Prakash flour mill & Traders

Prakash flour mill & Traders மாவுமில்&டிரேடர்ஸ்

25/01/2022
எங்களிடம் தானிய வகைகள் பாக்கெட் கிடைக்கும் : தானியங்கள்---------‐--------------1.வரகு அரிசி2.சாமை அரிசி3.குதிரைவாளி அரிச...
18/12/2021

எங்களிடம் தானிய வகைகள் பாக்கெட் கிடைக்கும் :

தானியங்கள்
---------‐--------------
1.வரகு அரிசி
2.சாமை அரிசி
3.குதிரைவாளி அரிசி
4.தினை அரிசி
5. கம்பு
6.சோளம்
7.மக்கா சோளம்
8.கேழ்வரகு
9.கோதுமை
10.உளுந்தம் பருப்பு
11. சிறிது வெந்தயம்
12. சிறிய அளவு சுக்கு

இவைகளை கல் இல்லாமல் புடைத்து சுத்தமாக பாக்கெட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவைகளை அரைத்து தோசை, மற்றும் புட்டு செய்ய ஆர்டரின் பேரில் கொடுக்கிறோம்.

தொடர்புக்கு: 94421 20160, 99443 87304

வீர வணக்கம்
15/12/2021

வீர வணக்கம்

உடல் எடை கூடஒரு சிலர் உடலில் அதிக சதைப்பற்று இல்லாமல் மிகவும் மெலிந்த தேகம் கொண்டிருப்பர். இவர்களின் உடல்வாகு பெருக்க து...
15/12/2021

உடல் எடை கூட
ஒரு சிலர் உடலில் அதிக சதைப்பற்று இல்லாமல் மிகவும் மெலிந்த தேகம் கொண்டிருப்பர். இவர்களின் உடல்வாகு பெருக்க துவரம்பருப்பை பசு வெண்ணெய் விட்டு வதக்கி, அரிசி சாதம் சாப்பிடும் போது இந்த கலவையுடன் பசுவின் நெய்யை கலந்து சாப்பிடுவதால் மெலிந்த தேகம் கொண்டவர்கள் உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடலுக்கு வலிமை கிடைக்கும்.

இரத்த அழுத்தம்

நடுத்தர வயது மனிதர்களுக்கு ரத்த அழுத்தம் ஒரு முக்கிய பிரசாணையாக இருக்கிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய் விரிப்பானாக‌ச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே ரத்த அழுத்த பிரச்சனை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம்.

ஆரோக்கியமான வளர்ச்சி

உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்

காயங்கள்

நாம் அனைவருமே எப்போதாவது அடிபட்டு காயங்கள், புண்கள் ஏற்படுவது சகஜம் தான். இத்தகைய காயங்கள் வெகு விரைவில் ஆறுவதற்கு புரத சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே துவரம் பருப்புகளை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிடுவதால் மேற்கண்ட பலன்களை பெறலாம்.

ரத்த சோகை

வளரும் நாடுகளில் பிறக்கும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒரு குறைபாடாக இரத்த சோகை இருக்கிறது. ரத்தத்தில் ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் ரத்த சோகை ஏற்படுகிறது. துவரம் பருப்பில் அபரிதமான ஃபோலேட்டுகள் இருக்கின்றன. எனவே வளரும் நாடுகளில் குழந்தைகளிடம் காணப்படும் அனீமியா எனப்படும் ரத்த சோகைக்கு துவரம் பருப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

வீக்கம், அழற்சி

எதிர்பாராதவிதமாக அடிபடும் போது சிலருக்கு உடலில் அடிபட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படுகின்றன. மேலும் இது தீவிரமடைந்து அழற்சியும் உண்டாகிறது. துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி தன்மையையும் அதிகம் கொண்டுள்ளன. மேலும் அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தகட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குறையும்.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

எத்தகைய நோய்களும் நம்மை அணுகாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். துவரையில் உள்ள வைட்டமின் சி சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.

இதய நலம்

உலகெங்கிலும் இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே துவரம் பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.

செரிமான சக்தி

நாம் உண்ணும் உணவை நன்கு செரிமானம் செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும் நார்ச்சத்து உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.

பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்தம் பருப்புடன், கருப்பட்டியை சேர்த்து களி செய்து கொடுப்பார்கள். அக்காலத்தில் கொடுக்கப்படும்...
14/12/2021

பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்தம் பருப்புடன், கருப்பட்டியை சேர்த்து களி செய்து கொடுப்பார்கள். அக்காலத்தில் கொடுக்கப்படும் இந்த உளுந்தங்களியானது பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் வலுப் பெறுவதற்கும், அவர்களுடைய கருப்பை ஆரோக்கியமாக எப்பொழுதும் இருக்கவும் உதவியாக இருந்தது. இதனால் தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் எளிமையாக நடைப்பெற்றது. மேலும் மாதவிடாய் காலத்தில் வரக்கூடிய வயிற்று வலி நீங்க கருப்பட்டியை சிறிதளவு சாப்பிட்டால் போதும். உடனே வயிற்று வலி நின்று ரத்தப்போக்கு சீராகிவிடும்.

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து காபி குடிக்கலாம். இதனால் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராத கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால் கைக்குத்தல் அரிசியில் சமைத்த சாதத்துடன், கருப்பட்டியை கலந்து சாப்பிடலாம். கருப்பட்டியில் செய்யப்படும் இனிப்பு பண்டங்கள், பணியாரங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உடல் திடத்தை கொடுக்கும்.

நீண்ட நாளாக சளி தொல்லையில் அவதிப்படுபவர்கள் மற்றும் வரட்டு இருமல் பிரச்சனை தொடர்ந்து இருப்பவர்களும் குப்பைமேனி மூலிகையுடன் சிறிதளவு கருப்பட்டியை வதக்கி சாப்பிட்டு வந்தால் போதும். சளி நீக்கி இருமல் மட்டுப்படும். மேலும் வாயு தொல்லை நீங்க ஓமத்துடன் கருப்பட்டியை சேர்த்து சாப்பிடலாம். உடலில் பிரச்சனையை கொடுத்துக் கொண்டிருக்கும் வாயுக்கள் வெளியேறி நிம்மதியான உறக்கத்தை கொடுக்கும்.

இன்று இருக்கும் நவீன யுகத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஆண்மைக்குறைவு என்பது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. கருப்பட்டியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனை படிப்படியாக நீங்கிவிடும். நன்கு பசி எடுக்க, சீரகம், சுக்கு வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் போதும். நன்கு பசி எடுக்க துவங்கிவிடும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கருப்பட்டியை மறந்து, தீராத நோயை உண்டாக்கும் வெள்ளை சர்க்கரையை தேடித் தேடிப் போய் வாங்கி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

நாட்டு சர்க்கரையில் பலவிதமான நன்மைகள் உள்ளன. நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்வதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப...
13/12/2021

நாட்டு சர்க்கரையில் பலவிதமான நன்மைகள் உள்ளன. நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்வதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.

புற்று நோய் பாதிப்புகள் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது.

நாட்டுச் சர்க்கரையில் வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது.

இப்படி பல நன்மைகள் உள்ளதால் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டு நாட்டு சர்க்கரையை பயன்படுத்த துவங்குங்கள்.

பாசிப்பருப்பு பயன்கள்1. முலைகட்டிய பாசிப்பருப்பு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.2. ப...
12/12/2021

பாசிப்பருப்பு பயன்கள்

1. முலைகட்டிய பாசிப்பருப்பு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

2. பாசிப்பருப்பை அரைத்து உடலுக்கு தேய்த்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெறும். தலைக்கு தேய்த்து குளித்து வருவதால் பொடுகு தொல்லை இருக்காது.

3. பாசிப்பருப்பை கீரைகளோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். இதனால் உடல் வெப்பம் சீராகும். இதனால் மூல நோய்கள் குணமாகும்.

3. புளியங்கொளுந்துடன் பாசிப்பருப்பை சேர்த்து கடைந்து உணவாக உட்கொள்வதன் மூலம் உடலுக்கு பலம் உண்டாகும்.

4. பாசிப்பருப்பில் செய்த பொங்கலை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் பித்தம் குணமாகும்.

5. பாசிப்பருப்பினை உணவுடன் சேர்த்து வந்தால் உடல் பருமன் கட்டுக்குள் இருக்கும். மேலும் இந்த பருப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதால் நோய் தாக்கும் அபாயம் குறைவு.

6. குழந்தைகளுக்கு பாசிபருப்பை நன்றாக வேகவைத்து, கடைந்து அதனுடன் நெய் சேர்த்து கொடுத்து வந்தால் குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்கும்.

7. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பாசிப்பயிறு ஒரு சிறந்த உணவாகும். தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் இரத்தச்சோகை நோய் ஏற்படாது.

8. கால்சிய சத்து குறைபாட்டுக்கு இது நல்ல உணவாகும். “ஆஸ்டியோபோரோசிஸ்” எனும் எலும்பு நோய் உள்ளவர்கள் பாசிப்பருப்பை உணவுடன் எடுத்துக்கொண்டால் நோய் எளிதில் குணமாகும்.

9. பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.

10. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு.

11. மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

12. குளிக்கும்போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட...
11/12/2021

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு (Dry Ginger), மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

வெந்தயம் சமயலுக்கு மட்டுமின்றி ஆயுர்வேதம் மற்றும் சமயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நம் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள்...
10/12/2021

வெந்தயம் சமயலுக்கு மட்டுமின்றி ஆயுர்வேதம் மற்றும் சமயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நம் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் வெந்தயத்தில் அடங்கியுள்ளது. அவ்வாறான வெந்தயத்தின் பயன்களை பற்றி நாம் இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1.உடல் வெப்பத்தை குறைக்கும்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறையும்.

2.கொலஸ்ட்ராலை குறைக்கும்

வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே வெந்தயத்தை சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கும்

அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீல் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள். அவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் உடல் சூடு குறையும்.

3.இதய நோய் வராமல் தடுக்கும்

வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும், மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

4.நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்

வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் துண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

5.மலச்சிக்கலை போக்கும்

வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

6.செரிமான பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.

7.அல்சரை குணமாக்கும்

வெந்தயத்தை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும்.

8.உடல் எடையினை குறைக்க உதவும்

வெந்தயத்தில் எடையை குறைக்கும் திறன் உள்ளது. அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

9.இரத்தத்தினை சுத்தப்படுத்தும்

வெந்தயம் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும்.

01. முப்படை தளபதி பிபின் ராவத்02. மதுலிகா ராவத்03. பிரிகேடியர் லிடர்04. லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்05. குர்சேவர் சி...
08/12/2021

01. முப்படை தளபதி பிபின் ராவத்
02. மதுலிகா ராவத்
03. பிரிகேடியர் லிடர்
04. லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
05. குர்சேவர் சிங்
06. ஜிஜேந்தர் குமார்
07. விவேக் குமார்
08. சார் தேஜா
09. கவில்தார் சத்பால்

மேலும் விபத்தில் இறந்த நமது இராணுவ வீரர்களுக்கும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்க்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்.

ஞாபக மறதி, மனநலம்உடல்நலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கு நிகராக மனநலமும் சிறப்பாக காக்கப்படவேண்டும். அமெரிக்காவ...
08/12/2021

ஞாபக மறதி, மனநலம்

உடல்நலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கு நிகராக மனநலமும் சிறப்பாக காக்கப்படவேண்டும். அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்ட நபர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் பி மற்றும் ஈ சத்துக்கள் அவர்களின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுபடுத்தியதோடு, அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் மற்றும் இன்னபிற மனநல குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டாதாக தெரியவந்திருக்கிறது.

பக்கவாதம்

உடலில் நரம்பு மண்டலங்கள் வலு குறைந்திருப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. இத்தகைய உடல்நிலையை பெற்றவர்கள் நார்ச்சத்து நிறைந்த கோதுமை தவிடு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது. கோதுமையில் இருக்கும் நார்ச்சத்து நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் காத்து, பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது. பக்கவாதம் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம் இருப்பவர்கள் கட்டிப் பசும் தயிரில், கோதுமை தவிடு கலந்து அதில் ஏதேனும் ஒரு பழத்தை சேர்த்து தினமும் காலையில் சாப்பிடுவது நல்லது.

குடல் புற்று

மாமிச உணவுகள் அதிகமாகவும், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குறைவாகவும் சாப்பிடும் பழக்கம் கொண்ட மேலை நாட்டினருக்கு கோலன் கேன்சர் எனப்படும் குடல் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. கோதுமை உணவுகளை தினமும் சாப்பிடுபவர்களுக்கு வயிறு, குடல் போன்றவற்றில் சேர்ந்திருக்கும் ஆபத்தான நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, அதிலிருக்கும் அதிக நார்ச்சத்து ஆபத்தான குடல் தொற்று ஏற்படமால் காக்கிறது. தினமும் குறைந்த பட்சம் 20 முதல் 25 கிராம் வரை நார்ச்சத்து அதிகம் நிறைந்த கோதுமை உணவுகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வைட்டமின் சத்துகள்

கோதுமை தானியம் அனைத்து வகையான வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்த ஒரு உணவாக இருக்கிறது. இதில் இருக்கும் தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின் பி சத்துக்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சத்தின் மற்றொரு வகையான போலிக் ஆசிட் அல்லது ஃபோலேட் எனப்படும் சத்து உடலில் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. கோதுமை தானிய உணவுகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிடுவதால். அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பிறவியிலேயே ஏற்படும் நோய்கள், குறைபாடுகளை தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்திவெள்ளை சோளத்தில் போதுமான அளவு  நோயை எதிர்த்து போராடும் ஆண்டி ஆக்சிடன்ட் இருக்கின்றது. இதனால் வயிற்று...
07/12/2021

நோய் எதிர்ப்பு சக்தி

வெள்ளை சோளத்தில் போதுமான அளவு நோயை எதிர்த்து போராடும் ஆண்டி ஆக்சிடன்ட் இருக்கின்றது. இதனால் வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.

ஆற்றலை அதிகரிக்கின்றது

உடல் அதிகம் சோர்வடையாமல் காக்கின்றது. உடலுக்கு தேவையான சக்தியை தந்து பலப்படுத்துகின்றது. உடலில் உள்ள ஆற்றல் குறையாமல் பாதுகாக்கின்றது. காலை உணவாக வெள்ளை சோளத்தை எடுத்துக்கொள்வது நல்லது.

குறைந்த இரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது

குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படாமல் வெள்ளை சோளம் தடுக்கின்றது. இதிலிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் வெள்ளை அனுக்களை எதிர்த்து போராடும். இதனால் குறைந்த இரத்தம் அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு மயக்கம், அலர்ஜி போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

Address

82 Pacr Road
Rajapalayam
626117

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+91 94421 20160

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prakash flour mill & Traders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prakash flour mill & Traders:

Share