28/12/2018
மாண்புமிகு உயர் கணம் மேன்மை தங்கிய சுற்றுச்சூழல் அமைச்சர் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்தை நான் தொலைக்காட்சியில் இன்று பார்த்தேன்.
நான் அவரிடத்தில் மிகவும் தாழ்மையுடன் வேண்டி கேட்பது ஒன்றுதான். நாங்கள் வெறும் 5 சதவீத பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளோம். மற்ற 85% பிளாஸ்டிக்கை நாங்கள் தடை செய்யவில்லை என்று அவர் கூறினார் உண்மைதான். மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்களிடத்தில் நான் கேட்பது 85% தடை செய்யாத மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை விட்டுவிட்டு. மறுசுழற்சி செய்யக்கூடிய 5% பிளாஸ்டிக்கை தடை செய்வது எந்த விதத்தில் நியாயம் நீங்களே சற்று யோசித்துப்பாருங்கள் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அவர்களே. நீங்கள் தடை செய்யும் அந்த 5% பைகளையும் உபயோகிப்பது சிறு குறு தொழில் புரியும். இந்த மண்ணின் மைந்தர்கள். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய போராடிக்கொண்டிருக்கும் சிறு குறு தொழில் முனைவோர் தான் அந்த ஐந்து சதவீத பையையும் உபயோகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் அதை நீங்கள் தடை செய்யப் போகிறீர்கள்.
நீங்கள் மேலே சொன்னது போல 85% பணிகளை நாங்கள் தடை செய்யவில்லை என்று கூறுகிறீர்கள். அந்த 85% பைகளை உபயோகப்படுத்தி பொருட்கள் தயாரிப்பது பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் தான். உங்கள் நடவடிக்கையில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது உள்நாட்டு வணிகத்தை முடக்குவதும்! கார்ப்ரேட் கம்பெனிகளை வளர்ப்பதும் தான் உங்கள் செயல் செயலாக உள்ளது.
தயவுசெய்து சிந்தித்து உங்கள் முடிவை மாற்றி சொல்லுங்கள்.
நீங்கள் எடுக்கப்போகும் முடிவு தான் 10 லட்சம் ஏழை எளியோரின் வாழ்க்கை அடங்கியுள்ளது. மறுசுழற்சி செய்ய முடியாதவற்றை தடை செய்தால்தான் நாடு சுத்தமாகும். நீங்கள் தடை செய்யும் அந்த ஐந்து சதவீத பைகள் கண்டிப்பாக மறுசுழற்சி செய்யக்கூடிய பைகள்தான்.
தயவுசெய்து உங்கள் முடிவை மாற்றி சொல்லுங்கள் ஏழை எளியோருக்கான நல்ல பதிலை நீங்கள் சொல்வீர்கள் என்று நம்புகிறோம். நாங்கள் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள்தான்.
சிறு குறு தொழில் முனைவோரை மதிக்காவிட்டாலும்.
பரவாயில்லை.
காலில் போட்டு மிதிக்காதீர்கள்.
நீங்கள் சொல்லும் அந்த ஐந்து சதவீத பைகளை உபயோகப்படுத்தி தொழில்முனைவோரின் நானும் ஒருவன் என்ற ஆதங்கத்தில் இந்த பதிவை இட்டு உள்ளேன் இதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள்.
இதுவும் கடந்து போகும்