hands of hope foundation, coimbatore

hands of hope foundation, coimbatore motor insurance

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது. பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது. பக்கத்து வீடும் நம் வீட்டின் ...
03/11/2023

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது. பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது. பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று. எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி. அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும். அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும். எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.
நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும். பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும். பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு. அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு. பாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள். இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது.
ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது. எல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள்.
’ரெண்டு தீக்குச்சி வேண்டும்’
நாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர். அவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள். நூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள். உடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள். சமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள். தீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும்.
அந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு, கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள். சமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள். நள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டு ’என்ன ஆபத்தோ!’ என்று விசாரிக்க வருவார்கள். ’அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம்.
அன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டி ருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு. இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு. அவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.
ஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும்
மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை. பெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும். ஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும். வருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும். இன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும். விருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.
பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும். மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு.
நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால். தோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள்.
பக்கத்து வீட்டு அட்டிகை
அவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு. திருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள். சமையல் எரிவாயு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு. அன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன. கைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது. பெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும்.
இரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது. கிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம். எந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம். ஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம்.
அதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை. வருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள். கரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை. இந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது.
வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும். அக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும். ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு. வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை. வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.
இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை. அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் தகராறு. அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம். அழுகி எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள். பற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது. பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை.

உறவை மேம்படுத்த

*ஒரு புன்னகை
*ஒரு காபி
* ஒரு அன்பான விசாரிப்பு
இன்றே துவங்குவோம்....

சிலர் இன்று திருமண் (நாமம்)வைக்கவோ திருநீறு அணிவதில்லை.முக்கியமா திருமண் வைக்க கடினபடுகிறார்கள் வைஸ்வண குடும்பத்திலே நடக...
08/09/2021

சிலர் இன்று திருமண் (நாமம்)வைக்கவோ திருநீறு அணிவதில்லை.
முக்கியமா திருமண் வைக்க கடினபடுகிறார்கள் வைஸ்வண குடும்பத்திலே நடக்கிறது.
இதற்கு காரணம் அவர்கள் வைத்துக்கொண்டு சென்றால் அருகில் இருப்பர்கள் கேலியாக பார்ப்பார்கள் என்ற எண்ணம்.
நாமமத்தின் அடையாளம் எதும் இல்லா நிலை என்று திரைப்படங்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கி உள்ளது.
ஆம்
திருமண் வைத்தால் எதும் இல்லா நிலையை தான் குறிக்கிறது
கர்மா இல்லா நிலைக்கு கொண்டு போகிறது.
திருநீற்றை அணிவது இந்த பூத உடல் நிலை அல்ல
ஆத்மா நிலையானது என்று குறிப்பிட்டுகிறது.
சரி குங்குமம் தான் வைக்கிறார்களா என்று பார்த்தால்
அதுக்கூட 5 mm அளவு தான் உள்ளது.
#பிராமணர்களை_கேலி_செய்பவர்களே_உங்களுக்காக...!

பிராமணர்கள் இன்று ஒதுக்கப்படுபவர்கள் மட்டுமல்ல மக்களிடையே ஒரு கேலிப் பொருளாகவும் உள்ளனர். அதிலும் குறிப்பாக வைணவ பிராமணர்கள் மிகவும் கேலிக்கு உள்ளாகிறார்கள். ஏன் என்றால் அவர்கள் நெற்றியில் அணிவது நாமம். இன்று ஒருவர் மற்றொறுவரை இழிவு படுத்தவும், தன்னிடமோ வேறொறுவரிடமிருந்தோ ஒரு பொருள் தொலைந்தாலோ அல்லது பரிபோனாலோ அதற்கு அவர்கள் கூறி கேலி செய்வது நாமம் என்றும் கோவிந்தா என்றும். கோவிந்தன் என்ற பெருமாள் தன் நெற்றியில் சூட்டிக்கொண்டதால் கோவிந்தா என்ற பெயரோடு நாமமும் கேலியின் வடிவமாக வந்துவிட்டது. சரி... கேலி செய்பவர்களே உங்களுக்காகச் சொல்லுகிறேன் கேளுங்கள்...நாமத்திற்கு "திருமண்காப்பு" என்ற பெயரும் உண்ட. இந்த நாமத்தை நெற்றியில் அணிவதால் மகாவிஷ்ணுவான பெருமாளின் நேரடி பாதுகாப்பிற்கு நாம் ஆளாகிறோம்.

அதனாலேயே அதற்கு திருமண்"காப்பு" என்று பெயர் வந்தது. அந்த திருமண்காப்பின் வடிவம் உயர்ந்த வசமாக மூன்று கோடுகள் மற்றும் கீழே சிறிய தாமரை போன்ற அமைப்புக்கோடு... இதன் விளக்கம் என்னவென்றால் மூன்று கோடுகளில் வலது இடது கோடுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும் அவை விஷ்ணுவின் இரண்டு பாதங்கள் ஆகும். நடுவில் இருக்கும் கோடு சிகப்பு நிறத்திலோ அல்லது மஞ்சள் நிறத்திலோ இருக்கும் அது ஸ்ரீமகாலட்சுமி ஆவாள், இவர்களை தாங்கியபடி கீழே வெள்ளை நிறத்திலிருக்கும் சிறு கோடு தாமரைப்பூ ஆகும். அதாவது விஷ்ணுவின் பாதங்களும் தாமரைப்பூவில் மகாலட்சுமியும் ஒரு சேர நெற்றியில் இருக்கும்படி அணிந்துகொள்வது திருமண்காப்பு(நாமம்) இவ்வளவு பெருமை வாய்ந்த நாமத்தை இன்று கேலிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள்... கஷ்டம் தீரவும் செல்வம் பெருகவும் பெருமாளை வணங்குகிறோம், ஆனால் அவர் நெற்றியில் இருக்கும் நாமத்தை கேலி செய்கிறோம்...என்ன முட்டாள்தனமான சிந்தனை நமக்கு. நாமத்தை கேலி செய்தால் அது விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் சேர்த்து கேலி செய்ததற்கு சமம். நாமம் நெற்றியில் அணிவது நமக்கு நல்லதே தவிர கெட்டது இல்லை. இதை புரிந்துகொள்ள நமக்கு சரியான அறிவு இல்லை. அப்படியே இருந்தாலும் பொது ஊடகங்கள், பத்திரிகைகள், சினிமாக்கள் போன்ற பெரிய மீடியாக்களில் பிரதானமாக நாமமும் கோவிந்தா என்ற பெயரும் கேலிப் பொருளாக ஆகிவிட்டது. ஏன் பல பிராமணர்கள் கூட இதை கேலி செய்கிறார்களே அதுதான் வேதனை.

ஊடகங்கள், பத்திரிகைகள், சினிமாக்கள் இவைகளில் ஒரு மத கோட்பாடுகளை கேலி கிண்டல் செய்யக்கூடாது என்று சட்டம் உள்ளது. அது அரசின் சட்ட புத்தகத்தில் எழுத்தாகமட்டுமே இருக்கிறது. நாம் நன்றாக கவனிக்க வேண்டும், சினிமாக்கள் மற்றும் பத்திரிக்கைகளில் ஒரு இஸ்லாமிய அல்லது கிருஸ்துவ கோட்பாடுகளையோ, அவர்கள் நடைமுறைகளையோ இவர்கள் கேலி கிண்டல் செய்வது இல்லை. அப்படியே ஏதோ ஒரு இடத்தில் இருந்தாலும் மிகுந்த பிரச்சனைக்குப் பிறகு அது நீக்கப்படுகிறது. நான் அவர்களையும் கேலி செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரு ஒற்றுமை இந்துக்களாகிய நமக்கு ஏன் இல்லை?. நாமம் என்பது வைணவ, பிராமணீயச் சின்னம் மட்டுமல்ல அது இந்துக்களின் சின்னமாகும். அதை நாமே கேலி செய்தால் நம் தாயை நாமே கேலி செய்வதுபோல் ஆகும்.

அதே போலத்தான் கோவிந்தா என்ற பெயரும். அந்த பெயருக்குள்ள மகத்துவம் தெரிந்தால் இப்படி கேலி செய்ய மாட்டார்கள். ஆதரவற்ற அனாதைகளுக்கு இருக்கும் ஒரே சொந்தம் மகாவிஷ்ணு ஆவார். அந்த விஷ்ணுவின் பெயர் தான் கோவிந்தன். ஒருவர் அனாதையாக இறந்தால் அவருக்கு கோவிந்தா கொள்ளி போடு என்று சொல்லுவார்கள். காரணம் , இறந்தவர் அனாதையல்ல கோவிந்தன் என்ற பெயருள்ள விஷ்ணு இவருக்கு தந்தையாகவும் அனைத்து சொந்தமாகவும் இருக்கிறார், அதனால் இறந்தவருக்கு அந்த விஷ்ணுவே கொள்ளி இடுவதற்கு சமம் என்ற பெரிய பெருமை உடையது இந்த கோவிந்தா என்ற பெயர்.

ஆனால் இப்பொழுது இந்த விஷயத்தை சொல்லுவாரும் இல்லை கேட்பாரும் இல்லை. நாம் அனைவரும் கேலி மட்டும் நன்றாகச் செய்கிறோம். உலகத்தில் வாழும் மக்களை திருமண்காப்பு (நாமம்)என்ற நெற்றிப்பொட்டின் மூலமாக காத்து கோவிந்தா என்ற பெயரினால் ஆதரவளிக்கிறார் பெருமாள்(விஷ்ணு). இதையும் தாண்டி ஊடகங்கள், பத்திரிகைகள், சினிமாத்துறையினர்கள் கேலி செய்வார்களேயானால் அவர்களுக்கு பெருமாள் விதித்த விதி என்னவொ.....

போராடுகிறவர்கள் ... பாவம்.. அவர்கள் போராடுகிறார்கள் என்ற அனுதாபத்தை தவிர வேறு எதுவும் எவரிடமிருந்தும் சம்பாதிப்பதில்லை வ...
01/07/2020

போராடுகிறவர்கள் ...

பாவம்.. அவர்கள் போராடுகிறார்கள் என்ற அனுதாபத்தை தவிர வேறு எதுவும் எவரிடமிருந்தும் சம்பாதிப்பதில்லை

வாழ்க்கையின் போராட்டம்... இறுதி மூச்சு வரை தொடர்கிறது

ஆதலினாலேயே (Haho Sirippananda Sampath ) ஹாஹோவாகிய நீங்களும் நானும் இன்னும் பலரும் பணி புரிதலை... நம்மை தீவிரமாக்க வேண்டியுள்ளது.. நாம் நம்மை ஆழப்படுத்த வேண்டி உள்ளது. கைகளை விரித்து வானத்தை விரிவு படுத்த வேண்டியுள்ளது. நம்மிடம் ஏதுமில்லை என்பதை காட்ட வேண்டியுள்ளது..

போராடுபவர்களின் ஆதர்ஷ புருஷன் அலெக்சாண்டர் போல... எடுத்துச் செல்ல ஏதுமில்லை என காட்ட வேண்டியுள்ளது... ஆனால் கொடுத்துச் செல்ல ஆகாயம் போல பரந்த மனம் உள்ளது என காட்ட வேண்டியுள்ளது.

இதுவே (Sivananda Srinivasan) சிவானந்தர்களின் பணி...

ஆனால் மக்கள் வியாபாரிகளைத்தான் நாடுகிறார்கள். .அவர்கள்தாம் மக்களை வசியமாக்குகிறார்கள். பொய்களின் அலங்கார வெளிச்சத்தில் விட்டில் பூச்சிகளாய் போய் விடுகின்றனர்.

உண்மையும் சத்தியமும் தேடுபவர்களுக்கே கூட எளிதில் கிடைப்பதில்லை. அவர்களே அதன் வடிவாய் இருக்கிறார்கள் என்பதை உணர காலம் கரைந்த பின்னர் கூட உணர்வதில்லை... அவனருளால் மட்டுமே அது சாத்தியமாகிறது.

ஆனால் வியாபாரிகள் தம்மிடம் இருக்கும் மோசமான வஸ்துவை கூட அலங்காரம் செய்து அதிக விலைக்கு விற்று விடுகிறார்கள்..

இல்லையெனில் இந்த எளிய மனிதர்கள்தாம் இருப்பில் கரைந்த சிவானந்தர்களை விட்டு தெரசாக்களை கொண்டாடுவார்களா என்ன ?

அதே சமயம் சிவானந்தர்களையும் விவேகானந்தர்களையும் தேடி வந்த நிவேதிதாக்கள் ..... மலர்ந்து மணம் வீசி கரைந்து போனார்கள்.. கரைந்து போனதாலேயே நாம் அவர்களை மறந்தும் போகிறோம்.

வியாபார உலகில் ஒரே ஒரு தெரசா, ஒரே ஒரு ஜீஸஸ்... ஒரே ஒரு முகமது... வியாபாரம் ஒற்றை சாளர முறை...

இருப்பு தன்னையே மண்ணாக்கி விடுதல்... தன்னில் விழும் விதைகளை மரமாக்கி மற்றவருக்கு நிழல் தந்து கனி தந்து கடவுள் போலவே தானும் மறைந்து நின்று மனம் ஆனந்த பரவசம் எய்திடவும்.

ஆதலின் நாம்

போர் ஆடுவோம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என.. போர் ஆடுவோம்

கொரோனாவை விட வேகமாக தொற்று கொள்வோம்.. அதி வேகமாக அனைத்து அனுக்களிலும் பரவுவோம்.. ஆனந்த சிரிப்பாய் வெடித்தெழுவோம்.. தயாராகுங்கள்.. இன்னும் இரு தினங்களே உள்ளன..

நமக்கு முன்னே நடந்து சென்ற சிவானந்தர்களுக்கும், விவேகானந்தர்களுக்கும் சத்குருவிற்கும் நன்றிகள் சமர்பித்திட

கரம் இணைவோம்
உரமிடுவோம்
இருந்த இடத்தில் இருந்த படியே

நிழல்...இப்படித்தான் இதுவிருக்கும் என்று எல்லோரும் நினைக்க, தனக்கென்று ஏதுமில்லை, ஒளியும் தொலைவுமே தன்னைச் செதுக்கும் என...
10/08/2019

நிழல்...
இப்படித்தான் இதுவிருக்கும் என்று எல்லோரும் நினைக்க, தனக்கென்று ஏதுமில்லை, ஒளியும் தொலைவுமே தன்னைச் செதுக்கும் என்றுணர்ந்த தன்னுணரி.

நிழல் வசீகரமானது.

27/01/2019

அரசு பள்ளி ஆசிரியரே வணக்கமுங்க.

நம்ம புள்ளைகள ஏன் அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்புறதில்லீங்க?

நாம நல்லா பாடம் நடத்தறோம்கறதுல நமக்கே சந்தேகம் எழுகிறதா?

12ஆம் வகுப்பு வரை லட்சம் லட்சமா பணம் கட்டி படிக்க வைத்த உங்க புள்ளைகள கவர்மெண்ட் மெடிக்கல் சீட்ல ஏனுங்க சேக்கறீங்க? தனியார் கல்லூரியில் சேக்கறதுதானே நியாயம்!

நீங்க உத்தமர்னா லீவு நாளைக்கும் சம்பளம் வாங்கீட்டு அதுக்கப்பறமா பேப்பர் திருத்த தனியா என்னத்துக்கு கூலி கேக்கறீங்க?

அரசு பள்ளிகளில் படிக்கற குழந்தைகளுக்கு மட்டுமே அரசு மற்றும் அரசுஉதவி பெறும் கல்லூரியில் இடம் தரனும்னு போராட தயாரா?

ஏற்கனவே நான் இட ஒதுக்கீட்டை வாங்கீட்டேன், அதனால எம் புள்ளைகள பொது ஒதுக்கீட்டுல மட்டுமே மேப்படிப்புல, வேலலை சேர்ப்பேன்ற பரந்த மனப்பான்மை இருக்குதா?
இத ஒத்துக்கிறீங்களா?
நம்ம சமுதாயத்திலயும் இருக்க முதல் பட்டதாரிக்கு அதனால விட்டுக் கொடுக்க வேண்டுமல்லவா?

வருஷா வருஷம் திறன் மேம்பாடு பண்ணி நம்ம பள்ளி மாணவர்களுக்கு தனியாரோடு போட்டி போடற அளவுக்கு தயார் பண்றமா? அதப் பண்ணாம நாம வாங்கற காசுக்கு என்ன பெயர்?
பள்ளி மாணவர்களுக்கு பாடத்த முடிக்காமல் பாதியில விட்டதால ஏற்படற பாதிப்புக்கு பொறுப்பு நீங்க தானே?

ஐயா ஆசிறியரே!
பதில் சொல்லுங்க... இல்லன்னா நடயக் கட்டுங்க...

காத்து வரட்டும்.

கல்விய முழுமையாக தனியார் மயமாக்கிடலாம்.
எந்த குழந்தை படிக்குதோ அவருக்கு கட்டணத்தை அரசே கட்டற மாதிரி ஆக்கிடலாம். அரசுக்கு செலவும் கம்மி , எங்க குழந்தைகளுக்கு தரமான கல்வியும் கிடைக்கும்.

#கல்விகாப்போம் #ஜேக்டோஜியோஅநியாயத்தைதடுத்திடுவோம்

12/08/2018
HANDS OF HOPE
14/07/2018

HANDS OF HOPE

Address

266, SAROJINI Street 3, SIDDHAPUDHUR
Coimbatore
641044

Website

Alerts

Be the first to know and let us send you an email when hands of hope foundation, coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share