Senthilkumar Nagendran

Senthilkumar Nagendran மாநில தலைவர் – தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் (TNVS)

வணிகர்களின் நலன் • ஒற்றுமை • முன்னேற்றம்

1 கோடி வணிகர்களை ஒருங்கிணைக்கும் பயணம்

திரு. செந்தில்குமார் நாகேந்திரன் அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கம். 🇮🇳

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொது நிகழ்வுகள், வணிகர் சந்திப்புகள், தலைமைச் செயல்பாடுகள், உரைகள், பயணங்கள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இந்தப் பக்கத்தில் தொடர்ந்து பகிரப்படும்.

வணிகர்களின் ஒற்றுமை • முன்னேற்றம் • வளர்ச்சி

🌐 Official Website: tnbjp.org

Follow செய்து தொடர்ந்து இணைந்திருங்கள்.

🇮🇳 இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳நமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த அனைத்து சு...
18/08/2026

🇮🇳 இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳

நமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களையும் இந்நாளில் போற்றி வணங்குவோம்.

தேசத்தின் ஒற்றுமை, வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். 🇮🇳

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

🇮🇳 வந்தே மாதரம் 🇮🇳

#சுதந்திரதினம் #சுதந்திரதினநல்வாழ்த்துக்கள்

24/07/2026

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் (TNVS) மாநிலத் தலைவர் திரு. N. செந்தில்குமார் அவர்கள் தலைமையில், "1 கோடி வணிகர்களை ஒருங்கிணைக்கும் பணிக்கான துவக்க விழா" மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்த மாபெரும் இணைப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் முன்னாள் அமைச்சர், தமிழக பாஜக மாநிலத் தலைவர், மாண்புமிகு திரு. நயினார் நாகேந்திரன் ஐயா அவர்கள், புதிதாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மாபெரும் இணைப்பு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வணிகர்களின் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் வளர்ந்த பாரதம் குறித்த தனது எழுச்சிமிகு சிறப்புரையை ஆற்றினார்.

மேலும், தமிழக பாஜக நேரிடைப் பொறுப்பாளர் மாண்புமிகு திரு. அரவிந்த் மேனன் அவர்கள், தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் மாண்புமிகு திரு. சுதாகர் ரெட்டி அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் திரு. தாமரை ஜெகதீசன் அவர்கள், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் திரு. ராஜேஷ் கண்ணா அவர்கள், மற்றும் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் மாநில, மாவட்ட, மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள், வணிகர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த மாபெரும் நிகழ்வு, தமிழகம் முழுவதும் 1 கோடி வணிகர்களை ஒருங்கிணைக்கும் புதிய பயணத்தின் தொடக்கமாகவும், வணிகர்களின் ஒற்றுமை, முன்னேற்றம் மற்றும் தேசிய வளர்ச்சியை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகவும் அமைந்தது.

#தமிழ்நாடுவணிகர்களின்சங்கமம்

Send a message to learn more

18/07/2026

🎥 மண்புமிகு திரு.நயினார் நாகேந்திரன் அவர்களின் அதிரடி முழு பேச்சு!

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் (TNVS) பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்த மாபெரும் இணைப்பு விழாவில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் ஆற்றிய முழு உரை.

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் மாநிலத் தலைவர் திரு. N. செந்தில்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த நிர்வாகிகள், வணிகர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் மண்புமிகு திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் வணிகர்களின் முன்னேற்றம், தமிழக வளர்ச்சி, நல்லாட்சி, தொழில் மேம்பாடு மற்றும் 1 கோடி வணிகர்களை ஒருங்கிணைக்கும் புதிய பணியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

📍 இடம்: குன்றத்தூர், காஞ்சிபுரம்

🎬 முழு உரையை இப்போது காணுங்கள்!

👍 இந்த வீடியோவை Like • Comment • Share செய்து அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள்.

#தமிழ்நாடுவணிகர்களின்சங்கமம் #நயினார்நாகேந்திரன்

Nainar Nagenthran Arvind Menon Ponguleti Sudhakar Reddy Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu

🙏 தமிழக பாஜக மாநிலத் தலைவர் மாண்புமிகு திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், தமிழக பாஜக நேரிடைப் பொறுப்பாளர் மாண்புமிகு திர...
17/07/2026

🙏 தமிழக பாஜக மாநிலத் தலைவர் மாண்புமிகு திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், தமிழக பாஜக நேரிடைப் பொறுப்பாளர் மாண்புமிகு திரு. அரவிந்த் மேனன் அவர்கள், தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் மாண்புமிகு திரு. சுதாகர் ரெட்டி அவர்கள் மற்றும் தமிழக பாஜக தலைமைக்கு தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் (TNVS) சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்களின் நலன், முன்னேற்றம் மற்றும் உரிமைகளை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம், மாநிலத் தலைவர் திரு. N. செந்தில்குமார் அவர்கள் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு எங்கள் இயக்கத்தின் புதிய பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு சிந்தனை, நல்லாட்சி, வணிகர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் "வளர்ந்த பாரதம்" என்ற உயரிய இலக்கை முன்னெடுத்துச் செல்லும் பயணத்தில், தமிழக வணிகர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்.

இந்த மாபெரும் இணைப்பு விழாவில் பங்கேற்று எங்களை வரவேற்று வாழ்த்திய அனைத்து பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கும், நிகழ்வை வெற்றிகரமாக்கிய தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் மாநில, மாவட்ட, மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள், வணிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒன்றுபட்ட வணிகர்கள்...
வளமான தமிழ்நாடு...
வளர்ந்த பாரதம்... 🇮🇳

#தமிழ்நாடுவணிகர்களின்சங்கமம்

தமிழக பாஜக நேரிடைப் பொறுப்பாளர் மாண்புமிகு திரு. அரவிந்த் மேனன் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், ஊக்கமளிக்கும் வார்த்...
16/07/2026

தமிழக பாஜக நேரிடைப் பொறுப்பாளர் மாண்புமிகு திரு. அரவிந்த் மேனன் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் (TNVS) சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்களின் நலன், முன்னேற்றம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம், மாநிலத் தலைவர் திரு. N. செந்தில்குமார் அவர்கள் தலைமையில், புதிய பயணமாக பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்று வழிகாட்டிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், தமிழக பாஜக நேரிடைப் பொறுப்பாளர் திரு. அரவிந்த் மேனன் அவர்கள், மற்றும் அனைத்து மூத்த நிர்வாகிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

வணிகர்களின் நலனுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், வலிமையான இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கியும் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

#தமிழ்நாடுவணிகர்களின்சங்கமம்

We sincerely thank Hon'ble Shri Ponguleti Sudhakar Reddy Ji for his warm welcome and kind wishes.It is a proud milestone...
16/07/2026

We sincerely thank Hon'ble Shri Ponguleti Sudhakar Reddy Ji for his warm welcome and kind wishes.

It is a proud milestone for Tamilnadu Vanigargalin Sangamam (TNVS) as our Founder President Shri N. Senthil Kumar, along with office-bearers and members from across Tamil Nadu, joined the Bharatiya Janata Party (BJP) .

TNVS remains committed to empowering the trading community, serving society, and contributing to the vision of a stronger and more developed Tamil Nadu and India.

We express our gratitude to Shri Nainar Nagenthran Ji, Shri Arvind Menon Ji, Shri Ponguleti Sudhakar Reddy Ji, and all the senior BJP leaders for their encouragement and support.

Together, we move forward with dedication towards the welfare of traders and the progress of our nation.

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்கும் மாபெரும் இணைப்பு விழா வெற்றிகரமாக நடைபெற்றது”தமிழ்நாடு ...
16/07/2026

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்கும் மாபெரும் இணைப்பு விழா வெற்றிகரமாக நடைபெற்றது”

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் சார்பில் "1 கோடி வணிகர்களை ஒருங்கிணைக்கும் பணிக்கான துவக்க விழா" மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணையும் மாபெரும் இணைப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் மாநிலத் தலைவர் திரு. N. செந்தில்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாநில, மாவட்ட, மண்டல மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

நாட்டின் வளர்ச்சி, வணிகர்களின் முன்னேற்றம், தொழில்முனைவோருக்கான பல்வேறு நலத்திட்டங்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு சிந்தனை, நல்லாட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்துக் கொண்டனர்.

இந்த மாபெரும் இணைப்பு விழாவை நினைவுகூரும் வகையில், நிகழ்விற்காக புதிதாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இணைப்பு விழா வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். வணிகர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக திகழ்வதையும், அவர்களின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தமிழக பாஜக நேரிடைப் பொறுப்பாளர் திரு. அரவிந்த் மேனன் அவர்கள், தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் திரு. தாமரை ஜெகதீசன் அவர்கள், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் திரு. ராஜேஷ் கண்ணா அவர்கள் ஆகியோர் சிறப்பு பங்கேற்பு செய்தனர். அதோடு, தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் மாநில, மாவட்ட, மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள், வணிகர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த மாபெரும் இணைப்பு விழாவை சிறப்பித்தனர்.

தமிழகம் முழுவதும் 1 கோடி வணிகர்களை ஒருங்கிணைக்கும் மக்கள் இயக்கத்தின் தொடக்கமாகவும், தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் புதிய பயணத்தை குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவும் இந்த இணைப்பு விழா அமைந்தது.

#தமிழ்நாடுவணிகர்களின்சங்கமம்

Nainar Nagenthran Arvind Menon Ponguleti Sudhakar Reddy Narendra Modi

மே 5 – வணிகர்கள் தின வாழ்த்துக்கள்! 🎉தமிழ்நாடு முழுவதும் உழைத்துநாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்அனைத்து வணிக பெருமக்களு...
05/05/2026

மே 5 – வணிகர்கள் தின வாழ்த்துக்கள்! 🎉

தமிழ்நாடு முழுவதும் உழைத்து
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்
அனைத்து வணிக பெருமக்களுக்கும்
தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் (TNVS) சார்பில்
மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙏

உங்கள் உழைப்பே
தமிழகத்தின் வளர்ச்சி!
உங்கள் முன்னேற்றமே
நாட்டின் முன்னேற்றம்!

👉 ஒன்றுபட்டு செயல்படுவோம்
👉 வணிகத்தை வளர்ப்போம்
👉 தமிழ்நாட்டை உயர்த்துவோம்

வணிகர்களின் ஒற்றுமை தான்
தமிழகத்தின் எதிர்கால வெற்றி! 💪

24/04/2026

🔥 தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம்
💼 ஒன்றிணைவோம் • உயர்வோம் • வெல்வோம்!

🌐 https://vanigan.digital

🆔 இலவச டிஜிட்டல் உறுப்பினர் அட்டை

உங்கள்
✔️ வாக்காளர் அடையாள அட்டை எண்
✔️ கைபேசி எண்

மூலம்,
📲 உறுப்பினர் அடையாள அட்டையை இலவசமாக உடனே பெறுங்கள்

👉 இப்போது பதிவு செய்யுங்கள்:
🌐 https://vanigan.digital

💰 ₹25 லட்சம் வரை வட்டியில்லா கடன்

📈 உங்கள் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள்!

👉 தகுதி உள்ளவர்கள்:

✔️ Private Limited நிறுவனங்கள்
✔️ Partnership நிறுவனங்கள்
✔️ Export / Import நிறுவனங்கள்
✔️ Textiles Business
✔️ Manufacturer நிறுவனங்கள்
✔️ Retailers

🚀 சிறப்பு அம்சங்கள்

✔️ வட்டி & பிணையம் இல்லா கடன்
✔️ CIBIL பற்றி கவலை வேண்டாம்
✔️ எளிய மற்றும் விரைவான செயல்முறை
✔️ நம்பகமான சேவை

📈 உங்கள் வணிகத்திற்கு நாங்கள் தருவது

✔️ வணிக நெட்வொர்க் இணைப்பு
✔️ புதிய வாடிக்கையாளர்கள் பெற உதவி
✔️ டிஜிட்டல் ஆதரவு & பிரச்சாரம்
✔️ வளர்ச்சி ஆலோசனை

🤝 இப்போது இணைந்து வளருங்கள்!

📢 ஆயிரக்கணக்கான வணிகர்கள் ஏற்கனவே இணைந்துள்ளனர்

👉 Register Now:
🌐 https://vanigan.digital

📲 தொடர்புக்கு (WhatsApp)

👉 https://wa.me/918524891344

Address

Srinivasa Perumalkovil
Chennai
600128

Alerts

Be the first to know and let us send you an email when Senthilkumar Nagendran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Senthilkumar Nagendran:

Shortcuts

Share