20/12/2014
ஓர் கல்லூரியில் ஓவிய போட்டி நடைபெற்றது,
அவரவர் ஓர் கருத்தை எடுத்து அதற்கேற்ப குறித்த காலத்தில் ஓவியம் வரையவேண்டும்,..
அனைவரும் ஓவியம் வரையதுவங்கினர்...
குறிப்பிட்ட காலத்தில் மணியடிக்கப்பட்டது,
அனைவரும் ஓவியம் வரைந்துமுடித்திருந்தனர்..
ஓவியத்தை தேர்வுசெய்ய நடுவர் ஒவ்வொருவர் அருகிலும் வந்து
அவர்களது ஓவியத்தை பார்த்து அதன் அர்த்தத்தை புரிந்துகொண்ட அதற்கேற்ப மதிப்பெண் கொடுத்துக்கொண்டு வந்தார்..
அதில் ராமு என்ற மாணவனிடம் அந்த நடுவர் வந்தார்..
அருகில் வந்ததும் ராமுவிற்கு ஒரே நடுக்கம்,
தனது கலை படைப்பு சிறந்ததாக இருக்கவேண்டும்
அதை நடுவர் பாராட்டி கொண்டாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு..
அனால், பெரிய பொட்டு, பெரிய உருவம்
என்ற நடுவர் அம்மையாரை பார்த்ததும் ராமுவிற்கு சிறிது நடுக்கம்..
நடுவர் அம்மையார் ராமுவின் பக்கம் வந்தார்..
ராமுவின் ஓவியத்தை பார்த்தார்.,
அதில் ஆயிரம் வலிகல் கொண்ட பேசும் ஓவியமாக இருந்தது..
நடுவர் அம்மையார் ராமுவை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்...
ராமுவை அணைத்தபடி நடுவர் அம்மையார் சொன்னார்..
எனக்கு திருமணம் ஆகி 10வருடமாக குழந்தை இல்லை அனால் உன்னை நீதான் என் குழந்தை என்று சொல்லிக்கொள்ள வைக்கிறது..
நீ என் குழந்தை....
என்றார்..
இதை சொல்லிவிட்டு நடுவர் அம்மையார் அடுத்த மாணவன் ஓவியத்தை மதிப்பிட நகர்ந்தார்..
ராமு சிறிதுநேரம் அப்படியே நின்றான்..
ராமு கண்களில் கண்ணீர்...
அந்த ஓவியத்தை எடுத்தான்..
அதை அப்படியே சுக்குநூறாக கிழித்தான..
அந்த கிழிக்கப்பட்ட ஓவியத்தை மேலே தூக்கி வீசினான்..
பின்பு கண்களில் கண்ணீருடனும்
முகம் முழுக்க புன்னகையான சிரிப்புடனும் அந்த இடத்தைவிட்டு ராமு வெளியேறினான்..
அவையில் இருந்த அனைவரும் ராமு செயலை
ஒரு பைத்தியகார செயாகவே பார்த்தனர்.,
அத்தனை அழகான ஓவியம் வரைந்து,
அதற்காக கஷ்டப்பட்டு..
சிறந்த ஓவியம் என்று நடுவர் அம்மையாரிடம் பெரிய பாராட்டுகளை வாங்கிவிட்டு
இப்படி பைத்தியம் போல் அந்த ஓவியத்தை கிழித்து வீசுகிரானே இவனுக்கு என்ன ஆயிட்ட்று!!
என்று அனைவரும் அவனை ஒரு பைத்தியமாகவே ராமுவை பார்த்தனர்.
ஆனால் ராமு மட்டும் மிகுந்த தெளிவுடன் கூடிய சந்தோசம் நிறைந்த ரோஜாவை போல
மலர்ந்து அவையை விட்டு மெளனமாக வெளியேறினான்..
விளக்கம்:
நிச்சயமாக இந்த கதையை படித்த உங்களுக்கும் இது புரியாது ?..
இன்னும் சொல்லபோனால் இந்த கதையே புரியாது..
அனால்...
இந்த கதையில் ராமு அவன் கஷ்டப்பட்டு வரைந்து,
அவன் சிறந்த பரிசு வாங்கவேண்டும்
என்று வரைந்த ஓவியத்தை சிறந்த பரிசு வாங்கியவுடன் கிழித்து வீசிவிட்டு சிரிக்கிறானே இது கதைய? என்றால்..
ஆம் அவன் அந்த சிறந்த பாராட்டை பெறவே ராமு அவ்வளவு கஷ்டப்பட்டான்..
அந்த கஷ்டத்திர்க்கான பலன் ராமுவை நடுவர் அம்மையார் கட்டி அணைத்து தனது மகனாக நினைக்கிறேன் என்று சொன்ன அந்த வார்த்தை
அதில் உள்ள அந்த அன்பு ,
அந்த உணர்வு.. ராமுவிற்கு அதுதான் தேவையாக இருந்தது,
அந்த அன்பு மட்டு ராமுவிற்கு போதுமானதாக இருக்கிறது..
எனவேதான் அவனுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு வரைந்து அதன்மூலம் கிடைத்த அவனது உழைப்பை விட அவன் இதையம் அவன் பெற்ற அன்பையே வெளிப்படுத்தியது...
அன்பு பைதியகாரனாக்கும்..
அன்பு தனிமைபடுத்தும்..
-ஆதவன்.சக்தி என்கிற லீபனோன் வரிகள்.