31/05/2018
"அப்பா என்ற உயிரெழுத்து..!"
(சமுத்திரக்கனியின் முகநூலிலிருந்து..)
அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும்..
ஆண் பெண் இருபாலரும் அவசியம் வாசிக்க வேண்டிய பதிவு..
உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள்தான் தங்கமீன்.
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு அன்பை தங்களது மகள் மீது கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்..
உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்..
முதலில் பெற்றெடுத்த தாய்..
இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய்.. மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய்.
இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை, பெரும்பாலும் உடன் இருக்கிறாள்..
ஒரு ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை அதிகம் விரும்பும் காரணங்கள் என்ன..??
'நேர்மையான நண்பன்..'
தங்களது வாழ்நாளில், தாங்கள் கண்ட நேர்மையான தோழன், தந்தைதான் என பெண்கள் எண்ணுகின்றனர்..
பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்..
'உலகை அறிமுகம் செய்தவர்..'
பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.
மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் ஒருபோதும் காண்பிப்பது இல்லை..
வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை..
'கேட்ட வரம் கிடைக்குமிடம்..'
மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..”
என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்..
'காவலன்..'
வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா தான்..
'சூப்பர் ஹீரோ..'
தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பாதான்.
அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவதென்னவோ அப்பா தான்.
'எப்பொழுதும் மாறாதவர்கள்..'
ஒரு பெண்ணின் உறவில், ஒவ்வொருவரும் சூழ்நிலைகள் மாறும்போது, மாறித் தோன்றுவர்..
ஆனால்,
அம்மா, அப்பா மட்டும்தான் இறுதிவரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்..
'உன்னத உறவு..'
கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா.
அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது.
ஒரு மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஒரு உறவு மட்டுமல்ல..
தோழன், காதலன், ஹீரோ, காவலன் என்ற எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவரும் அப்பா தான்..
அதனால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கின்றனர்..
ஆம்..
"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..
தந்தையின் அன்பின் முன்னே..!" அன்புடன்;மாணிக்கம் முனுசாமி