ASAP Mariappan Stores - Grocery Shop, Poultry Feed & Cattle Feed

  • Home
  • India
  • Madurai
  • ASAP Mariappan Stores - Grocery Shop, Poultry Feed & Cattle Feed

ASAP Mariappan Stores - Grocery Shop, Poultry Feed & Cattle Feed We sell Grocery items both Wholesale & Retail. We also sell Poultry & Cattle Feeds. Our Feeds for Cow

உடலை ஆரோக்கியமாக்கி புத்துணர்வு தரும் நவதானியங்கள் :-முந்தைய காலத்தில் விளைவிக்கப்பட்ட உணவுகள், யாருக்கும் பாதிப்பின்றி,...
14/08/2014

உடலை ஆரோக்கியமாக்கி புத்துணர்வு தரும் நவதானியங்கள் :-

முந்தைய காலத்தில் விளைவிக்கப்பட்ட உணவுகள், யாருக்கும் பாதிப்பின்றி, உடலுக்கும் ஆரோக்கியமாக அமைந்தது. ஆனால், இன்றைய காலத்தில் இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பயிர்களில் இருக்கும் உண்மையான சத்துகள் கூட நமது உடலுக்கு கிடைப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் பலர் சத்தான உணவுகளை புறந்தள்ளிவிட்டு, உடலுக்கு தீமையை ஏற்படுத்தும் உணவுகளை பெரிதும் நாடி செல்கின்றனர். இருந்தாலும், சில இடங்களில் தற்போது பழைய உணவு பழக்கம் மாறி வருகிறது. அந்தவகையில், நம்மால் புறக்கணிக்கப்பட்ட நவதானியங்களாக வர்ணிக்கப்படுவதில் சில :

நெல்:

உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால், உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால், பித்தம்கூடும். குண்டுசம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

சோளம்

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனை குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தை போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

கம்பு

கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ்சோறும் சாப்பிடுபவர்கள் மிக அதிகம். தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை பெருக்கும். உடல் வலிமையை அதிகரிக்கும். கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும், உயிர்சத்துக்களும் உள்ளன. அரிசியை விட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.

வரகு

நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச்சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகை சமைத்து சாப்பிடுவது நல்லது.

கேழ்வரகு

தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதை குறிப்பிடுவது உண்டு. இதில், புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து மற்றும் உயிர் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கப் படுகிறது.

கோதுமை

அரிசியை விட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. வட இந்திய மக்கள் கோதுமையை முழுநேர உணவாக பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்தது. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.

பார்லி

உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாக பிரிய உதவும்

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா? ***************************************************************************...
26/07/2014

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா?
********************************************************************************
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு மாதத்தில் ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய வழி இதோ...
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்

வரக்கொத்தமல்லி (தனியா) - அரை கிலோ
வெந்தயம் - கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும்.

பின்பு வடிகட்டி கட்டவும். தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார
இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

பூண்டின் மகத்துவம்:----------------------------------ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டின் பங்கு முதன்மையானது...
26/07/2014

பூண்டின் மகத்துவம்:-
---------------------------------

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டின் பங்கு முதன்மையானது. ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, ரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது.

இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதன பொருளாக பயன்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. இதில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன. பூண்டில் “அலிசின்’’ என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தேமல்: வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மறையும்.

ரத்த அழுத்தம்:

ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும்போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு சிறிது ஆற வைத்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். மாரடைப்பு வராது. ரத்தக் குழாயில் கொழுப்பு படியாது.

பூலோக கற்பக விருட்சம் பனைமரம்:--------------------------------------------------------பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்க...
25/07/2014

பூலோக கற்பக விருட்சம் பனைமரம்:
--------------------------------------------------------
பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை என்பதாலேயே இதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. இது கூந்தல் பனை, மற்றும் கரும்பனை என இரு வகைப்படும்.

பனை இந்தியாவில் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. “தென்னையை வைத்தவன் தின்று விட்டு சாவான், பனையை வைத்தவன் பார்த்துக்கொண்டே சாவான்" என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப பனையின் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும். ஆனால் நூறு ஆண்டுகள் வரை பனை உயிருடன் இருக்கும்.

இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பனை மரத்தில் நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன் தரும் பகுதியாகும்.

பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது. கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். உடலுக்கு குளிர்ச்சி தரும் பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.

தினமும் காலை எழுந்தவுடன் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் குணமடையும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும்.

சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

கோடை காலத்தில் பதநீரும் நுங்கும் கலந்து பருக உடலுக்கு குளுமை தரும். ஊட்டச்சத்து நிறைந்த பனம்பழம் பனைமரத்தின் பழமே பனம் பழமமாகும். இது உருவத்தில் தேங்காயை விட பெரியதாகவும், உருண்டையாகவும் இருக்கும். பழம் கருப்பாக இருக்கும்.

தலையில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும். பனம் பழத்தினுள் இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகளிலிருக்கும். இந்த கொட்டைகளைச் சுலபத்தில் சுலபத்தில் உடைக்க முடியாது. கெட்டியானது. பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினூடே சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும்
இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். பனம் பழத்தை அவித்தும் சுட்டும் உண்ணலாம். பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சொரி சிரங்கு, புண், உள்ளவர்கள் தின்றால் இவைகள் மேலும் அதிகரிக்கும்.
உடலைத் தேற்றும் பனங்கிழங்கு பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும்.

சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும். பனை மரத்தின் அடி பாகத்தில் வெட்டினால் வரும் நீரை எடுத்து அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சல் தீரும். பனை மரத்தின் பாகங்கள் பனையின் அனைத்து பாகமும் பயன்படுகிறது. பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் தாக்காது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி போன்ற கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். பனங்காயில் பிரஷ், கயிறுகள் தயார் செய்யலாம். வேலிக்கும் பயன்படுகிறது.

மிளகாய் நல்லதா? கெட்டதா?:-----------------------------------------       மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிக காரம் சாப்பிட்டால...
05/05/2014

மிளகாய் நல்லதா? கெட்டதா?:-
----------------------------------------

மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிக காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா? அதிக மிளகாய் சேர்த்த உணவு சூட்டைக் கிளப்புமா? இப்படி மிளகாயைப் பற்றிப் பரவலாக பலருக்கும் பல கேள்விகள்...
எந்த சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில், நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன என்பதே உண்மை.பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன. எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. ஒரே ஒரு வித்தியாசம்... காய்ந்த மிளகாயில் மட்டும் கலோரியும், வைட்டமின் ஏ சத்தும் மற்றதைவிட சற்றே அதிகம்.
கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். தவறில்லை. எடைக் குறைக்கிற முயற்சியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. எந்த உணவையும் சுவைபட மாற்ற, அவர்கள் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும்கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ சத்தானது அதிகம். அதனால், விழித் திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது.
வைட்டமின் சி சத்தும் அதிகம். அதனால் ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. மிளகாயில் ஃபைட்டோகெமிக்கல் அதிகம். சிணீஜீsணீவீநீவீஸீ என்கிற நிறமிதான் மிளகாயின் காரசார ருசிக்குக் காரணம். இந்த நிறமி அதிகமானால் மிளகாயில் காரம் அதிகரிக்கும். குறைந்தால் காரமும் குறையும்.
நரம்புப் பிரச்னை உள்ளவர்களுக்கும், சொரியாசிஸ் என்கிற சரும நோய் உள்ளவர்களுக்கும் மிளகாய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
மிளகாயில் உள்ளதாகச் சொன்ன Capsaicin பொருளானது, நம் உடலில் தோன்றும் வலியானது சருமத்திலிருந்து தண்டுவடத்துக்குப் போகாமல் காக்கிறது. அப்படி தண்டுவடத்துக்கு வலி இடம் பெயர்ந்தால், அது மூளையில் உணரப்படும். அடிபட்டவர்களுக்கும், வெட்டுக்காயம் பட்டவர்களுக்கும் காரமான உணவு கொடுக்கச் சொல்வதன் பின்னணி இதுதான்.மிளகாய் எடுத்துக் கொள்வதால், என்டார்ஃபின் எனப்படுகிற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.
அதனால் ஒருவித ஓய்வான மனநிலை கிடைக்கிறது. இரவு காரசாரமான உணவு எடுத்துக் கொண்டால், காலையில் மிகவும் ஓய்வாக எழுந்ததாக உணர்வது இதனால்தான். தவிர மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப் படுத்தி, உடலை லேசாக்கி விடும். இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும், மிளகாயை அளவோடுதான் எடுக்க வேண்டும். சிலர் அதிக மசாலா, காரம் சேர்த்த உணவுகளை மட்டுமே எப்போதும் சாப்பிடுவார்கள்.

அப்படி சாப்பிட்டால் குடல் பிரச்னை, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்னை, மூலநோய் போன்றவை வரலாம். மிகவும் காரமான உணவு உண்ணும் போது, அந்தக் காரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த மிதமான உணவுகளையும் எடுக்க வேண்டும். அதனால்தான் தயிர்சாதம் - ஊறுகாய் போன்ற காம்பினேஷன்களை நம் முன்னோர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்!

வயிற்றுப்புண் இருப்பவர்களும், அமிலச் சுரப்பு பிரச்னை உள்ளவர்களும் மிளகாயை எடுத்துக் கொண்டால் பிரச்னை தீவிரமடையும். குடைமிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம். அது புற்றுநோய்க்கு எதிராக போராடக் கூடியது என்பது உண்மை. ஆனாலும், அதையும் பச்சையாகவோ, அதிகமாகவோ எடுக்க வேண்டாம்.

கிஸ்மிஸ்பழம் - வலிமை தரும் சத்து! :------------------------------------------------------------          செடியில் இருந்த...
02/05/2014

கிஸ்மிஸ்பழம் - வலிமை தரும் சத்து! :-
-----------------------------------------------------------
செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும். தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும் முன் 20 பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும். திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.

குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு.. என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிசுமுசுப் பழம் என பெயரிட்டனர்.

பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு:----------------------------------------------------------     பத்து மிளகு கையிலிருந்...
28/04/2014

பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு:-
---------------------------------------------------------
பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும், உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. விட்டு விட்டு வருகின்ற காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை யனைத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும். மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வாந்தி பேதி நிற்கும்.

பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகு இலை, தழுதாழை இலை, நொச்சி இலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் நன்கு கழுக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, தணண்ணீர் சூடானதும் சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடம் மிட நல்ல பலன் கிடைக்கும்.

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை முடி புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து முடி புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த அரிசி!!!:-------------------------------------------------------------------------   ...
26/04/2014

மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த அரிசி!!!:-
------------------------------------------------------------------------

மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு தானியம் அரிசி. அட்சதை தூவி வாழ்த்தவும் அரிசியைத்தான் கையில் எடுக்கிறோம். அரிசிக்கு அத்தனை மகத்துவம்! இது ஒரு பக்கமிருக்க...

உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் வெண்மைநிற விஷங்கள் என 5 பொருள்கள் பட்டியலிடப்படுகின்றன. வெண்ணெய், நெய், டால்டா உள்ளிட்ட கொழுப்பு உணவுகள், சர்க்கரை, அரிசி, உப்பு, பால் பொருள்கள் ஆகியவையே அவை. அரிசிக்கு அதில் 3வது இடம்! இந்த 5 பொருள்களையும் அறவே தொடக் கூடாது என்று அர்த்தமில்லை. அளவோடு எடுப்பதே பாதுகாப்பானது. அரிசியும் அப்படித்தானே... ஆனால், நாமெல்லாம் அரிசி உணவை மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு பிடியாவது சாதம் உள்ளே இறங்கினால்தான் சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும் பலருக்கும். தானிய வகையைச் சேர்ந்ததுதான் அரிசி. அப்படியிருக்கையில் அதில் என்ன பிரச்னை? ஒரு கிராம் அரிசியில் 4 கிலோ கலோரிகள் சக்தி கிடைக்கும். அரிசி உணவை சாப்பிட்டால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும் என்பதாலேயே அதை நாம் பிரதான உணவாக உட்கொள்கிறோம். அரிசியைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் இந்தக் கேள்வியைத் தவிர்க்க முடிவதில்லை.

பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது?

புழுங்கலரிசி என்பது நெல்லை அப்படியே வேக வைத்து எடுப்பது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அப்படியே அரிசியில் தக்க வைக்கப்படும். ஆனால், பச்சரிசியில், உமியெடுக்கும் போது, அந்தச் சத்துக்கள் காணாமல் போகின்றன. எனவே, புழுங்கலரிசியே சத்தானது. கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, பாஸ்மதி அரிசி, கவுனி அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி என இன்று ஏகப்பட்ட அரிசி வகைகள் கிடைக்கின்றன.

இவை அத்தனையுமே ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை. காரணம், இவை அனைத்திலும் கிளைசமிக் இன்டக்ஸ் (அதாவது, சாப்பிட்டதும் ரத்தத்தில் கலக்கும் ஆற்றல்) குறைவு. காலையில் இட்லியோ, தோசையோ சாப்பிடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அது 3 மணி நேரத்தில் செரித்து விடும். அரிசி உணவில் உள்ள சக்தியானது உடனடியாக ரத்தத்தில் கலந்து, சீக்கிரமே செரித்து விடுகிறது. சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 110 தான் இருக்க வேண்டும்.

அரிசி உணவின் மூலம் ரத்தத்தில் சேர்கிற ஆற்றலானது, தேவைக்கதிகமாக இருக்கும்பட்சத்தில் அப்படியே சேமிக்கப்படுகிறது. இது சாதாரண உடல் நிலையில் உள்ளவர்களுக்கு ஓ.கே. அதுவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் என்றால், அவர்களுக்கு இன்சுலின் சுரப்பு குறைவாக இருப்பதன் விளைவாக, அதிகப்படியான ஆற்றலானது ரத்தத்தில் சேகரிக்கப்படும். அதனால்தான் நீரிழிவு உள்ளவர்களுக்கு பச்சரிசி வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

யாருக்கெல்லாம் அரிசி கூடாது?

நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோய் உள்ளவர்கள், பருமன் உள்ளவர்கள், முட்டி வலி உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள்... இவர்கள் அரிசி உணவைக் குறைத்து உண்ணலாம் அல்லது செரிமானத்துக்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்கிற சாமை அரிசி, தினை அரிசி போன்ற வகையறாக்களை சாப்பிடலாம்.

பழைய சாதம் நல்லதா?

மிகவும் நல்ல உணவு. இரவு புதிதாக வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு, காலையில் சாப்பிடலாம். அதில் ஈஸ்ட் உருவாகியிருக்கும். உடலுக்குக் குளிர்ச்சியானது. சின்ன வெங்காயத்துடன் சாப்பிடுவது இன்னும் சிறந்தது. நீரிழிவு உள்ளவர்கள், எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் மட்டும் இதை சாப்பிட வேண்டாம். மற்றவர்களும் பழைய சாதம் சாப்பிடுகிற நாள்களில், உடலுக்கு வேலை கொடுக்கிற செயல்களில் ஈடுபடுவது நல்லது.

அரிசி உணவை எப்படி சாப்பிடுவது?

என்னதான் ஆரோக்கியமானவர்கள் என்றாலும், தினம் 3 வேளைகளும் அரிசி உணவையே எடுத்துக் கொள்ள வேண்டாம். உதாரணத்துக்கு காலையில் 4 இட்லி சாப்பிடுகிற பழக்கம் உள்ளவர்கள் என்றால், அதை 2 இட்லியாகக் குறைத்துக் கொண்டு, மீதி 2 இட்லி அளவுக்கு ஏதேனும் காய்கறி சாலட் அல்லது பழம் சாப்பிடலாம். நாம் எல்லோரும் அரிசி சாதத்தை அதிகமாக வைத்துக் கொண்டு, காய்கறிகளைத் தொட்டுக் கொள்ள குறைவாக வைத்து உண்கிறோம். இது தவறு. காய்கறிகள் அதிகமாகவும், அரிசி சாதத்தைத் தொட்டுக் கொள்கிற மாதிரியும் எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது.

நொறுக்குத்தீனி என்கிற பெயரில் குழந்தைகளுக்குக் கண்ட உணவுகளையும் கொடுப்பதற்குப் பதில், அரிசி மாவில் செய்த புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவற்றைக் கொடுக்கலாம். அவல் பாயசம், சிகப்பரிசி புட்டு, கொழுக்கட்டை போன்றவை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கேற்ற சிறந்த உணவுகள்.

சர்க்கரைக்கு மாற்று வெல்லம்....!!!---------------------------------------------------இனிப்பு ஆபத்தானது என்பதை ஈராயிரம் ம...
18/04/2014

சர்க்கரைக்கு மாற்று வெல்லம்....!!!
---------------------------------------------------

இனிப்பு ஆபத்தானது என்பதை ஈராயிரம் முறைகள் சொல்லக் கேட்டிருப்போம். ஆரோக்கிய வாழ்க்கைக்கு இனிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவம் சொல்லும் முதல் தகவல். பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவர்கள் விதிக்கிற தடைப்பட்டியலில் முதன்மையானது இனிப்பு. ஆனால், இத்தனை பழிகளும் சர்க்கரைக்கே. சர்க்கரைக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படுகிற வெல்லத்தில் பெரிய வில்லங்கம் எதுவும் இல்லை!

இன்னமும் கிராமப்புறங்களில் காபி, டீ உள்பட எல்லாவற்றுக்கும் சர்க்கரைக்குப் பதில் வெல்லமும் கருப்பட்டியும் சேர்த்தே எடுத்துக் கொள்கிறார்கள். வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது. அதனால்தான் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள் பலரும். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு.

சர்க்கரை சேர்த்துக் கொள்வதால் வரக்கூடிய ‘அசிடிட்டி’ எனப்படுகிற அமிலம் சுரக்கும் பிரச்னை, வெல்லம் சேர்த்துக் கொள்வோருக்கு வருவதில்லை. ரத்தத்தையும் சுத்தப்படுத்தக் கூடியது. எனவே, டயட்டீஷியன்களின் அட்வைஸ் எப்போதும் வெல்லம்தான்! வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது. சர்க்கரை தயாரிப்பின் போது, அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில ரசாயனங்களைச் சேர்ப்பதால், இரும்புச்சத்து அழிக்கப்படுகிறது.

வெல்லத் தயாரிப்பில் அந்த இழப்பு இல்லை. வெல்லம் என்று பொதுவாக நாம் சொல்வது கரும்புச்சாறிலிருந்து எடுக்கப்படுவது. பனைமரத்திலிருந்தும் வெல்லம் எடுக்கப்படுகிறது. கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாற்றிலிருந்துதான் வெல்லம் மற்றும் சர்க்கரை கிடைக்கின்றன. தண்ணீர் பசையின்றி, கெட்டியாகக் காய்ச்சப்பட்ட கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் எடுக்கப்படுகிறது. கரும்புச் சாற்றை காய்ச்சும் போது, கெட்டி வெல்லமாகும் பதத்துக்கு முன்பே இறக்கப்படுகிற இளம்வெல்லமானது, மருந்துத் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

பனைமரச் சாற்றை, குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி பனம் சர்க்கரையும் பனை வெல்லமும் தயாரிக்கிறார்கள். பனைவெல்லம் பசியைத் தூண்டும். முழுக்க சுத்தப்படுத்தாத கெட்டியான கருநிற வெல்லத்தை கருப்பட்டி என்றும், சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரையை பனங்கற்கண்டு என்றும் சொல்கிறோம். பாலில் பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிக் குடித்தால் சளி முறியும். உடல் சூட்டையும் குறைக்கும். வெல்லத்தைவிட, பனைவெல்லம் இன்னும் சிறந்தது. அதில் பி1, பி2, பி3, பி6 மற்றும் பி12 சத்துகள் உள்ளன.

கரும்பில் இல்லாத சத்துகள் இவை. ருமாட்டிக் பெயின் எனப்படுகிற மூட்டு வலிக்கு முக்கிய காரணமே அசிடிட்டிதான். அது மட்டுமின்றி, தசை வலி, மூட்டு இணைப்புகளில் வலி இருப்போருக்கும் சர்க்கரை வேண்டாம் என்றும், அதற்குப் பதில் வெல்லம் எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்
படுகிறது.

எப்படியெல்லாம் கொடுக்கலாம்?

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிற கஞ்சி மாதிரியான உணவுகளில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். 3 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு உடைத்த கடலை, வேர்க்கடலை உருண்டைகளில் வெல்லம் சேர்த்துச் செய்து தரலாம். ஜூஸ் போன்றவற்றில் சர்க்கரை சேர்த்தால், கலோரி அதிகமாகும். அதைத் தவிர்த்து வெல்லம் சேர்த்துத் தரலாம்.

பெண்களுக்கு எல்லாக் கட்டங்களிலும் இரும்பு, நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் தேவை. இவை மூன்றையும் உள்ளடக்கியது வெல்லம். பூப்பெய்திய பெண்களுக்கு வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்த உளுத்தங்களி கொடுப்பது இதனால்தான். கர்ப்பிணிகளுக்கு எடையை அதிகம் கூட்டாமல், அதே நேரம் உடலுக்கு வலு கொடுக்க, என்ன இனிப்பு கொடுத்தாலும், அதில் வெல்லம் சேர்த்துச் செய்வதே சிறந்தது. கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு உடல் அதிக சூடாகி, பொய் வலி வரும்.

அது நிஜ வலியா, பொய் வலியா என்பதுகூடத் தெரியாது. அப்போது, பனங்கற்கண்டும் தனியாவும் சேர்த்து கஷாயம் வைத்துக் கொடுத்தால், பொய் வலியாக இருந்தால் உடனே சரியாகும். தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு கால்சியம்மற்றும் இரும்புச் சத்து தேவையைப் பூர்த்தி செய்யவும் வெல்லமே சிறந்தது. பிரசவத்துக்குப் பிறகு, பெண்களின் உடலில் தேங்கியிருக்கும் அழுக்குகளை அகற்ற, கருஞ்சீரகமும் கருப்பட்டியும் சேர்த்துச் செய்த உருண்டையைப் பிரசவ மருந்தாகக் கொடுப்பதுண்டு.

அதைக் கொடுத்தால் உடனே ரத்தப்போக்கு உண்டாகி, அழுக்கெல்லாம் வெளியேறும். மெனோபாஸ் காலகட்டத்திலும் அதைத் தொடர்ந்தும் சர்க்கரையைக் குறைத்துக் கொள்வதே பாதுகாப்பானது. குடும்பப் பின்னணியில் யாருக்குமே நீரிழிவு இல்லாவிட்டாலுமே இன்று அது 40 பிளஸ்சிலேயே பலரையும் தாக்குகிறது. எனவே, எல்லோரும் சர்க்கரையைத் தவிர்த்து வெல்லத்துக்கு மாறலாமே!

செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்து:---------------------------------------------------------------------------...
17/04/2014

செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்து:-
--------------------------------------------------------------------------

ஜீரணம் ஆகாமல் அவதி படுவோர்கள் வீட்டிலேயே மருந்து தயாரித்து பருகலாம். வீட்டில் இருக்கும் சுண்டைக்காய், பெருங்காயம், பூண்டு, ஓமம், சீரகம் என அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களும் உடல் நலத்தை காப்பதற்கு மிகவும் உதவுகிறது. சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, நீர் மோர் ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒரு சுண்டைக்காய் அளவு பெருங்காயத்தைப் பொடித்துப் போட்டு கலக்கி, 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகளை நீக்கும்.
ஓமம் 200 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 100 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம், பூண்டு 50 கிராம், கறிவேப்பிலை 100 கிராம், தோல் நீக்கிய சுக்கு 200 கிராம் இவற்றை லேசாக நல்லெண்ணையில் வறுத்துப் பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர சொரிமானம் ஆகி வயிற்றுக் கோளாறுகள் இன்றி இருக்கலாம்.
விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிட்டால் அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம், உடல் வலி, அசதி முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் மிகவும் நல்லது. 2 பெரிய துண்டு சுக்கு, 2 ஏலக்காய் இவற்றை நசுக்கிக் கொண்டு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து, முக்கால் டம்ளராக வற்றியதும் கருப்பட்டி (பனை வெல்லம்) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலநது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்து வந்தால் அனைவருக்கும் நல்லது. உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும்.
மேலும் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால், ஜீரணமாகும். சுக்குப் பொடியுடன் சுடுநீரைச் சேர்த்துக் குடிக்கக்வேண்டும். குடித்து முடித்த பின், சுமார் 15 நிமிடங்கள் இடது பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள். ஜீரணம் ஆவதில் சிக்கல் இருக்காது. ஒரு கைப்பிடி துவரம்பருப்பு ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், பெரிய துண்டு பெருங்காயம், 2 கைப்பிடி அரிசி, ருசிக்கு உப்பு, பத்து மிளகாய் வற்றல் இவற்றை சிறு தீயில் எண்ணை விடாமல் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 3 கைப்பிடி பொட்டுக் கடலை சேர்த்துப் பொடி செய்து பாடடிலில் நிரப்பிக் கொள்ளவும். சூடான சாதத்தில் எண்ணை அல்லது நெய் சேர்த்து சாப்பிட அஜீரணம் போகும். பசி எடுக்காமல் அவதி படுவோர்க்கு பசி எடுக்கும்.

சாமையின் மகத்துவம்:----------------------------------------சாமை என்பது சிறுவகை தானியங்களில் ஒன்றாகும், இது ஒரு புல் இனத்...
16/04/2014

சாமையின் மகத்துவம்:-
---------------------------------------

சாமை என்பது சிறுவகை தானியங்களில் ஒன்றாகும், இது ஒரு புல் இனத்தை சார்ந்த பயிராகும், மலை கிராமங்களில் உள்ள மலை கிராம மக்கள் சாமையினை உணவு பொருளாக பயன்படுத்தி வந்தனர். அனைத்து மக்களும் சாமையின் உணவாக சாப்பிட்டு வருகின்றனர். பொதுவாக மக்கள் உணவு பொருளாக பயன்படுத்தி வரும் தானிய வகைகளை பெருவகை தானியம், சிறுவகைதானியம் என இரண்டாக பிரிக்கலாம்.

பெருவகை தானியம் அதாவது கம்பு சோளம், மக்காசோளம், நெல் உள்ளிட்டவைகளாகும். சிறுவகை தானியங்கள் அதாவது சாமை, பனிவரகு, குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். குறிப்பாக தானிய வகைகள் அனைத்தும் சிறிய விதை கொண்ட புல் வகை இனத்தை சார்ந்தது.

உற்பத்தி செய்யப்பட்ட சாமையினை அரிசியாக்க கைகுத்தல், அரவை மிஷின் மூலம் அரைத்து அரிசியாக்கலாம். கை குத்தல், அரவை மிஷின் மூலம் தயாரிக்கப்படும் சாமை அரிசியில் சத்துக்கள் அதிகம் இருக்கும். பொதுவாக அரிசிகள் கரும்பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்த சாமை அரிசியை பாலீஸ் போட்டும் அரிசியாக்கி சமைத்து உணவாக பயன்படுத்தலாம் அப்படி பாலீஸ் செய்யப்படும் சாமையில் குறைந்த அளவுள்ள சத்துக்கள் தான் இருக்கும்.

சாமையில் அதிக புரத சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இதனால் இதனை பலர் உணவாக பயன்படுத்தி வருகின்றனர். மலை கிராம மக்களுக்கு எளிதில் கிடைக்க கூடிய உணவாகும், சாமை உணவு விரைவில் பசிக்காது. இதனை சோறு போன்றும் கஞ்சி, களி போன்றும் உணவாக உட்கொள்ளலாம். பொதுவாக கொழுப்பு சத்து குறைந்த உணவாகும். ட்ரைகிளசைரஸ் குறைவான அளவில் உள்ளது. ஆன்பு ஆக்கிடன்ட் என்ற ஒரு வகை சாமை உணவாக சாப்பிடும் போது கிடக்கிறது இதனால் செல் சிதைவில் இருந்து மனிதர்களை கட்டுப்படுத்தும். விட்டமின் பி3 அதிகம் கொண்ட உணவாகும். புரோட்டின் அதிகம், நார் சத்து உள்ளிட்டவைகள் கிடைக்கிறது.

Address

No 6, East Napalayam Street East Masi Street
Madurai
625001

Opening Hours

Monday 10am - 3pm
6pm - 10pm
Tuesday 10am - 3pm
6pm - 10pm
Wednesday 10am - 3pm
6pm - 10pm
Thursday 10am - 3pm
6pm - 10pm
Friday 10am - 3pm
6pm - 10pm
Saturday 10am - 3pm
6pm - 10pm

Telephone

9443353042

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASAP Mariappan Stores - Grocery Shop, Poultry Feed & Cattle Feed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share