31/08/2026
பெண்கள் வாகனம் ஓட்டுவது இஸ்லாத்தில் தடை அல்ல!
பெண் என்றால்…
அடுப்பூதுவதும், வீட்டுக்குள் இருப்பதும்தான் அவளுடைய உலகம் என்று இஸ்லாம் சொல்லவில்லை.
சிலர்…
ஒரு பெண் மோட்டார் சைக்கிளில் செல்வதைக் கண்டாலும்,
கார் ஓட்டுவதைக் கண்டாலும்…
அவளை இழிவாகப் பார்க்கிறார்கள்.
“பெண்ணுக்கு இதெல்லாம் தேவையா?”
என்று விமர்சிக்கிறார்கள்.
ஆனால்…
இஸ்லாம் பெண்ணை அவ்வாறு பார்க்கவில்லை.
பெண் என்றால்…
அடுப்பூத வேண்டும்.
வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
வாகனம் ஓட்டக்கூடாது.
என்று இஸ்லாம் எங்கும் பொதுவாகத் தடை விதிக்கவில்லை.
நபிகளாரின் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில்…
பெண்கள் ஒட்டகங்களில் சவாரி செய்தார்கள்.
அதுமட்டுமல்ல…
“ஒட்டகங்களில் சவாரி செய்த பெண்களில் சிறந்தவர்கள் குறைஷிப் பெண்கள்.” என நபிகளார் சிறப்பித்துக் கூறினார்கள்.
(ஸஹீஹ் புகாரி 5082; ஸஹீஹ் முஸ்லிம் 2527)
சிந்தித்துப் பாருங்கள்…
பெண் ஒட்டகத்தில் சவாரி செய்வது தவறாக இருந்திருந்தால்…
நபிகளார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அதை எவ்வாறு சிறப்பித்துக் கூறியிருப்பார்கள்?
ஆயிஷா (ரலி) அவர்களும் நபிகளாருடன் பயணங்களில் ஒட்டகத்தில் பயணம் செய்திருக்கிறார்கள்.
அதனால்…
அந்தக் காலத்தில் பெண்கள் சவாரி செய்வது ஒரு வெட்கப்பட வேண்டிய காரியமாகக் கருதப்படவில்லை.
அன்றைய வாகனம் ஒட்டகம்.
இன்று…
கார்
மோட்டார் சைக்கிள்.
பேருந்து.
விமானம்.
வாகனம் மாறியுள்ளது; வாகனம் பயன்படுத்தும் அடிப்படை அனுமதி மாறிவிடவில்லை.
அதனால்…
ஒரு பெண் கார் ஓட்டுகிறாள் என்பதற்காகவே…
அவளைத் தவறானவள் என்று கருதுவதும்,
அவளை இழிவாக விமர்சிப்பதும்,
அவளுடைய கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்குவதும்…
இஸ்லாமிய அணுகுமுறை அல்ல.
அதேநேரம் …
இஸ்லாம் சுதந்திரம் கொடுக்கிறது என்பதற்காக…
ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் விட்டுவிடச் சொல்லவில்லை.
பெண்ணாக இருந்தாலும்…
ஆணாக இருந்தாலும்…
ஆடை ஒழுக்கம் இருக்க வேண்டும்.
கண்ணியம் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு இருக்க வேண்டும்.
ஷரீஅத் தடுத்துள்ள சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும்.
பெண்…
அடுப்பபூதுவதற்காகவே படைக்கப்பட்டவள் அல்ல.
அவளுக்கும் அறிவு இருக்கிறது.
திறமை இருக்கிறது.
ஆற்றல் இருக்கிறது.
சமூகத்திற்கு வழங்க வேண்டிய பங்களிப்பு இருக்கிறது.
அவள் கல்வி கற்கலாம்.
தொழில் செய்யலாம்.
பயணம் செய்யலாம்.
வாகனம் ஓட்டலாம்.
தகுதியும் வாய்ப்பும் இருந்தால்…
விமானம் ஓட்டும் விமானியாகக்கூட இருக்கலாம்.
இதற்காக அவளுடைய பெண்ணியம் குறைவதில்லை.
அவள் கண்ணியத்தை இழக்க வேண்டியதுமில்லை.
எனவே…
ஒரு பெண் வாகனம் ஓட்டுவதைப் பார்த்து…
“பெண்ணாக இருந்து இதைச் செய்கிறாளே!”
என்று கேலி செய்ய வேண்டாம்.
மாறாக…
அவள் மார்க்கத்தின் ஒழுக்கங்களையும் கண்ணியத்தையும் பேணி நடக்கிறாளா?
என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
ஏனெனில்…
**இஸ்லாம் பெண்ணின் கைகளை கட்டவில்லை;
அவளுடைய கண்ணியத்தைத்தான் காத்தது.**
அன்று ஒட்டகத்தில் பயணம் செய்த பெண்…
இன்று வாகனத்தில் பயணம் செய்வது மட்டும் எப்படி இழிவாகிவிடும்?
வாகனம் மாறலாம்…
காலம் மாறலாம்…
தொழில்நுட்பம் மாறலாம்…
ஆனால் கண்ணியமும் ஒழுக்கமும் என்ற இஸ்லாமிய அடிப்படை மாறாது.
— Haroon Sahvi —
゚ ゚viralシ