27/12/2019
சென்ற அரை நூற்றாண்டுகளில் ஏற்பட்ட நவீன மாற்றங்களால், நாம் இழந்தவைகளில் முக்கியமான ஒன்று, இயற்கை எண்ணைவகைகள். கிராமங்களில் தேங்காயை, நிலக்கடலையை, எள்ளைக் காயவைத்து, மரச்செக்குகளில் ஆட்டி, எண்ணையாக்கி, அவற்றை அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தி, உடல்நலமுடன் வாழ்ந்தவர்கள் நம் பெரியவர்கள்..
மாடுகள் மூலமும், கைகளாலும் இயக்கப்பட்ட மரச்செக்குகள் பின்னர், விஞ்ஞானவளர்ச்சிகளால், மின்சாரம்மூலம் இயங்கும்படி அமைந்தாலும், நாம் அதை மரச்செக்கு ஆட்டுபவர்களின் சிரமத்தைக்குறைக்க வந்ததாக எண்ணிக்கொண்டோம். வீடுகளில் அப்போது மாவரைக்கும் கிரைண்டர்கள், மெல்ல எட்டிப்பார்த்த சமயமது.
ஆனால், அத்தகைய விஞ்ஞான வளர்ச்சிகள், செக்கு ஆட்டுபவர்களுக்கும், நமக்கும், அவர்களின் வாழ்வாதாரத்தையும், நம் நல்ல உடல்நிலையையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்போகும் ஒரு மோசமான நிகழ்வின் முன்னோட்டம், என்று உணரவில்லை.
எண்ணை வித்துக்களை மரச்செக்கில் கடைவதுபோய், மில்களில், இயந்திரங்கள் மூலம் பிழியப்பட்டன. இயந்திரங்களின் சூடும், செயற்கை வாசமும், எண்ணைகளை இயற்கைமணம் வீசும் மரச்செக்கு எண்ணைகளிலிருந்து அதிகம் மாறுபட்டு காண்பித்தாலும், நாட்டுச்செக்கு எண்ணையில் கலப்பட வாய்ப்பு இருந்த காரணத்தால், மக்கள் பாலித்தீன் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு, வெளிர் நிறத்தில் காணப்பட்ட எண்ணைகளை, பரவலாக வெளிவந்த விளம்பரங்களின் மூலமாக, நூறு சதம் சுத்தமானது, கொழுப்பு நீக்கப்பட்டது, இதயத்துக்கும், உடலுக்கும் நன்மையானது என்ற கவர்ச்சிகர வாசகங்களில் நம்பி, மரச்செக்கு எண்ணையைவிட சற்றே விலையும் குறைவாக இருந்ததால், அவற்றை உபயோகிக்க ஆரம்பித்தனர்.
நாட்டு செக்கு எண்ணை பயன்கள்
தாவர எண்ணைகள் உடலுக்கு நன்மைகள் தரும் கொழுப்பு நிறைந்தவை, உடலுக்கு தீங்கிளைக்கும் கொழுப்புகள் எல்லாம், அசைவ உணவுவகைகளாலே ஏற்படுகிறது. அதனால்தான் இப்போது சில மருத்துவர்கள், செயற்கை எண்ணைகளின் மோசமான விளைவுகளைப்பார்த்துவிட்டு, மீண்டும் மரச்செக்குஎண்ணைகளைப் பரிந்துரைக்கின்றனர்.
வீடுகளில், மரச்செக்கில் ஆட்டிய எண்ணைகளை, ஃபில்டர் செய்யாமல், வெயிலில் நன்கு காயவைத்து பயன்படுத்தினர். இயற்கையான செக்குஎண்ணை மிக அடர்த்தியாக, கருநிறத்தில், வாசனையாகவும், கொழகொழப்பாகவும் இருக்கும். இந்த எண்ணைகளில், நலம்பயக்கும் வைட்டமின்கள், புரோடீன்கள், அரிய வகை தாதுக்கள் மற்றும் உயிர், நார்ச்சத்துகள் எல்லாம் நிறைந்திருக்கும்.
சமையலில் வறுக்கவும், பொரிக்கவும் அன்றாடம் பயனாகும் கடலை எண்ணை, உடலில் சேர்ந்த கொழுப்புகளை கரைக்கும் தன்மைகள் மிக்கது.
எண்ணைகளில் உயர்வான, "எண்ணைகளின் அரசி" நல்லெண்ணை.
எல்லா எண்ணைகளும் அவற்றின் விதைகளின் பெயரிலேயே, அழைக்கப்பட்டாலும், எள் எண்ணை மட்டும், நல்லெண்ணை என்று அழைக்கப்படுகிறது.
மரச்செக்கில் உண்டாக்கிய நல்லெண்ணை, உடலில் உள்ள கொழுப்புத்தன்மையைக் குறைத்து, உடலில் கரையும்வண்ணம் உள்ள கொழுப்புகளின் மூலம் உடல் சக்தியை அதிகரித்து, உடல் செல்களின் புதிய உற்பத்தியைத்தூண்டி, நோய்எதிர்ப்பு சக்தி அளித்து, வயோதிகமடைவதை தடுக்கும் ஆற்றல்மிக்க, ஒரு தாவர எண்ணையாகத் திகழ்வதால்தான், "நல்லெண்ணை" என்று எள் எண்ணையை அழைக்கிறார்கள்.
கவலை, மனச்சோர்வு உள்ளிட்ட மனவியாதிகளிலிருந்து, இதய வியாதிகள், தோல் வியாதிகள், சுவாசக்கோளாறுகள், மாதவிலக்கு, மூலம் உள்ளிட்ட அனைத்துவகை உடல் பாதிப்புகளையும் சீராக்கி, உடல்நலம் காக்கும் தன்மைமிக்கது, நல்லெண்ணை.
இதனால்தான் நல்லெண்ணையை, "எண்ணைகளின் அரசி" என்கிறார்கள்.
உடலுக்கு நன்மைகள்செய்யும் நாட்டுச்செக்குகளில் உண்டாக்கிய எண்ணைகளை, விலை சற்றுஅதிகமானாலும்கூட வாங்கி, அன்றாட நிகழ்வுகளுக்குப் பயன்படுத்திவர, தேவையற்ற வைத்திய செலவுகளைக்குறைக்கலாம்.
For more info visit us at http://www.renukachekkuoil.com/latest-update/-/30?utm_source=facebookpage