Amoga Numerology

Amoga Numerology Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amoga Numerology, Consulting Agency, Tiruvannamalai.

25/06/2018

3ஆம் எண்
3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இயல்பாகவே அமைதியான குணம்,பொறுமை,அடக்கம் கொண்டவர்களாக காணபடுவர்.சமாதானமாக போக கூடியவர்கள்.யாருடைய வம்பு தும்புக்கு செல்லாதவர்கள்.தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கக் கூடியவர்கள்.பெரியோர்கள் சொல்படி கேட்டு நடக்கக் கூடியவர்கள்.பொதுவாக இவர்கள் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருப்பர் .பழைய பழக்க வழக்கங்கள்,கொள்கைகள் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவராக இருப்பர்.நாகரிக மாற்றங்களை எளிதில் ஏற்க கூடியவர் அல்ல.
3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள்.இவர்கள் கல்வியில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்களாகவும் மற்றவைகளில் ஈடுபாடு குறைவாகவும் இருக்கும்.இவர்கள் ஆசிரியர்களாகவும்,பேராசிரியர்களாகவும் பணியாற்றினால் இவர்கள் வாழ்க்கை மேன்மையாக இருக்கும்.இந்த எண்ணில் பிறந்த குழந்தைகள் வகுப்பில் முதன்மையானவராக காணபடுவர். இவர்கள் கூர்மையான அறிவுடையவராக திகழ்வர்.
3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் நிர்வாகத் துறையில் கை தேர்ந்தவர்களாக காணப்படுவார்கள்.தனது காரியத்தை சாதிக்க பொறுமையை கடைபிடிக்கும் வல்லமை கொண்டவர்கள். இவர்கள் மிகவும் ரோஷகாரர்களாக இருப்பர்.இவர்கள் சட்டென்று கோபப்பட்டாலும் அந்த கோபமானது இவர்களிடத்தில் நெடு நேரம் நீடிக்காது.இவர்கள் நிர்வாக துறையில் சிறந்து விளங்குவதால் I.A.S துறையில் இருக்க வாய்ப்பு உள்ளன.
3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் நேர்மையுடன் காணப்படுவர். தன்னுடைய நேர்மைக்கு இழுக்கு வராமல் பார்த்துக் கொள்வர்.இவர்கள் எளிதில் யாரையும் நம்பக்கூடியவர்கள். இவர்கள் தங்கள் கொள்கையை யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.
3 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சளி தொந்தரவு இருக்கும். 3 ஆம் எண் ஒருவரது பிறந்த தேதியில் ஒரு முறை மட்டுமே வருவது சிறப்பு. இல்லையேல் இவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் உத்தியோகம் என்று வரும் போது நிலையற்ற உத்தியோகம், நிம்மதி இல்லா வாழ்க்கை,தொழிலிலும் நிலையான இடம் இல்லாமை,குடும்பத்தில் ஈடுபாடு என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறைவாகவே காணப்படும்.
மொத்தத்தில் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் பண்பாளர்களாகவும் யாரையும் உதாசீனம் செய்யாதவர்களாகவும்,பழகுவதற்கு இனிமை நிறைந்தவராகவும் காணப்படுவர்.இவர்கள் வாழ்க்கையில் படி படியாக உயரக்கூடியவர்கள்.
3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் 7ஆம் எண் 8 ஆம் எண் பிறந்தவர்களை திருமணம் செய்வதை தவிர்க்கவும்

மேலும் விவரங்களுக்கு--- அமோகா நியூமராலாஜி
(எண்களே நமது உலகம்)
Whats app number-9092768787
9159768787

01/06/2018
26/05/2018

தாய் தந்தையை போற்றுவோம்

24/05/2018

மன உளைச்சலா இதை பாருங்கள்

2 ஆம் எண்   2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் பேச்சு திறமை மிக்கவர்களாக காணப்படுவர்.இவர்களது பேச்சு மற்றவர்கள் வெல்ல முடியாத பே...
19/05/2018

2 ஆம் எண்
2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் பேச்சு திறமை மிக்கவர்களாக காணப்படுவர்.இவர்களது பேச்சு மற்றவர்கள் வெல்ல முடியாத பேச்சாக இருக்கும்.இவரது பேச்சினை வெல்லவேண்டும் என்றால் இன்னொரு 2 ஆம் எண் கொண்டவரால் தான் முடியும்.ஆனால் பேச்சில் திறமை மிக்கவராக இருந்தாலும் அவர்களின் பேச்சில் பொருள் இருக்காது.
2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பர்.இவர்களுக்கு கற்பனை திறன் அதிகம் உள்ளதால் சினிமா துறையில் கதை ஆசிரியர் ஆகவும் பாடல் ஆசிரியர் ஆகவும் செல்லலாம்.இவர்கள் எதையும் ரசனையோடு செய்ய கூடியவர்கள்.
2 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு புது புது யுக்திகளும் மற்றும் நூதனமான யோசனைகளும் தோன்றியபடியே இருக்கும். இவர்கள் அரசியலில் விருப்பம் கொன்வர்கலாக காணப்படுவர்.
2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் போராடி போராடி தான் ஜெய்க்கவேன்டும்.இவர்கள் SENSITIVE ஆனவர்கள். இவர்களுக்கு ஞாபக மறதி சற்று அதிகம் இருக்கும்.இவர்கள் நையாண்டி செய்வதிலும்,கிண்டல் செய்வதிலும் கெட்டிக்காரர்கள்.
2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் எதையுமே மிகைபடுத்தியே பேசக்கூடியவர்கள்.இவர்கள் பிறர்க்கு அருமையான யோசனைகள் அள்ளி வழங்குவார்கள்.அதனால் இவர்கள் ஆலோசனை கேட்டு மற்றவர்கள் தொழில் ரீதியாக லாபம் அடைவர்.ஆனால் தனக்கு என்று ஒரு காரியம் செய்யும்படி நேர்ந்தால் திரும்ப திரும்ப யோசித்து மனதை குழப்பிக் கொள்ள கூடியவர்கள்.சூழ்நிலையை பொறுத்து இவர்களது புத்தி மாறிக்கொண்டே இருக்கும்.
2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ஒருகாரியம் செய்ய பெரியதிட்டம் போட்டு செயல்படுத்த பாடுபடுவார்கள்.ஆனால் அந்த திட்டம்மானது முடியும் தருவாயில் அத்திட்டம் இவர்களுக்கு பயன்பெறாமல் போய்விடும்.
2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே அதிர்ஷ்டம் உடையவர்கள்.இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவசரத்தில் முடிவு எடுத்து விட்டு பின்பு வருத்தப்பட கூடியவர்கள். 2 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அழகான கணவன்/மனைவி அமைவார்கள்.
2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே சற்று பயந்த சுபாவம் உடையவர்கள்.இவர்களது பேச்சு சில சமயங்களில் அனல் பறப்பது போல் இருக்கும்.இவர்கள் தன்னை கண்டு பயப்படுபவர்களிடம் மிரட்டியே காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.தன்னிடம் பயம்மில்லாதவர்களிடம் மிகவும் நயமாக பேசி பழக கூடியவர்கள்.
2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் 9 எண்ணில் பிறந்தவர்களை திருமணம் புரிவதை தவிர்க்கவும்.அவ்வாறு திருமணம் செய்தால் இருவருக்கும் இடையே Argument செய்யகூடிய வாழ்க்கையாக தான் இருக்கும்.ஏன் என்றால் 2 ஆம் எண்ணும் 9 ஆம் எண்ணும் ஜென்ம பகை கொண்ட எண்களாகும்.

“வாழ்க வளமுடன்”

தொடர்ப்புக்கு: அமோகா நியூமராலாஜி
(எண்களே நமது எதிர்காலம்)
9092768787/9159768787

Address

Tiruvannamalai
606601

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+919092768787

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amoga Numerology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share