24/07/2014
பல்வேறு சேவைகள்
இங்கு, மறுவாழ்வு மருத்துவம் (Physical Medicine and Rehabilitation), மறுவாழ்வு உளவியல் (Rehabilitation psychology), ஊனமுற்றோருக்கான தொழில் பயிற்சி (Vocational Training), பேச்சு, கேட்டல் மற்றும் தொடர்புப்
பயிற்சி (Speech, Hearing, Communication), சிறப்புக் கல்வி (Special Education), கண் பார்வையின்மையோடு இணைந்த காது கேளாமை(Deaf blind), இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம் (Physiotheraphy and Occupational Theraphy), 0-3 வயதில் தொடக்கக் கால பயிற்சி (Early Intervention), செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கு சாதனங்கள் பொருத்துதல் (Prosthetics and Orthatics), உணர்வு உறுப்புகள் குறைபாட்டுக்கான ஒருங்கிணைப்புப் பயிற்சி (Sensory Intergration), சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு பணிகள் Community Based Rehabilitation) ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதிரிப் பள்ளி ஒன்றும் நடத்தப்படுகிறது.
2005-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டாலும், மாற்றுத் திறனாளி குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படும் பெரும்பாலான பெற்றோருக்கு இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்று கூறுகிறார் திருச்சியைச் சேர்ந்த சிறகுகள் சிறப்புக் குழந்தைகள் பெற்றோர் சங்கத்தின் இணைச் செயலர் கே. நன்மாறன்.
அவர் மேலும் கூறியது: “இந்த நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்காக சென்ற பின்னர் தான் இதன் சிறப்பான செயல்பாடுகள் தெரியவந்தன. இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளியான எனது மகளுடன் கடந்த மாதத்தில் 5 நாள்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றேன். உண்மையில் முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் இந்த நிறுவனம் செயல்படுவது பாராட்டுக்குரியது.
வார நாள்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரையில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.
இதன் சிறப்பு என்னவெனில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு ரூ.5 பதிவுக் கட்டணத்திலும், வசதி படைத்தோருக்கு பெயரளவுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பெற்றோர் அங்கேயே தங்கிக் கொள்ளவும் வசதிகள் உள்ளன என்பது இதன் கூடுதல் சிறப்பு” என்றார் அவர்.
இந்த வாய்ப்பை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த நிறுவனத்தை www.niepmd.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலமாகவும், 044 - 27472113, 27472046, 27472389 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
National Institute for Empowerment of Persons with Multiple Disabilities, under Ministry of Social Justice and Empowerment, Government of india, serves as national resource center for empowerment of persons with multiple disabilities such as blindness, hearing impairment, mental retardation, mental…