
செ. ரவிசந்திரன்
☎️ 0774464844

#ஓம்_சுவாமியே_சரணம்_ஐயப்பா 🌹🙏

✍ Negombo Thanush

🪔மரண அறிவித்தல் 🪔கொழும்பை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  #அலகன்_செல்வராஜா_ஐயா அவர்கள் (2024/11/04)...
05/11/2024

🪔மரண அறிவித்தல் 🪔

கொழும்பை பிறப்பிடமாகவும்,
நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட
#அலகன்_செல்வராஜா_ஐயா அவர்கள்
(2024/11/04) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திருமதி. செல்வ நலனி selava nalani அவர்களது அன்பு கணவரும்,
கஜேந்திரன், Dushendran, Sanjeewan
ஆகியோரது தகப்பனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியை தகவல்கள் பின்பு அறியத்தரப்படும்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

✍️ Negombo Thanush

Address

Negombo
0094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Negombo Thanush posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share