ESI PF Consultant

ESI PF Consultant ESI PF CONSULTANTS ........................................................................................................................................

17/11/2022
07/03/2017

பி.எஃப். ஓய்வூதியர்கள் உயிர் சான்றிதழ் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) திட்ட ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 31 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை முகப்பேர் பி.எஃப். மண்டல ஆணையர் வி.எஸ்.எஸ்.கேசவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் ஓய்வூதியதாரர்கள் தங்களது உயிர் வாழ்நாள் சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, வரும் 31 -ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அம்பத்தூர் மண்டலத்தின்கீழ் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள், ஆதார் சார்ந்த உயிர்வாழ் சான்றிதழை கால நீட்டிப்பு செய்யப்பட்ட தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காகித வடிவில் சமர்ப்பிக்கப்பட்ட உயிர்வாழ் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை ’மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர், ஆர்- 40ஏ1, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலக வளாகம், முகப்பேர், சென்னை-37'என்ற முகவரியிலும், 044 -2635 0080, 2635 0110, 2635 0120 என்ற தொலைபேசி எண்களிலும் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎப் பணத்தை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை...20 FEB 2017UNDER:GENERALபிஎப் என்றாலே ஊழியர்களுக்கான ஓய்வு காலச் ...
20/02/2017

பிஎப் பணத்தை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை...
20 FEB 2017UNDER:GENERAL
பிஎப் என்றாலே ஊழியர்களுக்கான ஓய்வு காலச் சேமிப்பு திட்டம் என்று கூறலாம். நிதி வல்லுநர்கள் எப்போதும் இடையில் பிஎப் பணத்தை எடுக்க பரிந்துரைக்க மாட்டார்கள்.
பிஎப் விதிகளின் படி 12 சதவீதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும், மேலும் இதே அளவிற்கான தொகையை நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். ஒருவர் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்த இரண்டு மாதத்தில் பிஎப் பணத்தை திரும்பப் பெற இயலும்.
இதற்கான படிவங்களை பிஎப் அலுவலகம் அல்லது தான் பணிபுரிந்த நிறுவனத்தில் பூர்த்தி செய்து அளிப்பதன் மூலம் பெற இயலும்.
எனவே பிஎப் பணத்தை திரும்பப்பெறும் போது தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம்.
வரி விலக்கு
நீண்ட கால சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல சேமிப்பு திட்டங்களில் வரி விலக்கை அளிக்கின்றது அரசு. பிஎப் பணத்தை 5 வருடங்களுக்கும் அதிகமாக எடுக்காமல் இருந்தால் மொத்த பிஎப் தொகைக்கும் வரி செலுத்த தேவையில்லை.
இரண்டு மூன்று நிறுவனங்களில் மாற்றம் செய்து பணி புரிந்து வந்தாலும் புதிய நிறுவனத்திற்கு மாறும் போது பழைய பிஎப் கணக்கையே தொடரவும் முடியும். இதற்கு புதிய நிறுவனத்திற்கு நீங்கள் பணி புரிந்த பழைய நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதே போன்று ஊழியர் ஏதேனும் காரணங்களுக்கு வேலையில் இருந்து நீக்கப்பட்டாலும் வரி செலுத்த தேவையில்லை.
5 வருடங்களுக்கு முன்பு பிஎப் பணத்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்..?
ஐந்து வருடத்திற்கு முன்பு பிஎப் பணத்தை திரும்பப் பெறும் போது அந்த ஆண்டு வருமானத்தில் பிஎப் பணத்தை கணக்கு காண்பித்து வரி செலுத்த வேண்டும்.
நிறுவனத்தின் பங்கீட்டிற்கும் சேர்த்து வரி
பிஎப் பணத்தில் தங்களது பங்கீடு மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் பங்கிடு மற்றும் அதன் வட்டிக்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டி வரும்.
பிரிவு 80 சி
பிஎப் பணத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கும் போது அது உங்களது வருமானமாகத் தான் காண்பிக்கப்படும். இதனைப் பிரிவு 80சி-ன் கீழும் காண்பித்து அதன் மூலம் பெறும் வட்டிக்கும் வரி விலக்கு பெற இயலாது. பிஎப் மூலம் பெறும் வட்டி பணம் கூட உங்களுக்குக் கிடைத்த பிற வருவாயாகத் தான் கணக்கிடப்படும்.
டிடிஎஸ்(TDS)
தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடம் பணி புரிந்த பிறகு பிஎப் பணத்திற்கு எந்த வரியும் கிடையாது. இதுவே ஐந்து வருடத்திற்குள் பணத்தை திரும்பப் பெறும் போது பான் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் 30 சதவீதம் வரை டிடிஎஸ் செலுத்த வேண்டி வரும்.
இதுவே பான் எண்ணை 15ஜி/15எச் உடன் சமர்ப்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. இதுவே படிவம் 15ஜி/15எச் சமர்ப்பிக்காமல் பான் எண்ணை மற்றும் சமர்ப்பித்தால் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். படிவம் 15ஜி/15எச் யாருடைய வருமான எல்லாம் வருமான வரி விளம்பிற்குக் குறைவாக இருந்தும் வரி பிடித்தம் செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு அதில் இருந்து விலக்குப் பெற பயன்படுவதாகும்.

01/02/2017
06/01/2017

EPF New format of UAN based ECR efilling - Unified Portal (class & demo)
Online Registration of New Establishment EPFO & ESIC (online new coverage)

Address

POLLACHI
Coimbatore
642006

Telephone

9788115454

Website

Alerts

Be the first to know and let us send you an email when ESI PF Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share