21/09/2024
அன்பான உறவுகளே
இன்றையதினம் தாயக விருட்சத்தின் நானும் உன் சேய்தான் குழுமத்தில் உள்ள Swiss Biel ஐ சேர்ந்த திருமதி.மேனன் செல்வி மற்றும் Aegerten ஐ சேர்ந்த திருமதி சுஜா ஆகியோரின் நிதி அனுசரணையில் ஒரு பல்கலைக்கழக மாணவனுக்கான தொடர் உதவி வழங்கப்பட்டுவருகின்றது.
அந்த வகையில் கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் உள்ள, கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவத்துறையில் கல்வி பயிலும் ஒரு வறிய குடும்பத்தை சேர்ந்த S.கலைக்குமரன் என்ற மாணவனின் கல்வி மேம்பாட்டிற்காக தற்போது ஏற்பட்டிருக்கும் செலவீனத்தை கருத்தில் கொண்டு 14’000.00 உரூபாய் வங்கி மூலம் புரட்டாதி மாதத்திற்கான உதவியாக வழங்கப்பட்டது. இந்த வழங்கலானது மாதாந்தம் வழங்கப்பட்டுவருகின்றது. இந்த உதவியினை தொடர்ந்து வழங்கிவரும் திருமதி. மேனன் செல்வி மற்றும் திருமதி.சுஜா ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
தாயக விருட்சம் சுவிஸ் அறக்கட்டளை,
செல்.ஜீவன்,
ஒருங்கிணைப்பாளர்.