24/05/2018
திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டியில் உள்ள சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளியில், ‘அன்பில் அறக்கட்டளை’ சார்பில், எதிர்வரும் 26-05-2018 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ள மாபெரும் ‘இலவச வேலைவாய்ப்பு முகாம் - 2018’ல் அனைவரும் பங்கேற்று, பயனடையுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளைஞர்களின் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், ஆண்டுதோறும் ’அன்பில் பவுண்டேஷன்’ சார்பில் நடத்தப்பட்டு வரும் வேலைவாய்ப்பு முகாமில், இந்தாண்டு 50க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்று, 2,500 பேருக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், தங்களுடைய சுய விவரம் (Bio-Data), பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 2, உரிய சான்றிதழ்கள் மற்றும் நகல்கள், ஆதார் அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை கொண்டு வந்து, நேர்முக மற்றும் எழுத்துத் தேர்வுகளில் பங்கேற்று, தங்களுக்கு ஏற்ற பணிகளில் இணையலாம்..
வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்கள் 9600122733 / 7395903133 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..