Fruit fresh juice pet bottles Manufacturers Pudukkottai pet

Fruit fresh juice pet bottles Manufacturers Pudukkottai pet 9367545454 PET BOTTLES MANUFACTURERS has acquired one of the topmost names in the industry for pet bottles manufacturing, whole selling and supplying.

2023 செல்ஃபி ...தொடர் 3🔹🔹🌸🔹🔹🌸🔹🔹அடுத்த நொடி நமக்கு இல்லை.... என்றால் நாம் என்ன செய்ய வேண்டுமோ அல்லது என்ன சொல்ல வேண்டுமோ,...
02/01/2024

2023 செல்ஃபி ...தொடர் 3

🔹🔹🌸🔹🔹🌸🔹🔹

அடுத்த நொடி நமக்கு இல்லை.... என்றால் நாம் என்ன செய்ய வேண்டுமோ அல்லது என்ன சொல்ல வேண்டுமோ,

அதாவது மரண வாக்குமூலம் போல நமது வார்த்தைகளில், செயல்ககளிகளில் இருந்திட வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வோம்.

செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே....

என்று தலைவன் தலைவிக்கு சொல்லப்பட்டது போல குடும்பம், நண்பர்கள், நல்ல அன்பு கொண்ட உள்ளங்கள், யாரிடமாவது அன்பினால் இரண்டற கலந்து மனம் ஒன்றுவிட வேண்டும்... அருள் புரிவாயாக இறைவனே...!

மீண்டும் ஒரு வாழ்க்கை கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்.....என்று நினைக்கிறோமோ
அதை சொச்ச வாழ்வில் செய்துவிட முயற்சிக்க வேண்டும்....

அலைபேசியில் நோண்டி, நோண்டி, புத்தகங்களையும், இலக்கியங்களையும், கவிதைகளையும் கட்டுதுறை களையும் வாசிப்பதை குறைத்துக் கொண்டு,

புத்தகங்களை நேரடியாகவே படித்து மூழ்கி விட வேண்டும்... நிறைய புத்தகங்களாவது படித்து விட வேண்டும்...

ஒருவரை ஒருவர் மிஞ்சிவிட வேண்டும் என்பதை நிறுத்திவிட்டு, அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்திட வேண்டும்.... வரும் ஆண்டுகளில் அது சாத்தியப்படட்டும்....

இன்னொருவர் வாழ்வை வாழ்ந்து நமது வாழ்வை தொலைத்து விட்டு பயணத்தை பாதியில் முடிப்பது எந்த பலனும் இல்லை.... என்பதை உள் மனதிற்கு பதிய வைத்து 2024 ஐ தொடர்ந்திட வேண்டும்...

உலகம் முழுக்கவே
ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிக்க வேண்டும், என்பதை தவிர்த்து விட..

அவரவர்கள் நாட்டை அவரவர்கள் ஆண்டு மகிழ்ச்சியுடன் மக்கள் எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்திட... பெரியண்ணாவும், பிரபஞ்சசக்தியும் துணை புரியட்டும்...

2024 இல் எந்த நாட்டில் எப்படி குழப்பம் விளைவிக்கலாம் என்பதை பெரியண்ணா என்ன யோசனை வைத்திருக்கிறார் என்பதை அவ்வப்போதுதான் தெரிந்து கொள்ள இயலும்....

இதனால் நமக்கு என்ன? என்று சொல்ல முடியாது .. பொருட்களின் விலை ஏற்றம் ,வியாபாரத்தின் உயர்வு தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் , மனித மனோபாவங்களில் மாற்றங்கள்.....

எல்லாமே பெரியண்ணாவின் மனதில்தான் உள்ளது.... அவருக்கு வள்ளலார் கூறியதை ஒரு sms குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்..

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்.... வள்ளலார் என்று அனுப்பிவிட்டு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற செய்தியை பகிர்ந்து விட வேண்டும்....

பெரியண்ணா சூழ்ச்சி செய்து ஆயுதங்கள் விற்காமல் அன்பை விற்று ஆனந்தத்தை கொள்முதல் செய்ய ஆவன எல்லாம் வல்லவனிடம் நமது விருப்பத்தை சமர்ப்பணம் செய்ய வேண்டும்....

இந்த உணர்வை பெரியண்ணா புரிந்து கொள்ள கடவுளை தூது அனுப்பவோம்...

அண்டை நாடுகளும் கிடைத்தது போதும்... அமைதி வாழ்க்கையும் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்திலும் முழுமையாக இருக்க வேண்டும்.. என்றும் அமைதியாக இருந்திட பிரார்த்தனை செய்வோம்....

ஊர் உலக பிரச்சனையை ..... நாட்டாமை வைத்து
"செல்லாது ....செல்லாது...... "
என்று கூற முடியுமா தெரியவில்லை....!?

🔸🔸▪️▪️🔸🔸

தேவைக்கு அதிகமாக பொருள்களை வாங்கி குவிப்பதை தவிர்த்து விட வேண்டும்..மினிமலிசம் என்பதை நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

நம்மோடு தொழில் ரீதியாக பயணிக்கும் சிலருக்காவது நம்மை விட நல்லவாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

அது 2023 இல் சாத்தியமாயிற்று... 2024 இல் அதுவும் சிறப்பாக ஆகட்டும்...

எல்லோர் வாழ்விலும் அது நடந்தேறட்டும்...

ஆடு மாடு மேல உள்ள பாசம் ....ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க சொல்லும்... என்ற அளவிற்கு போக வேண்டாம், சற்று கரிசனமாவது எல்லா உயிர்களிடத்தும் வைத்துக் கொள்ள....இந்த ஆண்டு முதல் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்...

2023 செல்ஃபி தொடரும்...

🔆🔆▪️▪️🔆🔆▪️▪️🔆🔆

குமார் கன்னையன்
கடலூர்.

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

03/05/2019

fruit fresh juice pet bottles manufacturers Pudukkottai pet

30/04/2019

FRESH COOL DRINKS PET BOTTLES MANUFACTURERS 7639545454 VALAVANTHAN PET

26/04/2019

Address

58, Sidco Industrial Estate
Tiruppurampayam
638111

Telephone

+917639545454

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fruit fresh juice pet bottles Manufacturers Pudukkottai pet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share