25/09/2024
1705ம் வருடம் அயர்லாந்தில் மார்கரி மெக்கால் எனும் இளம் பெண் மர்ம காய்ச்சலால் கோமா நிலைமைக்கு செல்கிறார். அவர் இறந்து விட்டதாக நினைத்த அவரது குடும்பத்தார் அவரை புதைத்து விடுகின்றனர். அக்காலத்தில் புதைத்த பிணங்களை திருடும் கூட்டத்தினர் சிலர் அவரை அன்றிரவு தோண்டி எடுத்து விரலில் உள்ள மோதிரத்திற்காக விரலை வெட்ட கோமாவிலிருந்து மீண்டு அப்பெண் அலறி எழுந்திருக்கிறார். அதைக் கண்டதும் பயத்தில் கல்லறையைத் தோண்டியவன் ஒருவன் மாரடைப்பு வந்து இறக்க மற்றவர்கள் அலறியடித்து ஓடியிருக்கின்றனர்.
அப்படியே விரலில் ரத்தத்துடன் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியிருக்கிறார். அம்மா உயிருடன் இருந்தால் இப்படி தான் தட்டுவார் எனக் குழந்தைகளிடம் கூறிக்கொண்டே வந்து கதவைத் திறந்த கணவனும் இவரது கோலத்தைக் கண்டு மாடைப்பில் இறந்திருக்கிறார். பிறகு அதே கல்லறையில் அக்கணவரை புதைத்துள்ளனர் ஊர் மக்கள்!
சில காலம் கழித்து மறுமணம் செய்து மேலும் பல குழந்தைகள் பெற்று வயதாகி இறந்த பின் அயர்லாந்தின் ஷாங்கில் புதைவிடத்தில் புதைத்த அவரது குடும்பத்தினர், " Lived once buried twice" எனும் வாசகத்தையும் கல்வெட்டாக அவர் நினைவிடத்தில் வைத்துள்ளனர்! 😊
கதைகளை விட சிலர் வாழ்க்கையில் தான் எவ்வளவு சுவாரசிய நிகழ்வுகள்!😊