29/11/2024
பொருள் வேனும்னா பணம் கொடுத்து வாங்கிடலாம்.. ஆனா Respect வேணும்னா பணம் நம்ப உடம்பு மேல தெரியனும்
வாழ்க்கையில் ஒரு அரை மணி நேரம் எனக்கு புடிச்ச மாதிரி நடக்கல. அதுக்காக மொத்த வாழ்க்கையையும் வெறுக்க முடியுமா?
வேகமா ஓட்ற வண்டி வேகமா வர்ற பணம் ரெண்டும் என்னைக்காவது ஒரு நாள் உன்னை கீழே தள்ளியே தீரும்
சூதாட்டத்துல எப்பவும் நீ எவ்ளோ நல்லா ஆடுனேங்கறது முக்கியமில்ல. எப்போ ஆட்டத்த நிறுத்தனும்கறது தான் முக்கியம்.
பணம் சம்பாதிக்கிறது கொஞ்ச நாளைக்கு முன்னே உனக்கு அவசியம். ஆனா இப்போ நீ அதுக்கு அடிமை.
குடும்பத்துக்காக தான் மொதல்ல ஆரம்பிப்போம். ஆனா போகப்போக அது தர்ற போதையில குடும்பத்தையே மறந்து போயிருவோம்.
ஜெயிச்சிட்டு தோத்து போனா அந்த தோல்விதான் ஞாபகம் இருக்கும். தோத்துட்டு ஜெயிச்சா அந்த வெற்றி சரித்திரத்துல நிக்கும். அது ஏன்னா History only remember are you finished.
#லக்கிபாஸ்கர் என்ற படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இவை..
ஒரு சாமானியனுக்கு அளவில்லா பணம் வந்தால் அவனுக்குள், ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கதை. இது.
1992 ல் இந்தியப் பொருளாதாரத்தையே உலுக்கிய பாபெரும் பங்குச்சந்தை ஊழலை ஹர்ஷத் மேத்தா எனும் மும்பை பங்குத் தரகர் நிகழ்த்தினார்.
அவருக்கு துணையாக வங்கிகள் மற்றும் அதன் ஊழியர்கள் இந்த ஊழலில் பங்குபெற்றனர்...
அந்த காலகட்டத்தில் அந்த ஊழலில் இணையும் வங்கி ஊழியராக நம் கதாநாயகன் செய்யும் சாகசங்களும் அதனால் அவன் வாழ்வில் ஏற்படும் திடுக்கிடும் திருப்பங்கள் தான் இப்படத்தின் கதை..
அருமையான படம்
அற்புதமான, வீரியமான வசனங்கள்..
ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான விறுவிறுப்பான திரைக்கதை
காணத்தவறாதீர்கள்!
-A.S.Rajkumar