இணைய விவசாயி

இணைய விவசாயி 3R infomedia Online Business Solutions and Parttime Jobs

ஆகஸ்டு மாத பயிற்சிகான முன்பதிவு இப்போது நடைபெறுகிறது!
26/06/2016

ஆகஸ்டு மாத பயிற்சிகான முன்பதிவு இப்போது நடைபெறுகிறது!

Learn To Earn Money Online From Home எப்படி? என்ன வேலைன்னு கேட்கறீங்களா? எல்லாத்தையும் நான் உங்களுக்கு விவரமா சொல்றேன்.ம...
15/06/2016

Learn To Earn Money Online From Home எப்படி? என்ன வேலைன்னு கேட்கறீங்களா? எல்லாத்தையும் நான் உங்களுக்கு விவரமா சொல்றேன்.முக்கியமா இதற்குத் தேவையானது மூன்றே விஷயம்தான்,

1.கம்ப்யூட்டர்(கணினி)
2 .இன்டர்நெட் கனெக்சன்
3 .முயற்சி

இது மூன்றும் உங்களிடம் இருதால் நான் முதலில் சொல்லியதை விட அதிகமாகவே சம்பாதிக்கலாம்.ஏன்னா,உங்க வீட்ல கம்ப்யூட்டரும் இண்டர்நெட் கனேக்சனும் இருந்தாலே உலகமே உங்கள் கைக்குள் இருப்பது போல.இதுல நீங்க எந்த விசயத்தையும் எந்த நேரத்தில் வேணும்னாலும் தெரிஞ்சுக்கலாம்.அதே மாதிரி இதுல பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளும் கொட்டிக்கடக்குது.நிறைய கம்பனிகள் போட்டி போட்டுக்கிட்டு வேலை வாய்ப்புகளை அள்ளித்தறாங்க.

நான் இப்போது ஆன்லைனில் வேலை வழங்குவதில் முன்னணியில் உள்ள கூகிளைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.

கூகிள்

கணினி உலகில் கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் கணினியைப்பற்றி தெரியாதவர்கலாத்தான் இருக்க வேண்டும்.கூகிள் ஏராளமான வேலை வாய்ப்புகளை எங்கள் மூலமாக உங்களுக்கு அள்ளி வழங்குகிறது."கூகிள் ஆட்சென்ஸ்" பெயரில் இந்த வேலையை வழங்குகிறது.

ஆட்சென்ஸ் என்பது என்ன?
நீங்கள் தினமும் தினத்தந்தி,தினமலர் போன்ற நாளிதழ்களை படிக்கிறீர்கள் அல்லவா?அதில் நிறைய கம்பெனிகளின் விளம்பரங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நம் தொழில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக நாம் நாளிதழில் விளம்பரம் செய்கிறோம்.அதே போல்தான் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை பிரபலமடையச்செய்ய கூகிளிடம் விளம்பரம் செய்கின்றன.

ஏனென்றால் இன்று கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.எனவேதான் அவர்கள் கூகுளிடம் விளம்பரம் செய்கிறார்கள்.அந்த விளம்பரங்களை கூகிள் நம்மிடையே பிரித்து வழங்குகிறது.நாம் அந்த விளம்பரங்களைப் பிரபலப்படுத்துவதற்கு நமக்கு ஒரு கமிசன் தருகிறது கூகிள்.

கூகிள் அட்சென்ஸ் எப்படி வேலை செய்கிறது?

உங்களுக்கு ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொடுத்து ,அதுல கூகுளின் விளம்பரங்களைப்போட்டு கொடுத்திடுவோம்.உங்க வெப்சைட்டை பிரபலமடையச்செய்ய வேண்டும்।அப்ப உங்க வெப்சைட்ட பார்க்க வரவங்க உங்க சைட்ல இருக்கிற விளம்பரங்களை வெறும் கிளிக் பன்னி பாத்தாலே உங்கள் கணக்கில் ஒரு அமௌன்ட் ஏறிவிடும்।ஒவ்வொரு கிளிகிற்கும் பணம் தருவது கூகிள் மட்டுமே.

கூகிளில் இணைவது எப்படி?

உலக அரங்கில் ஆன்லைன் ஜாப் துறையில் எத்தனையோ பேர் சாதித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் அவர்கள் எதிலும் துணிந்து செயல்படுவதுதான்.உங்களாலும் ஆன்லைன் ஜாப் துறையில் சாதிக்க முடியும்.நீங்கள் கவலையே படவேண்டாம் If you try you can.

மிக முக்கிய அம்சங்களான தளத்தை பிரபல படுத்தும் முறை, ஒரு தளத்தில் தினசரி குறைதபட்சம் 5000 பார்வையாளர்களை கொண்டுவரும் டிரிக் , வருமானத்தை அதிகரிக்கும் டிரிக், 1000 பார்வையாளருக்கு (RPM) $15 லிருந்து 20$ வரை சம்பாதிக்கும் டிரிக் போன்றவை பயிர்ச்சியின் போது கற்று கொடுக்கப்படும்
கட்டண விபரங்களுக்கு பார்க்க :-
https://www.facebook.com/photo.php?fbid=1212189422127014

நீங்களும் ஆன்லைன் ஜாப் துறையில் சாதிக்க விரும்பினால் உடனே எங்களை அழையுங்கள்.....
09567723234

ஆன்லைனில் சம்பாதிக்க எளிய வழிகள�வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் இன்டர்நெட் மூலமாக எளிதாக பணம் சம்பாதிக்க பல வழிக...
15/06/2016

ஆன்லைனில் சம்பாதிக்க எளிய வழிகள�

வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் இன்டர்நெட் மூலமாக எளிதாக பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. ஆனால், பலர் டேட்டா என்ட்ரி, ஜாப் ஒர்க், எம்எல்எம், எஸ்எம்எஸ் என்று ஏதாவது ஒன்றின் மூலமாக தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதால் ஆன்லைன் ஜாப் என்றாலே அலறியடித்து ஓடுகிறார்கள்.

தினமும் சிறிது நேரத்தை செலவு செய்து நேர்மையாகவும், எளிதாகவும் பணம் சம்பாதிக்க வழிகள் இதோ.....

'ஆன்லைன் சர்வீஸ்' மூலமாக டிக்கெட் புக்கிங், பில் பேமண்ட், மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ், என வீட்டில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் செய்து முடிக்கக்கூடிய வசதிகள் வந்து விட்டது. ஆனால் இந்த சேவைகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்று பார்த்தால் ஏற்கனவே தொழிலில் இருப்பவர்கள் தான். அதாவது மேல் வருமானத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சேவையை ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்த வேண்டும் என்றால் கடை வாடகை, மின்சார கட்டணம், அட்வான்ஸ் என முதலீடு அதிகரிக்கும். அதே வேளையில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது (நம் அணுகுமுறையை பொறுத்து). ஆனால் இந்த சேவைகளை வீட்டில் இருந்தபடியே தொழிலாக செய்ய வேண்டுமென்றால் கண்டிப்பாக நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் வீடு இந்த சேவைகளை செய்ய ஏற்றதாக இருக்க வேண்டும். வீட்டின் முன்புறம் கடைபோல அல்லது ஒரு கம்ப்யூட்டர் வைக்கும் அளவுக்கு அறை இருந்தால் நல்லது.

* டிக்கெட் புக்கிங்:

டிக்கெட் புக்கிங் என்று பார்த்தால் ரயில், பஸ், சினிமா போன்றவைகள் முக்கியமானவை. ரயில் முன்பதிவு இப்போது அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் இதற்கான சேவை வழங்கும் மையங்கள் குறைவு தான். எனவே ரயில் டிக்கெட் புக்கிங்கை தைரியமாக செய்யலாம்.

சேவை தளங்கள்:

1. IRCTC - www.irctc.co.in. irctc என்பது அரசிடம் ரயில் முன்பதிவு செய்ய அனுமதி வாங்கிய நிறுவனம். மற்ற தனியார் நிறுவனங்கள் இவர்களிடம் உரிமம் வாங்கித்தான் தொழில் நடத்தி வருகின்றனர். ஆனால், irctc தளத்தை வீட்டில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். தொழில் ரீதியாக பயன்படுத்த வேண்டுமென்றால் நிறுவனத்தில் இருந்து ஏஜென்சி எடுக்க வேண்டும். வீட்டில் இருந்தபடியே நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டும் சேவை செய்து சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தலாம். எந்த முன்பணமும் செலுத்தாமல் நாம் எடுக்கும் டிக்கெட் செலவுக்கு மட்டும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக பணம் செலுத்தினால் போதும்.

நீங்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது கடையில் இருந்தோ தொழில் ரீதியில் பயன்படுத்த நினைத்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொழில் நடத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும். நீங்கள் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு கூட்டு சேவை அளிக்கும் நிறுவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கும்.

பேருந்து முன்பதிவு:

பேருந்து முன்பதிவு இன்னும் அரசு பேருந்துகளில் அனுமதிக்கவில்லை. அதனால், தனியார் பேருந்துகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தனியார் பேருந்துகள் முன்பதிவு செய்வதற்கு ticketgoose.com, redbus.in ஆகிய இரண்டு தளங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய முன்னணி இணையதளங்கள் ஆகும். இவர்களிடம் முன்பணம் செலுத்தாமல் டிக்கெட் எடுத்தால் வாடிக்கையாளர்களிடம் தான் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க முடியும். இவர்களிடம் உரிமம் பெற்றால் டிக்கெட் விலையில் நிறுவனம் நமக்கு கமிஷன் கொடுக்கும்.

சினிமா டிக்கெட்:

சினிமா டிக்கெட்டில் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், டிக்கெட் விலையை விட இணையதள நிறுவனமே 15 முதல் 25 ரூபாய் அதிக விலைக்கு விற்று வருகின்றன. ஏதாவது ஒரு படத்துக்கு அதிக தேவை இருக்கும் போது பணம் பார்க்கலாம். சினிமா டிக்கெட் சேவை வழங்கும் முன்னணி தளங்கள்

1. www.ticketnew.com
2. www.shanticinemas.com
3. www.thecinema.in

பில் பேமண்ட்:

இப்போது அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களுடைய பில் பேமண்டுகளை ஆன்லைன் வழியாக செலுத்தும் வகையில் கொண்டு வந்து விட்டன. அதனால், இந்த சேவை நிச்சயம் லாபம் கொடுக்கும்.

சேவை துறைகள்:

1. இன்சூரன்ஸ்
2. தொலைபேசி கட்டணம்
3. மின் கட்டணம்

இவற்றில் இன்சூரன்ஸ் மற்றும் தொலைபேசி கட்டண சேவைகள் மட்டும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உரிமம் பெற்று நடத்தலாம். மின்கட்டணம் செலுத்தும்படி எந்த நிறுவனமும் இதுவரை உரிமம் பெறவில்லை. ஆனால், நீங்கள் அரசு இணையதளத்திலேயே பலருக்கு பில் கட்டும் வகையில் சேவைகள் வந்து விட்டது.

அரசு இணையதள முகவரி: www.tnebnet.org/awp/tnep/ உங்கள் வீட்டில் இருந்து மின்கட்டணம் கட்டும் இடம் தொலைவில் என்றால் தாராளமாக இதை தொடங்கலாம். ஒரு கார்டுக்கு 15-20 வாங்கினால் கூட வரும் வருமானத்தில் உங்கள் வீட்டு மின் கட்டணத்தையோ, இன்டெர்நெட் பில்லையோ கட்டி விடலாம்.

அனைத்து சேவைகளையும் தரும் நிறுவனங்கள்:

கீழே உள்ள நிறுவனங்கள் அனைத்து சேவைகளையும்(கூட்டு சேவை) ஒரே உரிமத்தில் வழங்குகிறார்கள். அதாவது மொபைல்ரீசார்ஜ், டிடிஎச்ரீசார்ஜ், பேருந்து முன்பதிவு, ரயில் முன்பதிவு, விமானம் முன்பதிவு, தொலைபேசி கட்டணம் போன்ற சேவைகள் அனைத்தையும் ஒரே உரிமத்தில் குறைந்த விலைக்கு வழங்குபவை. அவை www.onestopshop.in, www.mysuvidhaa.com. www.itzcash.com, www.icashcard.in, www.beam.co.in ஆகியவையாகும்.

கவனிக்க:

* ஆரம்பத்திலேயே எந்த ஒரு நிறுவனத்திலும் உரிமம் வாங்கி நஷ்டம் அடைந்து விட வேண்டாம். முதலில் இன்டெர்நெட் பேங்கிங் வழியாக பயன்படுத்தி பார்த்து லாபம் உறுதியானால் மட்டும் உரிமம் பெறவும்.

* உரிமம் பெரும் முன் சரியான நிறுவனத்தையும், குறைந்த விலைக்கு உரிமம் கொடுக்கும் நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கவும்.

* அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வீட்டில் இந்த சேவைகளை பயன்படுத்த நினைத்தால் பகுதி நேரமாக செய்யவும்(மாலை 2 மணி நேரம் செய்தாலே போதுமான அளவு லாபம் பார்க்க முடியும்)

* இனிவரும் காலங்களில் ஆன்லைன் சேவையாக வர இருப்பதால் இது நிச்சயம் எதிர்காலம் உள்ள தொழில் தான்.

மேலே கூறப்பட்ட சேவைகள் தவிர்த்து பள்ளி, கல்லூரி தேர்வு முடிவுகள், வேலைவாய்ப்பு பதிவுகள், புதுப்பித்தல் என பல சேவைகள் உள்ளன. திறமையாகவும், சரியான கணிப்பும் இருந்தால் நிச்சயம் இந்த தொழில் மூலமே சரியான எதிர்காலத்தை அமைத்து கொள்ளலாம். எந்த தொழிலாக இருந்தாலும் நம் வெற்றி நம் அணுகு முறையிலும், முழு ஈடுபாட்டிலும் தான் உள்ளது.
dinakaran

Address

Thiruvananthapuram
695009

Alerts

Be the first to know and let us send you an email when இணைய விவசாயி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share