Movie Funding Network

Movie Funding Network India's first managed funding platform for movies. Started by two directors themselves, this company promotes quality scripts and talented directors!

கோவையில் நடைபெறவுள்ள முதல்கட்ட படப்பிடிப்பில் நடிக்க பங்குபெற விரும்புபவர்கள் இயக்குநரை சந்தித்து பேசலாம். மூவி ஃபண்டிங்...
12/01/2016

கோவையில் நடைபெறவுள்ள முதல்கட்ட படப்பிடிப்பில் நடிக்க பங்குபெற விரும்புபவர்கள் இயக்குநரை சந்தித்து பேசலாம்.
மூவி ஃபண்டிங் நெட்வொர்க் பலரின் பங்களிப்புடன் தரமான படங்களை குறைந்த முதலீட்டில் உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கிறது. அதன் முதல் படைப்பாக இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி 20ம் தேதிமுதல் கோவையில் நடைபெறவுள்ளது.

இதில் நடிக்க வாய்ப்பு தேடுபவர்கள் மற்றும் முதலீடு செய்து நடிக்க விரும்புவர்கள் இயக்குநரை நேரடியாய் சந்தித்து தங்களுக்கு பொருத்தமான கதாபாத்திரங்கள் இருந்தால் தெரிந்துகொள்ளலாம்.

தேதி: 14 & 15, ஜனவரி, 2016
இடம்: காந்திபுரம், கோவை

ஹோட்டலின் முகவரி போனில் தெரிவிக்கப்படும்.

Contact Director Mohamed A. K. Jailani
Phone: : 9500092255

வளர்ந்து வரும் எங்களது 'சவுண்ட் கேமரா ஆக்சன்' திரைப்படத்தின் இரண்டாவது கட்ட செட்யூலுக்கு ஹோட்டல் ரூமில் சூட் செய்ய ஸ்பான...
05/01/2016

வளர்ந்து வரும் எங்களது 'சவுண்ட் கேமரா ஆக்சன்' திரைப்படத்தின் இரண்டாவது கட்ட செட்யூலுக்கு ஹோட்டல் ரூமில் சூட் செய்ய ஸ்பான்ஸர்கள் தேவை.
சூட்டிங் நாட்கள் : 10 நாட்கள்
தேதி; ஜனவரி 20 முதல் 30 வரை.
தேவையான ரூம்கள் ; 4 ரூம்கள் தினமும். ( இரண்டு ரிச்சான சூட் ரூம்-கள், இரண்டு சாதாரண ரூம்கள்)
குறும்பட பாணியில் குறைவான ஆட்களுடன் நடைபெறும் சூட்டிங் என்பதால் பக்கத்து அறையிலிருப்போருக்கு கூட எந்தவித தொந்தரவும் இருக்காது.

இதற்கான செலவை ஏற்றுக்கொள்ள முடிந்த ஆர்வமுள்ள ஹோட்டல் அதிபர்கள் அல்லது நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள். இந்த உதவிக்கான பிரதிபலனாய் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு பொருத்தமான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு இயக்குநர் ஜெய்லானியை தொடர்பு கொள்ளுங்கள்.
Phone/ whatsapp 9500092255
Email: [email protected]
Facebook: www.facebook.com/mjailani

31/12/2015

Looking for creative designer for our upcoming movie poster design & other creative works. Any talented designer can contact the director Mohamed A. K. Jailani . Any good references appreciated. Thank you!

Detailed Casing Call for a Tamil Feature Film:Movie Name: Sound Camera ActionLanguage: TamilDirector: Mohamed A. K. Jail...
26/12/2015

Detailed Casing Call for a Tamil Feature Film:
Movie Name: Sound Camera Action
Language: Tamil
Director: Mohamed A. K. Jailani
Production: Movie Funding Network
Shoot time: First week, January, 2016
Roles:
1. Female, Age 16-18, Should look more like 16, Modern, Convent School Girl looks. Fair North Indian looks needed. This is a strong Performance oriented role. Tamil language fluency is not necessary as the character is a girl who doesn't know the language and struggles to speak.
2. Male, Age 16-18, Convent School boy looks. Should be fluent in Tamil & English. Should be able to comfortably play both the "convent guy" & "local guy".
3. Upcoming Actress: Age around 25. She has the looks, the curves and talent but yet struggling for many yrs and angry.
4. Wife of a star: Jealous, suspicious, talkative and drama queen, in her 30s. Need not look like a typical heroine. (Remember that "wife" in the movie 'Myna'?)
5. Media CEO: Need a stylish corporate villain. Age around 40. Have that soft, smooth yet criminal attitude in voice & Attitude.
6. Politician: Rich Politician in his late 50s. That typical arrogance and body language needed.
7. Police Officers: Need to two persons to play one Senior & One Junior officer roles. For senior: Age 40 to 50, For Junior Age around 30.
8. The Financier: The typical film financier with his getup & gang!
9. Somu: Age around 60. The obedient personal assistent. Well disciplined, always wearing neat ironed, tucked in shirt, pant with a tie. Rarely speaks, rarely shows his emotions.

How to apply:

Procedure for general applicants:
Plz mail your portfolio/photos to [email protected] with the "sound camera action movie" as the subject line. Also mention the role you are applying for.
Selected persons will be notified via phone about the audition time slot. Audition will happen in our office at Saligramam
Procedure for Investors:

We are also looking for people who can support us in day to day shooting to keep our production cost within our limited budget. Any help is appreciated and properly reciprocated to suit their need.

If you want to participate in our "Movie Funding Network" process of Investing & Participating please call 9500092255 to fix appointment for a meeting with the director.

"Movie Funding Network" is a platform for people to participate in independent movie productions through various contributions (either through their services or by their investment)
Call for further discussions on this: 9500092255

Thank you.

Movie Funding Network
42, Sathyamoorty st, Ground Floor,
Chennai.
Email: [email protected]
Phone: 9500092255
www.moviefunding.in

Casing Call for Tamil Feature FilmMovie Name: Sound Camera ActionLanguage: TamilDirector: JailaniProduction: Movie Fundi...
24/12/2015

Casing Call for Tamil Feature Film
Movie Name: Sound Camera Action
Language: Tamil
Director: Jailani
Production: Movie Funding Network
Shoot time: First week, January, 2016
Roles:
1. Female, Age 16-18, Should look more like 16, Modern, Convent School Girl looks. Fair North Indian looks needed. This is a strong Performance oriented role. Tamil language fluency is not necessary as the character is a girl who doesn't know the language and struggles to speak.
2. Male, Age 16-18, Convent School boy looks. Should be fluent in Tamil & English. Should be able to comfortably play both the "convent guy" & "local guy".
We are right now focusing on casting these two roles but have other supporting roles also open.
Plz apply to [email protected] with the "sound camera action movie" as the subject line.
Audition on 26th Saturday & 27th Sunday at our Office in Saligramam. Selected persons will be notified via phone about the audition time slot.
Plz share!
Thank you.

இன்றைய தினகரனில் மூவி ஃபண்டிங் நெட்வொர்க் பற்றிய செய்திநன்றி    www.moviefunding.in
01/01/2015

இன்றைய தினகரனில் மூவி ஃபண்டிங் நெட்வொர்க் பற்றிய செய்தி

நன்றி
www.moviefunding.in

We are happy to announce the"Funding Success Meet" today at Prasad Lab!
30/12/2014

We are happy to announce the
"Funding Success Meet" today at Prasad Lab!

என்னதான் நடந்துச்சு சிங்கப்பூரில்? மூவி ஃபண்டிங் நெட்வொர்க்கின் முதல் வெற்றி!!மூவி ஃபண்டிங் நெட்வொர்க் துவங்கப்பட்டது ஒர...
11/12/2014

என்னதான் நடந்துச்சு சிங்கப்பூரில்? மூவி ஃபண்டிங் நெட்வொர்க்கின் முதல் வெற்றி!!

மூவி ஃபண்டிங் நெட்வொர்க் துவங்கப்பட்டது ஒரு வெறுப்பில்தான். ஒரு டுபாக்கூர் ஆள் தன்னை டைரக்டர் என சொல்லிக்கொண்டு ஒரு அடிமுட்டாள்தனமான படத்தை எடுக்கிறார்... அந்த படத்திற்கெல்லாம் இரண்டு கோடி மூன்று கோடி என முதலீடு செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். இது ஒன்றல்ல இரண்டல்ல, வருசத்துக்கு சுமார் நூறு நூற்றைம்பது படங்களுக்கு நடக்கிறது. ஆனால் தரமான திரைக்கதையுடன் காத்திருக்கும் திறமையாளர்களுக்கு அந்த வாய்ப்பு பெரும்பாலும் கிட்டுவதேயில்லை. இது ஏன் என்ற கோபம் எனக்கு பலவருடங்களாய் உண்டு. பல நல்ல இயக்குநர்கள் நல்ல படங்களை கொடுத்துவிட்டும்கூட அடுத்து படம் எடுக்கு முடியாமல் காத்திருந்தே வெறுத்துப்போகின்றனர்.
உதாரணம் சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்த இயக்குநர் ருத்ரையா அவர்கள். அவரது மரணத்திற்குபின் ஆயிரம் பேர் அவரது அருமைபெருமைகளை விவரித்து எழுதினாலும் அவர் இருக்கும்வரை இன்னொரு படத்தை, தயாரிப்பாளர் என்ற ஒருவரின் கட்டுப்பாடுகள் இல்லாமல், பைனான்சியர்களுக்காக காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல் தன்னிச்சையாய் இயங்க இடம் கொடுக்கும் ஒரு படத்தை எடுக்க முடியாமலே போய்விட்டார். மரணத்திற்கு முன் அவர் அடுத்த படம் கிடைக்காமல் காத்திருந்த வருடங்கள் 35.

பல நேரங்களில் எல்லாம் 'நேரம்' தான் என மனதைத் தேற்றிக்கொண்டு தொடர்வதைத்தவிர வேறொன்றும் செய்ய முடிந்ததில்லை.

ஆனால் உண்மையில் கொஞ்சம் தீவிரமாய் யோசித்துப்பார்த்தால் அந்த டுபாக்கூர் இயக்குநர்களால் செய்ய முடிந்த ஒரு காரியத்தை நம்மால் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் இயக்குநராய் டுபாக்கூராய் இருக்கலாம்; அவர்கள் வைத்திருக்கும் கதை கண்றாவியாய் இருக்கலாம்; ஆனால் அவர்களிடம் ஒரு நபரை தேடிப்பிடித்து கன்வின்ஸ் செய்து அந்த படத்தில் முதலீடு செய்ய வைக்கும் திறமை இருந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அது ஒருவிதமான மார்க்கெட்டிங் வித்தை தான். தவறாய் பயன்படுத்தப்பட்டாலும் தவிர்க்க முடியாத திறமை அது.

அந்த மார்க்கெட்டிங் வித்தை, ஏன் நல்ல திறமையுள்ள இயக்குநர்களுக்கு கைகூடுவதில்லை என்று யோசித்தால் பல படைப்பாளிகளுக்கு தன்னை மார்க்கெட்டிங் செய்துகொள்வது எப்படி என்று தெரிவதில்லை. அப்படி முழு நேர மார்க்கெட்டிங் செய்துகொள்வது அவர்களின் வேலையும் இல்லை.

இன்னொருபுரம் யோசித்தால் இப்படி இந்த மோசமான படங்களில் முதலீடு செய்பவர்கள் அவர்களுக்கு தெரிந்த யாரோ சில நபர்களை நம்பி முதலீடு செய்கிறார்கள். அவர்களுக்கு நல்ல படைப்பாளியை, நல்ல திரைக்கதையை தேடிப்போய் கண்டுபிடிக்க தெரிவதில்லை. வழிகாட்டுதலும் இல்லை. இந்த முதலீட்டாளர்களைப் பற்றியும் நல்ல படைப்பாளிகளுக்கு தெரிவதில்லை.

இதை நிவர்த்தி செய்யும் ஆதங்கத்துடன் துவக்கப்பட்ட அமைப்புதான் இந்த மூவி ஃபண்டிங் நெட்வொர்க்.

நல்ல கதைகளை, நல்ல திரைப்பட ப்ராஜக்ட்களை தேர்ந்தெடுத்து அவற்றை மார்க்கெட்டிங் செய்து முதலீட்டாளர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான் இதன் நோக்கம். அத்துடன் நில்லாமல் முதலீட்டாளர்களின் சார்பாய் சரியான முறையில் நிர்வகித்து அந்த ப்ராஜக்ட்களை முமுமையாய் முடித்துக்கொடுக்கும் பொறுப்பையும் இந்த நிறுவனம் ஏற்றுக்கொள்வதால் வழக்கமான முறையில் கண்ணுக்குத்தெரியாமல் நடக்கும் பல ஏமாற்றுவேலைகளுக்கும், குளறுபடிகளுக்கும் இங்கு வேலையில்லை.

முதல்கட்டமாய் எங்களது ஆன்லைன் மார்க்கெட்டீங் டீம் உதவியுடன் www.moviefunding.in என்ற தளத்தை பிரபலப்படுத்தி சினிமாவில் ஆர்வமுள்ள பலரிடமும் எங்களின் வெளிப்படையான, நேரடியான அணுகுமுறையை கொண்டு சேர்த்து கணிசமான முதலீட்டை இரண்டு படங்களுக்கும் கொண்டுவந்தோம். அதன் அடுத்த கட்டம்தான் எங்களின் இந்த சிங்கப்பூர், மலேசிய பயணம்.

இது ஒன்றும் எளிதான காரியம் இல்லை என்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். ஏனெனில் எங்களுக்குத்தெரிந்தே ஏராளமானோர் சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து வந்து சினிமாவில் முதலீடு செய்து பல விதங்களில் பணத்தை இழந்திருக்கின்றனர். ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அந்த அனுபவத்தில் சூடு பட்ட பூனையாகவும், அதை பார்த்து பயந்தவர்களாகவும் தான் பலரின் மனநிலை அங்கே இருக்கிறது என்பதும் எங்களுக்குத்தெரியும். அப்படித்தான் இருந்தார்கள்.சிங்கப்பூர்ரில் 45 பேர் எதிர்பார்த்த சந்திப்பிற்கு 30க்கும் குறைவாகவே வந்தார்கள். இனிமேல் அப்படி ஏமாறாமல் சினிமாவில் முதலீடு செய்யும் வழிமுறைகளை முன்வைத்து சினிமா தயாரிக்கும் எங்களின் அணுகுமுறையை ஆர்வத்துடன் கேட்டாலும் அந்த மீட்டிங் பிற்காலத்தில் உதவியாய் இருக்கலாமே தவிர உடனடி ரிசல்ட்டிற்கு பெரிதாய் நம்பிக்கையளிக்கவில்லை.

சரி.. இந்த ஒரு பயணம் போதாது இன்னும் பல பயணங்கள் தேவை என நாங்கள் மனதளவில் தயாரானோம்.

மேலும் ஒரு படத்திற்கு தேவையான ஃபண்டிங் காலம் 45 நாட்கள் என்பது இதுவரை கண்ட அனுபவத்தில் குறைவான அவகாசமாய் தெரிவதால் அதை 60 நாட்கள் என மாற்றி அமைக்கமுடிவு செய்தோம். இனி மூவி ஃபண்டிங் நெட்வொர்க்கில் லிஸ்ட் செய்யப்படும் அனைத்து முழுநீளத்திரைப்படங்களுக்கும் நிதி திரட்டும் கால அவகாசம் 60 நாட்களாகும்.

இந்த சூழ்நிலையில் சிங்கப்பூரில் இரண்டுநாட்களை கழித்துவிட்டு மலேசியாவிற்கு கிளம்ப தயாரான போதுதான் திடீரென ஒரு சுவாரஸ்யமான மாற்றம் நிகழ்ந்தது. நாங்கள் முற்றிலும் எதிர்பார்க்காத இருவர் இதில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள எனது படமான 'சவுண்ட் கேமரா ஆக்சனு'க்கு சுமார் 90 லட்சத்திற்கு முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக என் பார்ட்னர் முத்துராமலிங்கம் தெரிவித்தபோது அதை நம்புவதற்கே எனக்கு சில மணி நேரங்கள் தேவைப்பட்டது. காரணம் இதற்கு முன்பு ஏற்பட்ட அத்தனை ஏமாற்றங்கள். அத்தனை கசப்பான அனுபவங்கள். ஒரு இயக்குநராய் எனக்கு பிடித்த ஒரு ஸ்க்ரிப்டிற்கு தேவையான பட்ஜெட் எந்தவித இடர்பாடுகளுமின்றி கிடைப்பது என்பது மிகப்பெரிய வரம். சினிமாவைப் பற்றி அதிகம் தெரியாத ஒரு தயாரிப்பாளருக்கு பிடிச்ச மாதிரி கதை சொல்லனுமே என்ற குழப்ப நிலை மாறி ஒரு நல்ல கதையை முன்வைத்து அதற்கான தயாரிப்பாளர்களை கொண்டு வருவது என்பது தமிழ் சினிமா உலகின் மிக முக்கியமான ஆரோக்யமான மாற்றம். அந்த மாற்றத்தின் முதல் விதையாய் எங்களின் முதல் படத்திற்கு முழுமையான ஃபண்டிங் கிடைத்துள்ளது.

இதற்கு முழுக்காரணம் மூவி ஃபண்டிங் நெட்வொர்க் என்ற இந்த அமைப்பை உருவாக்கியதும், அதில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாய் வெளிப்படையான நேரடியான நடைமுறைகளை செயல்படுத்தியதும்தான். இதற்கு காரணமான அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள் மூவி ஃபண்டிங் நெட்வொர்க்கிற்கு.

இது எங்களின் முதல் வெற்றி. இப்படி நமக்கு தெரியாமலேயே நமக்கு உதவி செய்ய, நமது கனவுகளை நிறைவேற்ற பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் வெளிப்படையாய், திட்டமிட்டு செயல்படும் போது இப்படி எதிர்பாரா சுவாரஸ்யங்கள் தொடர்ந்து நடக்கும் என நம்புகிறோம்.

சினிமாவில் முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்கள் ஏதோ ஒரு பயத்தில் தயங்கியபடியே இருக்கிறார்கள். காரணம் இதுவரை அவர்கள் கேள்விப்பட்ட சம்பவங்களும், இன்டஸ்ட்ரியில் பார்க்கும் நடைமுறைகளும் தான். அவர்களின் பயத்தை போக்கி ஆரோக்யமான முறையில் சினிமா தயாரிப்பை செயல்படுத்துவதில் மூவி ஃபண்டிங் நெட்வொர்க் ஒரு முன்னோடியாய், ஒரு ட்ரெண்ட் செட்டராய் இருக்கும் என்பது உறுதி. இந்த முதலீட்டை சரியான முறையில் நிர்வாகம் செய்து குறிப்பிட்ட பட்ஜெட்டில், குறிப்பிட்ட கால அவகாசத்தில் தரமுள்ள படமாய் கொண்டு வந்து ரிலீஸ் செய்வது எங்களின் அடுத்த முக்கிய பொறுப்பு. செய்வோம்.

எங்களின் இரண்டாவது படமான இயக்குநர் முத்துராமலிங்கத்தின் 'ரூபச்சித்திர மாமரக்கிளியே' படத்தில் இணைந்து கொள்ள இன்னும் வாய்ப்பிருக்கிறது. நடிப்பில்,தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இணைந்து உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்.

-Mohamed A.K. Jailani

’மோகன்குமார் என்றொரு சாஃப்ட்வேர் சமையல் கலைஞன்’இந்த சாப்ட்வேர் இன்ஜினியர் மூவி ஃபண்டிங் நெட்வொர்க்கில் இணைந்த கதையை சுவா...
18/11/2014

’மோகன்குமார் என்றொரு சாஃப்ட்வேர் சமையல் கலைஞன்’

இந்த சாப்ட்வேர் இன்ஜினியர் மூவி ஃபண்டிங் நெட்வொர்க்கில் இணைந்த கதையை சுவாரஸ்யமான விவரிக்கிறார் இயக்குநர் முத்துராமலிங்கன்!

http://www.moviefunding.in/it-guy-mohan-kumar-joins-movie-funding-network/

கையெழுத்துப்போடுகிற வேலை ஒன்றை தவிர்த்து, காகிதத்தில் எழுதுகிற பழக்கம் நின்று, அநேகமாக 4 வருடங்கள் ஓடிவிட்டது. எனினும் சட்டைப்பையில் பேனா இல்லாமல் ஒருநாளும் வெளியே போனதில்லை.சுமார் முப்பதாண்டுகாலப் பழக்கம். மும்பை ‘போல்டு இண்டியா’ லே-அவுட் வேலைகளுக்காக வாங்கி சொருகிக்கொள்ள ஆரம்பித்த வெள்ளை நிற ம…

இன்று புதுச்சேரி மாநிலத்தின் பிரபல சேனலான மெர்க்குரி சேனல் நடத்திய புதுச்சேரியின் பல்வேறு துறைகளில் சிறந்து சாதனை படைத்த...
16/11/2014

இன்று புதுச்சேரி மாநிலத்தின் பிரபல சேனலான மெர்க்குரி சேனல் நடத்திய புதுச்சேரியின் பல்வேறு துறைகளில் சிறந்து சாதனை படைத்தவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவிற்கு மூவி ஃபண்டிங் நெட்வொர்க் சார்பாக இயக்குநர் ஜெய்லானி சீஃப் கெஸ்டாக கலந்துகொண்டார். புதுச்சேரி மாநில அமைச்சர் மற்றும் முன்னால் எம்.எல்.ஏ. எம்பிக்களுடன் முக்கிய விருந்தினராய் கலந்துகொண்டது மூவி ஃபண்டிங் நெட்வொர்க்கிற்கு நல்ல அங்கீகாரத்தையும், ஆதரவையும் தேடித்தந்துள்ளது. மெர்க்குரி சேனலுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். மேலும் அவர்களின் லைப்ஸ்டைல் மீடியா சேனலில் இன்றிரவு 8 மணி முதல் 9 மணி வரை மூவி ஃபண்டிங் நெட்வொர்க் மூலமாய் புதிதாய் சினிமா தயாரிப்பில் ஈடுபடுபவரக்ளுக்கான லைவ் ஷோவும் நடத்தப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பாண்டிச்சேரி மக்கள் கண்டுகளிக்கலாம், போனில் தொடர்புகொள்ளலாம்.

Happy to attend a special awards function, Mercury Awards, as a Cheif Guest along with Pudhucherry welfare minister and few Ex. MLA & MPs from the state. Great initiative by Mercury channel.
Also having a live show tonight about Movie Funding Network in their Lifestyle Media Channel. Pondy makkal can tune in :)

www.moviefunding.in

சங்கத்துல சேர்ந்த சுதர்சன லிங்கம்!’சுதர்சன லிங்கம்’ என்கிற இந்தப்பெயரை இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்களுக்குத் தெரியாது....
08/11/2014

சங்கத்துல சேர்ந்த சுதர்சன லிங்கம்!

’சுதர்சன லிங்கம்’ என்கிற இந்தப்பெயரை இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்களுக்குத் தெரியாது.
மூவிஃபண்டிங் தொடர்பாக நாம் அறிவித்த இரண்டாவது நாளில் முகநூலில் சாட்டிங்கில் வந்தார்.
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, மிகக்குறைவாகவே சில சந்தேகங்கள் கேட்டார்.

‘இது ஒரு பிரமாதமான முயற்சி. என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நானும் இதில் பங்குதாரராக இணைகிறேன்’.

அடுத்த ஒரு மணிநேரத்தில் நாங்கள் அசோக் நகரிலுள்ள சுதர்சன லிங்கத்தின் ‘சவுண்ட் பார்ட்டி’ ஸ்டுடியோவில் ஆஜர்.

சுமார் ஒருமணிநேர உரையாடலில் அவரது இன்னொருமுகம் தெரிந்தது. ஐ.டி நிறுவனம் ஒன்றில் வருமானத்துக்காக வேலை பார்த்துக்கொண்டே, தனது சினிமாவை கனவை, பொத்திப்பாதுகாக்க தனது சவுண்டு பார்ட்டியை நடத்தி வருகிறார் என்பது புரிந்தது. பணத்தில் கெடுபிடி காட்டாத கலைஞனாக இருந்ததால், குறும்பட இயக்குநர்களின் வேடந்தாங்கலாக சுதர்சனின் ஸ்டியோ இருப்பதை சற்றுநேரத்திலேயே புரிந்துகொள்ளமுடிந்தது.

‘உண்மையில் நான் பெரிய தொகை ஒன்றை முதலீடு செய்து இந்த திட்டம் வெற்றிபெற உதவவேண்டும் என்றே விரும்பினேன். ஏனெனில்சில ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர்களுடன் சிலருடன் இணைந்து இது போன்றதொரு முயற்சியில் ஈடுபட்டு பெரும் வலியுடன் தோற்றுப்போனோம். உங்கள் முயற்சி அப்படி ஆகக்கூடாது. நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்’- சுதர்சன்.

’உங்கள் சூழல் எங்களுக்குத்தெரியாது. உணர்வு பூர்வமான உங்கள் ஆதரவே எங்களுக்கு மாபெரும் உந்து சக்தி’. நீங்கள் எந்த ரூபத்தில் உதவினாலும் ஏற்றுக்கொள்கிறோம்’ -இது நாங்கள்.

அதிகம் யோசிக்காமல் சுதர்சன் தனது பரந்த மனதைத் திறந்தார்.

இசையமைப்பாளர் உங்கள் விருப்பம். மற்றபடி, உங்கள் இரு படங்களுக்குமான பின்னணி இசைக்கோர்ப்பு, பாடல்கள் ,பாடகர்கள், இசைக்கலைஞர்கள், எஃபெக்ட்ஸ் தொடங்கி ஃபைனல் மிக்ஸிங் வரை அனைத்துக்குமான பட்ஜெட்டை கொடுங்கள். என் தியேட்டர் வாடகை உட்பட அவை அத்தனையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ - தனது பெருந்தன்மையை வார்த்தைகளாக கொட்டினார் சுதர்சன்.

அலுவலகம் வந்து இருபடங்களுக்குமான தோராய செலவினங்களை பட்டியலிட்டபோது மொத்தம் ஒன்பது லட்சமாக வந்து நின்றது.

மெயில் அனுப்பிக் காத்திருந்தால்,...

அடுத்த பத்துநிமிடங்களில்..

‘இரண்டு படங்களுக்குமான மேற்படி செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒப்பந்தத்தை தயார் செய்து வையுங்கள் உங்கள் அலுவலகம் வந்தே கையெழுத்திடுகிறேன்’ என்று பதில் வந்தது. இன்று அவரது ஸ்டுடியோவுக்கு சென்றே கையெழுத்திட்டோம்.

நமது சங்கத்துக்கு சுதர்சன லிங்கம் என்ற சொக்கத்தங்கம் வந்த கதை இது.

அடுத்த தேடல், நம் இரு படங்களுக்குமான உணவுச்செலவுகளை ஏற்றுக்கொள்ள ஒரு அன்னலட்சுமியோ அல்லது அன்னலட்சுமணனையோ உள்ளே கொண்டுவர முயல்வது.... ஏய்ய்ய்ய் அன்னலட்சுமி நீ எங்க இருக்க?’

www.moviefunding.in

லூசியா பவன்குமார் வழியில் சவுண்ட் கேமரா ஆக்க்ஷன் ஜெய்லானி!Thanks to Tamilnews24x7http://tamilnews24x7.org/2014/10/lucia-...
05/11/2014

லூசியா பவன்குமார் வழியில் சவுண்ட் கேமரா ஆக்க்ஷன் ஜெய்லானி!

Thanks to Tamilnews24x7

http://tamilnews24x7.org/2014/10/lucia-pawan-kumar-track-jailani.html

You are here: Home // சினிமா // லூசியா பவன்குமார் வழியில் சவுண்ட் கேமரா ஆக்க்ஷன் ஜெய்லானி

Address

Chennai
600093

Alerts

Be the first to know and let us send you an email when Movie Funding Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share