Squarefeetland

Squarefeetland உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலை?

நிலம் மற்றும் வீடு வாங்க, விற்க,வாடகைக்கு உலகில் முதல் முறையாக தமிழில் ஓர் வலைதளம்,இதில் தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் 34 மாவட்டங்கள்,2956 ஊர்களில் உள்ள சொத்துகளை பதிவு ,சொத்து தேடலுக்கு www.squarefeetland.com

04/12/2013
உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்www.squarefeetland.comஇந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசு...
30/10/2013

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்
www.squarefeetland.com

இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தார். இந்திரா பிரியதர்சினி அவர்களின் ஒரே குழந்தையாவார். இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஒரு செல்வவளம் மிக்க வழக்கறிஞர் ஆவார். காந்திக்கு முந்தைய காலத்தில் இந்திய தேசிய காங்கிரசில் மோதிலால் நேரு மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு நன்கு படித்தவரும், இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவருமாவார். இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு புகழ்பெற்ற தலைவரும் ஆவார். இந்திரா பிறந்ததிருந்த காலத்தில், காந்தியின் தலைமையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் நேரு நுழைந்தார்.
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இவருக்கும்மகாத்மா காந்திக்கும் எந்த வித இரத்த தொடர்பும் இல்லை. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்www.squarefeetland.com       தமிழக  அரசே சத்தம்  போடாமல் வேடிக்கை  பார்த்துகொண்ட...
27/10/2013

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்
www.squarefeetland.com
தமிழக அரசே சத்தம் போடாமல் வேடிக்கை பார்த்துகொண்டிருகிறோம் , என்று எங்களை வேடிக்கையாக நினைக்காதீர் . உங்களுக்கும், மத்திய அரசுக்கும் வித்தியாசமே கிடையாது . தினம் ,தினம் மத்திய அரசு பெட்ரோல் (petrol) மற்றும் டீசல் (Diesel) விலை ஏற்றுவது போல் , மணல் மற்றும் சிமெண்ட் விலை ஏறி கொண்டிருகிறது . நாங்கள் பொறுமை காக்கிறோம் என்றால் , நீங்கள் விலையை குறைப்பிர்கள் என்ற நம்பிக்கயில் தான் . இத்தனை நாட்கள் பொறுத்திருக்கிறோம் என்பதை சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டாம் . இதனால் பாதிக்கபடுவது நாங்கள் மட்டும் அல்ல நீங்கள் ஓட்டுவங்கியாக பயன்படுத்தும் மக்களும் தான் .போராட்டம் நடத்தினால் , மணல் அல்லும் சிப்பந்தியிலிருந்து , வீடு கட்டும் நடுத்தர வர்கத்தினர் , கட்டுமான பொறியாளர்கள் மற்றும் கட்டுனர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்யும்படி எங்களை தூண்டிவிட வேண்டாம்.

பொறி .கோ .வெங்கடாசலம்
நிறுவனத்தலைவர்
சென்னை கட்டுமான பொறியாளர் சங்கம்

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்www.squarefeetland.com       சாக்கடை  அல்லும் குப்பன் முதல் , மைக்ரோசாப்ட்  (Mic...
27/10/2013

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்
www.squarefeetland.com
சாக்கடை அல்லும் குப்பன் முதல் , மைக்ரோசாப்ட் (Microsoft) முதலாளி பில்கேட்ஸ் வரை , யாரிடம் எப்படி பேசுவது , எப்படி பேச வேண்டும் என்ற நுண்ணறிவும் , பேசும் வாய்ப்பும் கட்டிட பொறியாளருக்கு மட்டுமே உண்டு . 28 அக்டோபர் 2013 வாஸ்து நாள் , என் பொறியாளர் சாதி மக்கள் பூமி பூஜை போட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் .
பொறி .கோ .வெங்கடாசலம்
நிறுவனத்தலைவர்
சென்னை கட்டுமான பொறியாளர் சங்கம்

Resale property for sale in virugambakkam
24/10/2013

Resale property for sale in virugambakkam

யார் இந்த சிறுவன் ?
19/10/2013

யார் இந்த சிறுவன் ?

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்www.squarefeetland.comமகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவல்லிக்கேணியில் வசித்த வீ...
18/10/2013

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்
www.squarefeetland.com
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவல்லிக்கேணியில் வசித்த வீட்டை, தற்பொழுது தமிழக அரசு பராமரித்து வருகிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் 1908ம் ஆண்டு தேடப்பட்டு வந்தார். அப்போது பாரதியார் புதுச்சேரியில் வசித்து வந்தார்.
பின்னர் 1920ம் ஆண்டு,பாரதி சென்னைக்கு வந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றினார். அப்போது, திருவல்லிக்கேணியில் ஒரு அறை, மற்றும் சமையலறை கொண்ட சிறிய வீட்டில் தமது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்த வீட்டில் இருந்த போது பாரதியார் அடிக்கடி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று வருவார். ஒருமுறை கோயிலில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாரதி இறந்தார்.
பாரதியாரின் இறப்புக்கு பிறகு இந்த வீடு பலரது கைக்கு மாறியது. வீட்டின் அமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. பின்னர் இந்த வீட்டை தமிழக அரசு வாங்கியது. பாரதியின் நினைவாக இந்த வீட்டை அருங்காட்சியமாக தமிழக அரசு மாற்றியுள்ளது.

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்www.squarefeetland.comகாமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்...
11/10/2013

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்
www.squarefeetland.com

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.
காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதையசென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்www.squarefeetland.comநேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப...
10/10/2013

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்
www.squarefeetland.com

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 - உறுதிபடுத்தப்படவில்லை) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்www.squarefeetland.comஇந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935இல் தொடங்...
07/10/2013

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்
www.squarefeetland.com

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல்நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது. பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை (ஏஜன்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றை கண்காணித்தும் வருகிறது. இந்திய நாட்டின் நாணய மதிப்பு(அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும்தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937-ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் ரகுராம் ராஜன் ஆவார்.

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்www.squarefeetland.com
06/10/2013

உலகில் முதல் முறையாக தமிழில் ஒரு வலைதளம்
www.squarefeetland.com

Address

105 Brindhavanam Nagar Main Road Valasaravakkam
Chennai
600087

Alerts

Be the first to know and let us send you an email when Squarefeetland posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Squarefeetland:

Share