Thathasthu

Thathasthu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thathasthu, Business service, No. 126/4, North Redhills Road, Villivakkam, Chennai.

Astrology Classes
Astrology Books
Astrology Products
Purohit Services
Vastu Services
Numerology
Gems
Prasannam
Prashnam
Chozhi Prashnam
Thamboola Prashnam
Horoscope Prediction.

30/01/2026

ARR Astro Research and Remedy Center 9244 9244 00 ...

30/01/2026

ARR Astro Research and Remedy Centre 9244 9244 00 ...

25/01/2026

ARR Astro Research and Remedy Center 9244 9244 00தை மாத வாக்கிய சுபமுஹூர்த்த சுப நாட்கள்தை 14ஜனவரி 28புதன் கிழமைவளர்பிறைசுக்ல பஷம் தசமி திதிரோ.....

22/01/2026
13/01/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

13/01/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

26/12/2025

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

துளசி விவாகம்துளசி விவாகம் எப்பொழுது?ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய சுக்ல பஷ துவாதசி திதியில் அனுஷ்டிக்கப்படும் விரதம் துளசி...
01/11/2025

துளசி விவாகம்
துளசி விவாகம் எப்பொழுது?
ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய சுக்ல பஷ துவாதசி திதியில் அனுஷ்டிக்கப்படும் விரதம் துளசி விவாகம் விரதம் ஆகும்.
இந்த ஆண்டு, மங்களகரமான விசுவாசு ஐப்பசி மாதம் 16 ம் நாள் நவம்பர் 02 2025 ஞாயிறுக்கிழமை அன்று வருகிறது.

துவாதசி திதி நவம்பர் 02 ம் தேதி 2025 வருடம் காலை 07:31 ஆரம்பித்து மறுநாள் அதிகாலை நவம்பர் 03ம் தேதி 05:07 AM மணிக்கு முடிவடைகிறது.
இந்த ஆண்டு துளசி விழாவுக்கான சுப முஹுர்த்தம் நேரம்:
காலை 08:30 முதல் காலை 11:30 AM வரை
மாலை 06:00 முதல் இரவு 08:00 வரை

துளசி விவாகம் என்றால் என்ன
மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் துளசிக்கும் பெருமாளின் வடிவமான சாளகிராமத்திற்கு திருமணம் நடத்தி வைக்கும் வைபவத்திற்கு துளசி விவாகம் என்று பெயர்.
மிகவும் புனிதமான இலையாக கருதப்படுவது துளசி. பெருமாள் வழிபாட்டில் துளசி இலை இல்லாமல் பூஜை கிடையாது.
ராஜஸ்தானில் துளசி திருமணம் 'படுவா ஃபிரானா' என்று கொண்டாடப்படுகிறது.

துளசி விவாகம் அன்று என்ன செய்ய வேண்டும்
துளசி கல்யாணம் செய்வது மிக மிக எளிதானது.
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்யவேண்டும்.
 ஒரு மனையை நன்றாக சுத்தம் செய்து அதில் கோலம் போட்டு, ஒரு பக்கத்தில் துளசி செடியை வைக்க வேண்டும்.மற்றொரு பக்கத்தில் சாளகிராமத்தை வைக்க வேண்டும்.
 இந்த மனைக்கு முன்பு நெய்விளக்கு அல்லது குத்துவிளக்கு ஏற்றவும்.
 அதற்கு பிறகு ஒரு கலசத்தில் நீர் விட்டு அதில் ஒரு சில மாவிலைகள், மஞ்சள், குங்குமம் சந்தனம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
 பின்னர் துளசியில் அருகில் புதிய சிவப்பு நிற ரவிக்கைத் துண்டு, புடவை அல்லது பட்டுத்துணி வைத்து அதன் மீது வளையல், மஞ்சள், குங்குமம், கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை வைக்கவும்.
 துளசி மந்திரமான, "ஓம் துளஸ்யை நம" என 108 முறை சொல்லி குங்கும அர்ச்சனை செய்து, தூப தீப ஆராதனை செய்ய வேண்டும்.
 துளசி செடியை 3 முறை வலம் வர வேண்டும்.
 ப்ராசதத்தை நைவேத்தியம் செய்யலாம், பாயசம், கேசரி, சர்க்கரை பொங்கல் என்று ஏதாவது ஒன்றை செய்து நெய்வேத்தியமாக வைக்கலாம்.
 ஆரத்தி எடுத்த பிறகு உங்களுடைய வேண்டுதல்களை பிரார்த்தனை செய்து இனிப்பை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கவும்.

துளசி விவாகம் பலன்கள் :
துளசி விவாகம் செய்து வைப்பதும், துளசி விவாகத்தில் கலந்து கொள்வதும் மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது.
இது திருக்கல்யாணம் நடத்தி வைத்த புண்ணியத்தையும், துளசியை வழிபட்ட பலனையும் தரும்.
திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.சுமங்கலிப் பெண்கள் கணவருடன் மகிழ்ச்சியாக நீடு வாழ்வர்.
துளசி விவாகம் செய்பவர்களின் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் நிறைந்து, மகிழ்ச்சியும், செல்வ வளமும், நன்மைகளும் கைகூடும். வாழ்வில் இருக்கும் அனைத்து தடைகளும், பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக திருமண தடை விலகி, நல்ல வாழ்க்கை துணை அமையும்.

புனித துளசியின் வரலாறு:
 தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் அமுதத்தை எடுக்க முற்படுகின்றனர். கடலிலிருந்து தன்வந்திரி அமிர்தத்துடன் எழுந்தார் இறுதியில் தேவர்கள் வெற்றி பெற்ற போது விஷ்ணுவிற்கு ஏற்பட்ட சந்தோஷ மிகுதியால் ஏற்பட்ட கண்ணீர்த் துளியானது துளசிச் செடியை உருவாக்கியது.
 மேலும் நாளில் லட்சுமி ஒரு அரக்கனைக் கொன்று பூமியில் துளசி செடியாக இருந்ததாக மற்றொரு சிறு புராணம் கூறுகிறது.
 தேவாசுரர்கள் பாற் கடலைக் கடைந்தபோது துளசி லக்ஷ்மியின் தங்கையாக தோன்றுகிறாள். விஷ்ணுவையே அவளும் மணக்க விரும்புகிறாள். லக்ஷ்மி அவளை துளசி செடியாக மாற்றுகிறாள். விஷ்ணு அவள் விருப்பத்தை நிறைவேற்ற நான் சாலகிராமமாக இருக்கும்போதெல்லாம் துளசி என்னோடு இருப்பாள் என்கிறார்.

துளசி மந்திரம் :
" நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபேநமோ மோக்ஷப்ரதே தேவி: ஸம்பத் ப்ரதாயிகே."
துளசி பூஜை செய்யும் சமயத்தில் இந்த மந்திரத்தை 9 முறை கூறி துளசி தேவியையும், லட்சுமி தேவியையும், மஹாவிஷ்ணுவையும் வழிபட வேண்டும். தினமும் அதிகாலையில் துளசி மாடத்தில் சுத்தம் செய்து, மஞ்சள் நீர் தெளித்து கோலமிட்டு, விளக்கேற்றி, இந்த மந்திரத்தை சொல்லி துளசி செடிக்கு ஊற்ற வேண்டும். பிறகு துளசி செடியை 3 முறை வலம் வந்து வழிபடுவதால் துளசி, மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.

#துவாதசி #ஏகாதசி #துளசி_விவாகம் #விவாகம் #ஜோதிடம் #திருமணப்பொருத்தம்

துளசி விவாகம்துளசி விவாகம் எப்பொழுது?ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய சுக்ல பஷ துவாதசி திதியில் அனுஷ்டிக்கப்படும் ...

17/09/2025

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Address

No. 126/4, North Redhills Road, Villivakkam
Chennai
600049

Telephone

+919244924400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thathasthu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thathasthu:

Share