NANDI Jothida Nilayam

NANDI Jothida Nilayam This page is created to provide Astrology, Vaasthu Services for those who need. To get solutions for your busines, life, etc., Pls contact the Admin.

07/12/2020

வாழ்க்கையில் மேன்மைக்கு வருவதற்க்கு ஆசைபடும் அன்பர்களுக்கு மட்டுமே...
இது தின ராசி பலன்கள் இல்லை வாழ்கையில் ஜெயித்தவர்கள் எல்லோறுமே பின் பற்றிய ரகசிய பொன்மொழிகளில் தின பலன்கள்...

மேஷம்:ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு சரியான நேர்த்தை இரண்டு முறைகள் கான்பிக்கும். ஆனால் ஓடும் மனிதர்கள் நீங்கள் ஒரு நாளைக்கு உங்கள் திறமைகளை எத்துனை முறைகள் கான்பித்தீர்கள் உங்களிடமே கேளுங்கள்.. உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை உறுதியாக இருந்தால், இந்த உலகில் சாதிக்க முடியாதது என்று ஒன்றுமில்லை”கடுகு சிறுசானாலும் காரம் குறையாது. எனபது உனர்ந்து செயல் புரியும் நாள் இன்று.

ரிஷபம்:வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும் பூக்களின் கதை தான் பூமியில் எல்லோருக்கும் உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை உறங்கிடும் வரையில் வாழ்வோம் தோல்வியும் சுகம்தான் வெற்றியைய் நாம் ஈட்டும் வரை இன்றும் என்றும்.

மிதுனம்:தான் செய்வதே சரி என்கிற எண்ணம் ஒருவரை எதையும் சீர்தூக்கிப் பார்க்க வைப்பதில்லை. அதன் விளைவு அவர்களை பெரும் வீழ்ச்சி காண வைக்கிறது.பெரியோர்களிடம் அலோசனை பெற்று முறையான வாழ்க்கை அமைக்கும் நாள் இன்று.

கடகம்: வெற்றி எப்பேர்ப்பட்டவரையும் ஏமாற்ற வல்லது.அது மூன்று குணாதிசயங்களை வெற்றியாளர்களிடம் ஏற்படுத்த வல்லது. கர்வம், அலட்சியம்,எந்த அறிவுரையும் கேளாமை,இந்த மூன்றையும் கடை பிடுக்காமல் இருக்கும் நாள் இன்று.

சிம்மம்:எவ்வளவு தான் நன்றாக பழகினாலும் ஒரு சிலரின் உண்மை குணம் சில சந்தர்ப்பங்களில் தான் உங்களுக்கு தெரிகிறது.. உன்மையைய் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய உண்மை நிலையை மறைப்பது,உங்களை நீங்களே ஏமாற்றி கொள்வதாக முடியும்.. உன்மை பேசும் தருனம் உன்மையைய் பேசும் நாள் இன்று.

கன்னி:நீங்கள் தனிமையில் இருக்கும்போது உங்களுக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். தன்னிலையை உனர்ந்து செயல் படும் அன்பர்களை வீழ்த்த இன்னும் பூ உலகில் மனிதர்கள் பிறக்கவே இல்லை. தன்னை உனர்ந்து தலைவனாகும் நாள் இன்று.

துலாம்:மிகவும் வேதனையான விஷயம்..உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது..மிகவும் சந்தோஷமான விஷயம் உங்களுக்காக பிறர் கண்ணீர் சிந்துவது.நீங்கள் யார் மனதையும் புன் படாமல் நடந்து கொள்ளும் நாள் இன்று.

விருச்சிகம்:ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம் வாழ்க்கையில் சந்தர்பங்கள் எல்லா நேரங்களிலும் வந்து கதவை தட்டி கொண்டே இருக்காது கதவை தட்டும் போது அதை கவனமாக தக்க வைத்து கொள்ளலால் இன்றும் என்றும்.

தனுசு:கர்வமும், அலட்சியமும், அடுத்தவர்களைத் துச்சமாய் நினைக்கும் தன்மையும் உங்களை அண்ட விடாதீர்கள். அப்படி கவனமாய் இருந்தால் மட்டுமே வெற்றியை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.பெற்ற வெற்றியை தக்கவைக்கும் நாள் இன்று.

மகரம்:விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும். அனைவ்ரிடத்திலும் மானசீகமாக பழகி அன்பை வெளிப்படுத்தும் நாள் இன்று.

கும்பம்:ஒரு அபூர்வ மனிதராக ஒருவர் நினைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம். இனி எனக்கு தோல்வியே கிடைக்க முடியாது என்று ஒருவன் நினைக்க ஆரம்பிக்கும் போது அவனுடைய முயற்சிகள் தரத்திலும் அளவிலும் குறைய ஆரம்பிக்கின்றன. தலைகனம் வராமல் காக்கும் நாள் இன்று.

மீனம்:தோல்வி அடையும் சமயத்தை விட அதிகமாய் வெற்றி அடையும் சமயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.தோல்வி அடையும் போது இருப்பதை விட அதிகமாய் வெற்றி அடைகையில் அடக்கமாய் இருங்கள்.என்னிய என்னங்கள் பலிதமாகும் நாள் இன்று.

உயர்ந்த வாழ்க்கையின் உரமே இல்லறம். நல்லரவாழ்வு இவ்வுலகத்தின் இன்பங்கள் பொங்கி வழிகின்ற தேன் ஊற்றாகும். இந்த இல்லற வாழ்க்கையின் மூலம் நல்ல சந்ததிகளைப் பெற்று பெருவாழ்வு வாழ வழிவகுக்கும் ஒரு உன்னத வழிமுறையாகும். மேலும் இறைவனின் பேரருளை அடைவதற்கு ஒரு வெற்றிப் பாதையாக அமைவதுவே உங்கள் இல்லம். இல்லறம் சிறக்க, நல்லொழுக்கம் வளர உடல் நலம் ஜொலிக்க மனம் நலம் மேன்மை பெறும் நாள்
வாழ்க வளமுடன்
சிவாயநம
படித்ததில் பிடித்ததுது
சிவாயநம.
நன்றி:ஆத்தூர்.மு.கிருஷ்ண மோகன்

04/01/2019
04/11/2018

A season of joy and prosperity to all 🙏

05/12/2017

#ஹோமங்களும்
#அதன்_பயன்களும்
#பற்றி_பார்போமா ?

1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.
2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.
3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.
4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.
5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.
7. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
10. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.
11. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.
12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
14. கண்திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.
15. கால சர்ப்ப ஹோமம் : திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.
16.ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்; சகல பயன்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.

23/08/2017

தீர்க சுமங்கலி பவ!
இந்த ஆசீர்வாதம் பலித்து கணவருக்கு முன் இறந்தோருக்கு,
"அவிதவா நவமி " அன்று தர்பணம் செய்யும் நாள்.
இந்த திதி ஆவணி தேய்பிறை அஷ்டமி அன்று மட்டுமே வரும்!
தந்தை உயிரோடிருந்து தாயார் இறந்திருந்தால்,
மகன் தர்பணம் செய்யலாம்!
எதிர் வரும் வியாழன் அன்று (14-09-2017) இந்த திதி அமைகிறது!
படித்ததை பதிவு செய்துள்ளேன்

26/03/2017

இரவு வணக்கம் அனைவருக்கும்
சக்தி வாய்ந்த கட்டு மந்திரங்களும் அவற்றை முறையாக பிரயோகிக்க சித்தர்கள் சொன்ன வழி முறைகளும் .. அவற்றின் பின்னால் உள்ள சூக்சும ரகசியங்களும் ..*
************************************************************************************************************************

சித்தர்கள் பெரும்பாலும் வெகுசன
வாழ்விடங்களில் இருந்து விலகி
காடுகளிலும், மலைகளிலும்
வாழ்ந்திருந்தனர்.அவர்களின் வாழ்நாள் தேடல்
விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம்
சார்ந்ததாகவே இருந்தது. இத்தகைய தேடலில்
அவர்கள் அடைந்த தெளிவும், முதிர்வும்
அசாதாரணமானவை.

தாங்கள் உணர்ந்த அரிய தகவல்கள்
சுயநலவாதிகளிடமோ அல்லது
பேராசைக்காரர்களிடமோ சென்று சேர்ந்து
விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக
இருந்தனர்.அதன் பொருட்டே தங்களின்
பாடல்களை மறைபொருளாய் எழுதி
வைத்தனர்.

சித்தரியலில் குருவே எல்லாவற்றுக்கும்
ஆதாரமானவர் என தீர்க்கமாய்
நம்பினர்.குருவானவர் தனத் தெளிவுகளை
சீடர்களுக்கே அளித்தார்.மறைபொருளை
கட்டவிழ்க்கும் வகையினையும்
குருவிடமிருந்தே சீடர்கள்
பெற்றனர்.இதனையே நாம் குருவருள்
என்கிறோம்.

சதாரண மனிதர்களினால் செயல்
படுத்தமுடியாத நுட்பங்கள், வழிமுறைகள்
அவற்றின் அசாத்திய விளைவுகளை பற்றிய
தகவல்களே இப்படி பாதுகாக்கப்
பட்டது.இவற்றையே பொது மக்கள் சித்த
ரகசியம் என்று அழைத்தனர்.

என்னுடைய புரிதலின்படி இந்த சித்த
ரகசியங்களை ஆறு வகைகளாய் தொகுக்க
நினைக்கிறேன்.

அவையாவன...
****************
உடல் கட்டு மந்திரங்கள்
அபாயகரமான யந்திரங்கள்
சாபநிவர்த்தி மந்திரங்கள்
காயகற்ப வகைகள்
இரசவாதம்
தீட்சைகள்

இரசவாதம் பற்றி முன்பே பல பதிவுகளில்
பார்த்து விட்டபடியால் மற்ற வகைகளைப்
பற்றிய எனது புரிதல்கள் மற்றும்
தகவல்களை வரும் நாட்களில் பகிர்ந்து
கொள்கிறேன்.

இனி பகிர இருக்கும் பல தகவல்கள் நம்ப
இயலாத வகையிலும், பகுத்தறிவுக்கு
ஒவ்வாதனவாகவும் இருக்கலாம்.இவற்றின்
சாத்திய,அசாத்தியங்கள் ஆய்வுக்கும்,
விவாதத்திற்கும் உட்பட்டவை. இந்த
முறைகளை செயல்படுத்தி பலன் காண்பதில
நிறையவே நடைமுறை சிக்கல்கள்
இருக்கின்றன.முறையான குருவின் அருளாசி
மற்றும் வழி நடத்துதல் இருந்தால் மட்டுமே
இவை சாத்தியமாகும்.எனவே இவற்றை ஒரு
தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட
வேண்டுகிறேன்.

*சித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்”*
****************************************

நமது உடலானது பஞ்ச பூதங்களின்
சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச
சக்திகளான கோள்கள், அட்டதிக்கு
பாலகர்களுக்கு
கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான
மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின்
ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த
கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே
எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும்,
சுயமாகவும் செயல்பட முடியும் என
சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும்
தெளிவுகளுமே இந்த பதிவு...

பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து
உடலை வெளியேற்றுவது, வெளியேறிய
பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு
அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு
மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல்
கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது
அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர்
மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக
குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும்
என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும்,
அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும்
கூறப் பட்டிருக்கிறது.

இனி நவ கோள்களின் உடல் கட்டு
மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு
மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த
பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க
வேண்டும் என அகத்தியர் கூறுகிறார்.

அதாவது...
"பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய
மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன்
வகையோடே மந்திரத்தை தான் மைந்தா
தனி தனியாய் உருத்தான் போடு போடே"
- அகத்தியர் -

நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம்
நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம்

நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம்
மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும்

ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது
ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது

அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது

கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்த
ு உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது

பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்

எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

*திக்கு கட்டு*
************

1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்

2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு
முன்புறம் போடவும்

3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்

4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்

5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்

அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே

*உடல்கட்டு.*
************

ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா

(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)

கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர
கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்

தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்...........

*சிவ மகாமந்திரம் ... முயன்று பாருங்கள்*
***********************************************

"ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்"

ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது:
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.

இதை நீக்க சிவ மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம் - அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.

ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் .

"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே!

இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம், பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம். அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.

*அனுமாரின் வசியக் கட்டு மந்திரம் .*
*************************************

“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா,
லங்காபுரி ராவண சம்ஹாரா,
சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா,
அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு
ஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"

திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார்அகத்தியர்.

*சகலத்திர்கும் கட்டு மந்திரம் ...*
*****************************

"ஓம் பஹவதி ப்ய்ரவி
என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு
சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம"
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா”

இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள். சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை அறிவீர்கள். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம். அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம். இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம் என்று சவால்விட்டு சொல்கிறேன்.

*சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்..*
********************************************

"உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு
உத்தமனே அம் ஹீம் என்று லட்சம்
திருவாக செபித்துவர கட்டுத்தீரும்"
- அகத்தியர் -

முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்"
என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல்
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

*சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்..*
******************************************

"ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர
அருவாக ஹீம் உறீம் என்று லட்சம்
அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்"
- அகத்தியர் -

ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்"
என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல்
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

*செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்..*
*******************************************

"நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர
ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே"
- அகத்தியர் -

நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம்
றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால்
செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார்
அகத்தியர்.

*புதனுக்கான உடல் கட்டு மந்திரம்..*
************************************

"என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு
இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம்
நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்"
- அகத்தியர் -

புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு
சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம்
உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும்
என்கிறார் அகத்தியர்.

*குருவுக்கான உடல் கட்டு மந்திரம்..*
*************************************

"நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு
அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம்
அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்"
- அகத்தியர் -

நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும்
மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று
அன்பாக லட்சம் உரு செபித்தால்
குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார்
அகத்தியர்.

*சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்..*
****************************************

"இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு
இறீம் றீம் நசி மசி யென்று போடே"
- அகத்தியர் -

சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை
கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு
செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு
தீரும் என்கிறார் அகத்தியர்.

*சனிக்கான உடல் கட்டு மந்திரம்..*
***********************************

"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி
தேடுவாய் லட்சமுருப் போடு போடே"
- அகத்தியர் -

பகவானின் உடல் கட்டு மந்திரத்தை
கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு
செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும்
என்கிறார் அகத்தியர்.

*ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்..*
****************************************

"திறமான இராகுவுட கட்டுதீர
நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம்
நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்"
- அகத்தியர் -

திறமான இராகு பகவானின் உடல் கட்டு
மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி"
என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால்
இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார்
அகத்தியர்.

*கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்..*
******************************************

"சாடுவாய் கேதுவுட கட்டு தீர
சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம்
போடே"
- அகத்தியர் -

கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை
கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு
செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு
தீரும் என்கிறார் அகதியர்.

நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின்
மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல்
கட்டு மந்திரங்களை அகத்தியர்
அருளியிருக்கிறார்.

*குளிகன் உடல் கட்டு மந்திரம்..*
********************************

"நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க
நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம்
தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா"
- அகத்தியர் -

குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு
"ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு
செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும்
என்கிறார் அகத்தியர்.

*அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம்.*
********************************************

"பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப்
பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு
சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும்
சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங்
என்றும்
கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும்
குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும்
காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும்
கணக்குலட்ச முருச் செபித்துப் போடே"
- அகத்தியர் -

"வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம்
புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங்
வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம்
பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது
லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே
அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும்
என்கிறார்.

இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால்
உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப்
பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ
கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும்
அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது
உடல் முழுமையாக உனது
கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார்.

*உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை*
****************************************

சித்தர்களின் மந்திரங்கள் மிகவும்
நுட்பமானவை. அவர்தம் பாடல்களில்
மந்திரங்கள் மட்டுமே கூறப்
பட்டிருக்கின்றன.இந்த மந்திரங்களை
செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு
கொண்டு வருவது போன்றவைகள்
குருவினால் மட்டுமே கூறிட இயலும்.

தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை
வலியுறுத்துவதன் பின்னனி இதுதான்.

இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும்
முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை
இன்று பார்ப்போம்.மந்திரத்தை எவ்வாறு
பெறுவது,அதன் மறைந்திருக்கும் சூட்சுமம்
மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி
பார்ப்போம்.

"தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள்
சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு
வருவில்லா சிவயனார் மந்திரந்தானும்
வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு
குருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பா
குவலயங் களுக்குமுன்னே பிறதமூலம்
திருவான வினாயகரின் சுழியை முந்திச்
செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே"
- அகத்தியர் -

குருபரனாம் வினாயகரின் சுழியான "ஓம்"
என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம்
முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம்
என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும்,
சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே
அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர்,
மேலும் திருவான வினாயகரின் சுழியை
முதலில் செபித்தே தனது மந்திரங்கள்
அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று
சொல்கிறார்.

"அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு
அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு
வடக்குமுகம் இருந்துலட்சம்
உருத்தான்போடு"
- அகத்தியர் -

மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு
உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து
ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு
நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க
வேண்டும் என்கிறார்.

இத்துடன் உடல்கட்டு மந்திரங்கள் பற்றிய
தகவல் பதிவு நிறைவடைந்தது.ஆர்வமும்,
முயற்சியும் உள்ள எவரும் குருவருளை
வேண்டி வணங்கி இம் மந்திரங்களை பயன்
படுத்திடலாம்.

*உடல் கட்டு மந்திரம் !!!*
************************

விபூதியை கையில் வைத்துக்கொண்டு
வடக்கு முகமாய்
இருந்து கொண்டு 

"ஓம் பகவதி என் தேகத்தில் அடி முதல்
முடிவரை
திருகாளி,உத்திரகாளி,மோடிக்காளி,
ரீங்காளி,பிரகாசகாளி,
வஜீரக்காளி ஆகாசகாளி,பூமிக்காளி,
ஹரிகாளி,சிவகாளி
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா.

என்று 21 உரு செபித்து இவ்விபூதியை
தன்னைச்சுற்றிலும்
போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி
என்னவிதம் செய்தாலும்
நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை
ஒன்றும்
செய்ய முடியாது.

Note: எந்தவொரு மந்திரம் செபிக்கும்
முன்னரும் இக்கட்டு மந்திரத்தை செபித்து
விபூதியை நம்மை சுற்றிப்போட்டுக்கொ­
ண்டால்
அம்மந்திரத்தை சித்தி செய்ய விடாமல்
செய்யும் துஷ்டசக்திகளும்,கெட்டவர்களின்
சதியும்,மற்ற எந்த இடையூறும் நீ அந்த
விபூதியை விட்டு வெளியே வரும் வரை
உன்னை நெருங்காது.அதற்குள் நீ சித்தி செய்ய
வேண்டிய மந்திரத்தை சித்தி செய்து
கொள்ளலாம். நீ அவ்விபூதியை விட்டு
வெளியேரி விட்டால் அவ்விபூதியின் அற்றல்
முறிந்து விடும்.

*பின் குறிப்பு :*
*************
இந்த பதிவுகளில் உள்ள விவரங்கள்
அனைத்தும் ஒரு தகவல் பகிர்வே, மூட
நம்பிக்கைகளை பரப்புவதோ அல்லது மத
நம்பிக்கைகளை விதைப்பதோ எனது
நோக்கமில்லை.இவற்றை மூடநம்பிக்கை,
பழங்கதை என புறந்தள்ளாது ஆராயவும்,
விவாதிக்கவும் முற்பட்டால் ஏதேனும்
தெளிவுகள் கிட்டும்.

*சித்தர்களின் திக்கு கட்டு , தேக கட்டு மந்திர ரகசியம் ???*
ஓம் நமசிவாய .... ரிஷிகள் சித்தர்கள் முனிவர்கள் தான் தவம் செய்யும் இடத்திலும் , தவம் செய்யும் காலம் வரையிலும் , தங்களின் தவத்திற்கும் , உடலுக்கும் இடையூறு வராமல் இருக்க , தேகக்கட்டு , திக்கு கட்டு வசியம் செய்வர் . இந்த கட்டு மந்திரம் காப்பு செய்த பின் அவர்கள் தவம் செய்து முடிக்கும் வரை உடலுக்கும் , புற வெளியில் ( விலங்குகள் மனிதர்கள் பஞ்ச பூதங்களால் ) லும் தவத்திற்கு இடையூறு இருக்காது !. சீக்கிரம் நினைத்தவரம் கிட்டும் !!
சித்தர்கள் தவம் செய்ய அமர்ந்தவுடன் , கையில் , திருநீறு , குங்குமம் , கமண்டலநீர் , அல்லது தான் அமரும் இடத்தின் மண் அல்லது ருத்ராட்சம் , இதில் ஏதாவது ஒன்றை கையில் எடுத்து கண்களை மூடி புருவமத்தியில் கையை வைத்து ஓம் நமசிவாய என 3 முறை உச்சாடனம் செய்வர் !! பின்
உடலின் கீழ் பகுதியை நினைத்து ( மூலாதாரம் ) ஓம் நங் என்றும்
உடலின் முன்புறம் நினைத்து ஓம் யங் என்றும்
உடலின் பின்புறம் நினைத்து ஓம் வங் என்றும்
உடலின் வலப்புறம் நினைத்து ஓம் சிங் என்றும்
உடலின் இடப்புறம் நினைத்து ஓம் மங் என்றும் உச்சாடனம் செய்து கையில் உள்ள திருநீறை அந்தந்த பக்கத்தில் போடுவர்! இந்த மந்திரத்தால் தவம் செய்யும் போது சித்தர்களின் தேகத்திற்கு எந்த உபாதையும் வராது !!( இது தேக கட்டு முறை )
அடுத்து திக்கு கட்டு !!!
ஓம் நங் , ஓம் யங் , ஓம் வங் , ஓம் சிங் , ஓம் மங் , என்று மந்திரம் சொல்லி தேகக்கட்டு முடித்து பின்பு திக்கு கட்டிற்கு அதேபோல் கையில் திருநீறு எடுத்து சிவனை வணங்கி கீழ்கண்ட மந்திரம் சொல்லி திசைகளில் திருநீறு போடுவர் ,
ஓம் சண்முக நாய வசிய --- தெற்கு
ஓம் பிரம்மநாய வசிய ------- வடக்கு
ஓம் தேவேந்திரநாய வசிய -- கிழக்கு
ஓம் நரசிங்கநாய வசிய ----- மேற்கு
ஓம் திரு நீலகண்டாயா வசிய --- ஆகாயம்
ஓம் காலபைரவணாய வசிய ---- பாதாளம்
ஓம் பூமிபூடாய வசிய ------- பூமி ---- இப்படி மந்திரங்கள் கூறி தவம் செய்ய ஆரம்பிப்பார்கள் , இதனால் சித்தர்களின் தவத்திற்கு தேகத்திலும் , வெளியில் இருந்தும் எந்த இன்னலும் வராது இது சித்த தவமுறை ரகசியம் ஆகும் , தற்காலத்தில் இதை அருட்காப்பு என்றும் கூறுவர் ,
நீங்களும் தவம் செய்யும்போதோ அல்லது பூஜை செய்யும் போதோ இந்த மந்திரங்களை பின் பற்றினால் சித்தர்களின் ஆசி கிட்டும்.

- *சித்தர்களின் குரல
படித்ததை பதிவு செய்திருக்கிறேன்

17/11/2015
17/11/2015

சித்தர் தத்துவங்கள்..!

சித்தர்கள் என்ற சொல்லிற்கு சித்தத்தை அறிந்தவர்கள் என்று பொருள். சித்அறிவு. உடம்பிற்குள் 96 வகையான வேதியியல் தொழில்கள் நடைபெறுகின்றன என்ற உண்மையை (அறிவியலை) அறிந்தவர்கள் சித்தர்கள். அதை சித்தர் தத்துவங்கள் என்ற பெயரில் அழைத்தனர். மனித உடல் அவரவர் கையால் (உயரத்தில்) எண் சாண் ஆகும்.

இதை ஒளவையார் `எறும்பும் தன் கையால் எண் சாண்' என்கிறார். உயிர்கள் தன் அகலத்தில் நான்கு சாண் அளவு பருமனும் 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளதாகும். இந்த மனித உடலில் 96 வகையான செயல்கள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. இச்செயல்களை மருத்துவக் கண்ணோட்டமுள்ளவர்கள் அறிவர்.

இன்று நவீன மருத்துவ முறையில் உடற்கூற்றுத் தத்துவங்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச்சித்தர்கள் இத்தத்துவங்களை தன் உடலையே சோதனைச்சாலையாக்கி அறிந்து, ஆன்மீகப்பெயர்களில் இவற்றை அழைத்துள்ளனர். மனித உடல் இயங்கும் விதத்தை 96 வகையான தத்தவங்களின் அடிப்படையில் சித்தர்கள் பகுத்தனர்.

சித்தர்கள் குறிப்பிடும் இந்த 96 தத்துவங்களில் (உடலின் வேதியியலில்) ஏதாவது மாற்றம் ஏற்படின் நோய் ஏற்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் இயக்கம் பாதிக்கும். உதாரணமாக நீர் ஒருவர் உடலிலிருந்து அதிகமாக வெளியேறக் கூடாது. வெப்பம் அளவாய் இருக்க வேண்டும். அது போல் நாடிகள் சர்வர இயங்க வேண்டும்.

இதுதவிர, மூச்சு விடும் அளவிலும் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21600 என்றும் இது கூடுவதும் குறைவதும் என்று நிலை மாறினால் ஆயுள் குறையும் என்றும் , 21600 முறை தினமும் மூச்சுவிடக்கூடிய மனிதன்1 120 ஆண்டுகள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் கணித்துள்ளனர்.

முறையற்ற வாழ்க்கைப்போக்கை மேற்கொள் பவர்களுக்கு சுவாசம் அதிகரித்து ஆயுள் குறைகிறது என்கிறார் திருமூலர்( திருமந்திரம்729). முறையான மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு நடுமூச்சைச்சார்ந்து சுவாசிக்கக் கற்றால் 166 ஆண்டுகள் வரையிலும் வாழலாம் என்கிறார் இப்பாடலில்.

முதுமையில் அல்லது நோயினால் இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு மரணம் எத்தனை நாட்களுக்குள் ஏற்படும் என்பதையும் துல்லியமாகக் கணித்துள்ளனர். மற்றவர் புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு 9 நாளிலும்,காது கேட்காவிட்டால் 7 நாளிலும்,நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு 5 நாளிலும்,மூக்குநுனி தெரியாதவர்களுக்கு 3 நாளிலும், இரண்டு கண்களையும் கையால் அமுக்கினால் கண்ணீர் வராதவர்களுக்கு 10 நாளிலும் மரணம் வரலாம் என்கிறார்கள் சித்தர்கள்.

சித்தர்கள் ஆன்மீகவாதிகள் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் விஞ்ஞானிகளே. மெய்ஞானத்தோடு இணைத்து உடல்அறிவியலை எளிய மக்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்துள்ளார்கள். உயிரினங்கள் ஒரு நிமிடத்திற்கு விடும் மூச்சு அளவு.

தேரை (11) (நிமிடம்) 500-1000 வாழும் ஆண்டு
திமிங்கிலம் (34) 200-250 வாழும் ஆண்டு
ஆமை (45) 150-155 வாழும் ஆண்டு
யானை (11-12) 100-120 வாழும் ஆண்டு
பாம்பு (78) 126-130 வாழும் ஆண்டு
குரங்கு (31-32) 20-30 வாழும் ஆண்டு
முயல் (38-39) 810 வாழும் ஆண்டு
பண்டையமனிதர் (12-13) 100-120 வாழும் ஆண்டு
இக்காலமனிதர் (1617) 60-80 வாழும் ஆண்டு.

Address

Chennai
600012

Telephone

9043528979

Website

Alerts

Be the first to know and let us send you an email when NANDI Jothida Nilayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share