விலை.lk

விலை.lk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from விலை.lk, Business consultant, Kilinochchi.

யார் இந்த SYNIRO...?? 👇👇 (நிரோஜன் )கிளிநொச்சி மண்ணின் பெருமையை உலகறியச் செய்த ஒரு சாதாரண இளைஞனின் வெற்றி பயணத்திற்காக இன...
04/04/2025

யார் இந்த SYNIRO...?? 👇👇
(நிரோஜன் )

கிளிநொச்சி மண்ணின் பெருமையை உலகறியச் செய்த ஒரு சாதாரண இளைஞனின் வெற்றி பயணத்திற்காக இன்று நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம்.
யோகேஸ்வரன் மல்லிகாவதி அவர்களிற்கு மகனாக நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தவன்
தனது 17வது வயதிலேயே தந்தையை இழந்தும், தாயையும் மூன்று பெண் சகோதரிகளையும், ஒரு சகோதரனையும் பொருளாதார சிரமங்களில் வழிநடத்தி இன்று தொழிலதிபராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் உயர்ந்துள்ளான்

அவரது தந்தையின் பாரம்பரியமாக வழிகாட்டிய அரிசி ஆலை (பசுச்சோலை அரிசிஆலை ) தொழிலினை சிறப்பாக முன்னெடுத்ததன் மூலம், தனது கடின உழைப்பினால் வெற்றிக்கொடி நாட்டி, இன்று இரண்டு உணவகங்கள் (SYNIRO COOLCAFE 1 & 2 ) மற்றும் சுற்றுலாமையம் ( SY NIRO KILIWORLD) உரிமையாளர் மற்றும் உள்நாட்டு-வெளிநாட்டு ஏற்றுமதி (SY NIRO PVT LTD ) வியாபாரங்களை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றார். அவருடைய முயற்சிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொருளாதார வளர்ச்சியைக் கொணர்ந்ததோடு மட்டுமல்லாது, அவனுடைய கற்பனைத்திறன், நவீன யுக தீர்வுகள், சூழல் மாசுபாட்டினை எதிர்க்கும் திட்டங்கள் போன்றவை அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளன.

இளைஞர்களுக்கான சமூக செயற்பாட்டினை ஊக்குவிக்கவும், கிளிநொச்சியை சுத்தமாக வைத்திருக்கும் திட்டங்களை (SYNIRO ECOCYCLE ) நடைமுறைப்படுத்தவும் அவன் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் தன்னுடைய வாழ்க்கை முறையில் கொண்டு வந்தவன், நிறைய இளைஞர்களுக்கு வாழ்வின் போராட்டத்தில் வெற்றியடைய ஒரு துருவ நட்சத்திரமாகத் திகழ்கிறான்

அவனின் சமூக பணி( Rotary, கண்ணன்ஆலய செயளாலர் , CAN founder , வர்த்தகசங்கநிர்வாகஉறுப்பினர் , மேசைபந்தாட்ட நிர்வாக உறுப்பினர் ) சிறந்த தலைமைத்துவம், மற்றும் பணியாற்றும் உறுதிப்பாடு அவனின் தனி ஆழுமையே.
நிரோஜன் கிளிநொச்சி மாவட்டத்தின் சிறந்த முயச்சியாளனே .

நிரோஜனின் பயணம் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

Address

Kilinochchi

Telephone

+94212284966

Website

Alerts

Be the first to know and let us send you an email when விலை.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to விலை.lk:

Share