South India Business Chamber

South India Business Chamber Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from South India Business Chamber, Business service, Guruji marketing, Krishnagiri.

25/02/2025
*ஸ்ரீஸ்ரீ சுயம்பு அன்னபூரணி உடனுறை தான்தோன்றி மங்களேஸ்வரர் கோவில்*தல வரலாறு ஒரு தம்பதிகள்  கிருஷ்ணகிரியில் ஆங்கில பள்ளி ...
25/02/2025

*ஸ்ரீஸ்ரீ சுயம்பு அன்னபூரணி உடனுறை தான்தோன்றி மங்களேஸ்வரர் கோவில்*

தல வரலாறு

ஒரு தம்பதிகள் கிருஷ்ணகிரியில் ஆங்கில பள்ளி பாட புத்தகங்களை விற்றும் கொண்டு வந்தனர்.

அவர்களும் பள்ளி ஒன்றை துவக்க ஆசைப்பட்டு சென்னை நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை மேம்பாலம் அருகில் வாங்கி போட்டு இருந்த இடத்தில் பள்ளி ஒன்றை கட்ட விரும்பி வாஸ்து பூஜை செய்ய முயன்ற போது அந்த இடத்துக்கு ஈசானிய மூளை பூஜைக்கு ஏற்ற இடமாக இல்லாததால் வேறு எங்காவது பூஜை செய்ய யோசித்து கொண்டு இருந்த நேரத்தில் இவர்களுக்கு இந்த இடத்தை விற்ற நபர் மீதம் வைத்துள்ள இடத்தில் ஒரு அரச மரமும் வேப்ப மரமும் இருந்ததைக் காட்டி அங்கு பூஜை செய்யுங்கள் பிறகு பள்ளிக்கு கட்டிட வேலையை துவக்குங்கள் என்று அவர் கூற...

மேலும் அவரே தொடர்ந்து அந்த மரத்தை சாதாரணமாக எண்ணி விடாதீர்கள் அந்த மரத்திற்கு பெரிய சரித்திரமே உள்ளது என்று கூறி அதை பற்றி விளக்கினார்.

இந்த இடத்தில் உரிமையாளராக நான் இப்போது இருந்தாலும் எனக்கு முன்பாக இந்த வீடு இந்த இடம் அனைத்தும் ஒரு முகமதியருக்கு சொந்தமானது.

அவர் வீட்டுக்கு இந்த மரத்தின் பக்கத்திலேயே அவர்களின் வீட்டிற்கு வாசல் வழி இருந்தது.
அப்போது இந்த அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்து வளர்ந்து வந்துள்ளது அவர் பாதையை வழிமறிக்க அந்த முகமதியர் இந்த மரங்களை வெட்டி வீசினார். ஆனால் வெட்டப்பட்ட அந்த மரங்களோ வெகு விரைவாக மேலும் அடர்ந்து படர்ந்து வளர்ந்தது.
இதனைத் தொடர்ந்து அவரும் பலமுறை அந்த மரங்களை வெட்டி வீசி உள்ளார்.

ஆனால் மீண்டும் மீண்டும் முன்பை விட மிக வேகமாக மரங்கள் வளர்ந்தன.

இவர் சலிப்புற்று...

அவர்களின் மூத்தோர்களிடம் இதைப் பற்றி கூற அவர்களும் மரத்தின் அடியில் வேர் இருந்தால் அது வர்றதானே செய்யும்... எனவே அந்த வேரை அடியோடு எடுத்து விடு என்று அறிவுரை கூறினார்கள்.

அவரும் ஆழமாக குடிபறித்து அந்த வேர்களை அடியோடு வெளியே எடுத்துத்து வீசி மேலும் மரம் வளராமல் இருக்க ஆசிட் போன்ற திரவங்களை பல லிட்டர்களை அந்த இடத்தில் ஊற்றி மண்ணை மூடினார்.

ஆனால் என்ன அதிசயமோ...!? ஆச்சரியமோ...!? அந்த மரம் இதற்கு முன்னால் வளர்ந்ததை காட்டிலும் மிக வேகமாக பூமியை கிழித்துக்கொண்டு அக்ரோஷமாக இரண்டும் சேர்ந்து வளர்ந்தது வந்தது. இதைக் கண்டவர் அவர் பெரியவர்களிடம் கூற

அவர்களும் அங்கு ஏதோ ஒரு வித்தியாசமான சக்தி உள்ளது நீயும் உன்னுடைய வீட்டை விற்க வேண்டும் என்று எண்ணி உள்ளாய் எனவே நீ வேகமாக அந்த வீட்டை விற்று விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறி விடு என்று கூறி இன்று நமக்கு பள்ளி நிலத்தை விற்றவர்களுக்கு அதையும் விற்று விட்டார்.
அந்த மரத்திற்கு தான் இப்போது பூஜை செய்து இங்கு பள்ளி வேலையை துவக்க சொன்னார்.
அந்த மரத்தின் அருகே சென்று பார்த்து அந்த இரு மரங்களுக்கும் இதுவரை யாரும் திருமணம் செய்து வைக்கவில்லை என்று அறிந்து... அருமையாக அந்த இரு மரத்திற்கும் திருமணம் செய்து தடபுடல் விருந்து வைத்து பள்ளியின் வேலையை துவக்கினார்கள்.
பிறகு ஒரு வீடு அமைத்துக் கொள்ள அந்த இடத்தையும் வாங்கிக் கொண்டார்கள்.
இதன் பிறகு ஒரு நாள்...

ஒரு நாள் அந்த இடத்தில் உரிமையாளர் வீட்டை விட்டு வெளியே வராமல் மௌன விரதம் இருந்த நாள் அது.

அப்போது நெடுஞ்சாலை ஒட்டி... பள்ளிக்கு அருகே வீடு கட்டுவதற்காக வாங்கி வைத்திருந்த இடத்தின் அருகில் வசிப்பவர்... யாரோ ஒருவர் வந்து தங்களை அழைப்பதாக கைபேசியில் கூறினார் .

அப்போது அந்த இடத்தின் உரிமையாளர் அமைதியாக இருக்க வேண்டும் என்று அந்த நாளை ஒதுக்கி இருந்ததால் அவர் மனைவியிடம் தொலைபேசியை கொடுத்து யார் என்று விசாரிக்கச் சொன்னார். மறுமுறையில் இந்த இடத்தின் உரிமையாளரை
இங்கு வரச் சொல்கிறார், என்று தொலைபேசியில் பேசியவர் சொன்னார். அவர் வரமாட்டார் என்று பலமுறை கூறியும் மீண்டும்... மீண்டும்... தொலைபேசி வந்து கொண்டே இருந்தது.
வர சொல்லி..

அந்த இடத்தில் உரிமையாளரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு யார் வந்திருப்பது என கேட்டார்.

மறுமுனையில்... வந்திருப்பவர் யார் என்று சொல்லவில்லை உங்களை உடனடியாக, இப்போதே வரச் சொன்னார் என்று கூறினார்.

அந்த இடத்தில் உரிமையாளருக்கோ அமைதியாக இருக்க வேண்டிய நாளில் யார் இப்படி நம்மிடம் வம்பு வளர்ப்பது என்று கோபப்பட்டு கொண்டே அங்கு சென்றார்.

இங்கு தொலைபேசியில் பேசிய வரை அணுகி...
யார் என்னை வரச் சொன்னது என்று கேட்க அவரும் ஒருவரை கை காட்ட அவரைப் பார்த்தது தான் தாமதம்.

மிக மிகக் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு கடுமையாக இந்த இடம் உங்களது தானா...?

இங்கு யார் இருக்கிறார்கள் தெரியுமா...? இந்த இடம்
இப்படி புதர் மண்டி கிடைக்கின்றது.
என்னைப் பார்த்து கோபமாக சத்தம் போட்டார்.

நானும் எப்போதும் எதிரில் நிலையில் யார் எப்படி உள்ளார்களோ? அப்படியே நானும் இரண்டு மடங்காக மாறி விடுவேன்.

ஆனால் அன்று மனதளவில் கழுத்து வரை மட்டுமே கோபம் வந்தது. அதையும் வெளிக்காட்ட,கோபப்பட முடியவில்லை.

ஆனால்

மீண்டும் புதிதாக வந்தவர் இந்த இடத்தில் அம்மையும் அப்பனும் உள்ளார்கள் இந்த இடத்தை இப்படி வைத்துள்ளீர்களே...

உடனடியாக இந்த இடத்தை எல்லாம் சுத்தம் செய்யுங்கள் என்று கூறினார்.

புதிதாக வந்தவர் சொன்னதில் எனக்கு முழு ஈடுபாடு இல்லாததால் நேரம் பதினொன்றை... பன்னிரண்டு ஆகின்றது இவ்வளவு நேரத்திற்கு எந்த ஆட்களும் வர மாட்டார்கள் என்று கூறினேன்.

ஆனாலும்
அந்த இடத்தை... ஏரியாவை சார்ந்த ஒருவர்... அவர்களுக்கு போன் செய்தால் வருவார்கள் என்று கூறினார்கள்.

இவ்வளவு நேரத்துக்கு பிறகு எந்த ஆட்களும் வர மாட்டார்கள் என்று திடகாத்திரமாக நம்பி சரி அழைத்து பாருங்கள் வரட்டும் பார்க்கலாம் என்று கூற..

அவர் பேசிய பத்தாது நிமிடத்தில் கடப்பாரை மம்முட்டியோடு இருவர் அங்கு வந்து நின்றனர்.

இடத்தின் உரிமையாளரால் நம்ப முடியவில்லை. இவ்வளவு உடனடியாக ஆட்கள் வந்தது.

இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.

அங்கு புதிதாக வந்தவர் அந்த இடத்தில்...
அந்த வேப்பன் அரச மரங்களைச் சுற்றியுள்ள மூல் செடிகளை
எல்லாம் வெட்டி சுத்தப்படுத்துங்கள் என்று மிகவும் அதிகாரமாக ஆணையிட்டார்.

அந்த இடத்தின் சொந்தக்காரோ யாரோ ஒரு பைத்தியத்திடம் மாட்டிக் கொண்டோம் என்று நினைத்து ஆனால் அதை வெளி கட்டாமல் அமைதியுடன் இருந்தார் .

பிறகு அந்த இடம் அனைத்தும் சுத்தமாகிவிட்ட பிறகு அங்கு மேடாக உள்ள பகுதி எல்லாம் ஒரு அடி ஆழம் தோண்டி பாருங்கள் இங்கு தோண்டி பாருங்கள் என்று ஆணையிட்டுக் கொண்டே...

அங்குமிங்கும் தேடிக் கொண்டு இருந்தது... அவருடைய கண்கள்.

சிறிது நேரத்துக்கு பிறகு அங்கு ஒரு சிறிய ஒன்றை ஜான் உயரத்தில் ஒரு கல் கிடைக்க அதை தன் நெஞ்சார அனைத்துக் கொண்டு அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டு அம்மா வந்து விட்டார்கள் என்று மகிழ்ச்சியாக கூறினார்.

அப்போது...

( என்னை அழைத்து வந்திருப்பது அன்னபூரணி என்றும் உனக்கு வாழ்விலே எந்த கஷ்டம் வந்தாலும் அன்னத்திற்காக அதாவது சாப்பாட்டிற்காக எந்த கஷ்டமும் வராது என்று கூறினார் )

அந்த மகிழ்ச்சியிலேயே அங்கு தேடுங்கள் இங்கு பாருங்கள் என்று ஆர்ப்பரித்தார்.

சிறிது நேரத்தில் முன்பு கிடைத்த இடத்திலேயே...

முன்பைவிட சற்று பெரிதாக ஒன்னேகால் அடி உயரமுள்ள ஒரு கல் கிடைக்கவே அதை தனது நெஞ்சோடு அனைத்து , அம்மா என்று சொன்ன அந்த கல்லை மரத்தடியில் வைத்து விட்டு புதிதாக கிடைத்த ஒரு கல்லை எடுத்து வைத்துக் கொண்டு அப்பா அப்பா என்று கூறி நெஞ்சிலே அனைத்துக் கொண்டு மாலை... மாலையாக கண்ணீர் பெருக்கெடுத்து வடித்தார்.

எனது அப்பன் கிடைத்துவிட்டார் உங்களை நான் இப்படியா காண்பது என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அப்பா... அம்மா... என்று சொல்லி சொல்லி கண்ணீர் வடித்தார்.

பிறகு அம்மா அப்பா என்று சொல்லக்கூடிய இரண்டு கற்களையும் அங்கிருந்த அரசமரம், வேப்ப மரத்துக்கு அடியில் வைத்து அதையே உற்று நோக்கிய வாரு இருந்த அவர் என்னை நோக்கி உடனடியாக இதற்கு பூஜை செய்யுங்கள் அதற்குரியவற்றை வாங்கி வாருங்கள் என்று கட்டளை யிட்டார்.

அந்த இடத்தில் உரிமையாளர் நன்றாக யாரோ பைத்தியத்திடம் மாட்டிக் கொண்டதாக நினைத்கொண்டு பூஜை பொருட்கள் வாங்க இரண்டு கிலோமீட்டர் செல்ல வேண்டும்.

நீங்கள் நினைப்பதுபோல் உடனடியாக வாங்கி வர முடியாது என்று கூறிக் கொண்டிருக்கையில் அந்த இடத்தின் உரிமையாளரின் மனைவி கட்டைப்பையில் ஏதோ வைத்துக் கொண்டு அங்கு வந்து நின்றார்.

அவரைப் பார்த்தவுடன் இதோ பூஜை பொருட்கள் வந்து விட்டன.

பூஜை செய்யுங்கள் என்று ஆணையிட்டார்.

இடத்தின் உரிமையாளருக்கோ ஆச்சரியத்தோடு...

தன் மனைவியை பார்த்து எதற்காக இங்கு வந்தாய்... அந்த பையில் என்ன உள்ளது என்று கேட்டார் உடனே அவர் மனைவி சிவன் கோவிலுக்கு செல்ல வந்தேன். உங்களையும் அழைத்து போக வந்தேன் இந்தப் பையில் கோயிலுக்கு உரிய பூஜை சாமான்கள் உள்ளது என்று கூறினார்.

அந்த இடத்தின் உரிமையாளர் அந்தப் பையில் பூஜை பொருட்கள் தான் உள்ளது என்பதை அங்கு வந்த அந்த புதிய நபர் எப்படி கண்டுபிடித்தார் என்று நினைத்து ஆச்சரியப்பட்டு அதிசயப்பட்டு போனார்.

மலைத்து நின்றார்.

பிறகு ஒரு வழியாக தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு அங்குள்ள இரண்டு கற்சிலைகளுக்கும் பூஜை செய்தார் அவரும் அவர் மனைவியும்.
அப்போது அவர் இங்கு வந்திருப்பவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை இது சுயம்பு அன்னபூரணி என்றும் இவர் தான் தோன்றி மங்கலீஸ்வரர் என்றும் கூறினார் உங்களுக்கு வாழ்க்கையில் எந்த கஷ்டம் வருகிறது என்று எனக்கு தெரியாது ஆனால் அன்னத்திற்கு சாப்பாட்டிற்கு கஷ்டப்பட மாட்டீர்கள். அதே நேரத்தில் உங்கள் வீட்டில் வெகுவிரைவில் மங்கள காரியம் ஒன்று நடக்கும் என்று கூறினார்.

பிறகு அந்த புதிதாக வந்த நபர் அங்கிருந்த அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் சுற்றிவர எண்ணெயும் அழைத்தார்.

எத்தனை முறை சுற்றி இருப்பார்கள் என்று அவருக்கு தெரியாது ஆனால் கடைசி சுற்றில் அங்கிருந்து ஒன்றை காண்பித்தார் அங்கு அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய ஆனந்த வயப்பட ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டார்.

ஆம் அவர் அங்கு கண்ட காட்சி ஒரு பெரிய அரச மரத்தின் ஓர் கிளை தன்னுடைய 5 அடி உயரத்தில் இருந்து வந்து ஒரு வேப்ப மர கிளையை அணைத்துக் கொண்டு மீண்டும் தனக்குள்ளே சென்று விட்டது.

ஒரு மரத்தில் கிளை என வந்தால் அது பூமிக்குள்ளேயோ அல்லது சூரிய ஒளி பகுதியையோ அல்லது மேலேயோ பக்கவாட்டமாக தான் செல்ல வேண்டும்.

ஆனால் இங்கு ஒரு கிளை வந்து வேப்ப மரத்துடைய கிளையை அணைத்துக் கொண்டு மீண்டும் தனக்குள்ளேயே ஐக்கியமாகி இருந்தது.

இதை பார்த்து அதிசயத்து அங்கிருந்தவர்களுக்கும் புதிதாக வந்த நண்பர்களுக்கும் அதை காண்பித்து தான் ஆச்சரியப்பட்டதை போலவே அவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

புதிதாக வந்தவர்களில் ஒருவர் இவற்றைப் பற்றி யார் உனக்கு சொன்னது... என்று கேட்க...

அப்போதுதான் ( ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கும்)
அந்த புதிதாக வந்தவர் அங்கு எங்கும் காணப்படவில்லை.

அதிசயத்த அந்த இடத்தின் சொந்தக்காரர் மலைத்துப் போய் அங்கிருந்து இருந்தவர்களிடம் ஆளுக்கு ஒரு சாலையாக ஊர் முழுக்க தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவே இல்லை.

அந்த இடத்தின் உரிமையாளர் தன் மனதில் புரியாத போது அவர் கண் முன்னே இருந்தார் அவரைப் பற்றிய முழுமையாக புரிந்த போது அவர் மறந்து விட்டார்.

அடுத்த நாள் சேலத்தில் அரிசி பாளையத்தில் மாரியம்மன் க்கு சேவை செய்து வரும் அர்ச்சகரை அழைத்து இதைப்பற்றி கூறினார்.
அவர் இங்கு வந்து அனைத்தையும் பார்த்து...

இங்கு வந்தது ஒரு சித்தர் தான் என்றும் இங்கு வந்து அருள் புரிந்திருக்கும் சுயம்பு ஸ்ரீ ஸ்ரீ அன்னபூரணி உடனுறை தான் தோன்றி மங்களேஸ்வரர் எனும் அம்மையப்பனுக்கு நீங்கள் பூஜை செய்து வாருங்கள் உங்களுக்கு யாருக்கும் கிடைக்காத பாக்கியம் கிடைத்துள்ளது எனவே இவரை தொடர்ந்து பூஜை செய்து வாருங்கள் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் நலமாக இருப்பார்கள் என்று கூறினார்.அதே நேரத்தில் அந்த ஆணோ பெண்ணோ அந்த மரங்களுக்கு தாலி கட்டினால் அவர்களுக்கு சீக்கிரமாகவே விவாகம் நடக்கும்.

இந்த சுயம்பு ஸ்ரீ ஸ்ரீ அன்னபூரணி உடன் உறை தான்தோன்றி மங்கடேஸ்வரரை இடம் நல்லதை வேண்டிக் கொண்டால் கட்டாயம் நடக்கும் என்று கூறி அந்த சுயம்பு விக்கிரகங்களை முறைப்படி பிரதிஷ்டை செய்து வைத்து யாராவது ஒரு அர்ச்சகரை வைத்து ஒரு மண்டலம் பூஜை செய்யுங்கள் பிறகு நீங்கள்வே பூஜை செய்யலாம் என்று கூறி சென்றார்.

அந்த சுயம்பு லிங்கத்திற்கும் அம்பாளுக்கும் பூஜை செய்ய செய்ய...

அரச மரத்திலிருந்து ஈசனின் ஜடாமுடியை போல் அரச மரத்திலிருந்து அப்படியே... வேப்ப மரத்தின் மீது சிவப்பாக படர்ந்து வந்தது அதைப் பார்த்து அந்த கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் அதிசயித்துப் போய்விட்டனர்.
மேலும்...
ஒரு அதிசயமாக இன்று வரை ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பரமசிவனின் ஆபரணமான நல்லப்பம்பு ஒன்று வந்து தனது ஆடையை கழற்றி அங்கு வைத்துவிட்டு செல்லும். அந்த நல்ல பாம்பை இன்று வரை யாரும் பார்த்ததில்லை ஆனால் அதனுடைய சட்டையை மட்டும் அங்கு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அவிழ்த்து வைத்திருக்கும் தன்னுடைய நாமம் மாறாமல் அப்படியே கழட்டி வைத்திருக்கும் அதை அந்தக் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் கண்டு அதிசயத்து பார்த்து செல்வார்கள்.

அன்றிலிருந்து இன்று வரை அந்த சுயம்பு ஸ்ரீ ஸ்ரீ அன்னபூரணி உடனுறை தான் தோன்றி மங்களேஸ்வரருக்கு அபிஷேகம் பூஜை செய்து வருகின்றனர்.

இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்ட நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கின்றது என்று அறிந்து சுற்றி உள்ளவர்கள் அங்கு அம்மனுக்கு பொங்கல் இட்டு ஐயனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தார்கள்.

இந்த தெய்வத்தின் உடைய சக்தி அறிந்து சுற்றுவட்டாரத்தில் இருந்த முகமதியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் பாராமல் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு வேண்டி சென்றனர். அவர்களுக்கும் வேண்டியது வேண்டியபடி நடக்கவே அனைவரும் ஆச்சரியப்பட்டு போய் விட்டனர்.

அந்த இடத்தின் உரிமையாளர் திரு குருஜி பாண்டியன் அவர்களும் கல்பனா அவர்களும் இன்று வரை அந்த இறைவனுக்கு கைங்கரியம் செய்து வருகிறார்கள்.

18/01/2024

*G.R.T. ஆனது காசி அல்லது வாரணாசியில் ஒரு ஹோட்டல் / சத்திரம் தொடங்கியுள்ளது.*

*தென்னிந்திய உணவு பரிமாறப்படுகிறது. அறை வாடகைகள் பெயரளவு. உணவு இலவசம்.*

*வணக்கம் நண்பர்களே, நான் சமீபத்தில் வாரணாசிக்கு சென்றிருந்தேன், ஜி.ஆர்.டி.யால் கட்டப்பட்ட சத்திரத்தில் தங்கியிருந்தேன். பெயர் மட்டுமே சத்திரம் ஆனால் அறைகள் எல்லா வசதிகளுடன் அற்புதமாக இருக்கின்றன, அது உங்களுக்கு எங்கும் கிடைக்காது. அதிகபட்சம் 3ppl ஒரு அறையில் தங்கலாம்.* *அவர்கள் காலையில் காபி, பாஸ்ட், மதிய உணவு, மாலை டீ மற்றும் இரவு உணவு வழங்குகிறார்கள். அறை சேவை இல்லை. அனைத்து உணவுகளும் இலவசம் மற்றும் வரம்பற்றது. கிருத்திகை அமாவாசை அன்று வெங்காய பூண்டு இல்லாமல் உணவு பரிமாறவும். கடந்த அமாவாசைக்கு அங்கே இருந்தவர்கள் எப்படி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தனர். சென்ற சாப்பாட்டுப் பகுதிக்கு அமாவாசை உணவு வெங்காயம் பூண்டு இல்லாதது என்று ஒரு பெரிய பலகை இருந்தது. வடை மற்றும் பாயசத்துடன் உணவு பரிமாறப்பட்டது பலவகையான பொருட்களுடன். வெளி உணவு நமக்குப் பொருந்தாது என்பதால், விருந்தினர்களை அங்கேயே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். காலி செய்யும் போது அந்த அன்னதான அறக்கட்டளைக்கு பங்களிக்க விரும்பினர். அவர்கள் ஏற்கவில்லை. இருந்தது. டிப் பாக்ஸ். டிப் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அது இல்லாமல் போக முடியாது, ஏனெனில் அவர்களின் சேவை உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சுற்றி செல்ல நிறைய EVகள் கிடைக்கும். நாங்கள் தங்கியிருந்ததை ரசித்தேன். ஜிஆர்டியின் சேவைக்கு இனிய நன்றிகள்.* *வாரணாசிக்கு செல்லும் எந்தவொரு அமைப்பும், ஜிஆர்டியில் இருங்கள் அறை வாடகையும் மிகவும் மலிவானது. அறைகள் நட்சத்திர ஹோட்டல் அறைகள் போல அனைத்து லேட்டஸ்ட் மாடல் ஹைஃபை ஃபிட்டிங்குகளுடன் இங்கிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள அனைத்து இடங்களும் சங்கர மடம், கங்கை, விஸ்வநாதர் கோயில் மற்றும் பிற கோயில்களுக்குச் செல்ல ஏராளமான மின்சார வாகனங்கள் கிடைக்கும்.*

*GRT ஹோட்டல் தொடர்பு எண். 7607605660.*

*தங்குமிடத்திற்கு அவர்களின் இணையதளத்தைப் பார்க்கவும்.*
*www.grtkashichatram.com அல்லது GOOGLE IT மற்றும் உள்நுழையவும்.
ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு.
அவர்களிடம் பேசி உறுதி செய்து கொண்டேன்.
உங்கள் முடிவில் இருந்து முயற்சி செய்யுங்கள்.*

*காசிக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.*

This website is for sale! grtkashichatram.com is your first and best source for all of the information you’re looking for. From general topics to more of what you would expect to find here, grtkashichatram.com has it all. We hope you find what you are searching for!

10/01/2024

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*அமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்*

*வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது ?*

*சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது, வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்” என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.*

*அதாவது வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டு,*

*கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது. இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.*

*அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது.*

*சமையல், கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி.*

*சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்.*

*சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?.*

*1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம்.*

*2020--ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது.*

*அன்று வாழ்ந்த குடும்பங்களாக இருந்தது வீடுகள் இன்று தங்கும் வீடுகளாகிவிட்டது.*

*அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 சதவிகிதம்;*

*ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12 சதவிகிதம்;*

*19 சதவிகிதம் வீடுகள் அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகள்.*

*6 சதவிகிதம் வீடுகள் குடும்பங்கள் ஆண்--பெண் சேர்ந்து தங்குமிடங்கள்.*

*இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41 சதவிகிதம் திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன.*

*அதில் பாதி குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு,*

*இந்த அலங்கோலத்தால் அமெரிக்காவில் 50 சதவிகிதம் முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.*

*67 சதவிகிதம் இரண்டாவது திருமணங்களும்,*

*74 சதவிகிதம் மூன்றாவது திருமணங்களும் விவாகரத்தாகின்றன.*

*வெறும் படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல.*

*சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால்,*

*திருமணம் நிலை குலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா உதாரணம்.*

*அங்கு போல இங்கும் குடும்பங்கள் அழிந்தால் நமது பெண்ணுரிமைவாதிகள் கடைகளில் இனிப்பு வாங்கி வழங்கி கொண்டாடுவார்கள்.*

*குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும்.*

*வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப்போகிறது.*

*ஏராளமான தொற்று வியாதிகளும் வருகின்றன. சேமிப்பும் குறைகிறது.*

*எனவே சமையல், சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல.*

*உடல் நலம், மன நலம் பொருளாதாரத்துக்கு கூட அவசியம்.*

*ஆதலால் தான் நம் வீட்டில் பெரியவர்கள் ஹோட்டல்களில்,(கிளப்பு கடைகளில்) சாப்பிடுவதை தவிர்த்தும், கண்டித்தும் வந்தனர்.*

*ஆனால் இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும்...",*

*Swiggy, Zomato, uber eats போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும்,*

*மெத்தப் படித்த, நடுத்தர மக்களிடமும் நாகரீகமாகிக் கொண்டிருக்கிறது.,*

*இது ஒரு பேராபத்து...*

*நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அந்த ஆன் லைன் நிறுவனங்களே உளவியல் ரீதியாக தீர்மானிக்கிறார்கள்...*

*முன்பெல்லாம் நம் முன்னோர்கள்,*

*யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லும் போதுகூட புளியோதரை மற்றும் தயிர் சாதங்களை கட்டிக் கொண்டு செல்வார்கள், ஆகையால் வீட்டிலேயே சமையல் செய்யுங்கள்.*

*அனைவரும் சேர்ந்து உணவருந்துங்கள்.*

*காலையில் எறும்புக்கும், பகலில் காக்கைக்கும், இரவில் நாய்க்கும் உணவிடுங்கள்.*

*முடிந்தவரைக்கும் கூட்டு குடும்பமாய் இருங்கள்.*

*உலகுயிர் அனைவரும் ஒற்றுமையாய் வாழுங்கள்...*

*எம்பணி விதைத்திருக்கிறோம் முளைத்தால் மரம், இல்லையேல் அடுத்த விதைக்கு உரம்.* *குருஜி பாண்டியன்*🌷🌷

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️.

10/01/2024

இப்படி சொல்லிக்கொடுப்பதற்க்கு இக்கால கட்டத்தில் இங்கு எவரும் இல்லை

09/01/2024

உடல் நலம்:

குளிர் காலம் ஆரம்பமாகி விட்டால்
Middle aged & Senior Citizens ஆட்களுக்கு
பொதுவாக ஒரு problem வரும்.

Cramp...

*பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும். கெண்டைக் கால் சதை, கால் விரல்கள், பாதங்கள் etc., etc., severe தசை பிடிப்பு.*

*சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போல் ஆகிவிடும். வலி உயிர் போய் விடும். எழுந்திருக்கவும் முடியாது படுக்கவும் முடியாது. யாராவது உதவ வேண்டும்.*

அந்த கடின தசை பகுதியை மெல்ல அழுத்தமாக தடவி, சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும். பின் Volini / Moov Gel ஏதாவது தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்காவது அந்த வலி லேசாக இருக்கும்.

Cramp வரும் போது, தூக்கத்தில் இருந்தாலும், அலறி அடித்துக் கொண்டு எழுந்து அழ ஆரம்பித்து விடுவார்கள்.Pain Uncontrollable.

பொதுவாக Evion tablets 10 நாட்கள் சாப்பிடச் சொல்வார்கள். அப்போதைக்கு சரியாகிவிடும். பின் மீண்டும் வரும்.

ஆயுர்வேதம், வர்மம் பயின்ற என் நண்பர் எளிமையான ஒரு தீர்வு கூறினார்.

*வலது பக்கத்தில் Cramp வந்தால், இடது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் அந்த position-லேயே இருங்கள். Cramp சரியாகிவிடும். வந்த சுவடே தெரியாது.*

*அதே போல இடது பக்கத்தில் Cramp வந்தால் வலது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள்.*

*படுத்திருக்கும் போது வந்தாலும்,*
*காதை ஒட்டியவாறு கைகளை*
*நீட்டுங்கள்.* *சரியாகிவிடும்.*

நண்பர்கள், உறவுகள் பலரும் பயனடைந்தார்கள். நீங்களும்
முயற்சித்து பார்க்கலாம்.

*Eye Dryness:*

இதுவும் அப்படித்தான்.வலியும் இருக்கும். காலையில் கண்ணை திறப்பதே சிரமமாக இருக்கும்.

இரவு தூங்கும் போது கண்டிப்பாக Eye drops போட வேண்டும். இல்லாவிடில் தூக்கம் கெடும். காலையில் சிரமம்.

*இதற்கும் ஒரு எளிய மருத்துவம்:*

இரவு தூங்கும் போது தொப்புளை சுற்றி அரை அங்குலம் வரை தேங்காய் எண்ணையை தடவி, லேசாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

ஒரு வாரத்திலேயே, Eye drynessல் இருந்து பெரும் விடுதலை கிடைக்கும். இன்னும் சில
உடல் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

எனக்கு தெரிந்தவர்
பத்து வருடங்களாக, Eye drops உபயோகித்தவர். அடிக்கடி Eye Checkup.

இப்போது பெரிய Relief. முதலில் இந்த சிகிச்சையைச் சொன்னபோது சிரித்தார்கள் உபயோகப்படுத்தியவுடன், நல்ல முன்னேற்றம்.
Eye drops மிகவும் குறைத்து விட்டார்.
No more doctor Visit.

*தூக்கமின்மை:*

பலருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் வராது. Disturbed sleep due to worries, etc etc.

எளிய மருத்துவம் :

தூங்கப் போகுமுன், தேங்காய் எண்ணெய் மூன்று அல்லது நான்கு drops எடுத்து. வலது பாதத்திற்கு அடிபாகத்தில் (உள்ளங்காலில்) மென்மையாக தடவி மூன்று நிமிடம் லேசாக மஸாஜ் செய்யுங்கள். அதே போல இடது காலிலும் செய்யுங்கள். பின் படுத்து விடுங்கள். ஆழ்ந்த உறக்கம் கண்டிப்பாக வரும்.

நீங்களும் முயன்று பார்க்கலாம்.
Sleeping tablets கூட நாளடைவில்
தவிர்த்து விடலாம்.

ஒரு மருத்துவ நண்பர் சொன்னது: தொப்புள் 72000 நரம்புகள் குவியும் இடம். அங்கு தேங்காய் எண்ணயை தடவும் போது, நரம்புகளில் இருக்கும் குறைபாடுகளை சமன் செய்கிறது. அதே போலத் தான் உள்ளங்காலிலும்.

Accupressure பயிற்சிகளில் கூட உள்ளங்கால் முழுமையும் விரல்களால் அழுத்தி, உடலின் எல்லா உறுப்புகளிலும் உயிர் சக்தி தங்கு தடையில்லாமல் பயணிக்கச் செய்வார்கள்.

உடல் நலத்தில் கவனம் தேவை.

ஆங்கில மருந்துகளை மெல்ல குறைத்துக்கொண்டு மாற்று மருத்துவத்தில் கவனம் செலுத்துதல் சிறப்பு.

குருஜி பாண்டியன்

09/01/2024

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன.

கத கத - கதகதப்பு, சூடு, விரைவாக
கடகட - விரைவாக, ஒலிக்குறிப்பு
கரகர - காய்ந்து இருத்தல்
கம கம - மணம் வீசுதல்
கண கண - உடம்புச் சூடு
கசகச - வியர்த்தல்
கலகல - சிரிப்பு
கதகத - கொதித்தல்
கபகப - பசியெடுத்தல்
கடுகடு - கோபமாக பேசுதல்
கரகர - தொண்டை வறட்சி
கரகரு - கருப்பு
கறகற - தொந்தரவு
கலீர் கலீர் - சலங்கையொலி
கணீர் கணீர் - மணி ஒலி.

கிணு கிணு - மெல்ல இரைதல்
கிறுகிறு - விரைவாக /சுற்றுதல்
கிளு கிளு - சிரித்தல் / மகிழ்ச்சி
கிடுகிடு - விரைவாக /அச்சம்
கிசுகிசு - இரகசிய பேச்சு.
கிச்சுகிச்சு - நகைச்சுவை
கீச்சுகீச்சு - ஒலிக்குறிப்பு (பறவைகளின் ஒலி)
கீர்கீர் - ஒலிக்குறிப்பு (கத்துதல்)
குடுகுடு - விரைந்தோடித் திரிதல், நடத்தல்
குளுகுளு - தென்றல் காற்று / குளிர்
குபீர் குபீர் - குருதி பாாய்தல்
குறு குறு - மனம் உறுத்துதல்
குசுகுசு - ரகசியம் பேசுதல்
குமுகுமு - மிக மணத்தல்
குபுகுபு - புகை கிளம்புதல்
கொழு கொழு - பருத்தல்

சட சட - ஒலிக்குறிப்பு (பரபரத்தல்), சிறகுகளை அடித்துக் கொள்ளல், முறிதல்
சடார் சடார் - பொருட்கள் மோதுதல்/விழுதல்
சரசர - ஒலித்தல் ,உரசல் ஒலி
சலசல - ஒலிக்குறிப்பு , நீரின் ஓசை
சளசள - ஓயாத இரைச்சல் பேச்சு
சிலீர் சிலீர் - குளிர்தல்
சிடுசிடு - எரிச்சல் கலந்த கோபம்
சுள்சுள் - வலித்தல்
சுறு சுறு - கோபம்

டாங்டாங் - ஒலிக்குறிப்பு (மணி ஒலி)
தடதட - நாத்தட்டுதல், முரட்டுத்தனமாக
தரதர - தரையில் உராயும் வகையில் இழுத்தல்
தளதள - இளக்கம், சோபை
தழுதழு - நாத்தடுமாறுதல்
தகதக - ஜொலிப்பு ,எரிதல் , மின்னுதல்
திருதிரு - அச்சம் ,முழித்தல்
திடு திடு - விரைவான ஓட்டம்
துடு துடு - ஒலிக்குறிப்பு
துருதுரு - சுறுசுறுப்பு
துடி துடி - இரங்குதல் ,வலியால் அவதியுறல்
தொளதொள - இறுக்கமின்மை
தொண தொண - இடைவிடாது பேசுதல்

நமநம - தொண்டைக் கமறல்
நறு நறு - கோபம்
நற நற - பல்லைக் கடித்தல்
நெருநெரு - உறுத்தல்
நெடுநெடு - உயரக் குறிப்பு
நைநை - தொந்தரவு
நொளுநொளு - குழைவு

பள பள - மினுங்குதல்
பரபர - நிதான இழப்பு ,அவசரம் ,வேகமாக செயற்படல்
பகபக - வேக குறிப்பு
பளிச் பளிச் - மின்னுதல்
படபட - இதயத்துடிப்பு
பளார் பளார் - கன்னத்தில் அறைதல்
பளீர் பளீர் - மின்னல்
பிசுபிசு - பசைத்தன்மை
புறு புறு - முணுமுணுத்தல்
பொசுபொசு - திரட்சிக் குறிப்பு
பொல பொல - கண்ணீர் வடிதல்
பொலுபொலு - உதிர்தல்

மடமட - வேகமாக நீர் குடித்தல்
மளமள - முறிதல்
மங்குமங்கு - தொடர்வேலை.
மினுமினு - பிரகாசித்தல், மிளிர்தல்
மெது மெது - மென்மை
மொழு மொழு - வளர்ச்சி
மொறமொற - மிகக் காய்தல்
மொர மொர - கடித்தல்

வழவழ - உறுதியின்மை
வளவள - பயனின்றி பேசுதல்
வளுவளு - நொளு நொளுத்தல்
விதிர்விதிர் - அச்சம்
விசுக் விசுக் - வேகநடை
விண் விண் - வலித்தல்
விடுவிடு - வேகமாக
விறுவிறு - வேகமாக, பரபரப்புடன்
வெடுவெடு - கோபமான பேச்சு்
வெதுவெது - இளஞ்சூடு
வெலவெல - நடுங்குதல், பதறுதல்.

*இரட்டை கிளவி சொற்களையும் அதன் பொருளையும்* *புரிந்து கொண்டால்...*
*தமிழ் மொழியே ஒரு கவிதைதானே!*. *குருஜி பாண்டியன்*

*பழசு தான் இருந்தாலும் சொல்றேன்....**சாதிக்க வயசு ஒரு தடையல்ல*
06/01/2024

*பழசு தான் இருந்தாலும் சொல்றேன்....*

*சாதிக்க வயசு ஒரு தடையல்ல*

06/01/2024

பத்து ரூபாயில் இதய சிகிச்சை

17/06/2020

Address

Guruji Marketing
Krishnagiri
635001

Website

Alerts

Be the first to know and let us send you an email when South India Business Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share