23/12/2021
[9:36 PM, 12/23/2021] R Elanchezhian: நேச்சுரல்கேஸ்-சை பொறுத்தவரையில்,
டெக்னிக்கலாக அருமையான ஒரு பையிங் மிட் டேர்ம் ஸ்டேட்டர்ஜியில் இருந்தது.
இந்த மாதம் 6 ஆம் தேதியில் இருந்து, நேற்று வரை ஒரே ரேஞ்சில் தான் டிரேடு ஆகிக் கொண்டு இருந்தது. அந்த ரேஞ்ஜை இன்று உடைப்பதற்கு அத்தனை சாத்தியக் கூறுகளும் இருந்தது.
இதற்கு முன் 310 என்னும் ஒரு உயரத்தை செட் செய்து வைத்திருந்தது.
நேற்று 305 வரை மார்கெட் அதிகரித்து இருந்தது.
ஆனால் இன்று காலையில் இருந்து ஒரே இறங்கு முகம் தான்.
281 என்பது நேச்சுரல் கேஸ்சுக்கு பெரிய சப்போர்ட்டாக இருந்தது.
ஆனால், மார்கெட் அதையும் 8 மணியளவில் உடைத்து விட்டது.
இதற்கு மேல் இது மேலே ஏற வாய்ப்பு இல்லை என தெரிந்து என்னுடைய ஸ்விங்கில் வைத்திருந்த பொசிசனை கட் செய்து விட்டு, இதற்கு முன் வந்த ரேலியில் செட் செய்த 275.70 யை உடைக்கிறதா? இல்லையா? என உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தேன். ஆனால் மார்கெட் அதையும் உடைத்து விட்டது. இன்று இதுவரை குறைந்த பட்ச விலையாக 271.20 யை செட் செய்து இருக்கிறது. இனி அடுத்து 251 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.
சரி, ஒருவேளை இன்றைய டேட்டா மார்கெட்டுக்கு எதிராக, நெகட்டிவாக வந்து இருக்கிறதா என்று பார்த்தால், அப்படியும் இல்லை. பாசிட்டிவ் ஆகத்தான் வந்து இருக்கிறது.
ஆக மொத்தத்தில், நான் பையிங்கில் இருப்பதை யாரோ போட்டு கொடுத்து விட்டார்கள் என்பது மட்டும் தெரிகிறது ... 😁😁😁
அதேப்போன்று, குருடாயிலைப் பொறுத்தவரையில், இதுவும் இதற்கு முந்தைய 5562 யை உடைக்க முடியாமல் அந்த இடத்தில் பிரைஸ் ரிஜக்ஷன் ஆகிறது.
இதற்கு மேல் பையிங் போகிறவர்கள், அதை உடைத்தால் மட்டும் பையிங் போவது நல்லது.
எதற்காக இறங்குகிறது என்ற காரணம் தெரியவில்லை. அது நமக்கு டிரேடு செய்து பணம் சம்பாதிக்க, பயன்படப் போவதும் இல்லை.
ஆனால் இது எதையோ சிம்பாலிக்காக உணர்த்துகிறது.
எது எப்படியோ, நான் நேற்று தந்த குருடாயில், நேச்சுரல் கேஸ் பையிங் வியூக்கு சிறிது விடுமுறை அளிக்கிறேன். இப்போதைக்கு நேச்சுரல்கேஸ், பொசிசனலாக பையிங் போவதற்கு வாய்ப்பு இல்லை.
குருடாயிலைப் பொறுத்தவரையில், ஏற்கனவே உள்ள ரெசிஸ்டன்சை உடைத்து விட்டு கரெக்ஷன் தந்தால் மட்டும் பையிங் சைடு போகலாம். அதுவரை பொசிசனாலாக எண்ட்ரி எடுப்பது, அதுவும் தற்சமயத்திற்கு உகந்ததாக எனக்கு தெரியவில்லை.
இந்த குருடாயிலும், நேச்சுரல்கேசும் ஏதோ உலகளாவிய பயத்தை, பிரதிபலிப்பதாக தெரிகிறது.
அது கொரோனாவா? ஒமைக்ரானா? டொமக்ரானோ? தெரியவில்லை.