A2Z Online Services

A2Z Online Services Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A2Z Online Services, Business service, Coimbatore.

We are dealing with all online services like job applications, pan card, Aadhaar card, voter ID card, EC, Ration card, Nativity certificate, community certificate, etc

10/09/2021
31/07/2021

தாராபுரத்தில் முதல்வர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்.

காப்பீடு திட்டத்தில், கொரோனா சிகிச்சை பெற வசதியாக, தற்காலிகமாக கூடுதல் பதிவு மையங்கள் அமைக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம், மத்திய அரசின் காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.கொரோனா சிகிச்சையும், இதில் பெறலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தனியார் மருத்துவமனைகளிலும், காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுவரை கண்டுகொள்ளாத மக்களும், காப்பீடு திட்டத்தில் இணைந்து, அடையாள அட்டை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டம் தோறும், கலெக்டர் அலுவலகத்தில், காப்பீடு திட்ட பதிவு முகாம் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பதாக, சான்று பெற்று வந்து, காப்பீடு திட்டத்தில் இணைகின்றனர்.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், கலெக்டர் அலுவலகம் வந்து, காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதால், கூட்டம் களைகட்டிவிடுகிறது.

கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாலும், மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையிலும், கூடுதல் பதிவு மையம் அமைக்க, மக்கள் வலியுறுத்தி வந்தனர். கோரிக்கையை பரிசீலித்த கலெக்டர் வினீத், கொரோனா சிகிச்சை பெற வசதியாக, கூடுதலாக, தற்காலிக பதிவு மையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:கலெக்டர் அலுவலகத்தில் மட்டும், காப்பீடு திட்ட பதிவு முகாம் நடந்து வருகிறது. மக்களின் சிரமத்தை குறைக்க, திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகம் மற்றும் தாராபுரம் தாலுகா அலுவலக வளாகம் ஆகிய இரண்டு இடங்களில், தற்காலிக முகாம் அலுவலகம் திறக்கப்பட உள்ளது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு, கூடுதல் காப்பீடு மையங்கள் இயங்கும். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மையம் நிரந்தரமாக இயங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

28/07/2021
ஆவணத்தை பதிவு செய்த ஒரு வாரத்திற்குள் கட்டிட களப்பணிகளை விரைந்து முடித்து திரும்ப வழங்க வேண்டும் என அனைத்து சார்பதிவாளரு...
10/07/2021

ஆவணத்தை பதிவு செய்த ஒரு வாரத்திற்குள் கட்டிட களப்பணிகளை விரைந்து முடித்து திரும்ப வழங்க வேண்டும் என அனைத்து சார்பதிவாளருக்கு, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி சிவனருள் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது என்றும், கட்டிடத்தின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு கீழ் இருந்தால் சார்பதிவாளர்களும், ரூ.50 லட்சம் மேல் உள்ள கட்டிடங்கள் என்றால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

01/07/2021

எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் இனி ரூ.15 கட்டணம்.

4 முறைக்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.15 + ஜி.எஸ்.டி வரி பிடிக்கப்படும்.

இந்த நடைமுறை இன்று முதல் அமல்.

உணவு வழங்கல் துறைக்கு மாநில உணவு ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது விர...
02/06/2021

உணவு வழங்கல் துறைக்கு மாநில உணவு ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து தகுதியான நபர்களுக்கு விரைவாக புதிய ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனவிற்கான நிவாரண நிதி ரூ.2,000 ரூபாயாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா...
18/05/2021

புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனவிற்கான நிவாரண நிதி ரூ.2,000 ரூபாயாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணையாக ரூ2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததன் மூலம் 2,14,950 பயனாளர்கள் நிவாரணத் தொகையை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறையில் இரு...
04/05/2021

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இதையடுத்து தங்களுக்கு ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.

தற்போது அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மின் வாரிய ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59 இருந்து 60ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு மின் வாரிய ஊழியர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Address

Coimbatore

Telephone

+919843938703

Website

Alerts

Be the first to know and let us send you an email when A2Z Online Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share