18/01/2024
❣️ சுய பரிசோதனை.....
எல்லோருக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டியதாக கூட இருக்கலாம்.....
நான் யாரு... ?
என் தகுதி என்ன ன்னு..?
எனக்கு நல்லாவே தெரியும்...
எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது.... என்பதை இலகுவாய் புரிந்து கொள்ளக்கூடிய மனம் தான்....
ஆனாலும் உணர்ச்சிபூர்வமாக எப்பொழுதுமே யாருக்கு ஏதாவது ஒரு நல்லது செய்து விட வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருப்பதனால்,
அதை வார்த்தைகளாக வெளிப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் ஜீவன்களில் நானும் ஒருவன்...... ஆனாலும் அது பிடித்திருக்கிறது....
எல்லாருடைய சுய ரூபங்களும் வெளிவருவதற்கு அளவுகோல் நமது கஷ்டங்கள் தான்...
இது எல்லாம் தெரிந்து கொண்டும் ஏதாவது ஒன்று நல்லது என நினைத்து அவசரப்பட்டு போய் செய்துவிட்டு அசிங்கப்பட்டு நிப்பேன்.
இப்படிலாம் நடக்கும்ன்னு தெரிஞ்சும், எதிர்பார்த்தும் அதை செய்து விடுவேன்....
இதுதான் என்கிட்ட உள்ள மிகப்பெரிய மாற்றிக் கொள்ள முடியாத பிரச்சனை..
என்றோ ஒருவருக்கு நமது செயல்கள் காலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பயன் கிடைக்கிற பொது நமக்கு ஏதாவது முக்கியத்துவம், கிடைக்காதா ன்னு சின்ன அன்பு, எதிர்பாரப்புகள் தான்.
இதுமாதிரி சூழ்நிலைகளை உருவாக்குகிறது.....
அதற்காக என் வாழ்நாளில் நான் இழந்தது மிகப்பெரியது...
ஒட்டுமொத்தமாக என்னவோ நான் பெற்றது தான் அதிகம்
எப்பவுமே நான் ஊன்றுகோளாகத்தான்
இருந்திருக்கேன்.. என்று ஆழ்மனது சொல்லிக் கொண்டே இருக்கிறது...
அது எனக்கே தெரியும். எல்லாம் தெரிஞ்சும் அளவுக்கு மீறின எதிர்பார்ப்புகளை வைத்தால் இதுமாதிரி அவமதிப்புகளையும், இழப்புகளையும், அவமானங்களையும் சந்திச்சு தான் ஆகனும்.
இவைகளையெல்லாம் மாற்றிக் கொள்வேனா.... அதற்கான வாழ்வில் காலம் மிச்சம் இருக்கிறதா....?
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
குமார் கன்னையன்., கடலூர்
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️