14/03/2026
மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்தால் அவரை போலி மருத்துவர் என்று கூறுவோம். அதேபோல், புவியியல் (Geology) படிக்காமல் நிலத்தடி நீர் ஊற்று இருப்பிடத்தை கண்டுபிடிப்பதாக கூறினால் அதை அறிவியல் முறையாகக் கருத முடியாது.
நிலத்தடி நீர் உள்ள இடத்தை கண்டறிவது ஒரு அறிவியல் சார்ந்த செயல்முறை. வெறும் மிசின் (Divining machine / Rod) சுற்றுவதால் மட்டும் அந்த இடத்தில் தண்ணீர் உள்ளது என்று உறுதியாக கூற முடியாது. அந்த மிசின் எதற்காக சுற்றுகிறது என்பதற்கான அறிவியல் ஆதாரம் தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு இடத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதை தீர்மானிக்க பல முக்கியமான விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
உதாரணமாக:
அந்த பகுதியின் பாறை வகைகள் (Rock types)
புவியியல் அமைப்பு (Geological structure)
Lineament / Fracture zone போன்ற பாறை பிளவுகள்
நிலத்தடி நீர் ஓட்ட திசை (Groundwater flow)
மண் மற்றும் பாறைகளின் தன்மை
இவை அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்த பிறகே ஒரு இடத்தில் போர் (Borewell) போடுவது சரியானது.
தமிழ்நாட்டில் அரசு தொடர்பான பல திட்டங்களில், குறிப்பாக குடிநீர் திட்டங்களுக்கான போர்கள் போடும்போது, முதலில் புவியியல் வல்லுநர்கள் (Geologists) மூலம் ஆய்வு செய்யப்பட்டு Geophysical Survey போன்ற அறிவியல் முறைகள் பயன்படுத்தி தண்ணீர் உள்ள இடம் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும், இவ்வாறு மிசின் மூலம் மட்டும் ஆய்வு செய்வதை அரசு ஏற்றுக்கொள்வதில்லை மேலும் இதற்கு அனுமதி அளிப்பதில்லை.
நிலத்தடி நீரை கண்டறிவது ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேலை. அதற்காக புவியியல் அறிவும், சரியான ஆய்வு முறைகளும் மிகவும் அவசியம்.
சில ஆயிரம் ரூபாய் மிச்சம் செய்வதாக நினைத்து லட்சக்கணக்கான பணத்தை இழக்க வேண்டாம். அதனால், புவியியல் வல்லுநர்களை அழைத்து சரியான ஆய்வு செய்து கொண்டு போர் போடுவது நல்லது.
மேலும், யாராவது ஆய்வு செய்து தருவதாக கூறினால் அவர்களிடம் சில முக்கியமான கேள்விகளை கேளுங்கள்:
நீங்கள் அரசு நிறுவனங்களுக்கும் ஆய்வு செய்து தர முடியுமா?
உங்கள் ஆய்வு முறைகள் அரசு அனுமதி பெற்றவையா?
இந்த பகுதி எந்த வகையான பாறைகள் (Rock type) கொண்டது?
இந்த பகுதியின் Drainage Map உங்களிடம் உள்ளதா?
Drainage Map என்பது செயற்கைக்கோள் (Satellite) தரவுகளின் உதவியுடன் தயாரிக்கப்படும் ஒரு வரைபடம். இது பொதுவாக மத்திய அரசு அமைப்புகள் மூலம் தயாரிக்கப்பட்டு, புவியியல் வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் முக்கியமான தகவல் ஆகும்.
#விழிப்புணர்வு #போலிநபர்களிடம்_ஏமாறாதீர்கள் #மக்கள்கவனம்
நிலத்தடி