I.P.L "Organization for Society"

I.P.L "Organization for Society" "Organization for Society"

27/10/2025

Ideal Pupils League has been providing various services to the community.
As part of its service, we have initiated another service for providing New water supply onnections to underprivileged families.
If anyone wishes to donate towards this Sathakathul Jariya, we have request letters from Mosques along with the estimates issued by National Water Board.
Any kind hearted donors wishes to contribute may inbox.

 #கௌரவிப்பும்  #பிரியாவிடை  #நிகழ்வும்இம்முறை அட்டாளைச்சேனை மண்ணில் இருந்து இந்திய துணை தூதுவராலயத்தின் மேலாண்மை அதிகாரி...
15/09/2024

#கௌரவிப்பும் #பிரியாவிடை #நிகழ்வும்

இம்முறை அட்டாளைச்சேனை மண்ணில் இருந்து இந்திய துணை தூதுவராலயத்தின் மேலாண்மை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்ட அஸ்ஹர் றிபாஸ் அவர்களுக்கான கௌரவிப்பும் பிரியாவிடை நிகழ்வும் நேற்றைய தினம் (2024.09.14)ம் திகதி அட்டாளைச்சேனை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை IPL அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் எஸ்.எச்.சபீக் (உதவி நிதியாளர் இலங்கை தெ.கி.ப.கழகம்) அவர்களது தலமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஏ.எம்.நௌபர்டீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேலும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் றியாஸ் BBA, அஷ்ரஃப் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.நிஸாம் JP அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் பாயிஸ், அறபா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.அன்சார், அர்ஹம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ்,
ஜலால்டீன் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச் அப்துல் ரகுமான் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுடீன் I GATES Campus யின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
அர்ஷாத் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் அத்துடன் ஊரின் பல கல்விமான்களும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

IPL அமைப்பின் கல்விக்குழு பொறுப்பாளர் அர்ஷாத் புஹாரி அவர்களால் கடந்து வந்தபாதை எனும் தலைப்பில் அஸ்ஹர் றிபாஸ் அவர்களது வாழ்க்கை பயணப்பாதை பற்றிய விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் குறித்த நிகழ்வில் பதவியுயர்வு பெற்றுச் செல்லும் றிபாஸ் அவர்களுக்கு பலதரப்பட்ட நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு அவரது பல்வேறு பட்ட சமூக சேவைகளையும் அதிதிகளால் சிலாகித்து பேசப்பட்டது.

றிபாஸ் தனது ஆரம்பக் கல்வியை அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை அட்டாளைச்சேனை தேசிய பாடாசாலையிலும் கற்றுக் கொண்டதோடு 2005ம் ஆண்டு வரக்காப்பொல தாறுல் ஹஸனாத் அகடமியில் AAT கற்கை நெறியினையும் பூர்த்தி செய்திருந்தார்.
மேலும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் BBA பட்டதாரியான இவர் அதே பல்கலைக்கழகத்தில் MBA கற்கை நெறியினையும் பூர்த்தி செய்யவிருப்பமை குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு தொடக்கம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிதிப் பிரிவில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த நிலையிலேயே குறித்த பதவியினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனையோருடன் மிகவும் இணங்கிப் பழகக் கூடிய இவர் சிறந்த தலைமத்துவ பண்புகளால் பல சமூக மட்டத்திலான தன்னார்வ அமைப்புக்களை வழிநடாத்தி வந்திருக்கின்றார். அட்டாளைச்சேனை IPL அமைப்பின் செயலாளராகவும் அஷ்ரஃப் விளையாட்டுக் கழகத்தின் முன்னைய நாள் செயலாளராகவும் கடமையாற்றி வந்ததோடு ஊரின் பல்வேறு பட்ட சமூக அமைப்புக்களுடன் இசைந்து செயற்பட்ட சமூக ஆர்வலர் ஆவார்.

குறித்த நிகழ்விற்கான அனுசரனையை IPL அமைப்பின் ஆலோசகர் தலைவர் எம்.என்.பௌசான் அவர்களும் அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.என்.பர்ஷாத் அவர்களும் பூரணமாக வழங்கியிருத்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பதவியுயர்வானது எமதூருக்கும் எமது பிராந்தியத்திற்கும் மிகவும் கௌரவத்தினை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையாகாது.

மேலும் இவரது சேவை சிறப்பாக அமையவும் இதன் மூலம் எமது பிராந்தியமும் எமது நாடும் சிறந்த பயன்களை பெற வேண்டும் என வாழ்த்துகிறோம்.

வாழ்த்தி வழியனுப்புகிறோம்அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டு தூதுவராலயத்தின் Home Base Management Service Officer போட்டிப்பரீட...
14/09/2024

வாழ்த்தி வழியனுப்புகிறோம்

அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டு தூதுவராலயத்தின் Home Base Management Service Officer போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து 6மாத கால பயிற்சியின் பின்னர் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17ம் திகதி இந்திய தூதரகத்தில் கடமையை பொறுப்பேற்கவுள்ள அட்டாளைச்சேனையை சேர்ந்த Rifas Ashar அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறோம்.

இவர் 2011ம் ஆண்டு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக தெரிவு செய்யப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய போதே மேற்படி பதவியுயர்வை பெற்றுள்ளார்.
மேலும் இவர் அட்டாளைச்சேனை Ideal Pupils League சமூக சேவை ஒன்றியத்தின் செயலாளராகவும் அஷ்ரஃப் விளையாட்டுக்கழகத்தின் முன்னைய நாள் செயலாளராகவும் கடமையாற்றி உள்ளார்.

சிறந்த தலைமத்துவ பண்புகள் மற்றும் சமூக சேவைகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றிய இவரது பதவியுயர்வானது எமதூருக்கு எமது பிராந்தியத்திற்கும் கௌரவமிக்க ஒரு விடயமாகும்.
இவரது சேவை சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடத்தில் வேண்டுகிறோம்.

நீங்கள் ஆங்கிலம் கற்பதில் இடர்படுபவரா?இதோ உங்களுக்காக...2024 யில் தரம் 6,7மற்றும் 8 மாணவர்களுக்காக அடிப்படையில் இருந்து ...
08/02/2024

நீங்கள் ஆங்கிலம் கற்பதில் இடர்படுபவரா?
இதோ உங்களுக்காக...

2024 யில் தரம் 6,7மற்றும் 8 மாணவர்களுக்காக அடிப்படையில் இருந்து ஆங்கிலம் வாசிப்பு,எழுத்து மற்றும் பேச்சுப் பயிற்சிகள் மிக இலகுவான முறையில் கற்பிக்கப்படும்.

Zoom ஊடாக நடைபெறும் இவ்வகுப்பில் PowerPoint slide மூலமாக மிகத்தெளிவான முறையில் கற்பிக்கப்படும்

இலவசமான அறிமுக வகுப்பு எதிர்வரும் 2024.02.10 பி.ப.7.30 மணிக்கு நடைபெறும்.

இணைய விரும்பும் மாணவர்கள் கீழுள்ள குழுமத்தில் இணைந்து இலவச வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்.

Group link👇

WhatsApp Group Invite

06/11/2023
 #பொத்துவில்_பிரதேசத்திற்கான_நிதி_சேகரிப்பு_உண்டியல்கள்_வழங்கி_வைப்புஏறாவூரில் இயங்கிவரும்  #கிழக்கு_புற்றுநோயாளர்_பராமர...
06/11/2023

#பொத்துவில்_பிரதேசத்திற்கான_நிதி_சேகரிப்பு_உண்டியல்கள்_வழங்கி_வைப்பு

ஏறாவூரில் இயங்கிவரும் #கிழக்கு_புற்றுநோயாளர்_பராமரிப்பு_நிலையத்தின் நிதி சேகரிப்பு உண்டியல்கள் " #சமூகத்திற்கான_ஒன்றியம்" இன் ஒருங்கிணைப்பில் பொத்துவில் நகரில் கடந்த 2023.11.04ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

IPL ஒன்றியத்தின் #பொத்துவில்_பிரதேச_அமைப்பாளரும், ாழ்வு_அமைப்பின்_தலைவருமான ்_ஹில்முடீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் EASCCA நிறுவனத்தின் #சந்தைப்படுத்தல்_முகாமையாளர் #எஸ்_எம்_இர்ஷாத் (இஸ்லாஹி), IPL அமைப்பின் செயலாளர் அ.றிபாஸ், IPL நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் TRY சகவாழ்வு அமைப்பின் நிருவாகிகளும் கலந்து நிகழ்வுக்கு வருகை தந்த வர்த்தகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு உண்டியல்களை வழங்கி வைத்தனர்.

IPL "சமூகத்திற்கான ஒன்றியம்" EASCCA நிறுவனத்தின் நிதி சேகரிப்பு மற்றும் நலனோம்பல் விடயங்களில் முன்னேற்றகரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

#ஊடகப்_பிரிவு

 ூக_சேவை_ஒன்றியத்தின்_புதிய_காரியாலய_திறப்பு_விழா*****************************அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இயங்கி வரும் பி...
31/10/2023

ூக_சேவை_ஒன்றியத்தின்_புதிய_காரியாலய_திறப்பு_விழா
*****************************

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இயங்கி வரும் பிரபல சமூக சேவை அமைப்பான எமது ( ) " #சமூகத்திற்கான_ஒன்றியம்" யின் புதிய காரியாலய திறப்பு விழா கடந்த 2023.10.29ம் திகதி நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் #எஸ்_எச்_சபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் #பிரதம_அதிதியாக_ஐக்கிய_தேசிய_கட்சியின்_பொத்துவில்_தொகுதி_அமைப்பாளரும் அட்டாளைச்சேனை #பிரதேச_சபையின்_முன்னாள்_உறுப்பினருமாகிய #யூ_கே_ஆதம்லெப்பை ( #லொயிட்ஸ்) அவர்களும், விஷேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட செயலகத்தின் #அனர்த்த_முகாமைத்துவ_பிரதிப்_பணிப்பாளர் #எம்_ஏ_சி_எம்_றியாஸ் அவர்களுடன் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் #உதவிக்_கல்வி_பணிப்பாளர் ்_நௌபர்டீன் அவர்களும், ோல்டிங்ஸ்_பிரைவேட்_லிமிடெட் நிறுவனத்தின் #பணிப்பாளரும் #முன்னாள்_இளைஞர்_பாராளுமன்ற_உறுப்பினரும்_பிரபல_சமூக_செயற்பாட்டாளருமாகிய ்_ஹில்முடீன் அவர்களும், அட்டாளைச்சேனை ஏழாம் பிரிவு #கிராம_உத்தியோகத்தர் #கே_எம்_எம்_முபீஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

#பிரதம_அதிதி_அவர்களினால்_காரியாலயம் உத்தியோகபூர்வமாக #திறந்து_வைக்கப்பட்டதுடன் IPL சமூகத்திற்கான ஒன்றியத்தின் #கடந்தகால_சுவடுகளை_நினைவூட்டும்_புகைப்படத்_தொகுப்பும் காட்சிப்படுத்தப்பட்டது.

" ்_பிரிவு"

 #நிதி_சேகரிப்பு_உண்டியல்கள்_கையேற்கும்_நிகழ்வு*********************************   சமூக சேவை ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில...
23/10/2023

#நிதி_சேகரிப்பு_உண்டியல்கள்_கையேற்கும்_நிகழ்வு
*********************************

சமூக சேவை ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் ஏறாவூரில் இயங்கி வரும் #கிழக்கு_புற்று_நோயாளர்_பராமரிப்பு_நிலையத்தின் ) நிதி சேகரிப்பு உண்டியல்களை கையேற்கும் நிகழ்வு நேற்றைய தினம் 2023.10.22ம் திகதி அட்டாளைச்சேனை IPL ஒன்றியத்தின் பிரதான காரியாலயத்தில் நடைபெற்றது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான பராமரிப்புச் செலவுகள் முழுவதையும் இலவசமாக வழங்கி வரும் கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் செலவினங்களை ஈடு செய்யும் முகமாக நன்கொடை நிதி சேகரிப்பு உண்டியல்களை நாடு பூராகவும் நிறுவி வருகின்றனர்.
அதன் ஓர் அங்கமாகவே அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிதி சேகரிப்பு ஒருங்கிணைப்பை IPL ஒன்றியம் பொறுப்பேற்று நடாத்தவுள்ளது, இன்ஷா அல்லாஹ்.

IPL ஒன்றியத்தின் பிரதம ஆலோசகரும், ஆசிரியருமான A.K.சிஹாத் (இஸ்லாஹி) அவர்களின் வழிகாட்டலில் ஒன்றியத்தின் தலைவர் S.H.சபீக் (உதவி நிதியாளர் - இலங்கை தெ. கி. பல்கலைக்கழகம்) அவர்களது தலைமையில் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஏ.றிபாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒன்றியத்தின் நிறைவேற்று உறுப்பினர்கள், பிரிவுப் பொறுப்பாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் பங்கேற்றிருந்தனர்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக IPL ஒன்றியத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் அதிபரும், மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளிவாசல் தலைவருமான எம்.ஏ அன்சார், ஒன்றியத்தின் மற்றுமொரு சிரேஷ்ட ஆலோசகரும் அஷ்ரஃப் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் இ.மி.சபையின் ஓய்வு நிலை உத்தயோகத்தருமான எஸ்.எம்.எம்.நிஸாம் JP அவர்களும், அட்டாளைச்சேனை 7ம் பிரிவு கிராம உத்தியோகத்தர் கே.எம்.எம்.முபீஸ் அவர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

குறித்த நிகழ்வில் EASSCA நிறுவனத்தின் முகாமையாளர் யூ.நூஹுலெவ்வை மற்றும், சந்தைப்படுத்தல் முகாமையாளர்.எஸ்.எம்.இர்ஷாத் (இஸ்லாஹி) ஆகியோருடன் குறித்த நிறுவனத்தின் அங்கத்தவர்கள் வருகை தந்து உண்டியல்களை கையளித்தனர்.

பிரதம அதிதி அவர்களின் உரையில் , #தான்_கடந்த_காலத்தில்_ஏறாவூர்_பிரதேச_செயலாளராக_கடமையாற்றிய_காலத்தில்_EASCCA_நிறுவனத்தினை_பதிவு #செய்தது_தொடக்கம்_அதன்_ஆரம்பம், #வளர்ச்சி, #அதன்_இலக்கு, #அடைவுகள் மற்றும் #இதனால்_எமது_பிராந்திய_மக்கள்_அடையும்_நன்மைகள் என்பவற்றை சிலாகித்து பேசியதுடன் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ்றியம் இந்நிதி சேகரிப்பு திட்டத்தை கையேற்றமையானது வரவேற்கத்தக்க விடயம் எனவும் எதிர்காலத்தில் இச்செயற்பாட்டிற்காக IPL அமைப்புடன் தான் இணைந்து செயற்படுவதாகவும் உறுதியளித்தார்".

விஷேட அதிதிகளில் ஒருவரான #அன்சார்_அதிபர் அவர்கள் தனதுரையில் எமது ஒன்றியத்தின் சிறந்த செயற்பாடுகளை பாராட்டி பேசியதுடன் இத்திட்டத்திற்கு தன்னாலான முழுப் பங்களிப்புகளை வழங்குவேன் எனவும் இச்செயற்பாடு ஏனையோருக்கு சிறந்த முன்மாதிரி ஆகும் எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்வின் முக்கிய விடயமான உண்டியல்களை கையளிக்கும் நிகழ்வு EASSCA நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் அங்கத்தவர்களால் IPL ஒன்றியத்திடம் கையளிக்கும் நிகழ்வு அதிதிகளினூடாக நடந்தேறியது. இதில் முதற்கட்டமாக #100 உண்டியல்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் ஒன்றியத்தின் கல்வி விடயங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர் அர்ஷாத் புஹாரி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு ஸலவாத்துடன் இனிதே நிறைவடைந்தது.
்_பிரிவு

எதிர்வரும் 2023.06.24ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை...
19/06/2023

எதிர்வரும் 2023.06.24ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையின் கணக்கீட்டு பாடத்திற்கான இலவச கருத்தரங்கு எதிர்வரும் 2023.06.20 ம் திகதி(7.00pm-11.00pm) ZOOM ஊடாக நடைபெற உள்ளது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உதவி நிதியாளர் சபீக் ஹமீட் அவர்கள் வளவாளராக கலந்து கொள்ள உள்ளார்.

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள ஆர்வமுடையோர் கீழுள்ள வட்ஸ்அப் குழுவில் இணைந்து Zoom id மற்றும் password என்பவற்றை பெற்றுக் கொள்க.

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/LFGYhXY1Fv84Qb1C42sjt4

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைக்கான கணக்கீட்டு பாட இலவச கருத்தரங்கு.IPL ஒன்றியத்தின் த...
15/06/2023

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைக்கான கணக்கீட்டு பாட இலவச கருத்தரங்கு.

IPL ஒன்றியத்தின் தலைவரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உதவி நிதியாளருமான S.H.சபீக் sir அவர்கள் வளவாளராக கலந்து கொள்ள உள்ளார்.

குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு PDF யினை பெற்றுக் கொள்ளுங்கள்.

மிகவும் பெறுமதியான இந்த இலவசக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளோர் கட்டாயம் முற்பதிவு செய்து கொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு
0755325924

Address

Addalachenai
32350

Website

Alerts

Be the first to know and let us send you an email when I.P.L "Organization for Society" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I.P.L "Organization for Society":

Share