Live Kanyakumari

Directions Website Contact the business

Live Kanyakumari Welcome to Kanyakumari Vlog : Tourist Places In Kanyakumari,Kanyakumari Business Directory,Schools In Kanyakumari,Matriculation Schools In Kanyakumari

Tourist Places In Kanyakumari,Kanyakumari Business Directory,Schools In Kanyakumari,Matriculation Schools In Kanyakumari,Private Schools in Kanyakumari,Theatres in Kanyakumari,Kanyakumari special Events, Kanyakumari Weather, Kanyakumari colleges, Kanyakumari Hostel, Kanyakumari News, Images, Videos, Kanyakumari churches, Temples etc.

குமரி – களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி நவ.12-ல் சாலை மறியல்!கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான 56...
03/11/2026

குமரி – களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி நவ.12-ல் சாலை மறியல்!

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான 56 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மார்த்தாண்டம், தக்கலை, குழித்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் மேலும் பார்வதிபுரம், சுங்கான்கடை,தோட்டியோடு, வில்லுக்குறி, முளகுமூடு, பம்மம், வெட்டுவெந்நி,களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோன்றி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் மக்கள் கடும் துயரங்களை சந்தித்து வருகின்றனர்

இது பற்றி பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான ஆர். செல்லசுவாமி சட்டமன்றத்தில் வலியுறுத்திப் பேசினார். இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் நவம்பர் 12-ம் தேதி காலை 10.30 மணிக்கு தக்கலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் திரளாகப் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

களியக்காவிளை - நாகர்கோவில் சாலை சீரமைப்பு பணி நாளை தொடங்குகிறது♦️சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்...
03/11/2026

களியக்காவிளை - நாகர்கோவில் சாலை சீரமைப்பு பணி நாளை தொடங்குகிறது

♦️சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேஷ் குமார் அறிவித்துள்ளார்.

♦️பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி, தக்கலை, களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கப்படும்.

♦️மேலும், களியக்காவிளை - கன்னியாகுமரி சாலையை முழுமையாக சீரமைக்க ரூ.16 கோடியில் திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சாதனை 🔥  |   |   |   |   |   |   |   |
03/11/2026

சாதனை 🔥

| | | | | | | |

• கன்னியாகுமரி–களியக்காவிளை சாலையை இந்தியாவின் மிகச் சிறந்த பாதுகாப்பான சாலையாக அறிவிக்க வேண்டும் எனச் பொதுமக்கள் நையாண்...
31/10/2026

• கன்னியாகுமரி–களியக்காவிளை சாலையை இந்தியாவின் மிகச் சிறந்த பாதுகாப்பான சாலையாக அறிவிக்க வேண்டும் எனச் பொதுமக்கள் நையாண்டியாகக் கோரியுள்ளனர்.

• இந்தச் சாலையைக் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

• குமரியிலிருந்து களியக்காவிளை வரை எந்தப் பாதிப்புமின்றிப் பயணித்து சென்றடைபவருக்கும் விருது வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

• பல ஆண்டுகளாக இச்சாலையில் பயணிக்கும் கன்னியாகுமரி மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் விருதைப் பகிர்ந்தளிக்க வேண்டும் எனச் சாலையின் அவலநிலையைச் சாடியுள்ளனர்.

31/10/2026
‘இந்த 3 நடிகர்களுக்குதான் அரசியல் புரிதல் இருக்கிறது!’- சீமான்
31/10/2026

‘இந்த 3 நடிகர்களுக்குதான் அரசியல் புரிதல் இருக்கிறது!’- சீமான்

30/10/2026

💥 தென்காசியில் இனி வேட்டையனின் வேட்டை ஆரம்பம்!- தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் ஸ்டாலின் IPS ப...
29/10/2026

💥 தென்காசியில் இனி வேட்டையனின் வேட்டை ஆரம்பம்!

- தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் ஸ்டாலின் IPS பொறுப்பேற்க உள்ள செய்தி தென்காசி மக்களுக்கு மட்டுமல்ல, கன்னியாகுமரி மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

- குமரியில் சுமார் 20 மாதங்கள் அவர் பணியாற்றிய காலம் மறக்க முடியாதது.

- கனிமவள கொள்ளை தடுப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைத்தது, ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை என ஒவ்வொரு விஷயத்திலும் தனி முத்திரை பதித்தவர்.

- அவர் இடமாற்றம் செய்யப்பட்டபோது குமரி மக்கள் உண்மையிலேயே வருத்தப்பட்டார்கள்.

- இப்போது அண்டை மாவட்டமான தென்காசிக்கு வருவது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

- இவரிடம் இருக்கும் மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா? பதவியின் கர்வம் இல்லாத எளிமை.

- பொதுவாக ஒரு SP-யை பார்க்கவே மக்கள் தயங்குவார்கள். ஆனால் இவரை ஒருமுறை சந்தித்தாலே போதும், நம்முடன் படித்த பள்ளி நண்பனை போல, நம் வீட்டு சகோதரனை போல உணர வைத்து விடுவார்.

- இரவு என்றாலும் பகல் என்றாலும் ஒரு சாமானியன் அனுப்பும் குறுஞ்செய்திக்கு கூட பதில் அளித்து நடவடிக்கை எடுக்கும் மனிதர்.

- எந்த சிபாரிசும் இல்லாமல் நேரடியாக சென்று நீதி கேட்கலாம் என்ற நம்பிக்கையை குமரியில் உருவாக்கியவர்.

- அதிகாரத்தில் இருப்பது பெரிதல்ல, அந்த அதிகாரத்தை கொண்டு சாமானியனின் குரலுக்கு செவி சாய்ப்பதுதான் பெரிது. அதை செய்து காட்டியவர்.

- பாஸ்போர்ட் விசாரணை, NOC என எந்த பணிக்கும் லஞ்சம் இல்லாமல், அலைச்சல் இல்லாமல், பயம் இல்லாமல் காவல் நிலையத்தை அணுகும் நிலையை உருவாக்க வேண்டும்.

- காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே நட்பு பாலமாக இருந்து அதை சாதித்து காட்டியவர்.

- கன்னியாகுமரியில் மக்கள் மனதில் இடம் பிடித்தது போல, தென்காசியிலும் மக்களின் நம்பிக்கையை பெற்று சிறப்பாக பணியாற்றுவார் என்பது உறுதி.

- தென்காசி மக்களே, உங்களுக்கு ஒரு நல்ல தோழன் கிடைத்திருக்கிறான், குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் வந்திருக்கிறது.

- பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் ஸ்டாலின் IPS ஸார்!

''இந்தியாவிலேயே மோசமான ஆட்சி.'' - அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்   |
29/10/2026

''இந்தியாவிலேயே மோசமான ஆட்சி.'' - அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் |

Address

Kanyakumari

Alerts

Be the first to know and let us send you an email when Live Kanyakumari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Live Kanyakumari:

Shortcuts

Share

Nearby businesses