Melanmarainadu City

Melanmarainadu City Melanmarainadu is the best village in Virudhunagar District. People who are living here with very kind and good manner.

Melanmarainadu is the upcoming city in Virudhunagar District. People who are living very kind and good manner.

10/01/2024

AIM HIGH 💪👍 & KEEP MOVING🎉🎊All the best to win the cup🏆🏅🥇      #செண்பக  #பாரதி
11/09/2022

AIM HIGH 💪👍 & KEEP MOVING
🎉🎊All the best to win the cup🏆🏅🥇 #செண்பக #பாரதி

10/06/2022

#மேலாண்மறைநாடு
விருதுநகர் மாவட்டத்தில மொத ஊர் எங்க ஊர் தான்.எங்க ஊர்ல இருந்து அரை கிலோ மீட்டர் தாண்டினா நெல்லை மாவட்டம்....வேண்டாத பசங்க தான் எங்க ஊரை மாவட்டத்தின் கடைசி ஊர் ன்னு சொல்லுவாங்க..... மன்னர் காலத்திலயா.. இல்ல ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலயான்னு தெரியல.. ஆனா அந்த கால கட்டத்தில..போராளிகளை விரட்டி வரும் அதிகார வர்க்கம் கண்ணுல மண்ணை தூவிட்டு எங்க ஊர் பக்கம் வந்திட்டா ஆள் மறஞ்சிருவாங்களாம் ..அதாவது ஆளை கண்டுபிடிக்க முடியாத படி வேலி கூப்பு இருக்குமாம்.. ஆள் மறைஞ்சு இருந்திக்கிவாங்க அதனால எங்க ஊரை ஆள்மறை நாடு ன்னு பேரு வச்சாங்களாம்..அப்புறம் பாத்தா..இதே மாதிரி இன்னும் 2 ,3 பகுதியும் அப்படி தான் இருந்திருக்கு.. அதனால அந்த பகுதிகளை வேறுபடுத்தி காட்ட... மேற்க்க இருக்கிறது.. மேலாண்மறைநாடு... கிழக்கு இருக்கிறது கீழாண்மறை நாடு..வடக்க வடக்கான்மறைநாடு... தெற்க்க தெற்கான்மறைநாடு...
இதுல தெற்கான்மறைநாடு மட்டும் இப்ப இல்லை.. சிடிசன் படத்துல வர்ற மாதிரி காணாம போச்சா இல்ல அரசியல் தலைவர்கள் யாராவது நேரம் போகலைன்னு ஊர் பேர மாத்திட்டாங்களா ன்னு தெரியல..எப்படியோ எங்க ஊர் இன்னும் இருக்கு அதுவரை சந்தோசம் தான்...

ஊரை சுத்தி பட்டி தொட்டி, ன்னு ஊர் கள் இருக்க எங்க ஊரு "நாடு" ன்னு கெத்து காட்டும்...
ஊர் என்னவோ வானம் பார்த்த கரிசல் பூமி தான் ஆனா உழைப்பு கரிசல் பூமியையும் கனிய செய்து விவசாயம் செழிக்க செய்தது..இன்றும் அந்த உழைப்பு பல மருத்துவர்களையும் பொறியாளர்களையும் , தொழில் நுட்ப வல்லுனர்களையும்..உருவாக்கி வளர்ந்து வரும் நகரங்களான 🤔 சிவகாசி..சென்னை ..கோவை..போன்ற நகரங்களை இன்னும் வளமாக்க அவர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளது..🤫
அனைவரும் வளர வேண்டும் என்ற நல்ல எண்ணமே.🤝

சாதிய கண்ணோட்டம் எங்க ஊரில் கிடையாது நான் பிறக்கிறதுக்கு முன்னாடி பெரிய கலவரம் எல்லாம் நடந்திருக்கு.. நல்லவர்கள் பிறந்தால் நன்மை உண்டாகும் ன்னு பழமொழிக்கேற்ப நான் பிறந்த பிறகு அந்த மாதிரி சண்டை எதுவும் நடக்கல. 😀
எங்க ஊரை சுத்தி சாதி சண்டை நடக்கும்..எங்க ஊர்ல அதே 2 சாதிகாரங்க ஒண்ணா உட்காந்து டீ கடையில பேப்பர படிச்சிகிட்டு .. என்னையா உங்க ஆளுங்க 2 பேரு மண்டைய ஓடச்சிட்டாங்களாம்....ஆமா ப்பா.. அந்த ஊர்ல ஒன்க ஆளுங்க ஒருத்தரை வெட்டி ட்டாங்களாமே ன்னு..அவரு பதில் பேச இப்படி வெட்டியா பேசுவாங்களே தவிர யாரையும் வெட்ட மாட்டாங்க...இப்படி பேசிட்டு சரி வா நம்ம பொழப்ப பாப்போம் ன்னு துண்ட ஒதரி தோள்ல போட்டு ஒண்ணா வேலைக்கு கெளம்பிடுவாங்க..அதான் எங்க ஊரு...

எங்க ஊரை யார் வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் ஒடனே பார்க்க முடியாது .. limited edition மாதிரி...எங்க ஊரை பாக்க இல்ல உறவாட மொத்தமே 4 நேரம் தான் அனுமதி அப்ப மட்டும் தான் பஸ் விடுவோம்... வேற ஊர்ல இருந்து எங்க ஊருக்கு வந்து எங்கள பாக்க முடியும்..எப்பவோ நிலாவுக்கு போறதுக்கு இப்பவே பிளான் பண்ணுவாங்ககள்ள அது மாதிரி பிளான் போட்டு தான் வரணும்.. சரியா..😎

இயற்கை வளம் மிக்க ஊர்..கிராமம் ன்னாலே இயற்கை தானேன்னு சொல்லுவீங்க...எங்க ஊர் சுத்தி உள்ள ஊருக்கு மையமா பள்ளமா இருக்கும்..எங்க ஊர்ல இருந்து எந்த பக்கமா வெளியேறினாலும் மேடேரி தான் போவோம்... அதனால எங்க ஊர் நிலத்தடி நீர்மட்டம் பக்கத்து ஊரை காட்டிலும் அதிகமாக இருக்கும்.. அதனால வெள்ளாமையும் நல்லா இருக்கும் ஊருக்கு வடக்க ஆறு ..எப்போதும் நிற்காமல் ஓடி கொண்டிருக்கும். எது தண்ணியா...🤔. மண்ணு லாரி பா..நான் சின்ன புள்ளையா இருகிறப்ப அள்ள ஆரம்பிச்சது இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு... அறியாத வயசுல பேட்டுக்கும் பந்துக்கும் ஆசை பட்டு நாங்களே பல லாரிகள் ட வசூல் பண்ணியிருக்கோம்..😔 ..இப்ப எப்படியோ ஒரு அணைய கட்டி கொடுத்திருக்கு நம்ம அரசாங்கம்...பாப்போம்.. தண்ணி நிக்குதா.. மண்ணு நிக்குதா ..இல்ல அந்த அணை நிக்குதான்னு..

மத நல்லிணக்கம் எங்க ஊர்ல இப்பவும் எப்பவும் உண்டு.மதங்களை தாண்டி மனிதர்களை பார்க்கும் மாண்புமிகு குணங்கள் மிக்க ஊர் எங்க ஊர்...

இன்னும் சொல்ல வேண்டியது நெறைய இருக்கு...எங்க ஊரின் அருமைகளையும் பெருமைகளையும் பேசுவோம்..

நன்றி
#இளவேனில்

02/02/2022

நமது ஊரில் முதன் முதலாக பறக்கும் #ட்ரோன் இயந்திரம் மூலம் பருத்தி காட்டுக்கு பூச்சி மருந்து தெளிக்கப்பட்டது.

15/12/2021

#மேலாண்மறைநாட்டின் புதிய #தடுப்பு #அணையில் ஒரு ஆனந்த குளியல்.🥳

 #மேலாண்மறைநாடு     மேலாண்மறைநாட்டில் 8.45 மணிக்கு வரும் பஸ் தற்பொழுது நேரத்தை 8.30 மணியாக மாற்றி தொம்பக்குளம் வழியாக ரா...
26/11/2021

#மேலாண்மறைநாடு

மேலாண்மறைநாட்டில் 8.45 மணிக்கு வரும் பஸ் தற்பொழுது நேரத்தை 8.30 மணியாக மாற்றி தொம்பக்குளம் வழியாக ராஜபாளையம் செல்லும் பஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது இதனை கண்டித்து மேலாண்மறைநாடு ஊர் பொதுமக்கள் சார்பாக இன்று ஒரு அடையாள மறியல் செய்தனர் இதன் சாராம்சம் என்னவென்றால் முதலாவது இந்த பஸ் 8.45 மணிக்கு எடுத்தால் தான் எங்கள் ஊரில் இருந்தும் அருகில் உள்ள கோட்டபட்டி, சல்லம்பட்டி மற்றும் கோவில்செந்தட்டியாபுரம் ஆகிய ஊர்களில் இருந்து வேலைக்கும் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கும்செல்ல இலகுவாக பயணம் செய்ய முடியும் அதனால் தயவு செய்து பஸ் நேரத்தை மாற்ற வேண்டாம் எனவும் மேலும் தங்களுக்கு காளவாசல் வழியாக ராஜபாளையம் செல்வதற்கு இந்த ஒரு பஸ்தான் மேலாண்மறைநாட்டில் இருந்து உள்ளது என்பதால் அந்த முடிவை கைவிட வேண்டுமென்று இதன் வாயிலாக ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

09/05/2021

நல்ல மழை வெகு நாட்களுக்கு பிறகு. #மேலாண்மறைநாடு

    2021, R.C Primary School,
06/04/2021

2021, R.C Primary School,

நேற்று இரவு கனமழை. 🌨🌧☔
08/10/2018

நேற்று இரவு கனமழை. 🌨🌧☔

 #மேலாண்மறைநாடு கிராமத்தில் அங்கன்வாடி முன் மழை தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் சாரல் அடிக்கப்படுகிறது.
01/11/2017

#மேலாண்மறைநாடு கிராமத்தில் அங்கன்வாடி முன் மழை தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் சாரல் அடிக்கப்படுகிறது.

Address

Melanmarainadu
Sivakasi
626127

Telephone

9943748887

Website

Alerts

Be the first to know and let us send you an email when Melanmarainadu City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share