Atchathai Agarbathies

Atchathai Agarbathies Devotional posts from devotees

https://youtu.be/fJ1bUNtclrk
10/06/2022

https://youtu.be/fJ1bUNtclrk

tamil rasiDaily Rasipalan 10/06/2022 |இன்றைய ராசிபலன் ஆஸ்ட்ரோ சேலம் தினேஷ் குருபரன் ஒவொரு நாலும் உங்களது ராசிபலன்களை தெரிந்து கொள்ள ந....

https://youtu.be/hfTpmpWw47w
09/06/2022

https://youtu.be/hfTpmpWw47w

tamil rasiDaily Rasipalan 09/06/2022 |இன்றைய ராசிபலன் ஆஸ்ட்ரோ சேலம் தினேஷ் குருபரன் ஒவொரு நாலும் உங்களது ராசிபலன்களை தெரிந்து கொள்ள ந....

Om namo narayana
19/01/2019

Om namo narayana

ஒரு முறை வாங்கி பயன்படுத்தி பாருங்கள் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும் அட்சதை அகர்பத்திகள். உஙகளின் பரிபூரண பிரார...
31/12/2018

ஒரு முறை வாங்கி பயன்படுத்தி பாருங்கள் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும் அட்சதை அகர்பத்திகள். உஙகளின் பரிபூரண பிரார்த்தனைகளுக்கு.
தேவைபடுவோர் தொடர்புகொள்ளவும் 8778200348

இன்றைய  #ராசி  #பலன்கள்29/12/2018 #மேஷம்பிரச்சினைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள்.  நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்....
29/12/2018

இன்றைய #ராசி #பலன்கள்
29/12/2018

#மேஷம்

பிரச்சினைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். மூத்த சகோதரர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புச் செய்வர். மாமன், மைத்துனர்களின் உதவி கிட்டும்.

#ரிஷபம்

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும்.வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். கட்டிடப் பணிகள் தொடரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

#மிதுனம்

ஆதாயம் அதிகரிக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். நண்பர்களால் விரயம் உண்டு. உடல் நலனில் கவனம் தேவை.

#கடகம்

உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். உடன் இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

#சிம்மம்

இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதால் உங்கள் மதிப்பு உயரும். பணியில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுவீர்கள். வரவு திருப்தி தரும்.

#கன்னி

நல்ல திருப்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சியுண்டு.

#துலாம்

ஆரோக்கியத்தொல்லை அதிகரிக்கும் நாள். கூட்டு தொழிலில் ஏற்பட்ட குழப்பங் களை சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும். கொடுக்கல்– வாங்கல்களில்கூடுதல் கவனம்தேவை.

#விருச்சிகம்

வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும். வங்கிச் சேமிப்பு உயரும். வாழ்க்கைத் துணையின் உத்தியோக முயற்சி கைகூடும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

#தனுசு

பயணங்களால் செலவு ஏற்படும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வருவதில் தாமதம் ஏற்படலாம். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வதால் மகிழ்ச்சி கூடும்.

#மகரம்

இனிய பேச்சால் எதிரிகளை வெல்லும் நாள். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உத்தியோக அனுகூலம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வரும் வாய்ப்பு உண்டு.

#கும்பம்

விரயங்கள் கூடும் நாள். வீண் வம்பு வழக்குகளைச்சந்திக்க நேரிடும். குடும்பத் தில் அமைதி குறையும். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் உருவாகும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

#மீனம்

சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறுவது கண்டு ஆச்சர்யப்படுவீர்கள்.

 #இன்றைய  #ராசி  #பலன்கள்28/12/2018       #மேஷம்வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப் படும் நாள். வியாபார விருத்தி ஏற்படும...
28/12/2018

#இன்றைய #ராசி #பலன்கள்
28/12/2018



#மேஷம்

வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப் படும் நாள். வியாபார விருத்தி ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாளைய பிரச்சினைகள் பஞ்சாயத்துக்கள் மூலம் நல்ல முடிவிற்கு வரும்.

#ரிஷபம்

பயணத்தால் பலன் கிட்டும் நாள். வருமானம் அதிகரிக்கும். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வரலாம். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

#மிதுனம்

தொழில் முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லை அகல புது மருத்துவம் கைகொடுக்கும்.

#கடகம்

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தக்க விதத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். இடம், பூமி சம்மந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். தொழில் தொடங்கும் திட்டங்கள் வெற்றி பெறும்.

#சிம்மம்

வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விவேகத்துடன் செயல்படுவீர்கள். உறவினர் களால் விரயம் ஏற்படலாம். தொழிலில் பங்கு தாரர்கள் விலகினாலும் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். குடும்பச்சுமை அதிகரிக்கும்.

#கன்னி

பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். மதிய நேரத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

#துலாம்

அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். அரசு வழியில் செய்த முயற்சிகளில் அனுகூலமான நிலை காணப்படும். கடன் சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாள் வீர்கள். அயல்நாட்டு முயற்சி வெற்றி தரும்.

#விருச்சிகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பிக்கள் வீடு தேடி வருவர். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வரவு திருப்தி தரும்.

#தனுசு

குழப்பங்கள் அகலும் நாள். அடிக்கடி தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வர். உத்தியோகத்தில் உயர்வு கிடைப்பதற்கு எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆலயத் திருப்பணிகளுக்கு உதவ முன்வருவீர்கள்.

#மகரம்

விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. சிலர் உங்க ளின் மனம் புண்படும் வகையில் பேசலாம். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு.

#கும்பம்

முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்ல முக்கியப் புள்ளிகள் வழிகாட்டும் நாள். வெளி வட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

#மீனம்

சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பயணத்தால் பலன் கிட்டும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

‌ #கொடுமுடி_நாகாபரணம் எத்தனை நாகாபரணம் வந்தாலும் இந்த நாகாபரணதிற்கு தனி அழகு காரணம் என்னவென்று கேட்டால்.இது திருப்பாண்டி...
27/12/2018

‌ #கொடுமுடி_நாகாபரணம்

எத்தனை நாகாபரணம் வந்தாலும் இந்த நாகாபரணதிற்கு தனி அழகு காரணம் என்னவென்று கேட்டால்.
இது திருப்பாண்டிகொடுமுடி அருள்மிகு ஸ்ரீ மகுடேஸ்வரசுவாமிக்கு மகுடம் போல சாத்தப்படும் நாகாபரணம் ஆயிற்றே 🙏🙏🙏🙏

ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த பேட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்த் பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது.
சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும். மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.

அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்
அஞ்சல் என்று அடித்தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்
பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.🙏🙏🙏

 #இன்றைய  #ராசி  #பலன்கள்27/12/2018       #மேஷம்பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தேக ஆரோ...
27/12/2018

#இன்றைய #ராசி #பலன்கள்
27/12/2018



#மேஷம்

பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை அகலும்.

#ரிஷபம்

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்தி ணையும் நாள். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். செல்வந்தவர்களிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

#மிதுனம்

கடன்சுமை குறையும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும்.பிள்ளைகள் வழியே விரயம் உண்டு. நல்லவர்களின் தொடர்பு கிடைத்து மகிழ்வீர்கள். பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்துசேரும்.

#கடகம்

இனிய செய்திகள் இல்லம் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் விரயம் உண்டு. சொத்து, இடம், வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும்.

#சிம்மம்

அலைபேசி வழித் தகவல் அனுகூலம் தரும் நாள். பணப் புழக்கம் அதிகரிக்கும். வருங் கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை கூடும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு.

#கன்னி

எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். செல்லும் இடங்களில் செல்வாக்கு மேலோங்கும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சி னைகள் அகலும். மாமன், மைத்துனர் வழியில் மனமினிக்கும் செய்திகள் வந்து சேரும்.

#துலாம்

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உத்தி யோகத்தில் வேலைப்பளு கூடும். செயல்பாடு களில் வெற்றி கிட்டும். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறை வேறும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

#விருச்சிகம்

பணத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சொத்து சம்மந்தப்பட்ட வகையில் நல்ல முடிவு எடுப்பீர்கள். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள்.

#தனுசு

அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். தொழில் கூட்டாளிகளி டம் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

#மகரம்

எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனு சரித்துச் செல்வது நல்லது. கொடுக்கல்– வாங்கல்களில் கவனம் தேவை.

#கும்பம்

வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கட்டி டப் பணி தொடரும். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்புக் கொடுப்பர்.

#மீனம்

நன்மைகள் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரும். வரவு எதிர்பார்த்ததை விட இருமடங்காக வந்து சேரலாம். சில்லரைத் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

 #இன்றைய  #ராசி  #பலன்கள்26/12/2018       #மேஷம்யோகமான நாள். தேடிய வேலை திடீரெனக் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற...
26/12/2018

#இன்றைய #ராசி #பலன்கள்
26/12/2018



#மேஷம்

யோகமான நாள். தேடிய வேலை திடீரெனக் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். அஞ்சல் வழியில் ஆச்சர்யப்படத்தக்க தகவல் வந்து சேரும்.

#ரிஷபம்

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள் உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

#மிதுனம்

எதிர்பாராத தொகை இல்லம் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். தொலை பேசி வழித் தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும்.

#கடகம்

இடம் வாங்கும் முயற்சியில் இனிய பலன் கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படலாம். வீடுமாற்றம், இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

#சிம்மம்

சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கி கொள்ள முன்வருவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய தகவலைத் தருவர்.

#கன்னி

தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல்யுத்தம் சுமூகமாக முடியும்.

#துலாம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

#விருச்சிகம்

புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உதவி செய்வதாய் சொன்னவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். ஆடம்பரப் பொருட் களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

#தனுசு

அலைச்சல் அதிகரிக்கும் நாள். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. கடன் சுமை அதிகரிக்கும். பிறருக்குப் பொறுப்புச் சொல்வதை தவிர்ப்பது நல்லது. மருத்துவச்செலவு உண்டு.

#மகரம்

பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும். ஆபரண சேர்க்கை உண்டு.

#கும்பம்

புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத் திற்கு ஒத்துழைப்புச் செய்வர்.தொழில் வளர்ச்சி உண்டு. வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

#மீனம்

உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் பங்குதாரர்கள் விலகி னாலும் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

 #இன்றைய  #ராசி  #பலன்கள்25/12/2018       #மேஷம்உள்ளம்மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். உழைப்பிற்கேற்ற பலன் கிட...
25/12/2018

#இன்றைய #ராசி #பலன்கள்
25/12/2018



#மேஷம்

உள்ளம்மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். வருமானம் போதுமானதாக இருக்கும். வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

#ரிஷபம்

அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சினை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.

#மிதுனம்

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். ஆதர வுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சாமர்த்தியமாகச் செயல்பட்டு வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

#கடகம்

வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. திட்ட மிட்ட காரியமொன்றில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

#சிம்மம்

தொடங்கிய காரியங்கள் துரிதமாக நடை பெறும் நாள். ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வருமானத்தைப் பெருக்கும் வழியைக் கண்டு கொள்வீர்கள். தொழிலில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

#கன்னி

வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏறும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். வங்கிச் சேமிப்பு உயரும்.

#துலாம்

சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். திடீ ரென எடுத்த முடிவு நன்மை தரும். தர்ம காரி யங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

#விருச்சிகம்

வளர்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும். உறவினர் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். கனவு பலிதம் உண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும்.

#தனுசு

வழிபாட்டால் வளர்ச்சியைக் காண வேண்டிய நாள். கவனக் குறைவால் பொருள் விரயம் ஏற்படலாம். நண்பர்கள் மனம் கோணாது நடந்து கொள்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.

#மகரம்

வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். நண்பர்கள் நல்ல யோசனைகளைச் சொல்வர். பொது நலத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் வருகை யால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம்.

#கும்பம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சுதந் திரமாக செயல்பட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். அத்தியாவசியப் பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள்.

#மீனம்

நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காணும் நாள். நவீனப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்பு மகிழ்ச்சி தரும்.

 #இன்றைய  #ராசி  #பலன்கள்24/12/2018       #மேஷம்யோகமான நாள். இல்லத்திற்கு தேவை யான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவா...
24/12/2018

#இன்றைய #ராசி #பலன்கள்
24/12/2018



#மேஷம்

யோகமான நாள். இல்லத்திற்கு தேவை யான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவி களும் வந்து சேரலாம். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

#ரிஷபம்

முன்னேற்றம் காண்பதற்கு எடுத்த முயற்சி யில் வெற்றி கிட்டும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.

#மிதுனம்

பக்குவமாகப் பேசிப் பாராட்டுக்களை பெறும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். பூர்வீகச் சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

#கடகம்

சொல்லும் சொற்கள் வெல்லும் சொற் களாக மாறும் நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு அதிகரிக்கும்.

#சிம்மம்

வரவு இருமடங்காகும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.

#கன்னி

குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறை யும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். குடும்ப நலன் கருதி வருமானத்தைப் பெருக்கும் எண்ணம் மேலோங்கும்.

#துலாம்

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்திதரும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். கடிதம் கனிந்த தகவலைத் தரும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும்.

#விருச்சிகம்

விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயண மொன்றில் மாற்றம் செய்வீர்கள். நேற்றைய பணி இன்றும் தொடரும். ஆன்மிக நாட்டம் மேலோங்கும்.

#தனுசு

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அந்நிய தேச வாய்ப்பில் தாமதம் ஏற்படும். நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

#மகரம்

நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.

#கும்பம்

அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அலைபேசி வழித்தகவல் ஆச்சர்யம் தரும். ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோக மாற்றச்சிந்தனை உருவாகும். ஆரோக்கியத்தில் அக்கரை காட்டுவது நல்லது.

#மீனம்

விரோதங்கள் விலகும் நாள். எண்ணங் கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

இன்று ஆருத்ரா தரிசனம் ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு)  சிவபெரும...
23/12/2018

இன்று ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு
உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்
திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா
னுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்

ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படு
கிறது.

ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்
திருச்சிற்றம்பலம்...
#ஆருத்ரா #தரிசனம்......🙏🌙🔱 சிவசிவசிவ சிவாயநம திருச்சிற்றம்பலம்

Address

29/J/4, Avalurpet Main Road
Tiruvannamalai
606601

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10am
Wednesday 9am - 10am
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+917094950999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atchathai Agarbathies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atchathai Agarbathies:

Share