Agriculture and real estate

Agriculture and real estate Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Agriculture and real estate, Consulting Agency, W-2, north main Road , Annanagar west ext., Chennai.

consultation, erecting greenhouses,hydroponic farms, dairy farms, freshwater fish farms, integrated farming, hydroponic farms, marketing farm products, farm land real estate services, are few of the services given by agriculture and real estate.....

18/11/2018
24/07/2018

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்.

இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம். அது என்ன பண்ணும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம், தீவணம் ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்னா கூட சேர்க்குறாங்க ன்னு நிஜமா நமக்கு தெரியுமா? பண்றதெல்லாம் தப்பு நாம தான், இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை வருது. இன்னைக்கு இருக்குற நிலைல தீணி பெரும் பாடு தான். இருந்தாலும் புதுசா கறவை மாடு வாங்குறதுக்கு கொஞ்ச காலம் தட்ட போட்டு மாட்டை இந்த சிகிச்சையை செஞ்சு அதோட தற்காலிக மலட்டு தன்மையை சரி செஞ்சுரலாம்.

தேவையான பொருட்கள்:
1. வெள்ளை முள்ளங்கி.
2.. கற்றாளை துண்டு
3. முருங்கை இலை
4. பிரண்டை (தண்டு)
5. கறிவேப்பிலை
6. மஞ்சள் கிழங்கு

சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்:
சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும், அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும்.

1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும்.
(நாள் 1 -5)

2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரை, கற்றாழையை முட்களை சீவிவிட்டு, தினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9)

3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13)

4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17)

5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை உடன் மஞ்சள் ஒரு ஓரிரு கிழங்கு (பெரியாத இருப்பின் ஒன்று, சிறியது எனில் இரண்டு, கடையில்வாங்கிய பொடியை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 18 -21).

மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.

கால்நடை மருத்துவர் , பேராசிரியர் திரு.புண்ணியமூர்த்தி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறை.

19/07/2018

கருப்பட்டி தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ள:9487624149

26/06/2018
15/06/2018

*அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.*

*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*

*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?*

*இதோ*👇

1. *கருப்பு கவுணி அரிசி*

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. *பூங்கார் அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. *காட்டுயானம் அரிசி* :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. *கருத்தக்கார் அரிசி* :

மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. *காலாநமக் அரிசி* :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. *மூங்கில் அரிசி*:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. *அறுபதாம் குறுவை அரிசி* :

எலும்பு சரியாகும்.

9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. *தங்கச்சம்பா அரிசி* :

பல், இதயம் வலுவாகும்.

11. *கருங்குறுவை அரிசி* :

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. *கருடன் சம்பா அரிசி* :

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. *கார் அரிசி* :

தோல் நோய் சரியாகும்.

14. *குடை வாழை அரிசி* :

குடல் சுத்தமாகும்.

15. *கிச்சிலி சம்பா அரிசி* :

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. *நீலம் சம்பா அரிசி* :

இரத்த சோகை நீங்கும்.

17. *சீரகச் சம்பா அரிசி* :

அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18. *தூய மல்லி அரிசி* :

உள் உறுப்புகள் வலுவாகும்.

19. *குழியடிச்சான் அரிசி* :

தாய்ப்பால் ஊறும்.

20. *சேலம் சன்னா அரிசி* :

தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21. *பிசினி அரிசி* :

மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22. *சூரக்குறுவை அரிசி* :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. *வாலான் சம்பா அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. *வாடன் சம்பா அரிசி* :

அமைதியான தூக்கம் வரும்.

அன்புடன் ,
இயற்கை விவசாயம்

14/06/2018

*எது இருந்தால், எது தேவை இல்லை... ?*

உங்கள் ஊரில் அரச மரம் இருந்தால் Tooth Paste தேவை இல்லை.

உங்கள் வீட்டில் குப்பை மேனி செடி இருந்தால் Soap தேவை இல்லை.

உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் shampoo தேவை இல்லை.

உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் Tea தூள் தேவை இல்லை.

உங்கள் தெருவில் பூந்திக்காய் மரம் இருந்தால் Washing powder & Dish wash Soap தேவை இல்லை.

உங்கள் வீட்டில் எழுமிச்சை, கரும்பு சர்க்கரை இருந்தால் Floor, bathroom, tiles cleaner தேவை இல்லை.

உங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் பாக்கெட் பால், தயிர் தேவை இல்லை.

உங்கள் வீட்டில் மண் பானை இருந்தால் Water filter system தேவை இல்லை.

உங்கள் ஊரில் பனை, தென்னை மரங்கள் இருந்தால் குளிர்பானங்கள் தேவை இல்லை.

உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் கொசு விரட்டி தேவை இல்லை.

உங்கள் வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் Fridge தேவை இல்லை.

உங்கள் வீட்டில் செடி, கொடி, மரங்கள் இருந்தால் Ac தேவை இல்லை.

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் அழகு சாதனப் பொருட்கள் தேவை இல்லை.

*தேவையானதை இழந்து, தேவை இல்லாததை பெறும் உங்கள் அடிமை வாழ்வு என்று மாறுமோ?*

நீங்கள் பணம் சம்பாதிக்கும் அதே வேளையில் நமது சொத்தான இயற்கைச் செல்வங்கள் அழிக்கப்படுகிறது என்பது நினைவில் இருக்கட்டும்.

நன்றி:-இயற்கை நலனில்

agriculture and real estate......

Address

W-2, North Main Road , Annanagar West Ext.
Chennai
600101

Opening Hours

Monday 9am - 4pm
Tuesday 9am - 4pm
Wednesday 9am - 4pm
Thursday 9am - 4pm
Friday 9am - 4pm
Sunday 9am - 5pm

Telephone

9841192997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agriculture and real estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Agriculture and real estate:

Share