09/08/2026
இப்போ சிவகாசியில நடந்துட்டு இருக்குற ரெய்டு, நடவடிக்கைகள் காரணமா நிறைய பட்டாசு தொழிற்சாலைகள் suspend ஆகி, close ஆகுற நிலைமை வந்திருக்கு. இதனால ஒரு தொழில் மட்டும் பாதிக்கப்படல… இந்த தொழிலை நம்பி வாழ்ற சிவகாசி மக்களோட வாழ்க்கையே பாதிக்கப்படுது.
வெளிநாடுகள்ல இருந்து தொழில் வாய்ப்புகளை இங்க கொண்டு வரணும்னு எவ்வளவு கவனம் செலுத்துறோமோ, அதே கவனத்தை இங்க ஏற்கனவே பல வருஷமா இருக்குற தொழிலை வளர்க்கவும், பாதுகாக்கவும் செலுத்தினா இன்னும் நல்லா இருக்கும்.
தவறுகள் எல்லா துறைகள்லயும் நடக்குது. தவறு நடக்கக்கூடாதுன்னு நடவடிக்கை எடுக்கணும்… அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்ல.
ஆனா, தவறு நடக்குறதுக்கான காரணம் என்னன்னு கண்டுபிடிச்சு, அதை எப்படி தடுக்கலாம்னு யோசிக்கணுமே தவிர, ஒரு முழு தொழிலையே முடக்குற மாதிரி நடவடிக்கை எடுக்கக்கூடாது.
பட்டாசு தொழில்ல ஏன் இவ்வளவு பிரச்சனைகள் நடக்குது? எங்க தவறு நடக்குது? அதை எப்படி சரி பண்ணலாம்?