26/05/2021
வர்த்தக சிந்தனைகள் 01
புதிய பிஸினஸ் ஐடியாக்களை உருவாக்குங்கள்
உங்களுக்குத் தோன்றும் ஐடியா உலகை மாற்றக்கூடும்.
ஐடியா உதிக்கும்போதுதான் பிஸினஸிற்கான சிந்தனை கருக்கொள்கிறது.
ஐடியா எப்படிப் பிறக்கிறது?
உங்கள் சிந்தனையின் ஊற்றுத்தான் உங்களுக்குத் தோன்றும் சூப்பர் ஐடியா!
அந்த சிந்தனைக்கான ஊக்குவிப்பு (Inspiration) எங்கிருந்து கிடைக்கிறது?
வாசிப்பு, தேடல், பயணம், புது அனுபவம் இப்படி பல வழிகளில் சிந்தனை சிறகடிக்க ஐடியா பிறக்கிறது.
கல்லூரி நண்பர்களுக்கிடையே நட்பின் முகவரி தேடத் தொடங்கிய தேடல்தான் Facebook ற்கான் ஐடியாவின் அடித்தளம்
உலகையே ஒளியட்ட வேண்டுமென்ற ஐடியாதான் மின்குமிழாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
மனிதன் பறக்க வேண்டுமென்ற சிந்தனைதான் விமானமாக வி~;வரூபமெடுத்திருக்கிறது.
இப்படித்தான் புதிய பிஸினஸ் ஐடியாக்கள் உதிக்கின்றன. உங்களுக்கும் இப்படி பல ஐடியாக்கள் உதித்திருக்கும்.
உதித்த ஐடியாக்களை உதிர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் வெற்றியாகும். பெரிதாக சிந்திப்பது பெருவெற்றியைத் தரவல்லது. சிறிய ஐடியாக்கள்கூட உங்களுக்கு வெற்றியைத் தரக்கூடும். உங்கள் மூளைக்குள் எப்படிப்பட்ட மேதை புதைந்து கிடக்கிறாரோ!
உங்கள் பிஸினஸ் ஐடியாக்களை எப்படி வெற்றிகரமான ஒரு வியாபாரமாக மாற்றுவது எப்படி என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்
J.M. Azeem (MBA)