03/09/2020
வெள்ளிக்கிழமை நமது குகன் நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக நடக்கவிருக்கும் "FRONTLINERS FORUM" நிகழ்ச்சியில் இதயம் V.R. முத்து அவர்கள் கலந்துகொள்ள உள்ளார். அனைவரும் பங்குகொண்டு வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும். இவரை பற்றிய குறிப்பு உங்களுக்காக
மனிதமும், புனிதமும் இணைந்து மாட்சிமையும், ஆளுமையும் கலந்து ஒழுக்கமும், உயர்வும் ஒன்று சேர்ந்து ஒரு தலைவர் இருக்கக் கூடுமோ என்ற கேள்விக்கு விடைதான் நமது மாவட்ட ஆளுநர் 2022 - 2023.
எளிமைக்கு ஒரு எடுத்துக்காட்டாய், தலைமைக்கு ஒரு பாடமாய் விளங்கிய பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதை மண்ணில் பிறந்தவர்.
பாரம்பரியமிக்க வி.வி.வி. வணிகக் குடும்பத்தில் தோன்றிய இவர் B.Com., (Hons) பட்டமேற்படிப்பை மும்பையில் முடித்து தனது குடும்பத் தொழிலான நல்லெண்ணெய் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்தி இன்று பார் சிறக்க வெற்றி கோலோச்சும் இதயம் எனும் வணிக முத்திரையை நிலைநாட்டியவர்.
ஒன்றரை மில்லியன் வாடிக்கையாளர்களின் இதயத்திற்குள் இதயம். 4 லட்சம் இல்லங்களில் மந்த்ரா ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவர் விருதுநகர் ரோட்டரி சங்கத்தில் இணைந்து 37 ஆண்டுகளாக ரோட்டரி சேவையில் தன்னை அர்ப்பணித்து வருபவர். ரோட்டரி மாவட்டம் 3212 இன் முதன்மை கொடையாளர் (AKS). ரோட்டரி அறக்கட்டளைக்காக இவர் இதுவரை அளித்த நன்கொடை 2 லட்சத்து 70 ஆயிரம் டாலர் ஆகும்.
தனது சங்கத்தின் பற்பல சேவை திட்டங்களை ஆதரித்து வருகிறார் அவற்றில் சில முக்கியமானவை...
19 ஆண்டுகளாக விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் திட்டம்
19 ஆண்டுகளாக காரைக்குடி சங்கத்தின் மூலமாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டும் திட்டம்
19 ஆண்டுகளாக மாணவர்களுக்கான கண் பரிசோதனை திட்டம்
கோல்டன் ஹார்ட் திட்டம்
செயற்கை கால் வழங்கும் திட்டம்
69 மாதங்களாக ஆசிரியைகளுக்கான பயிற்சி Teach திட்டம்
65 மாதங்களாக மாணாக்கர்களுக்கு பயிற்சி திட்டம்
26 ஆண்டுகளாக ஒய்ஸ்மென் சங்கத்துடன் இணைந்து மாணாக்கர்களுக்கான நன்நெறி திட்டம்
மாநில நாட்டியாஞ்சலி நடன போட்டி.
இவை அனைத்தும் இவரது சமுதாய அக்கறையின் பிரதிபலிப்பு.
இவர் நமது மாவட்டத்தின் உதவி ஆளுநராகவும், பல ஆண்டுகளில் மாவட்ட கருத்தரங்குகளின் தலைவராகவும் சிறப்பாக பொறுப்பேற்று செயல்பட்டவர்.
கேட்டார் பிணிக்கும் தகையவாய்ப் பேச்சாற்றல் மிக்கவர். பேசும் தலைமை எனும் ஊடக நிகழ்ச்சியில் இவர் அளித்த தமிழக மக்களிடையே மிகவும் பிரசித்தம். உன்னால் முடியும் விஜய் டிவி நிகழ்ச்சிகள் நீயா, நானா கோபிநாத் அவர்களுக்கு அளித்த பேட்டியில் இவரது கருத்துக்கள் மிகுந்த அளவில் பாராட்டுப் பெற்றது.
இவரது பன்முக நிர்வாகத் திறமைக்கு இவர் பெற்ற விருதுகளை சாட்சி. அவற்றில் சில...
இந்தியன் ஜேசிஸ் வழங்கிய கமல் பத்ரா விருது
தஞ்சாவூர் தொழில்துறைச் சங்கம் வழங்கிய Business Man of the Year 2018 விருது
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வழங்கிய பாரத ரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது மற்றும் சமீபத்தில் International Economic University வழங்கிய Doctor of Letters பட்டம் ஆகியன ஆகும்.
இவர் மிக தேர்ந்த ஒரு பயிற்சியாளர் இவர் நடத்திய நிர்வாக பயிற்சி Largest Marketing Lesson... அதிக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி என கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றது. இத்தனை பெருமைக்கும், பாராட்டுக்கும் உரியவர், எல்லோராலும் அண்ணாச்சி என அன்போடு அழைக்கப்படும், பண்பாளர்... அன்பாளர் மாவட்டத்தில் அனைத்து ரோட்டரி உறுப்பினர்களின் இதயத்திற்கு இதமான சீர்மிகு தலைவர் இதோ
Rtn. DGN. இதயம் V.R. முத்து