28/05/2023
வியாட்நாமில் 3 நாள் வர்த்தக மாநாடு - அன்பிற்குரிய தொழில் முனைவோர்களே, நமது BUSINESS DHRONACHARYA INTERNATIONAL BUSINESS COUNCIL மூலமாக வரும் ஜூன் மாதம் 28, 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் வியட்நாமில் நடைபெறும் 3நாள் வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து தொழிலதிபர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளேன். இதில் கலந்து கொள்ள 1)வேளாண் துறை, 2)டெஸ்க்டைல்ஸ், கார்மெண்ட்ஸ் & லெதர், 3)மருந்துகள் & மருத்துவ உபகரணங்கள், 4) கடல் உணவுகள் & கப்பல் போக்குவரத்து, 5) தகவல் தொழில் நுட்ப துறை ஆகிய 5 தொழில் துறையை சார்ந்தவர்களை அன்புடன் அழைக்கிறேன்! இந்த வர்த்தக மாநாடு conference) உயர்மட்ட அளவிலான ஒன்று! இந்த மாநாடு- Chairman of Province (அங்குள்ள மாநில முதலமைச்சர்) அவர்களின் தலைமையில் இந்தியா, வியட்நாம்- இருநாட்டு தூதுவர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது! வியட்நாம் முழுவதும் இருந்து பல முன்னணி நிறுவனங்களின் தொழிலதிபர்கள் இந்தியாவில் இருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட தொலதிபர்களை சந்தித்து( B2B business matching) கலந்துரையாடி - இரண்டு தரப்பிலும் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாட்டு தொழிலதிபர்கள் இரண்டு நாட்டு தூதுவர்கள் முன்னிலையில் கையெழுத்திடும் நிகழ்வுகள் நடைபெறும். இதுபோன்ற வணிக வாய்ப்புகளை இரண்டு நாட்டு அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் முன்னிலையில் ஏற்படுத்தி கொள்வது அந்த நாட்டில் நீங்கள் தொடர்ந்து வணிகம் செய்யும் போது பெரும்வரவேற்பையும், மரியாதையையும் தரும். conference நடைபெறும் 3 நாட்களும், வியட்நாமின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து பலதரப்பட்ட சந்தையை நேரில் காணும் வாய்ப்பும், அனைத்து இடங்களிலும் அரசுமுறை வரவேற்பும் இருக்கும்! வியட்நாமை அதன் சந்தையை புரிந்து கொள்ளவும், வணிக வாய்ப்புகள் பெறவும் நல்வாய்ப்பாக இந்த பயணம் அமையும். 1995ல் இருந்து 2005 வரை இந்தியாவில் ஏற்பட்ட வேகமான பொருளாதார வளர்ச்சி போல் இப்போது வியட்நாமில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்து வருகிறது. இந்தியாவை விட விலைவாசி குறைவான நாடு.விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட online form ஐ நிரப்பி அனுப்பவும், அதன்பின் எனது அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொள்வார்கள். நன்றி!
https://surveyheart.com/form/6471921846d5a9531acf1021