Business Development Wings

Business Development Wings Business development ideas

நானும் விவசாயமும்..."தெரிஞ்ச தொழிலை தொடாதவனும் கெட்டான்,தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்" என்பது பழமொழி ...அதுவும் நன்...
22/06/2024

நானும் விவசாயமும்...
"தெரிஞ்ச தொழிலை தொடாதவனும் கெட்டான்,
தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்"
என்பது பழமொழி ...
அதுவும் நன்றாக செய்துக்கொண்டிருந்த நகைக்கடை தொழிலுடன் 2002 ஆம் 55 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயத்தில் புகுந்தேன்.
தண்ணீர் இல்லாமல் ஐந்து , ஆறு தென்னை மட்டைகள் காய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தது (நல்ல மரத்தில் 25 to 30 இருக்கும்).
நமக்கு புதிய தொழில் தானே விவசாயம் .
ஆர்வக்கோளாரில்
12000 வாழை ( பூவன் , ரஸ்தாளி , கற்பூரவள்ளி , பச்சை வாழை ) போன்றவை வைத்தேன் . நஷ்டம் தான் கிடைத்தது
நன்றாக வந்தபோது விலை இல்லை.
நன்றாக வந்தபோது காற்று அடித்து சாய்ந்துவிட்டது .
கரும்பு போட்டேன்
அதிலும் நஷ்டத்தை சந்தித்தேன் .
கட்டிங் ஆர்டர் தாமதம்
கட்டிங் ஆட்கள் வருவதில் தாமதம்
ஏற்றுவதற்கு வண்டிக்கு லஞ்சம்.
நெல் போட்டேன்
போட்ட அசல்கூட தேறவில்லை. ஒரு மடங்கு கூடுதல் செலவு .
கடலையும் , எள்ளும் , உளுந்தும் போட்டேன்... அதேபோல் தான். ஒரு மடங்கு கூடுதல் செலவு...
சரி சரி... இவை மட்டுமா ?
ஒரு கன்று குட்டி 1500 க்கு வாங்கி வளர்த்தேன். ஒரு வருடத்தில் 9000 விலைக்கு கேட்டார்கள். கொடுக்கவில்லை .
மனது லாபத்தை நோக்கி போய்விட்டது .
கொஞ்சம் கொஞ்சமாய் 108 மாடுகள் , 67 நாட்டு ஆடுகள்( கொடி ஆடுகள் உள்பட )வாங்கி வளர்த்தேன் ஆசையுடன் . இதற்கு தனி மருத்துவரும் கூட.
இதிலும் நஷ்டம் என்னை தொற்றிக்கொண்டது. ஆம் மாடுகளுக்கு நோய் . ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு . பணம் போனாலும் போகட்டும் உயிரே முக்கியம் என்று மாடுகளுடன் சேர்ந்து நான் துடித்ததை என்றுமே மறக்க முடியாது. போதும் என்று அனைத்தையும் மிக குறைந்த விலைக்கு விற்றுவிட்டேன்.
பண்ணையை விட்டு பிரிய மனம் இல்லாமல் ஒரு மாட்டின் ( வண்டியில் ஏற்றும்போது ) மா என்ற சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது ... இறைவா ...
நஷ்டம் என்னை விட்டு விலகவில்லை.
வெண்ணிலா பீன்ஸ் செடியின் தகவல் கிடைத்தது. அதைப்போட்டு அழிப்பதற்கே நல்ல செலவு தான் மிச்சம்.
அடி மேல் அடி ...
அப்போது தான் உணர்ந்தேன் . ஆரம்பத்தில் இருந்தே ஆங்காங்கே தேக்கு , ரோஸ் உட் , பாக்கு, தென்னை மரங்கள் வைத்திருந்தேன். அது மன நிறைவாய் இருந்தது.
பல பல கஷ்டங்களுக்கு பிறகு சுதாரித்துக்கொண்டு சந்தனம், செஞ்சந்தனம், மகாகனி , குமிழ் , பலா மற்றும் மேலும் பல மரங்களை நட்டு சொட்டு நீர் பாசனம் போட்டு விட்டேன் .
இப்போது மரங்களின் பசுமை மன நிறைவாகவும், நிகழ்கால எதிர்கால சிறந்த வருமான வழிகலாகவும் இருக்கிறது.
பல பல பல போராட்டங்களை கடந்தது
வெற்றி கனியை பறித்தபோது தான் மனம் தன் உச்சக்கட்ட நிலையை அடைகிறது.
எத்தனை முறை தோல்விகள் என்றாலும் இறுதியில் வெற்றி கிடைக்கத்தான் செய்கிறது... #சிஷ்யன்

31/01/2024

இளைஞர் இளைஞிகள், மாணவ மாணவிகள் அவசியம் அறிய வேண்டிய பதிவு...
முடிந்தால் அவர்களிடம் கொண்டு சேருங்கள் நண்பர்களே...

மன அழுத்தம் இன்றி வாழ மிகச்சிறந்த சில வழி முறைகள்.!* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.* எங்கேயா...
08/11/2023

மன அழுத்தம் இன்றி வாழ மிகச்சிறந்த சில வழி முறைகள்.!

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி , டீ அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள்.
ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால ்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.
* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.

* ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.
பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள்.

செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்...

வாழ்க வளமுடன் ..
நன்றி

Marketing techniquesபேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார்...
11/10/2023

Marketing techniques
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
நன்றி!!

04/10/2023
இந்த கதையை படியுங்கள்.... எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும் . சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென...
04/10/2023

இந்த கதையை படியுங்கள்.... எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும் .

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.

நல்ல ஆன்மீக சிந்தனையை தூண்டும் தன்னம்பிக்கையுடன் இறை நம்பிக்கையூட்டும் அற்புதமான கதை!
பகிர்ந்தால் அனைவரும் இன்பம் அடைவார்கள்

Address

TTC Jewel Palace GF11 Palaniyappan Street
Pattukkottai
614601

Telephone

04373255651

Website

Alerts

Be the first to know and let us send you an email when Business Development Wings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share