Oil Pet Bottles Manufacturers

Oil Pet Bottles Manufacturers PRAPANCHA PET

9655848484
9047848484
9367545454

PET BOTTLES AND JARS MANUFACTURERS

❣️எவ்வளவு பெரிய ரணங்களையும் ,காலம் தன்னுள் எடுத்து ஆற்றி விடுகிறது....எவ்வளவு மிகப்பெரிய துக்கம் இருந்தாலும் காலம் அதை ச...
18/01/2024

❣️எவ்வளவு பெரிய ரணங்களையும் ,காலம் தன்னுள் எடுத்து ஆற்றி விடுகிறது....

எவ்வளவு மிகப்பெரிய துக்கம் இருந்தாலும் காலம் அதை சரி செய்து விடுகிறது...

எவ்வளவு பெரிய அவமானங்களையும் காலம் சிறிது சிறிதாக மறக்கடித்து விடுகிறது....

வாழ்வின் வெவ்வேறு படிநிலைகளில் நிறைய விஷயங்களை காலம் மறக்க அடித்ததனால் தான் நாம் அடுத்த நகர்வுக்கே வந்திருக்கிறோம்.....

காலத்தின் கைகளில் நாம் எல்லாம் கைப்பாவைகள் தான்.....

நினைத்த வாழ்க்கையை இங்கு எவரும் வாழ்வதில்லை....

நல்ல வாழ்க்கை கிடைத்தவர்களும் வாழத் தெரியாமல் தொலைத்து விடுகின்றனர்.

மானுட ஜீவன்கள் ஒவ்வொருவருக்கு உள்ளும் பகிர்ந்து கொள்ள முடியாத பாவ கதைகள் சோக கீதங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஏமாற்றங்களையும், வலிகளையும், சோகங்களையும்,
அவமானங்களையும், இழப்புகளையும், தாங்கிக்கொண்டு வாழ்வதற்கு காலம் நம்மை எவ்வாறாயினும் தயாராக்கிவிடுகிறது.

ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொருவருடைய மனங்களிலும் சமாதானம் செய்து வாழ்க்கையை அதன்வழி வாழ காலம் பணித்து விடுகிறது.

வாழும் வாழ்க்கை ஒருமுறைதான்.

ஆனாலும் இந்த காலமே உன் கையில் தான் எல்லாமே.....

✡️🔯✡️🔯✡️🔯✡️🔯✡️✡️

குமார் கண்ணையன்
கடலூர்

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

❣️புத்தாண்டு வாழ்த்துக்கள்❣️2023 செல்பி தொடர் 7🌼🌼🌼❣️❣️❣️🌼🌼🌼❣️உதவி கரங்கள் நீட்டிய 2023....❣️இந்த வாழ்வு அழகானது தான்...ந...
02/01/2024

❣️புத்தாண்டு வாழ்த்துக்கள்❣️

2023 செல்பி தொடர் 7

🌼🌼🌼❣️❣️❣️🌼🌼🌼

❣️உதவி கரங்கள் நீட்டிய 2023....❣️

இந்த வாழ்வு அழகானது தான்...

நாம்தான் தவறான இடத்தில் தொலைந்து போகின்றோம் ...அல்லது நம்மை நாம் தொலைத்து விடுகின்றோம்...

பகிர்ந்து கொள்ளவே முடியாத இடர்பாடுகள் வந்தாலும்,
அன்பினால் நம்மிடம் நேசக்கரம் நீட்டி ஆறுதலும் உதவியும் செய்ய அத்தனை நல் உள்ளங்களும் நமக்காக காத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

யாரோ நம்மை முன் தெரியாத, முகம் தெரியாத, உள்ளங்களும் இருக்கின்றன... எந்த பிரதிபலனும் பார்க்காமல்... நேசக்கரம் நீட்ட...

வாழ்க்கையில் நம்பிக்கை தொலையும் போதெல்லாம், சற்று மனம் தொய்வடையும் போதெல்லாம், ஆயிரம் ஆயிரம் கைகள் உதவிக்கரம் நீட்டுகின்றன...

இந்த பூவுலகில் மகிழ்வாய் வாழ இன்னும் பல காரணங்கள் இருக்கிறது என உணர்த்திக்கொண்டே இருக்கிறது..... இந்த 2023.... மறக்க முடியாது ஆண்டுதான்..

🎯🎯

2024
புத்தாண்டு வாழ்த்துக்கள்

🎯🎯🎯🎯❣️❣️🎯🎯🎯🎯

குமார் கண்ணையன்
கடலூர்.

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

❣️ புத்தாண்டு வாழ்த்துக்கள்❣️2023 செல்ஃபி.... தொடர்.2🔹🔹▪️▪️🔹🔹▪️▪️🔹🔹ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் என்று ஆயிரம் மாற்றங்கள்...
02/01/2024

❣️ புத்தாண்டு வாழ்த்துக்கள்❣️

2023 செல்ஃபி.... தொடர்.2

🔹🔹▪️▪️🔹🔹▪️▪️🔹🔹

ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் என்று ஆயிரம் மாற்றங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும்...

*முதலில் நாம் மாற வேண்டும் தனி மனிதனாக... குடும்பத்தில் ஒருவனாக....சமூகத்தில் ஒருவனாக.... இந்த தேசத்தில் நல்ல பிரஜையாக... இந்த உலகத்தில் நல்லவனா க... பிரபஞ்சத்தில் நாம் சிறு துரும்பு என நினைத்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

சாலைகள் விதிகளை பின்பற்றாமல் எத்தனை பேர் எதிரில் வந்தாலும் வாழ்க வளமுடன் என வாழ்த்தி விட்டு...

நம்மால் சாலைக்கு இடையூறு வராமல் நாம் பயணத்தை மேற்கொள்ள மணப்பக்குவத்தை ஏற்படுத்தி வேண்டும்...

காக்கை குருவி எங்கள் சாதி.... என்று மனதில் நிறுத்தி எல்லா உயிர்க்கும் நல்லது நினைக்க வரும் ஆண்டுகளில் விடாப்பிடியாக பழகிக் கொள்ள வேண்டும்.

காடும் மலையும் நமது என நினைத்து இயற்கையை பாராட்ட பழகிக் கொள்ள வேண்டும்.

நல்ல நண்பர்களை தேடி பிடித்தாவது வாழ்வின் மிச்ச காலத்தை இணைந்து வாழ்ந்திட வேண்டும், இயைந்து வாழ்ந்திட வேண்டும்.. கிடைத்தால் நீங்கள் பாக்கியவான்கள்...

பிடித்த சிலவற்றை யாவது செய்திட வேண்டும்.

பிடித்த இனிப்பிற்காக ஏங்கி ஏங்கி பிடிக்காத கசப்பு பழகிக் கொள்ள வேண்டுமா? என்பதை வாழ்நாள் தீர்மானமாக அலசி ஆராய்ந்து முடிவு எடுத்து விட வேண்டும்.

இதையெல்லாம் செய்து விட வேண்டும் என்ற பட்டியலில் வாழ்நாள், சூழ்நிலையை மனதில் கொண்டு மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.

வறட்சி இல்லாமல் மாரி அளவாய் பெய்து மக்கள் வளமாய் வாழ்ந்திட சங்கல்பம் செய்து விடுவோம்...

பொய்களைப் புறந்தள்ளி உண்மையை கண்டறிய எந்திரம் ஏதாவது கிடைத்து விடுமா... ? என்று இயங்கிக் கொண்டிருக்கையில், அனுபவ அறிவை கொஞ்சமாக பயன்படுத்தி இதை கண்டு பிடித்து விட ஆழ்மனதன் அறிவு துணை புரியட்டும்...

ஆரோக்கியத்தை இயற்கை வழியில் அடைந்திட வேண்டும் என்ற ஏக்கத்திற்காக மாற்று வழி வைத்தியம் என்ற பெயரில் தேடிக் கொண்டே இருப்பதை சற்று நிறுத்தி தெரிந்தவற்றை முறையாக, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதிமொழி வரும் ஆண்டுகளில் எடுக்க வேண்டும்...

ஆதிவாசி வைத்தியம்,கேரளா வைத்தியம், ரிப்லக்ஸ் சாலஜி , மசாஜ் சென்டர்களில் இயற்கை வைத்தியத்தை தேடுவது முட்டாள்தனம்.

தேடி அலைவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்..... உண்மையை கண்டுபிடிப்பதற்கு மிக சிரமப்பட வேண்டி உள்ளது...

இயற்கை வைத்தியத்தில் எது நல்ல பயன் இருக்கிறதோ அவற்றை மட்டும் தொடர வேண்டும்.

இவைகளில் தான் நிறைய பொய்கள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு இவ்வளவு நாள் எடுத்துக் கொண்டோமோ என்று மன உறுத்தலோடு இதை நிறுத்தி தவிர்த்து விட வேண்டும்.....

இங்கு மிகப் பெரும்பான்மையானது பொய்களே இருக்கின்றன என்பதை சிலரிடமாவது சொல்லிவிட வேண்டும்.

இன்றைய வாழ்நாள் வரை அனுபவத்தில் எத்தனை பேர் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, நாம் யாரையும் ஏமாற்றாத எண்ணத்திற்கு வாழ்நாள் உறுதி மொழியாக எடுத்து விட வேண்டும்....

குமார் கண்ணையன்
கடலூர்

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

Address

Tiruchirappalli

Telephone

9047848484

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oil Pet Bottles Manufacturers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share