Jothidam & Anmigam Thagaval

14/01/2022
06/10/2021

Yoga Sri Jothida Nilayam

*பித்ரு தோஷம் பித்ரு கடமையிலிருந்து தவறியவர்களுக்கு பெருமாளே திதி செலுத்தும் ஆலயம்*!

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார் சிரார்த்த சம்ரட்சண பெருமாள். இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணன் சேவை சாதிக்கிறார். பித்ரு வேளை பூஜை பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம்.

திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலை 09 மணிக்குள் பெருமாள் சந்நிதிக்கு வெறும் வயிற்றில் டிபன் சாப்பிடாமல் வர வேண்டும். கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் ஆண்கள் பேண்ட் ஷர்ட் அணியாமல் வேஷ்டி கட்டி வர வேண்டும் பெண்கள் சூடிதார் போட அனுமதியில்லை. மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரட்சணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நிதிக்கு வந்து பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் சம்பிரதாய திவசச்சமையல் போல வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம். கயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இந்த தலத்தில் உண்டு.

தலை முறை சாபம் பலவகை படும் (முன்னோர்கள் மாந்தீரிகம் தொழில் செய்ததாலும் , அடுத்தவர்களை ஏமாற்றி வாழ்வது , தாய் தந்தைக்கு சாப்பாடு போடாமலும் , வாரிசு இல்லாத உறவினருக்கு இறுதி சடங்கு செய்யாமல் இருப்பது, அடுத்தவரின் சாபம் வாங்குவது அடுத்தவர் நலனில் பொறாமைப்படுதல் தான் என்ற அகந்தையுடன் செயல்படுதல் போன்றவை முக்கியமானவை) இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நாக தோஷம் இருக்கும் ஒரு அடி மேலே சென்றால் பத்து அடி கீழேயே இறங்கும். பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறியவர்களும், பெண்களும் தங்கள் பெற்றோர்களுக்கும் முன்னோர்களுக்கும் சிரார்த்தம் செய்யலாம். செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக கல்பாக்கம் மகாபலிபுரம் செல்லும் பேருந்தில் சென்றால் நென்மேலி சென்றடையலாம்..

12/09/2021

கிரக தோஷங்களும் பரிகாரங்களும்

ஒரு ஜாதகருக்கு கிரகங்கள் மூலம் ஏற்படும் தோஷங்களுக்கு கீழ் கண்டுள்ள பரிகாரங்களை அனுசரிக்க வேண்டும்.

சூரியன்

மாணிக்கம், தாமிரம், சொர்ணம், கன்றுக்குட்டியும் பசுவும், கோதுமை, சிவப்பு பட்டு, சிவப்பு துணி இவைகளை தானம் செய்து செந்தாமரை பூவால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் நலம் பல தரும்.,

சந்திரன்

வெள்ளி, முத்து, பால், வெள்ளை, சாமரம், சங்கு, வெண்பட்டு, வெள்ளை வஸ்திரம், பூணூல், வெள்ளைப்பசு, நெய், கற்பூரம் ஆகியவைகளை தானம் செய்து கற்பூரம் ஏற்றி வெள்ளை அல்லி மலரால் துர்க்காதேவியை ஜெபித்தல் வேண்டும்.

செவ்வாய்

காளை, துவரை, தாமிரம்,பவளம், கோதுமை, சிவப்பு வஸ்திரம் ஆகியவைகளை தகுதிக்கு ஏற்றவாறு தானம் செய்து சிவப்பு அரளி பூவால் ஸ்ரீ சுப்ரமணியரை ஜபம் செய்தால் நல்ல பலன் தரும்.

புதன்

பட்டு ஆடை, சர்க்கரை பொங்கல், தங்க விக்ரகம், பச்சை பயிறு, யானைக்கு உணவு, நெய் போன்றவைகளை தானம் செய்வது உத்தமமாகும்.

குரு

சர்க்கரை, மஞ்சள், குதிரை, தங்க விக்ரகம், புஷ்பராகம், மஞ்சள் பட்டு வஸ்திரம், நவரத்தின மாலை, அவரை, கடலை, நவரத்தினம் ஆகியவைகளை தானம் செய்து வந்தால் நலம் பல விளையும்.

சுக்கிரன்

வெண்பட்டு, வஜ்ரம், வெள்ளி விக்ரகம், தாம்பூலம், அவரை, பசு ஆகியவைகளை தானம் செய்து வந்தால் நலம் தரும்.

சனி

எள், பாத்திரம், நீலக்கம்பளி, கருப்பு பட்டு வஸ்திரம், இரும்பு விக்ரகம், கரும்பசு ஆகியவைகளை தானம் செய்தல் நலம் தரும்.

ராகு

எண்ணையுடன் பாத்திரம், கோமேதகம், எருமை, ஈய விக்ரகம், இரும்பு, பூதானம், குடை, உளுந்து ஆகியவைகளை தானம் செய்தல் நலம் தரும்.

கேது

வைடூரியம், விக்ரகம், வெண்கலப் பாத்திரம், பலவர்ண ஆடை, கம்பளி, கொள் ஆகியவைகளை தானம் செய்தல் நன்மை தரும்.

Can you help me out by signing this petition?
18/08/2021

Can you help me out by signing this petition?

End Brahmin hatred in Tamil Nadu

01/05/2021

யோக ஶ்ரீ ஜோதிட நிலையம்☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
பஞ்சாங்கம்

தினமும் பஞ்சாங்கம் படிப்பதினால்
நமது கர்ம வினைகள் அனைத்தும் நீங்குகிறது

✡️🕉️ஶ்ரீராமஜயம்✡️🕉️

*பஞ்சாங்கம் ~ சித்திரை ~ 19* ~

**{02.05.2021}*
*ஞாயிற்றுக்கிழமை*.

*1.வருடம் ~ ப்லவ வருடம். ( ப்லவ நாம சம்வத்ஸரம்}.*

*2.அயனம் ~ உத்தராயணம் .*

*3.ருது ~ வஸந்த ருதௌ.*

*4.மாதம் ~ சித்திரை ( மேஷ மாஸம்)*.

*5.பக்ஷம்*~ *கிருஷ்ண பக்ஷம்.*

*6.திதி ~ ஷஷ்டி இரவு 08.57 PM. வரை. பிறகு ஸப்தமி .*

*ஸ்ரார்த்த திதி ~ ஷஷ்டி .*

*7.நாள் ~ ஞாயிற்றுக்கிழமை { பாநு வாஸரம் }* ~~~

*8.நக்ஷத்திரம் ~ பூராடம் பிற்பகல் 02.37 PM. வரை. பிறகு உத்திராடம் .*

*யோகம் ~ சித்த ,அமிர்த யோகம்.*

*கரணம் ~ கரஜை, வணிஜை .*

*நல்ல நேரம் ~ காலை 06.30 AM ~ 07.30 AM & 03.30 PM ~ 04.30 PM.*

*ராகு காலம் ~ மாலை 04.30 PM ~ 06.00 PM.*

*எமகண்டம் ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.*

*குளிகை ~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM.*

*சூரிய உதயம் ~ காலை 05.57 AM.*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.24 PM.*

*சந்திராஷ்டமம் ~ ரோகிணி, மிருகஸீர்ஷம் .*

*சூலம் ~ மேற்கு*

*பரிகாரம் ~ வெல்லம்.*

30/04/2021

♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

யோக ஶ்ரீ ஜோதிட நிலையம் ☀️☀️☀️
பஞ்சாங்கம்

தினமும் பஞ்சாங்கம் படிப்பதினால்
நமது கர்ம வினைகள் அனைத்தும் நீங்குகிறது

✡️🕉️ஶ்ரீராமஜயம்✡️🕉️

*பஞ்சாங்கம்*~ சித்திரை 18

(01.05.2021)
**சனிக் கிழமை *

**வருடம்*~ பிலவ வருடம்.
{பிலவ நாம சம்வத்ஸரம்}*

அயனம்*~ உத்தராயணம்
*ருது *~ வசந்த ருதௌ
*மாதம்* ~ சித்திரை
(மேஷ மாஸம்)

*பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.
*திதி~ இன்று இரவு 10.38 வரை பஞ்சமி பிறகு சஷ்டி.
* ஸ்ரார்த்த திதி ~ கிருஷ்ண பஞ்சமி.
*நாள் சனிக் கிழமை .
*(ஸ்திர வாஸரம் ).
*நக்ஷத்திரம் ~ இன்று மாலை 03.38 வரை மூலம் (மூலா ) பிறகு பூராடம் (பூர்வஷ்டா)
**யோகம் - இன்று நாள் முழுவதும் சித்த யோகம்.
*நல்ல நேரம்* ~
07.30 ~ 08.30 AM
04.30 ~ 05.30 PM

*ராகு * ~
* மாலை 09.00 ~ 10.30

* *எமகண்டம்* ~ காலை 01.30 ~03.00.

*குளிகை* ~
*காலை 06.00 ~ 07.30

**சூரிய உதயம்* ~ காலை 06.05 AM.

சூரிய அஸ்தமனuம்~ மாலை 06.33 PM

*குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.

**சந்திராஷ்டமம் ~ மிருகசீர்ஷம்.

*சூலம்*~ கிழக்கு.

09/03/2021

யோக ஶ்ரீ ஜோதிட நிலையம்
பஞ்சாங்கம்
🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬
தினமும் பஞ்சாங்கம் படிப்பதினால்
நமது கர்ம வினைகள் அனைத்தும் நீங்குகிறது
🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬

*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.*

*பஞ்சாங்கம்* ~ *மாசி ~ 24*

*{08.03.2021}*.- *திங்கட்கிழமை*

*1.வருடம் ~ ஸார்வரி வருடம். { ஸார்வரி நாம சம்வத்ஸரம்}.*

*2.அயனம் ~ உத்தராயணம் .*

*3.ருது ~ ஸிஸிர ருதௌ.*

*4.மாதம் ~ மாசி ( கும்ப மாஸம்).*

*5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.*

*6.திதி ~ தசமி மாலை 06.16 PM. வரை. பிறகு ஏகாதசி .*

*ஸ்ரார்த்த திதி ~ தசமி .*

*7.நாள் ~ திங்கட்கிழமை {இந்து வாஸரம்.} ~~~~~~~*

*8. நக்ஷத்திரம் ~ பூராடம் .*

*யோகம் ~ சித்த யோகம்.*

*கரணம் ~ பத்ரம், பவம் .*

*நல்ல நேரம் ~ காலை 06.30 AM ~ 07.30 AM & 04.30 PM ~ 05.30 PM.*

*ராகு காலம் ~ காலை 07.30 AM ~ 09.00 AM.*

*எமகண்டம் ~ காலை 10.30 ~12.00 PM.*

*குளிகை ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.*

*சூரிய உதயம் ~ காலை 06.26 AM.*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.19 PM.*

*சந்திராஷ்டமம் ~ ரோகிணி, மிருகஸீர்ஷம் .*

*சூலம் ~ கிழக்கு.*

*பரிகாரம் ~ தயிர்.*

*இன்று ~ உலக மகளிர் தினம் .* 🙏🙏

Address

Srinivasa Nagar
Chennai

Opening Hours

9am - 5pm

Telephone

+916380693340

Alerts

Be the first to know and let us send you an email when Jothidam & Anmigam Thagaval posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jothidam & Anmigam Thagaval:

Share