Sri kanapathi jothidam karaikudi

Sri kanapathi jothidam karaikudi welcome. your problems are solved

11/09/2023

9952106241 jothidar kannan

01/09/2022

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
**********************

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங்,
40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

• 10 கோண் = 1 நுண்ணணு

• 10 நுண்ணணு = 1 அணு

• 8 அணு = 1 கதிர்த்துகள்

• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு

• 8 துசும்பு = 1 மயிர்நுனி

• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்

• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு

• 8 சிறு கடுகு = 1 எள்

• 8 எள் = 1 நெல்

• 8 நெல் = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம்

• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

. 4 காதம் = 1 யோசனை

• வழியளவை

• 8 தோரை(நெல்) = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்

• 4 குரோசம் = 1 யோசனை

• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்

1 ச.மீ - 10 .764 ச அடி

2400 ச.அடி - 1 மனை

24 மனை - 1 காணி

1 காணி - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம் - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்

100 சென்ட் - 1 ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்

2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள்

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர் = 43560 சதுர அடி

27/05/2022

ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக ஒரு பெரியவர் அமர்ந்திருந்த டேபிள் அருகே குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார்.....

மதிய உணவுக்கு எவ்வளவு பில் போடுவீர்கள்...

உரிமையாளர் சொன்னார்...
பொரியல், கூட்டு குழம்புடன் ரசம் மற்றும் தயிர் 100,
தயிர் இல்லாமல் 80 ரூபாய்.

கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 20 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினார்...

இதுவே என் கையில் உள்ளது..

இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க....

வெறும் சாப்பாடுனாலும் பரவாயில்லை...

மிகுந்த பசி.

நேற்று முதல் எதுவும் சாப்பிட வில்லை
என்று சொல்லத் தயங்கும் அவரது வார்த்தைகள்.
அவரது தொண்டையோ நடுங்குகிறது....

ஹோட்டல் உரிமையாளர் குழம்போடு... அனைத்தையும் அவருக்கு பரிமாரினார்.

அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றேன்....

அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெலிதாக கசிந்தன...

நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்..?

அந்த வார்த்தையைக் கேட்ட உரிமையாளரைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டு சொன்னார்...

எனது கடந்த கால வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்....

எனக்கு மூன்று குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண்.....

மூவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்....

நான் சம்பாதித்த ஒவ்வொரு பைசாவையும் அவர்களின் உயர்வுக்காக செலவழித்தேன். அதற்காக என் இளமையையும், 28 ஆண்டுகால பௌதிக வாழ்க்கையையும் இழந்து புலம் பெயர்ந்தேன்...

எல்லாவற்றுக்கும் மேலாக என் மனைவி என்னைத் முதுமையில் தனியே விட்டுவிட்டு மேலே போய்விட்டாள்....

சொத்து பிரிவினை செய்ய ஆரம்பித்ததில் இருந்து என் மகன்கள், மகள்கள் என்னைத் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்.

நான் அவர்களுக்குச் சுமையானதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தேன்.

மெல்ல மெல்ல என்னைத் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்....

எனக்கு வயதாகிவிட்டதல்லவா...

குறைந்தபட்சம் என் வயதிற்காகவாவது மதிப்பு தரக்கூடாதா?

அவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகு தான் நான் இரவு உணவிற்கு செல்வேன், அப்படியும், அப்போதும் எதற்காவது திட்டுவதும், கூச்சலிடுவதும் தவற வில்லை, சாப்பாடு கண்ணீரும் உப்பும் கலந்திருந்தது.

பேரக் குழந்தைகள் என்னிடம் பேசுவதே இல்லை. அப்படி பேசுவதை பார்த்தால் அம்மா அப்பா அடித்து விடுவார்களோ என்ற பயத்தில்...

இந்த வேதனையடுப்பில் அங்கு எப்படி வாழ முடியும்..

இரவும் பகலும் வியர்வை சிந்தி, நல்ல தூக்கமின்றி உழைத்து, வயிற்றுக்குகூட விரும்பியதை சாப்பிடாமல், அவளும் நானும் சேர்த்த பணத்தில் வாங்கிய இந்த வீடு... எல்லாம் இருந்தும் நான் இப்போது தெருவில்...

ஆனால் நான் என்ன செய்வது? மருமகளின் தங்கத்தை திருடிவிட்ட தாக - சாக்குப்போக்கில்- திருடனாக முத்திரை குத்தப்பட்டேன்... மகன் கோபமடைந்தான், நல்லவேலை கை நீட்ட வில்லை. அந்த பாவத்தை அவன் செய்யவில்லை.

அது என் அதிர்ஷ்டம். அங்கேயே நான் இருந்து இருந்தால் அது நிகழ்ந்து இருந்தாலும் இருக்கலாம்,

இப்படியாக தன் பேச்சை நிறுத்திக் கொண்ட முதியவர்,

சாப்பாட்டின் நடுவில் எழுந்தார்..
உரிமையாளர் முன் 20 ரூபாய் தாளை எடுத்து நீட்டினார்..

ஆனால் உரிமையாளர், "வேண்டாம், பையில் வையுங்கள், இருக்கட்டும்....

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம்...

நீங்கள் எப்போதும் மதிய உணவு சாப்பிடலாம்" என்றார்

ஆனால் அந்த மனிதர் அந்த 20 ரூபாயை அங்கேயே அவர் மேஜை மீது வைத்துவிட்டு....

உங்கள் உதவிக்கு மிக்க மகிழ்ச்சி....
என்னை பற்றி என்ன நினைக்கிறாய்...?
சுயமரியாதை என்னை விட்டு என்றும் விலகாது, வருகிறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு சிறு துணிமூட்டையையும், கைத்தடியையும் எடுத்துக்கொண்டு திக்கு தெரியாத இடம் நோக்கி மெல்ல கிளம்பினானர்...

அந்த மனிதர் என் மனதில் ஏற்படுத்திய வலி இன்று வரை ஆறவில்லை.

அதனால்தான் *"ஒவ்வொரு துளிருமே கட்டாயம் ஒரு நாள் பழுத்து சருகாகும்"* என்று கூறப்படுகிறது.

பழுத்த சருகுபோன்ற பெரியவர்களை கண் போல் காக்க வேண்டும்.

என்றாவது நமக்கு இப்படி ஒரு நாள் வந்தால்..???
=======================
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை நீங்கள் பகிர விரும்புபவர்களுக்கு பகிருங்கள்..

யாரேனும் ஒருவர் மனம் மாறினால் *போதும்*...

மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும் நண்பர்களே...

Address

Ashock Tea Kadai Near South Street Karaikudi
Karaikudi
630001

Telephone

+919486710523

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri kanapathi jothidam karaikudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri kanapathi jothidam karaikudi:

Share