17/03/2024
கனடாவுக்கு படிக்க வருவதற்கான Rules மாறி இருப்பது நீங்கள் அறிந்தது தான். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் இதோ:
1. கனடாவில் படிக்க வருவதற்கான 2 வருட தடை எதுவும் கிடையாது.
2. 2 வருடங்களுக்கு Bachelor's Degree, Diploma பாட நெறிகளுக்கு வரும் எண்ணிக்கையை 360,000 ஆக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
3. Master's Degrees செய்ய வரும் யாருக்கும் தடை கிடையாது.
4. Bachelor's Degree, Diploma செய்ய Study Permit இல் வரும் மாணவர்கள் அவர்களது Spouse ஐ Work Permit இல் இதன் பிறகு (Jan 21, 2024 முதல்) கூட்டி வர முடியாது.
5. இலங்கையில் UK Degree கொடுப்பது போல் கனடா உள்ளேயே சில Private Colleges சில government Colleges இலிருந்து Degree, Diploma கொடுக்கும் முறை இங்கு உண்டு. அவ்வாறு Degree வழங்கும் college களில் இருந்து Degree, Diploma எடுப்பவர்கள் தற்போது முதல் Post Graduate Work Permit கிடைக்கும் வாய்ப்பை இழந்து விடுவார்கள்.
6. Bachelor's Degree, Associate Degree மற்றும் Diploma பாட நெறிகளுக்கு வரும் மாணவர்கள் PAL எனும் Provincial Attestation Letter பெற்றுக் கொண்டால் மட்டுமே visa அப்ளை பண்ண முடியும்.
7. 1 வருட பாட நெறிகளுக்கு வந்து அவற்றை நிறைவு செய்யும் அனைவரும் 1 வருட Post Graduate Work Permit (PGWP) உம், 2 அல்லது அதற்கு மேற்பட்ட வருட பாட நெறிகளுக்கு வந்து அவற்றை பூர்த்தி செய்யும் அனைவரும் 3 வருட PGWP உம் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவர். இது Bachelor's Degree, Associate Degree, Diploma அனைத்து பாட நெறிகளுக்கு கூட கிடக்கும்.
8. 1 வருட அல்லது அதற்கும் மேற்பட்ட எந்த Master's Degree செய்யும் எல்லோரும் 3 வருட PGWP பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள்.
இவை தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய basics. பூதம் காட்டி பயமுறுத்தும் யாராவது இருந்தால் இவற்றை காட்டுங்கள்.
தமது மேல் படிப்பு சம்பந்தமாக தெளிவு இல்லாதவர்கள், யாரோ கூறும் கதை கேட்டு மிரண்டு போய் உள்ளவர்கள், பூதம் கண்டு அஞ்சி நிற்கும் அனைவரது கவனத்திற்கு - தெளிவு வேண்டின் எம்மை தொடர்பு கொள்ளுங்கள். எமது team உங்களுக்கு உதவி செய்யும்.