04/02/2022
வணக்கம் நான் எட்வின் பேசுகிறேன். இந்திய நாடாளுமன்றத்தில் மோடி அரசு எதிர் கட்சிகள் எதிர்ப்பு ஓட்டு போட்டாலும் தனது கட்சியின் பெரும்பான்மை வைத்து எந்த மசோதாவானாலும் குடியரசு தலைவரின் ஒப்புதலைப்பெற்று மக்கள் எதிர்த்தாலும் அதனை நிறைவேற்றுகிறது. இங்கு தமிழ் நாட்டில் ஆளும்கட்சி மற்றும் எதிர் கட்சி அனைவரும் ஒருமனதாய் நிறைவேற்றிய தீர்மானத்தினை ஆளுநர் திரும்ப அனுப்புகிறார் என்றால் இது மக்கள் வாக்களித்து கொண்டுவந்த மக்களாட்சியா ? இல்லை மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர் ஆட்சியா ? மத்தியில் ஒரு சட்டம், தமிழ் நாட்டில் ஒரு சட்டமா ? ராகுல் மோடியை பார்த்து தமிழ் நாட்டை உங்களால் ஒரு போதும் ஆளமுடீயாது என்று சொன்ன மருநாள் ஆளுநர் இப்படி செய்திருப்பது ராகுல் சொன்னதை நிரூபிக்கும் வகையில் உங்களது வீரம் இல்லாத கோழைத்தனமான செயலாகவே நான் பார்க்கிறேன். நீங்கள் உண்மையான ஆண்மையுடன் துனிவிருந்தாள் தமிழ்நாட்டின் ஆட்சியை கலைத்துவிட்டு இப்போதே தேர்தலை எதிர்கொள்ளூங்கள். நீங்கள் மட்டும் அல்ல உங்களுடன் சேர்ந்தவர்களும் தமிழ் நாட்டில் இருந்து காணாமல் போவிர்கள். துனிவிருக்க, மீசை இருக்க, ஆண்களே உங்களைத்தான் கேட்கிறேன்.